🦚2000 ஆண்டு பழமையான கோயில்/தீராத வினைகளைத் தீர்க்கும் தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில்🙏🏻

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • தீர்த்தகிரி முருகன் கோவில் - வேலூர் | Tamilnadu Hill temples | Murugan Temple
    #தீர்த்தகிரிMuruganTemple
    #Templeinhills
    #hillstemple
    #beautifultemplesintamilnadu
    #TemplesofTamilnadu
    #TemplesofIndia
    #murugansashtiviratham
    #sashtipoojai
    #kandhasashtiviratham
    #murugansashtipoojai
    #soorasamharam
    #temples
    #spirituality
    #murugantemple
    #theerthagirimurugantemple
    #vallithirukkalyanam
    #murugandevotional
    #murugandevotes
    #villagetemples
    #tamilgods
    #natarajar
    #venkateshwaratemple
    #malasiamurugantemple
    #salemmurugantemple
    #kandhapuranam
    #muruganstory
    #historicaltemples
    இந்தக் காலத்தில் எல்லோரையும், எல்லா இடத்திலும் காத்து நிற்பவன் செவ்வேள். முருகன் அன்பு வடிவம். அன்பே சத்தியம், அன்பே நித்தியம் என்று அவனைப் போற்றுகிறது கந்தகுரு கவசம்.
    வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகிறது. வள்ளியை மணம் புரிய கந்தன் வள்ளிமலை நோக்கிச் செல்லும்போது தீர்த்தகிரி மலையில் சிறிது நேரம் தங்கி இளைப்பாறியதாகக் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக மருகனின் பாதச் சுவடுகள் மலையேறிச் செல்லும் பாதையில் உள்ளது. வள்ளிக்கும், முருகனுக்கும் இங்கு சம உயரத்தில் சிலை அமைந்துள்ளது. ஆலயத்தின் பின்புறம் தெரியும் பசுமை மலை கண்ணுக்கு இதமான விருந்து. மலைக்கூட்டத்தில் சின்ன மலையின் மீது முருகனின் ஆலயம் உள்ளது. அடிவாரத்தில் செல்வ விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இங்கிருந்து சன்னதிக்கு மலையேறும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைமீது வாகனங்கள் செல்லவும் வழி உள்ளது.
    222 படிகள் உள்ளது.. படியேறும் போது பத்து படிகள் ஏறியதுமே வலதுபுறம் முருகனின் திருவடி தரிசனம் கிடைக்கிறது. இடது புறம் கன்னிமார்கள் சன்னதியும், வலது புறம் விழுதுகள் இல்லாத கல்லால மரமும் காட்சி தருகின்றது. மலையில் அழகான ஆலயம் கண்ணையும், மனதையும் கவருகிறது. ஆலயத்தின் மேற்கே ஆலமரம், கிழக்கே அத்திமரம், தென்கிழக்கே அரசமரம், வட கிழக்கே தலமரமான நாவல் மரம் ஆகியவை காணப்படுகிறது. ஆலமரத்தின் அடியில் ஒரு பாறையின் கீழ் இன்றும் சுனை நீர் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே இத்தலம் தீர்த்தகிரி என்று அழைக்கப் படுகிறது.. வரம் என்று வேண்டியதை அள்ளித் தரும் அருள் வள்ளல் முருகன்.
    இங்கு ஆடிக் கிருத்திகை மூன்று நாள் விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது இது தவிர, சஷ்டி, சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், பால்குட அபிஷேகம், விளக்கு பூஜை போன்றவை சிறப்பாகச் செய்யப்படுகிறது. மலேசியா பத்துமலை முருகன் சிலையைப் போலவே இங்கும் 108 அடி உயர முருகன் சிலை அமைக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பத்துமலை முருகன் சிலையைச் செய்த சிற்பியே இந்தச் சிலையையும் வடிவமைத்துள்ளார். சென்னை&வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வசூர் ஊரின் எல்லையில் அமைந்துள்ளது தீர்த்தகிரி.

ความคิดเห็น • 11

  • @jananinaveen45
    @jananinaveen45 12 วันที่ผ่านมา

    தீர்த்தகிரி சுப்ரமணிய சுவாமி கோவில் 🙏🙏🙏🙏🙏🙏 முருகா

  • @elangovanworld8426
    @elangovanworld8426 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v 12 วันที่ผ่านมา

    தீர்த்தகிரி முருகன் கோவில் காணோலி அருமை ..... இது போல உங்கள் ஊர் பக்கம் அரிதான புகழ் பெற்ற ஆலயங்கள் அடிக்கடி காணேலி போடுங்கள்🙏

  • @elangovanworld8426
    @elangovanworld8426 12 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @kavithakarthick216
    @kavithakarthick216 11 วันที่ผ่านมา

    மிகவும் அருமை சகோதரி உங்களால் நாங்களும் கோவிலை பற்றி தெரிஞ்சுக்கிட்டோம்

  • @Divya_kvp
    @Divya_kvp 12 วันที่ผ่านมา

    Thank you thangam. God bless you ma

  • @IswariyaPandiyan
    @IswariyaPandiyan 12 วันที่ผ่านมา +1

    na intha koviluku ponathilla sis but enoda paiyan name theerthagiri amaran nu than vachirukom.... kandipa oru naal murugan anga engala varavaipar nu nambikai iruku sis and thank you sis intha kovil pathi details kuda theriyama than naanga name ey vachom

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 12 วันที่ผ่านมา

    Sister murugar dharisanam nalla padiya kedacahadhu... Correct sister.. Vinaipayan dha karanam.. Neenga abishegam aradhanai pandradhellam murugaruku pidichu dha ungala varavzhaichirukaru... Koil romba azhaga sirappugalodu nalla iruku sister.. Valli thaayar kadhai la movies la pathadhu neenga solli therinchikitadhu sandhosham.. Kandipa chance kedacha nangalum murugara dharisikarom sister.. Advance vinayagar chathurthi vazhthukkal..

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk 12 วันที่ผ่านมา +1

    அக்கா நா உயரம் 8 inch முருகன் சிலை இருக்கு மாதம் ஒரு முறை அபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறேன் இப்படி செய்தால் போதுமா அக்கா

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  12 วันที่ผ่านมา +2

      @@TamilSelvi-dr1skபரவாயில்லை சகோதரி தினந்தோறும் ஏதாவது ஒரு நிவேதனம் வைத்து வழிபாடு செய்வது நல்லது முருகப் பெருமான் நம் உள்ளத்தில் குடி இருப்பவர் அவர் அருள் பரிபூரணமாக கிடைக்கும் 🙏🏻

    • @TamilSelvi-dr1sk
      @TamilSelvi-dr1sk 12 วันที่ผ่านมา +1

      @@SARHAVISKITCHENமுருகன் எங்கள் வீட்டுக்கு வந்த நாளில் இருந்து நிவேதனம் தினந்தேரும் வைக்கிறேன் .அக்கா பதில் கூறியதற்க்கு ரொம்ப நன்றி அக்கா