மறுபிறவி இல்லா வரமருளும் திருநாலூர் மயானம் கோயில் / நாலூர் / Nalur mayanam / திருமெய்ஞானம்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- திருச்சிற்றம்பலம்
மறுபிறவி இல்லா வரமருளும் திருநாலூர் மயானம் கோயில் / நாலூர் / Nalur mayanam / திருமெய்ஞானம்
இறைவர் திருப்பெயர்: ஞான பரமேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை.
தீர்த்தம் : ஞான தீர்த்தம்
காவிரி தென்கரைத்தலங்களில் 96 வது தலம்
பஞ்ச (ஐந்து) மயானங்கள்
கச்சி மயானம் காஞ்சிபுரம்.
காழி மயானம் சீர்காழி.
வீழி மயானம் திருவீழிமிழலை.
நாலூர் மயானம் நாலூர்). (கும்பகோணம்)
கடவூர் மயானம் திருக்கடவூர்
குடவாசல் சாலை வழியில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற தலத்தை அடுத்து வருவது நாலூர் என்ற ஊர். இவ்வூர் ஒரு தேவார வைப்புத் தலம். இறைவன் பெயர் பலாசவனேஸ்வரர். நாலூர் என்ற இந்த ஊரைக் கடந்து அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இவ்விடம் திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திருமெய்ஞானம் கிராமத்தில் அமைந்துள்ள ஞானபரமேஸ்வரர் திருக்கோவிலே திருநாலூர் மயானம் என்று திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாடல் பெற்ற தலம்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையில் மட்டும் திறந்திருக்கும். மற்ற நேரங்களில் கோவில் அருகில் வசிக்கும் திரு கலியமூர்த்தி (கோவில் அறங்காவலர் குழுத் தலைவர்) குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தரிசிக்கலாம்..
தொடர்புக்கு :
திரு கலியமூர்த்தி : 9486767962
ஆலய அர்ச்சகர் தமிழ்மணி குருக்கள் தொலைபேசி எண்கள் : +919080090339 மற்றும் +919443974854
முதலாம் குலோத்துங்கசோழன் கட்டிய கோயில்
கோயில் மேப் -
maps.app.goo.g...
உலக வாழ்க்கையை அனுபவித்து முடிவுற்று வரும் உயிர்களுக்கு, நிலைத்த உண்மையை உணர்த்தி ஈசன் மெய்ஞ்ஞானத்தினை வழங்கி அருளும் இடம் இது.
#நாலூர்
#நாலூர்மயானம்
#மயானம்
#மெய்ஞானம்
#ஞானம்
#சிவதரிசனம்
#சிவத்தலம்
#சிவன்
#சிவன்கோயில்
#சிவன்கோவில்
#தேவாரத்திருத்தலங்கள்
#தேவாரம்
#பாடல்பெற்ற
#தேவாரப்பாடல்
#சம்பந்தர்
#thevaram
#devara
#sivan
#padalpetratemple
#devaram
#sivantemple
#alayam
#sivalayam
#sambanthar
இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
அன்புடன்
சிவ.ஜவஹர்
☎️ 9551623296
#சிவ_ஜவஹர்
#Siva_Jawahar
இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.
இனிய வாழ்த்துக்கள் தம்பி
@@maniansakthikanalk328 திருச்சிற்றம்பலம்🙏 தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி அண்ணா இறைவனின் திருவருள் உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கட்டும்💐💐
Please explain about Rudra Abhishekam and explain 18 vaigai Sitapur alangaram ad Abhishek’s Pooja. Thankyou for replying this comment
திருச்சிற்றம்பலம்🙏
இது சம்பந்தமாக தனியே வீடியோ வெளியிட இருக்கிறேன் அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ள இயலும்.
🙏பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம் சற்று பாழ்பட்டு இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது, நிச்சயமாக பக்தர்கள் வருகை அதிகரித்து அவர்கள் வாழ்விலும், ஆலயமும் பொலிவுபெற அருள்செய் இறைவா🙏🕉 நமசிவாய 🕉🙏
@@Little_flower_94
திருச்சிற்றம்பலம்🙏 பக்தர்கள் வருகை அதிகமானால் அந்த ஆலயம் சீக்கிரம் எழுச்சி பெறும்