#ஆரூரா_தியாகேசாதிருவாரூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • எல்லா நலன்களையும் பெற பார்க்க வேண்டிய பூஜை
    எல்லா கோயில்களிலும் நடக்கும் பள்ளியறை பூஜை விசேஷமானது என்றாலும் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் நடக்கும் பள்ளியறை பூஜை கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும். அதாவது சுவாமி, தனது சன்னதியில் இருந்து புறப்பட்டு, அம்பாள் சன்னதியில் எழுந்தருளி, சிவ சக்தி ஐக்கியமாக நடத்தப்படுவது தான் இந்த பள்ளியறை பூஜை.
    இந்த பள்ளியறை பூஜையின் போது சுவாமியை அவருடைய சன்னதியில் வைத்து அலங்காரம் செய்து, பல்வேறு விதமான வாத்தியங்கள் முழங்க, பல்லக்கில் வைத்து தூக்கி செல்வார்கள். பக்தர்கள் சிவ நாமங்கள், பாடல்களை பாடிய படி பின்னால் செல்ல, சிவ பெருமான் அம்பாள் சன்னதியில் எழுந்தருளுவார்.
    அம்பாள், சிவனின் திருப்பாதங்களுக்கு பூஜை செய்து அழைத்து செய்வாள். பால், பழங்கள் நெய்வேத்யமாக வைத்து, ஊஞ்சல் நடத்தி, பொன்னுசல் பாடி திருக்கதவுகள் மூடப்படும். இந்த பள்ளியறை பூஜையானது கிட்டதட்ட அரை மணி நேரம் வரை நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொள்வதை விபரம் அறிந்த சிலர் வழக்கமாக வைத்துள்ளனர்.
    கணவன் - மனைவி ஒற்றை வேண்டும் என்றால் வழிபட வேண்டிய, கலந்து கொள்ள வேண்டிய ஒரே பூஜை பள்ளியறை பூஜை தான். உயர் பதவி கிடைக்க, விரைவில் திருமணம் நடைபெற,குழந்தை பேறு பெற, நீண்ட காலமாக இருக்கும் நோய் தீர, கல்வியில் மேம்பாடு கிடைக்க பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ளலாம். வாழ்க்கைழில் ஏகப்பட்ட பிரச்சனை, நிம்மதியை கிடையாது என புலம்புபவர்கள் என அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய பூஜை தான் இந்த பள்ளியறை பூஜை. மன நிம்மதியையும், மனமகிழ்ச்சியையும், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமல் வளர்ச்சியை காட்டக் கூடிய அற்புத பூஜை இந்த பள்ளியறை பூஜை தான்.
    #ajabafotos #thiruvarur #tamil #temple #love #அர்த்தஜாமபூஜை #சிவன் #கோவில் #இராக்காலபூஜை #திருவாரூர் #thiruvarurther #தியாகராஜசுவாமி #கமலாம்பாள் #நீலோத்பலாம்பாள் #பெரியகோவில் #வழிபாடு #தோஷங்கள் #நீக்கும் #தெய்வம் #சர்வதோஷநிவர்த்தி #ஸ்தலம்

ความคิดเห็น • 1

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 หลายเดือนก่อน

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻❤❤❤❤❤❤🎉