காரணம் நீ / Tamil Kadhal Kavithaigal / Love Kavithaigal / Ezhuthaali / Chandhru Manokar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • காரணம் நீ / Tamil Kadhal Kavithaigal / Love Kavithaigal / Ezhuthaali / Chandhru Manokar
    #KadhalKavithaigal #Ezhuthaali #ChandhruManokar
    காரணம் நீ :
    பத்திரமாய் இருந்தவன்
    பாதியிலேயே தொலைந்துபோகிறேன்.
    காரணம் கண்டறிந்த பிறகே புரிந்தது.
    எல்லாவிற்கும் காரணம் நீதான்.
    உன் கண்கள் தான் என்று.
    முகம் மறைத்த கூந்தல்,
    கொஞ்சமாய் தெரியும் கண்கள்.
    தப்பிக்கவா முடியும் - ஒரு பார்வை
    ஒரு புன்னகை - அன்றிலிருந்து
    ஆகாயம் கீழாய் புவி மேலாய்
    இடம்மாறி என்னை எங்கெங்கோ
    அழைத்துச்செல்கின்றன.
    காற்றோடு
    விரல் நீட்டி
    கதையாடும் கவிஞன் போல்,
    அழகோடு விழிநீட்டி விளையாடுகிறாய்.
    விதி என்னவோ காதலின் சூழ்ச்சிக்குள்
    என்னை அடைத்துவிடுகிறது.
    அப்போது வேறொருவகைப்பார்வை.
    இப்போது இன்னொருவகைப்பார்வை.
    இனி எந்த வகைப்பார்வையோ.
    இன்னும் எத்தனை வகையில் பார்ப்பாயோ.
    வெறும் இரண்டு கண்களில் எத்தனை விளையாட்டு.
    எனது நாட்களை
    நான் ஒரு திட்டத்தில்
    நகர்த்த நினைத்தேன்.
    ஆனால் என் நாட்களோடு சேர்த்து
    என்னையும் நீ உனது திட்டத்திலேயே
    நகரத்துகிறாய்.
    இரண்டு கண்களால் - ஒரே பார்வையால்.
    உன் எல்லா தனிமையிலும்
    என்னையும் சேர்த்துக்கொள்கிறாய்.
    உன் எல்லா நுகர்விலும் என்னையும்
    அருகில் கொள்கிறாய் - ஏனெனில்
    நான் உன்னால் காதலிக்கப்படுகிறேன்
    அல்லவா.
    எப்படி
    சிரிக்கவேண்டுமென்று
    கற்றறியும் கவிகாடு நீ.
    என்னை காணும்போதெல்லாம்
    உன்னில் இருந்து சிதறும் ஒவ்வொரு புன்னகையும்
    ஓராயிரம் கவிதையடி.
    தூர தேசத்தில்
    நான் தொலைந்தே போனாலும்,
    உன் அதிரூபக்காதல் என்னை அடைந்தே தீரும்.
    உயிரை உனதாய் எழுதும்.
    சிலர் வெக்கத்தில் அழகு.
    சிலர் திரண்ட திமிரில் அழகு.
    ஆனால் உன்னில் மட்டும் வெக்கத்திலும் ஒரு திமிருண்டு.
    திமிரிலும் ஒரு வெக்கமுண்டு.
    நூறு வண்ண
    பட்டாம்பூச்சிகளை
    ஒரே இடத்தில் உணரலாம்.
    அதன் படபட சிறகுகளை
    ஒரே இடத்தில் தீண்டாலாம்.
    எவ்விடமெனில் - நீயும் உன் கண்களும்.
    - சந்துரு மனோகர்.
    #TamilKavithai #TamilKadhalKavithai #LoveKavithai
    #TamilKavithaigal #TamilKadhal #LoveKavithaigal
    #KadhalKavithai #RomanticKavithai #LoveCouple #HeartTouchingKavithaigal #Tamilpoem #LovePoem
    #WrittingKavithaigal #Kavithaigal #HeartFeelings
    #Feelings #loveFeel #KadhalJodi #Kadhal #Kavithai
    #StatusKavithaigal #StatusKavithaiVideo #LoveStatus
    #heart #hearttouching #hearttouchingstatus
    For More Videos :
    காதல் கவிதைகள் ❤️ : • காதல் கவிதைகள் ❤️
    கதைகள் 📖 : • கதைகள்
    வாழ்க்கை : • வாழ்க்கை 😊
    Motivation 💪🏼 : • Motivation
    Friendship 👬 : • Friendship 👬
    தமிழ் : • தமிழ்
    My Lyrics : • My Lyrics
    Condact Info : chandhruflimist@gmail.com
    For Whatsapp : 9514094243

ความคิดเห็น • 6

  • @jeya6360
    @jeya6360 ปีที่แล้ว

    அய்யோ வரிகள் மிகவும் அழகு 💐💐💐💐

    • @ezhuthaali
      @ezhuthaali  ปีที่แล้ว

      🙏🏽👍🏼🖤

  • @kalaiselvikalaiselvi3250
    @kalaiselvikalaiselvi3250 2 ปีที่แล้ว

    Nice 💐💐🎉🎉👏👏

    • @ezhuthaali
      @ezhuthaali  2 ปีที่แล้ว

      ❤️🥰🙏🏽😊👍🏼

  • @PremKumar-gd2iz
    @PremKumar-gd2iz 2 ปีที่แล้ว

    ஆம் அடைந்தே தீரும் உன் பேரான்பின் கவிதைகளில் என் நாணம் 🙈உன்னை கண்டதும் என் விழிகள் 200ஆயிரம் மொழி பேசுதடா ❤🌹

    • @ezhuthaali
      @ezhuthaali  2 ปีที่แล้ว

      🙏🏽😊🥰👍🏼🖤