பாவ கிரகங்களை குருவின் பார்வை சுபப்படுத்துமா??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 7

  • @raja5mm
    @raja5mm 5 วันที่ผ่านมา

    சந்திரன் பார்வை பற்றி விளக்கம் தரவும் sir

  • @babukannanponram6441
    @babukannanponram6441 2 หลายเดือนก่อน

    நமது சமுதாயத்தின் தூ நா க இருக்குற உங்களுக்கு வாழ்த்துக்கள்...❤❤❤❤

  • @Raja-iq3zk
    @Raja-iq3zk หลายเดือนก่อน

    குருபகவான் பார்வை என்பது வேத ஜாதகத்தில் ஒரு நிலையான அம்சம்,
    குரு பகவானின் பார்வை பலம் எந்த வீட்டிலும் ஏந்த நேரத்திலும் குன்றாது, குறையாது, அதே போல் எந்த இடத்தை பார்த்தாலும் அந்த இடத்தில் ஜாதகருக்கு நல்லது நடக்கும், உதாரணத்திற்கு ஒரு சிலர் குரு பகவான் 6 ம் இடத்தைப் பார்த்தால் நோய் வளரும் என்று தவறாக கணிக்கிறார்கள்.
    குருபகவான் பார்வையால் உறுதியாக நோயின் தீவிரம் குறைந்து கட்டுக்குள் வந்து விடும் என்பதுதான் சரி, கடன் எதிரிகள் தொல்லை நீங்கி விடும், மறைவிடம், நல்ல இடம் எதுவாக இருந்தாலும் குருபகவான் பார்வையால் ஜாதகருக்கு நன்மையே.
    ஏனைய கிரகங்களின் பார்வைதான் அது இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பலன்தரும்,
    முதலில் ஒருவருக்கு நடந்து முடிந்த காலத்திற்கு பலன் சொல்வது தர்மமாகாது, பலர் நடந்து முடிந்த காலங்களுக்கு அல்லது இறந்து போனவர்களின் ஜாதகத்தை வைத்து இது இதனால் இப்படி நடந்தது என்று சொல்வதும் தர்மமாகாது.
    வருங்காலத்திற்குதான் ஜாதகம். ஜாதகருக்கு நடந்து முடிந்த
    பலன்களுக்கு தகுந்தாற் போல் விதிகளை மீறி ஜாதகத்தை தங்களுக்கு ஏற்றார்போல் வளைப்பதும் தர்மமில்லை.
    ஒரு புனிதமான இறையுணர்வு அடிப்படையிலான ஜாதகக்கலையின் புனிதத்தை பலர் அழித்து வருகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.
    ,

    • @sukraastroway8656
      @sukraastroway8656  หลายเดือนก่อน

      என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல.
      😊😊 நீங்க வீடியோவை பொறுமையா தெளிவா பாத்தீங்களா?
      இதுல நான் பலனே சொல்லல.மாறாக ஒரு நேயர் கேட்ட கிரக அமைப்புக்கான,பார்வை மற்றும் நிலைகளையும் விளக்கிக் கூறியுள்ளேன். வேத ஜோதிடம் படிக்காமல் யாரும் பலன் சொல்ல வர மாட்டார்கள். இங்கே குருவின் பார்வை. தப்பிப் போய்விட்டது என்றோ, குருட்டுப் பார்வை என்றோ நான் சொல்லவில்லை. பொறுமையா வீடியோவை கவனிச்சு பாருங்க. அவர் சந்திரனை பற்றி கேட்டு இருக்காரு. அது குரு பார்க்கும் போது நன்மை பயக்குமான்னு கேட்டு இருக்காரு. நான் தெளிவா விளக்கம் சொல்லி இருக்கேன்.
      இன்னொரு விஷயம் நீங்க சொன்ன மாதிரி.நடந்து முடிந்த பலன்களில் இருந்து தான் தரவுகளை எடுத்து அனுபவமாக வைத்துக் கொள்ள முடியுமே ஒழிய.ஏட்டில் படித்ததை அப்படியே ஜாதகத்தில் ஒப்புவித்தால் கண்டிப்பாக பலன்கள் வாராது. இறந்தவர்களின் ஜாதகங்களை 100 ஜாதகங்களை ஒப்பிட்டு பார்த்தால் தான். ஆறு எட்டு பன்னிரெண்டு நீங்கள் சரியாக கணிக்க முடியும். ஆம் மருத்துவத்தில் உயிரோடு இருக்கும் மனிதனுக்கு. இறந்த மனிதனின் சடலத்தில் இருந்து கற்ற கல்வி தான் அனுபவமாக துறை ஆராய்ச்சி என்று சொல்லப்படும். கண், காது, நரம்பு தசை மண்டலங்களில் தனித்தனி மருத்துவராக தேர்வாக முடியும். அவர்தான் சரியான மருத்துவமும் கொடுக்க முடியும். அதை விடுத்து உயிரோடு இருப்பவனே கூறு போட்டு வெட்டிப் பார்த்து பார்த்து அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அவன் உயிரோடு இருப்பானா என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே பல நூறு ஜாதகங்களில் ஏற்பட்ட அனுபவம், ஒரே மாதிரியான தசாக்களில் பல வேறு லக்கனங்களில் நடந்த நிகழ்ச்சிகள் என்று பலவிதமாக ஆராய்ந்து பிறகுதான் ஒரு காணொளியை கொடுப்போம். நீங்கள் சொல்லும் ஏட்டுச்சுறை கறிக்கு உதவாது. ஆனால் ஏடு இல்லாமல் ஜோதிடம் வளராது, தாங்கள் சொல்லும் வேத சாஸ்திரத்தை நன்கு கற்று உணர்ந்தவன், அதன் விதிகளை ஜாதகத்தில் எப்பொழுது எங்கே பொருத்தி எங்கே பொருத்தாமல் பதில் சொல்ல வேண்டும் என்பது அனுபவத்தை பொறுத்தது. இதற்கு நோய் வாய்ப்பட்டவன், நடந்த தசாக்கள், என அனைத்து தரவுகளையும் எடுத்து ஆராய்ந்தால் மட்டுமே ஒரு முழு ஜோதிடனாக ஆக முடியும். நாங்கள் என்ன நாத்திகமா பேசி விட்டோம். இறந்த ஜாதகத்தை பலன் தான் சொல்ல கூடாது. ஏன் இறந்தார் என்று ஆராய்ச்சி செய்யலாம். அதற்கு வேத ஜோதிடம் தடை சொல்லவில்லை.. அப்படி என்றாவது சொல்லி இருந்தால் எனக்கு காட்டுங்கள். ஒரு சில இடங்களில் குருவின் பார்வை பலனே இல்லாமல் போய்விடும் என்பதை என்னால். ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.

    • @Raja-iq3zk
      @Raja-iq3zk หลายเดือนก่อน

      @@sukraastroway8656 நான் தங்களை எந்த விதத்திலும் நான் குறை கூறவில்லை,
      பொதுவான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன்.
      பலர் ஜோதிட விதிகளின் படி பலன் எடுப்பதே இல்லை. தாங்களாகவே முன்வந்து விதிகளுக்கு அப்பாற்பட்டு பலன் எடுக்கிறார்கள்,

    • @sukraastroway8656
      @sukraastroway8656  หลายเดือนก่อน

      தங்களின் ஆதங்கம் புரிகிறது.
      மக்கள் எவ்வழியோ சாஸ்திர சம்பிரதாயங்களும் அவ்வழி. இன்று கவர்ச்சிகரமான பேச்சுக்களும், ஆடம்பர அலங்காரமான வார்த்தைகளும் தான் மக்களை கவருகிறது. திருப்திப்படுத்துகிறது. நீங்கள் காட்டுக்கத்தாக கத்தினாலும், உண்மையை உரக்கச் சொன்னாலும் உங்களை ஒன்றும் தெரியாதவன் என்று உலகம் சொல்லும். பிரதான ஜோதிட வல்லுனர்கள் என்று சொல்லக்கூடியவர்களே. அடிப்படை விதிகளில் இருந்து மாறுகிறார்கள். அது ஒன்று இரண்டு. ஜாதகங்களின் தரவுகளை மட்டுமேகொடுக்கிறார்கள். பல்வேறு ஜாதகங்களின் ஆராய்ச்சிகளைஅவர்கள் கொடுப்பது கிடையாது. ஜோதிடமும் இன்று விளம்பரம் ஆகிவிட்டது. பாவம் உண்மையான சாஸ்திரம் ஊணப்பட்டு விடுமோ என்ற பயம் எனக்கும் உள்ளது ஐயா.

    • @Raja-iq3zk
      @Raja-iq3zk หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏