அற்புதமான வரிகள்.சுகமான ராகம். மனதை என்றென்றும் இளைமையாக்கும் வண்ணம் மெட்டு பாடியவர்களின் வசீகரக் குரல் கவிதை நயம். இக்காலத்து கவிஞர்கள் இவ்வாறு பாடல் எழுத முடியுமோ முடியாதோ தெரியாது. ஆனால் ஒன்று உறுதியாகச் சொல்லலாம். 1960 முதல் 1980 வரையில் திரை இசைப் பாடல்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை. 1960 க்கு முன்பு கவிதை நயம் இல்லாமல் இல்லை. ஆனால் அப்போது பாடல்களில் கவிதை அபாரம். 1980 க்குப் பிறகு கொஞ்சம் கொச்சையாக இருந்தது. இப்போது ஆபாசம் நிறைந்திருக்கிறது. முன்பு பாடலில் வரிகள் " இதழே இதழே தேன் வேண்டும்"" என்றார்கள். அதற்குப் பிறகு "வாயோடு வாய் வைத்து " என்றார்கள். பார்க்கப் போனால் இரண்டும் ஒரே அர்த்தத்தைத் தான் குறிக்கும். இந்தப் பாடலில் கவிஞரின் வரிகளைப் பாருங்கள்..தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும் என்று கதாநாயகன் கூற கதாநாயகியோ.. தென்றலுக்குப் பாதையின்றி என்னைத் தழுவு ..என்பாள்... எல்லாக் காலத்திலும் காமம் தான் தாத்பர்யம். இல்லையேல் பிரபஞ்சம் ஏது. ஆனால் கவிநயம் தான் காலத்திற்கேற்ப மாறுபடுகிறது. பல்லாயிரம் பாடல்கள் நம்மை மகிழ்வித்தது. அனைத்துப் படைப்பாளிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.🎉🎉🎉🎉
நான் பள்ளியில் படிக்கும் நாளில் அதிகமுறை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல். உண்மையில் அந்தக்காலம் ஒரு பொற்காலம் என்பதை இப்போது உணர்கிறேன். பால்யத்தை நினைத்து மகிழ்வது ஒரு தனி சுகம். இதை கடந்து வராத மனிதர்கள் இல்லை நண்பர்களே.
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல் இளமை நாட்டிய சாலை அந்த வயதில் அர்த்தம் புரியாவிட்டாலும் ஜானகி குரலில் ஒரு ஈர்ப்பு.. பாடலின் நடுவில் ஹே என ஆண் குரல் வருகிறது என வெறுப்பாக இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டு கழித்து கேட்கும்போது tms குரலில் ரசிப்பு தன்மை. மொத்தத்தில் ஜானகி, tms கூட்டணி க்கு மட்டும் வெற்றியல்ல. அந்த பாடலை என்றும் ரசிக்க வைத்த நமக்கும்தான்.
வார்த்தைகள் வரவில்லை வாயடைத்துப் போகிறது, போனது போனதுதான் மீண்டும் திரும்பாது, ஆனால் பாடியவர்கள் உனக்கும் ரசித்தவர்கள் உனக்கும் வயதாகி இருக்கலாம் இந்த பாடலுக்கு, அந்த நினைவுகளுக்கும் என்றும் இளமை தான்.
இன்றைய தேதியில் 50 வயதை கடந்தவர்களின் கனவுப் பாட்டு இது... என்ன இருந்தாலும் அந்தக் காலம் போல வருமா என ஏங்க வைக்கும் பாட்டு. பாட்டைக் கேட்டதும், பள்ளிக்கூட நாட்களே மலரும் நிணைவுகளாக மனதில் வருகிறது...கூடவே கண்ணீரும்...
இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் சந்தங்களில் இனிமை பொங்க "இளமை நாட்டிய மேடையில்" .. ஊஞ்சல் ஆடிய எஸ்.ஜானகியின் இனிமை ... நீல நிற வானம் பச்சை நிற சோலை .. நடையில் அன்னம்.. இயற்கையின் அழகின் இடையே ஆடி வரும் ஜெயச்சித்ரா .. ஆத்தங்கரையில் மாமாவை பாடிவரும் சௌந்தரராஜன்.. இசை தென்றாக வீசிய இலங்கை வானொலியின் இசையோசைகளில் இதுவும் ஒன்று...
இனிய காலை வணக்கம் யூடியூப் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாட்டை எஸ் ஜானகி அம்மாள் அருமை இனிமையாகவும் பாடிருக்காங்கா ஜானகி அம்மாள் சின்ன குழந்தை மாதிரி குரல் வளம் மதிப்பு கூறிய tms அவர்களின் குரலும் அருமை இனிமையாகவும் பாடிருக்காரு நடிகை ஜெயசித்ரா அம்மா அருமையான நடிகை எனக்கு அவர்களின் சிரிப்பு ரொம்பா பிடிக்கும் நல்லா துரு துரு சுட்டித்தனமான நடிப்பு அருமையா இருக்கும் அதுக்கு மேல அவர்களின் அழகான சிரிப்பு வாயாடி தன்மான நடிப்பு அருமை இருக்கும் மதிப்பு கூறிய ஜெய்சங்கர் அருமையான நடிகர் துப்பறியும் தென்னாட்டு ஜேம்ஸ் பாண்ட் அவர் அருமயான பாட்டு எனக்கு ரொம்பா பிடித்த பாடல் சிறுமியாக இருந்த போது கல்யாணம் வீடுகளில் கேட்டு இருக்கிறேன் அந்த சிறு வயது 76 வருடம் நினைவலைகள் அடிக்கிறது மனதில் நன்றி யூடியூப் சேனல் 🌺😊🙏
நான் குழந்தையாக இருக்கும் போது கேட்ட பாடல் ம்..... அப்படியே இருந்து இருக்கலாம் அட்லீஸ்ட் அங்கே இருந்து வாழ்க்கை மறுபடியும் ஆரம்பம் ஆனால் எப்படி இருக்கும்
1970 ஆம் ஆண்டு குழந்தைகள் நாங்கள் எங்களது இளமைக்காலத்தில் இதுபோன்ற பாடல் கள் 1970_1980 களில்வெளியான பாடல்கள் மிகவும் இனிமையான உள்ளது என்றென்றும் மனதில் நிற்கும் பாடல்கள்
பாடல் :- இளமை நாட்டிய சாலை படம் :- கல்யாணமாம் கல்யாணம் பாடலாசிரியர் :- பஞ்சு அருணாசலம் பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன் பாடகி :- எஸ்.ஜானகி நடிகர் :- ஜெய்சங்கர் நடிகை :- ஜெயசித்ரா இசை :- விஜயபாஸ்கர் இயக்கம் :- கே.கிருஷ்ணமூர்த்தி ஆண்டு :- 12.01.1974
It's really fantastic those days keep distance loveing n going to get marry it's one Of da best surprised Of in lifestyle such a trend but nowadays otha almost used n who they well known abt da sexual so it's gradually now ruined da da taste Of 💯✍️👈
இளமை நாட்டிய சாலை - இயற்கை பூமகள் சோலை - என்ன அழகான கவிதை வரிகள் - டி எம் சின் ஹம்மிங் குரல் என்ன அட்டகாசம் - இசை சொல்லுகிற விதம் சூப்பர் - கேட்டுக் கொண்டே இருக்கலாம் - கவலை வரவே வராது - ஷண்முகசுந்தரம் சோமசுந்தரம் - கோவை -16
ஜானகியம்மாவின் குரல், வீணையிலிருந்து புறப்படும் ஓசையை போல், முதலில் வரும் ஹம்மிங் அதுவே நம் செவிகளில் புகுந்து காத்திருந்த மனதை பரவசமூட்டும், இளமை நாட்டிய சாலை, இயற்க்கை, பூ மகள் சோலை, இளமை நாட்டிய சாலை, இயற்க்கை பூ மகள் சோலை, மலர்கள் யாவும், மன்மத கோலம், மங்கை ஆனந்த ராகம், இளமை நாட்டிய சாலை, இயற்க்கை பூ மகள் சோலை, நீல நிற சேலையில் வானம்,பச்சை நிற சேலையில் பூமி, நதிகளின் வண்ணம், நடமிடும் அன்னம், நாடக மேகங்கள் தாலாட்டும் தேன்கிண்ணம், இளமை நாட்டிய சாலை, இயற்க்கை பூ மகள் சோலை, இந்த மாதியான மெட்டுக்கு, வார்த்தைகளை போட்டு, நம்மை ஆனந்த ராகத்திற்க்கு, அழைத்து விருந்து பரிமாறியிருக்கிறார், அதில் சாதம், சாம்பார், கூட்டு, பொறியல், ரசம், என கலந்து அறுசுவை வழங்கியிறக்கிறார்கள், சாதமெனும் இசையை போட்டு, அதன்மேலே கவிதையெனும் சாம்பாரை ஊற்றி, அத்தோடு கூட்டு எனும் ஜானகியின் குரலை வைத்து பொறியல் எனும் T.M.S பாடவைத்து, ரசம் எனும் ஹம்மிஙை உறிஞ்சி சவைத்த போது ,இந்த கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் இந்த கவுரவ பிரசாதம் இதுவே எனக்கு போதும், என்ற மகிழ்வோடு இதை சமைத்து வழங்கிய இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு பணிவான நன்றி, இசை பிரியர்களே இதை கேட்டு மகிழங்கள் , கருத்துக்களை பரிமாறுங்கள்.
இலங்கை வானொலி யில் இந்த பாடல் கேட்க்கும் போது அது ஒரு சுகம் .இதே ஜோடி . " நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும் இனிய கவிதை பொங்கும் தேன் சிந்தும் நாள் இன்பத்தேன் சிந்தும் நாள் "" அப்படி ஒரு இனிமையான பாடல்.
இப்படி மனதைசுண்டிஇழுக்கும் பாடல்கள் நம் மனதில் அழியா பதிவாக பதிவதற்கு காரணம் இசையமைப்பாளர்களின் வெவ்வேறு வித விதமான சந்தநயம்,தாளமும் கொண்டு பாடல் இயற்றுவதே.
நான் இந்தப் பாடலை 1974இல் மஹாபாரதம் எங்கள் ஊரில் வாசித்தபோது கேட்ட இனிமையான பாடல் என்னே ஒரு அருமையான பாடல் அப்பொழுது சைக்கிளில் மிகவும் வேகமாக மிதித்துக்கொண்டே கேட்போம் அதுபோல ஒரு இனிமையான சந்தர்ப்பம் கிடைப்பது அரிது
Manithanaga piranthuvitten 99 percent santhosam kidayathu aanal ithu pola paattuk kekkum pakkiyam enakkum kidaithathu konjam manathirkku aaruthalaga ullathu thanks to you tube and all
எம் எஸ் வீ எப்பிடிப் போட்ருக்காரூ!!கிராமத்து இசையை டியூனை ரொம்ப அழகாக குடுத்திருக்கார்! அந்த ஹம்மிங் ஆஃப் டிஎம் எஸ் வெகு அருமை !டிஎம் எஸ்சின் ஜெய்க்குரல் அசத்தல்! ஜெய்சங்கர் அழகோ அழகு ! வெகு அழகா நடனம் ஆடுறார்!! இதைப் பார்த்து பின்னாளில் நிறைய ப் பாடல்களும் காட்சிகளும் காப்பியடிக்கப்பட்டன! இந்த மியூசிக்க கேட்டாவே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்!! இதுலே எல்லாப்பாட்டுமே நல்லா இருக்கும்!! காலம் பொன்னானது கடமைக் கண்ணானது இதுவும் அருமையா இருக்கும்!! அழகான மனதை அள்ளும் மனோகரமான கீதம் !!
@@phideas8364 !!அப்பிடியா?! நல்லாச் செக் பண்ணீச் சொல்லுங்க!!எனக்கு இது எம் எஸ் வீ ன்னு ஞாபகம்!! காலம் பொன்னானது கடமைக் கண்ணானது !இதைப் பற்றி அவர் ஒரு பேட்டியில் சொல்லீருந்தார் ! அதனால் கேட்கிறேன்!! எனக்கு ஆதாரத்தோட தர முடியுமா பார்த்திபன்?!எனிவே நன்றீ !!Have a good day!!
கேட்கக் கேட்க ஒரே கொண்டாட்டம் தான்!!கும்மாளம் தான்... இந்த பாடலைப் பற்றி வேறெதுவும் சொல்லமுடியவில்லை. ஆத்தங்கரை விளையாட்டு அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்...
ஏன் இந்த குரல் என்னை இப்படி மயக்குகிறது மனதை கொள்ளை அடிக்கிறது 2024லும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க
Me too
@@sugumar1966.iam also 1966
My self
My self 1963
👌👍
அற்புதமான வரிகள்.சுகமான ராகம். மனதை என்றென்றும் இளைமையாக்கும் வண்ணம் மெட்டு பாடியவர்களின் வசீகரக் குரல் கவிதை நயம். இக்காலத்து கவிஞர்கள் இவ்வாறு பாடல் எழுத முடியுமோ முடியாதோ தெரியாது. ஆனால் ஒன்று உறுதியாகச் சொல்லலாம். 1960 முதல் 1980 வரையில் திரை இசைப் பாடல்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை. 1960 க்கு முன்பு கவிதை நயம் இல்லாமல் இல்லை. ஆனால் அப்போது பாடல்களில் கவிதை அபாரம். 1980 க்குப் பிறகு கொஞ்சம் கொச்சையாக இருந்தது. இப்போது ஆபாசம் நிறைந்திருக்கிறது. முன்பு பாடலில் வரிகள் " இதழே இதழே தேன் வேண்டும்"" என்றார்கள். அதற்குப் பிறகு "வாயோடு வாய் வைத்து " என்றார்கள். பார்க்கப் போனால் இரண்டும் ஒரே அர்த்தத்தைத் தான் குறிக்கும். இந்தப் பாடலில் கவிஞரின் வரிகளைப் பாருங்கள்..தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும் என்று கதாநாயகன் கூற கதாநாயகியோ.. தென்றலுக்குப் பாதையின்றி என்னைத் தழுவு ..என்பாள்... எல்லாக் காலத்திலும் காமம் தான் தாத்பர்யம். இல்லையேல் பிரபஞ்சம் ஏது. ஆனால் கவிநயம் தான் காலத்திற்கேற்ப மாறுபடுகிறது. பல்லாயிரம் பாடல்கள் நம்மை மகிழ்வித்தது. அனைத்துப் படைப்பாளிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.🎉🎉🎉🎉
காலத்தின் நிலையை உணர்த்தும் கண்ணாடி திரைப்பட பாடல்கள் என்பதை கச்சிதமாக சொல்லியிருக்கிறீர்கள்
ஆஹா என்ன ஒரு அற்புதம் அதிசயம்
th-cam.com/video/9EO5tSbB2Lk/w-d-xo.html&lc=UgwOZmYuVIz1kFLPdG54AaABAg&si=wYZY7ZSyFXKpC3xr
கடவுள்கள் எல்லாம் பேசியிருந்தால் குரல் வளம் எல்லாம் ஜானகி அம்மா மாதிரி இருக்குமோ என்று ஆச்சரியப்பட தோன்றுகிறது குரல் வளம்
அதிக ப்ரபலம் ஆகாத திரு விஜய பாஸ்கர் அவர்களின் அருமையான இசையில் உருவான சிறந்த பாடல்...70 களில் இலங்கை வானொலியில் தினமும் ஒலிபரப்பப்பட்ட பாடல்...
1.2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்! அந்த ரசிகப் பெருமக்களுக்கு நன்றி ! திரும்ப பலமுறை பார்த்த ரசிகப்பெருந்தகைகளுக்கும் மிக்க நன்றி!
இந்த பாடல் 50 வயதை கடந்தவர்களுக்கு ஒரு கனவு பாடல்தான் அழகா ன குரல் இனிமையான நீணைவுகள்👍👍👍🙏🙏🙏🙏
Yes
1:21
உண்மை அய்யா
70 s songs are really enjoyable.
And meaningful.
70களில் பிறந்து வளர்ந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்
70களின் பொற்கால காணங்களில் இந்த பாடலும் ஒன்று 70களில் பிறந்து வளர்ந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்
நான் பள்ளியில் படிக்கும் நாளில் அதிகமுறை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல். உண்மையில் அந்தக்காலம் ஒரு பொற்காலம் என்பதை இப்போது உணர்கிறேன்.
பால்யத்தை நினைத்து மகிழ்வது ஒரு தனி சுகம். இதை கடந்து வராத மனிதர்கள் இல்லை நண்பர்களே.
You are right
❤
❤
நான் பள்ளி விடுமுறையில் குன்றத்தூர் பரிமளம் திரையரங்கில் 50காசு கொடுத்து பார்த்தப் படம். நீங்காத நினைவுடன்.
நண்பரே இந்த பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் என்று சொல்ல விரும்புகிறேன் சரிதானங்க
நான் பத்து வயது சிறுவனாக இருந்த போது கேட்ட பாடல் இன்றும் நான் இப்பாடல் கேட்கும் போது சிறுவனாகி விடுகின்றேன்!.....
True.
நானும். அப்படிதான்
Yes
Yes
அதிக லைக் பெற்ற ஒரேபாடல் இது மட்டுமே
நம் சம வயது நண்பர் கள்
அதிகம் விரும்புவது பள்ளி நாட்களே காரணம் வஞ்சகம் இல்லா வயதது
ஜானகி அம்மாவின் குறலுக்கு எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் இடாகாது அம்மா. ஒரு தனிப்பிரவி வாழ வேண்டும் பல்லாண்டு
நமது ஆழ்மனதில் ஒளிந்து கொண்டிருக்கும் சந்தோஷம் இப்படிப்பட்ட நம் இளமைக்கால பாடல்களை கேட்க்கும்போது வெளிப்படுகிறது.
😅
1970-80களின் சுட்டெரிக்கும் கோடை காலங்களில் இலங்கை வானொலியில் தென்றலாக தவழ்ந்து வந்த பாடல் 😮😊😊
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல் இளமை நாட்டிய சாலை அந்த வயதில் அர்த்தம் புரியாவிட்டாலும் ஜானகி குரலில் ஒரு ஈர்ப்பு.. பாடலின் நடுவில் ஹே என ஆண் குரல் வருகிறது என வெறுப்பாக இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டு கழித்து கேட்கும்போது tms குரலில் ரசிப்பு தன்மை. மொத்தத்தில் ஜானகி, tms கூட்டணி க்கு மட்டும் வெற்றியல்ல. அந்த பாடலை என்றும் ரசிக்க வைத்த நமக்கும்தான்.
ஜானகி அம்மா என்கிற குயிலின் குரல்.மிகவும் அற்புதமான பாடல்.
ஆண்டவன் எங்களுக்கு இந்தப் பாடல் வந்த போது இருந்த வயதிலேயே வயதை ஏற்றாமல் வைத்திருக்கலாம். ஏக்கம் பெருமூச்சாக வெளியேறியது
S
உண்மை
என்ன ஒரு அற்புதமான பாடல்.
வார்த்தைகள் வரவில்லை வாயடைத்துப் போகிறது, போனது போனதுதான் மீண்டும் திரும்பாது, ஆனால் பாடியவர்கள் உனக்கும் ரசித்தவர்கள் உனக்கும் வயதாகி இருக்கலாம் இந்த பாடலுக்கு, அந்த நினைவுகளுக்கும் என்றும் இளமை தான்.
Yes 🎉🎉🎉
இன்றைய தேதியில் 50 வயதை கடந்தவர்களின் கனவுப் பாட்டு இது...
என்ன இருந்தாலும் அந்தக் காலம் போல வருமா என ஏங்க வைக்கும் பாட்டு.
பாட்டைக் கேட்டதும், பள்ளிக்கூட நாட்களே மலரும் நிணைவுகளாக மனதில் வருகிறது...கூடவே கண்ணீரும்...
Nice same time dms enter ok .oftervice dapagkuthu
Sss bro
Super
உண்மை
Super nanba
ஜெயசித்ரா அவர்கள் எந்த கேரக்டர் தனது சிறப்பான நடிப்பால் நம் மனதைக் கொள்ளையடித்தவர் இந்தபாடல் அவருக்கு ஒரு மகுடம்
1970களின் ஒரு அற்புதமான பாடல்.
ஜானகி அம்மாவுக்கு இன்னொரு சரணம் இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
நான் இந்த பாடலை சிறு வயதில் கேட் க்கும்போது நீங்கள் பீல் செ ய்ததைப்போல் நா னும் பீல் செ ய்து இருக்கிறேன்
சூப்பராக இருக்கும்
Enakku vayasaakivittathu, engal Janaki Ammaavin kuralukkum, TMS avarkalin kuralikkum innum ilamaiye!
100% correct. I repeatedly hear only Janaki voice.
@@araja3559 Exactly.Janaki portion only interesting and TMS portion is simply simply waste .
இப்பாடலை கேட்கும் போது நாம் வானில் பறப்பது போன்ற உணர்வை தருகிறது.!
உண்மையிலேயே எனக்கும் அதே நிலைதான் வானில் பறப்பது போல் தான் இருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும் போது
படிக்கும் போது தெருவோரமா வீடு கடைகளில் பாடல் கேட்டது இப்ப கேட்கும் போது மீண்டும் மஞ்ச பைய தூக்கிட்டு பிற ஞாபகம் வந்துடுச்சி
Nss
ஒரு கோடி முறை கேட்டாலும் திகட்டாத தேன் அமுதம்
எனக்கு வயது 68 நான் பள்ளியில் படிக்கும் போது மிகவும் ரசித்து கேட்ட, கேட்கும் பாடல்.
இளம் வயதில் இந்த பாடலை மழைக்காலத்தில் கேட்டால் மனம் துள்ளல் போடும் அப்படியொரு மகிழ்ச்சி தந்த பாடல் தரும் பாடல்
எனக்கு ஜெய்சங்கர் பட பாடல்கள் மிகவும் பிடிக்கும்
கேட்டால் மனதிற்கு பரவசம் உற்சாகம், சந்தோஷம் குதூகலம் துள்ளல் புத்துணர்வு இப்படி அனைத்தையும் உண்டாக்குகிறதே ? என்ன மாயமோ இந்த பாடலில் !!
"வைகை நதி பெருகி வர...
வண்ண மணல் ஊர்ந்து வர...
இந்த வரியை இசையரசர் பாடும்போது,
அப்படியே "மக்கள் கலைஞர்" பாடுவது போன்றே இருக்கும்,
இதுதான் நம் TMS.
Yes...true....for..only....jaisir..tms....
@@rajendranmunuswamy41 நன்றி சார்...!
100%சரி.
@@palanisivan4924 நன்றி சார்...!
Super song
இப்படி ஒரு பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் தேன் கலந்து தரும் இப்பாடல் 🎼🎼🎼👌👍💐
அற்புதம் ஆனந்தம்.தற்காலத்தில் இப்படிப் பட்ட பாடல்கள் வர வாய்ப்பு இல்லை
இணி இதுபோன்ற பாடல் கல் கேட்க வாய்ப்பு இல்லை🚫
எனது மனதை மிகவும் நெருடிய பாடல் 😥😥😥மீண்டும் திரும்புமா அந்த வசந்த காலம்??? 🌺🌸🌻💐🌷🌹🍁
பாடல் என்னை சிறிய வயதிற்கு அழைத்து சென்று விட்டது. நன்றிகள் பல.
பழைய பாடல்களில்...
இதுவும் ஒரு சூப்பர் ஹிட்.
கடந்த காலங்களில்...
மறக்க முடியாத பாடல்களில்
இதுவும் ஒன்று.....
SUBRAMANIYM
Aduvuuum tent kottai yyil----
பள்ளி காலங்களில் இலங்கை வானொலியில் மிகவும் கேட்டு ரசித்த பாடல். 🎼🎼🎼
YOU ARE CARRCKKETU
அண்ணர் நலமா
இலங்கை யா...
Yesr
இந்த பாடலை கேட்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
Yes you are right. No doubt in it.
Ama
என்னவொரு அருமையான பாடல்! இப்பாடலுக்கு உலகையே எழுதி தரலாம்!
நீலநிறச்சேலையில் வானம்!! பச்சை நிறச்சேலையில் பூமி!!எத்தனை அருமையான வரிகள்!!ஜானகி அம்மாவின் இளவயது குரலில் எல்லோரையும் ஆற்றங்கரையில் காக்க வைத்து விட்டாரே.....
நீங்கள் குறிப்பிட்ட இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் .....
இருவரின் ரசனையும் ஒன்றானதோ சகோதரி..நிறைய பாடல்கள் இதுபோல் இருக்கும்..
🙏👍
டி எம் எஸ் பாடுவது எரிச்சல்
கவிக்குயில் ஜானகி.... அருமையான குரல். அருமையான இசை. அருமையான வரிகள். அருமையான பாடல்....
குரலில் தான் எத்தனை ஜாலங்கள்
மென்மையோ மென்மை
உன்மை தான் இந்த இனிமையான பாடல் நம்மை போன்ற இசை ரசிகர்களை இளமை காலத்திற்கு அழைத்துச் சொல்கிறதே என்னை அழைத்துச் சொல்கிறது இனிமை
ஜானகி அம்மாவுக்கு கடவுள் கொடுத்த வரம் இந்த இந்த குரல் வளம்
ஜானகி அம்மாவின் version மிக மிக இனிமை.. வாழ்த்துக்கள்
ஜெய் சார் பாடல்கள் ௭ல்லாமே இளமை, இனிமை நினைவுகளை மீட்டுத் தருகிறது ௮ந்த காலங்கள் வாழ்வின் பொற்காலங்கள்
True.yestrue.yes.yes.
இன்னும் எங்கள் ஊரில் ரேடியோ குழாய்களில் இது போன்ற படல்களை கேக்க முடிகிறது , மகிழ்ச்சி.
தமி்ழ் உலகை வென்று தனித்து நின்று முரசொலி கொட்டும் அய்யா TMS அவர்களின் திருக்குரல்
இளமை மலரும் நினைவுகள் . காலத்தை வென்று மனதில் ரீங்காரமிடும் பாடல்.
உண்மை தான் நண்பரே.
டி,எம்,எஸ் ஐயா மற்றும் ஜானகி அம்மாவின் குரல்கள் சூப்பரோ சூப்பர்
Ok
"High Pitch"-il, kalakkukiraarkal, S Janaki and TMS.. " Ithu-pol, oru paadal kaettathillai"
Music Director (Vijaya Baskar), well done..
இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் சந்தங்களில் இனிமை பொங்க "இளமை நாட்டிய மேடையில்" .. ஊஞ்சல் ஆடிய எஸ்.ஜானகியின் இனிமை ... நீல நிற வானம் பச்சை நிற சோலை .. நடையில் அன்னம்..
இயற்கையின் அழகின் இடையே ஆடி வரும் ஜெயச்சித்ரா .. ஆத்தங்கரையில் மாமாவை பாடிவரும் சௌந்தரராஜன்..
இசை தென்றாக வீசிய இலங்கை வானொலியின் இசையோசைகளில் இதுவும் ஒன்று...
music by MSV
@@sridharvijay563 Sorry ! Music Vijaya Basker Sure
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல் களும் அருமை
எப்படிங்க அரிதான பாடல் எல்லாம் மீண்டும் உங்களுக்கு கிடைக்குது இதேபோல் ஜேம்ஸ்பாண்ட் ( ஜெய்சங்கர்) பாடல்கள் பதிவிடுங்கள் நன்றி.
நீண்ட நாள் கழித்து மீண்டும் இந்த பாடலை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் மிக அற்புதமான பாடல்
Tnk u for uploading
இறைவன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் என் பள்ளி நாட்களை கேட்பேன்...அருமையான நாட்கள்.
70களில் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் மறக்க முடியுமா அந்த நாட்களை?
இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம் வருகிறது
இனிய காலை வணக்கம் யூடியூப் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாட்டை எஸ் ஜானகி அம்மாள் அருமை இனிமையாகவும் பாடிருக்காங்கா ஜானகி அம்மாள் சின்ன குழந்தை மாதிரி குரல் வளம் மதிப்பு கூறிய tms அவர்களின் குரலும் அருமை இனிமையாகவும் பாடிருக்காரு நடிகை ஜெயசித்ரா அம்மா அருமையான நடிகை எனக்கு அவர்களின் சிரிப்பு ரொம்பா பிடிக்கும் நல்லா துரு துரு சுட்டித்தனமான நடிப்பு அருமையா இருக்கும் அதுக்கு மேல அவர்களின் அழகான சிரிப்பு வாயாடி தன்மான நடிப்பு அருமை இருக்கும் மதிப்பு கூறிய ஜெய்சங்கர் அருமையான நடிகர் துப்பறியும் தென்னாட்டு ஜேம்ஸ் பாண்ட் அவர் அருமயான பாட்டு எனக்கு ரொம்பா பிடித்த பாடல் சிறுமியாக இருந்த போது கல்யாணம் வீடுகளில் கேட்டு இருக்கிறேன் அந்த சிறு வயது 76 வருடம் நினைவலைகள் அடிக்கிறது மனதில் நன்றி யூடியூப் சேனல் 🌺😊🙏
அன்று வயல் வெளிகளில் கேட்ட பாடல் இன்றும் மனதில் உள்ளது காலதேவா அந்த காலத்தை எங்களிடம் கொடுத்துவிடு
அந்த காலத்தின் பாடலை அந்த கால நினைவுகளோடு கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.
உடம்பில் வலி என்றால் மாத்திரை போடலாம் ஆனால் மனதில் வலி என்றால் இது போல பாடல்கள் தான் மருந்து
உண்மை bro
அருமையான விமர்சனம் ....
Unmai unmai
ஸ்
டி எம் எஸ்,ஜானகி அம்மா பாடியது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காதுக்கு இனிமையான பாடல் ஜெயசங்கர் ஜெயசித்ரா ஜோடி
நான் சிறிய வயதில் அதிக முறை ரேடியோவில் கேட்ட பாடல் ஜானகி அம்மா குரல் மிக இனிமை
I also heard this song many times in cylon Radio.....
Sweet memories of those days 💗💓
GK வெங்கடேஷ் music இளையராஜா assistant ஜானகி part full இளையராஜா
இதயம் தாங்க முடியவில்லை
@@vaseekaranshanmugam614 Music is by Vijayabaskar and not G.K.V.
Gramophone iil kulai ஸ்பீக்கர் iil
நான் குழந்தையாக இருக்கும் போது கேட்ட பாடல் ம்..... அப்படியே இருந்து இருக்கலாம் அட்லீஸ்ட் அங்கே இருந்து வாழ்க்கை மறுபடியும் ஆரம்பம் ஆனால் எப்படி இருக்கும்
Super
I too enjoyed this song at the tender age.
Tryouts tgg
Super
உண்மைதான் மனிதன் குழந்தையாகவே இருந்துவிட்டால் எந்த துன்பமும் இல்லை
நல்ல பாட்டு..கேட்டு ரொம்ப வருடங்கள் இருக்கும். அருமை..
இளைய குயில் ஜானகி
இளம் நடிகை ஜெயசித்ரா
விஜயபாஸ்கர் இளம் இசை
ஆகா.... சொர்க்கம் என்றால்..
இதுதானோ... இதுவும் ஒரு
மயக்கம்.. கிரக்கம்.
1970 ஆம் ஆண்டு குழந்தைகள்
நாங்கள் எங்களது இளமைக்காலத்தில் இதுபோன்ற பாடல் கள் 1970_1980 களில்வெளியான பாடல்கள் மிகவும் இனிமையான உள்ளது
என்றென்றும் மனதில் நிற்கும்
பாடல்கள்
பாடல் :- இளமை நாட்டிய சாலை
படம் :- கல்யாணமாம் கல்யாணம்
பாடலாசிரியர் :- பஞ்சு அருணாசலம்
பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன்
பாடகி :- எஸ்.ஜானகி
நடிகர் :- ஜெய்சங்கர்
நடிகை :- ஜெயசித்ரா
இசை :- விஜயபாஸ்கர்
இயக்கம் :- கே.கிருஷ்ணமூர்த்தி
ஆண்டு :- 12.01.1974
மேலும் இது சேலம் ரத்னா தோட்டத்தில் எடுக்கப்பட்ட பாடலாகும்.
☺
Good information.
Ungal karuthu unmai 🙏🏻
நன்றி ஐயா
இந்த பாடலை கேட்க்கும் போது சிறு வயது தில் தஞ்சை ஜூபிடர் தியேட்டரில் பார்த்த நினைவு வருகிறது
இளமை விருந்து!!காட்சி அமைப்பு கண்ணுக்கு விருந்து!!அற்புதமான பாடல்!!!
அந்த காலபாடலே ஒரு தனி சுகம் தான்
இளமை மலரும் நினைவுகள்.காலத்தை கடந்து நிற்கும் பாடல்
விஜய பாஸ்கர் இசை பிரமாதம்
TMS SJ rendered superbly!
அது பொற்காலம் இது பொல்லாத காலம்
இயற்கை சூழலும்
இசையும்
பாடலும்.அருமை.
எங்க வயசு ஆளுங்க இன்னும் ரசனையோடு இருக்கிறாங்கப்பா
It's really fantastic those days keep distance loveing n going to get marry it's one Of da best surprised Of in lifestyle such a trend but nowadays otha almost used n who they well known abt da sexual so it's gradually now ruined da da taste Of 💯✍️👈
Hi
திருமதி.ஜானகி அவர்களின் தேன் குரலில் மனதை மயக்கும் பாடல்.
இளமை நாட்டிய சாலை - இயற்கை பூமகள் சோலை - என்ன அழகான கவிதை வரிகள் - டி எம் சின் ஹம்மிங் குரல் என்ன அட்டகாசம் - இசை சொல்லுகிற விதம் சூப்பர் - கேட்டுக் கொண்டே இருக்கலாம் - கவலை வரவே வராது - ஷண்முகசுந்தரம் சோமசுந்தரம் - கோவை -16
Very impressive admirable song
👌💫
டி எம் எஸ் பாடல் தனியாகவும் ஜானகி பாடல் தனியாகவும் வந்திருக்க வேண்டிய பாடல்கள். ஒரே பாடலாக வந்து விட்டது.
70களில் வீதியில் நடந்து போகும் போது வழியில் இந்த பாடல் கேட்டால் எனது கால்கள் நடக்காமல் நின்று விடும்
ஜானகியம்மாவின் குரல், வீணையிலிருந்து புறப்படும் ஓசையை போல், முதலில் வரும் ஹம்மிங் அதுவே நம் செவிகளில் புகுந்து காத்திருந்த மனதை பரவசமூட்டும், இளமை நாட்டிய சாலை, இயற்க்கை, பூ மகள் சோலை, இளமை நாட்டிய சாலை, இயற்க்கை பூ மகள் சோலை, மலர்கள் யாவும், மன்மத கோலம், மங்கை ஆனந்த ராகம், இளமை நாட்டிய சாலை, இயற்க்கை பூ மகள் சோலை, நீல நிற சேலையில் வானம்,பச்சை நிற சேலையில் பூமி, நதிகளின் வண்ணம், நடமிடும் அன்னம், நாடக மேகங்கள் தாலாட்டும் தேன்கிண்ணம், இளமை நாட்டிய சாலை, இயற்க்கை பூ மகள் சோலை, இந்த மாதியான மெட்டுக்கு, வார்த்தைகளை போட்டு, நம்மை ஆனந்த ராகத்திற்க்கு, அழைத்து விருந்து பரிமாறியிருக்கிறார், அதில் சாதம், சாம்பார், கூட்டு, பொறியல், ரசம், என கலந்து அறுசுவை வழங்கியிறக்கிறார்கள், சாதமெனும் இசையை போட்டு, அதன்மேலே கவிதையெனும் சாம்பாரை ஊற்றி, அத்தோடு கூட்டு எனும் ஜானகியின் குரலை வைத்து பொறியல் எனும் T.M.S பாடவைத்து, ரசம் எனும் ஹம்மிஙை உறிஞ்சி சவைத்த போது ,இந்த கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் இந்த கவுரவ பிரசாதம் இதுவே எனக்கு போதும், என்ற மகிழ்வோடு இதை சமைத்து வழங்கிய இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு பணிவான நன்றி, இசை பிரியர்களே இதை கேட்டு மகிழங்கள் , கருத்துக்களை பரிமாறுங்கள்.
என்ன ஒரு அருமையான பாடல் இதைகேட்கும்போது எல்லாவிதமான பிரச்சினைகளும் ஓடோடி மறைந்து விடுகின்றன... அன்புடன் பானுகோபன் யேர்மனி.......
1977/1978 ல் கல்லூரி விடுதியில் திரும்ப திரும்ப கேட்ட அருமையான பாடல். பதிவுக்கு நன்றி. இன்னும் தெளிவான பிரிண்ட் கிடைத்தால் up load செய்யவும்.
மறக்க முடியாத பாடல்...இளமையை நினைவூட்டும் பாடல்
பார்வைக்கு இளமை, பழகுவது இனிமை, மனித நேயம் மிக்க நடிகர் jaishankar. வாழ்க. TMS janaki அற்புதம்
Beautiful song... in my school days our friends always call me as jayachitra,because my name is jaisankar..
@@jaisankargnanaprakasam2439 Antha Naal Gyabhagam 🙏😍👍
இலங்கை வானொலி யில் இந்த பாடல் கேட்க்கும் போது அது ஒரு சுகம் .இதே ஜோடி .
" நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும் இனிய கவிதை பொங்கும் தேன் சிந்தும் நாள் இன்பத்தேன் சிந்தும் நாள் "" அப்படி ஒரு இனிமையான பாடல்.
ஜானகி குரலில் எத்தனை ஜாலங்கள் அத்தனையும்
ஜெயல லிதா நளினத்தில் கலந்து
குதுகூலப்படுத்துகின்றன
லேசர்கத்தியால் கீறப்பட்டது
போல் ஜானகியும்மாவின் குரல்
அவ்வளவு இனிமை. அம்மாவுக்
கு இன்னொரு சரணம் தந்து
இருக்கலாம்.
Excellent competition ! Melodious Janaki amma vs Masculine TMS !
இயற்க்கை சூழலைசார்ந்தபாடல் வரிகள் அருமை
இப்படி மனதைசுண்டிஇழுக்கும்
பாடல்கள் நம் மனதில் அழியா
பதிவாக பதிவதற்கு காரணம்
இசையமைப்பாளர்களின் வெவ்வேறு வித விதமான சந்தநயம்,தாளமும்
கொண்டு பாடல் இயற்றுவதே.
மக்கள் கலைஞர் நடனம் ஆடியிருக்கிறார் ஆச்சரியம்
அடடா என்ன ஒரு இனிமை ஜானகி அம்மா குரல் . அவருக்கு இனையாக T.M.S.அவர்கள் குரல் அருமை.இனிமை
இந்த பாடலை கேட்கும் போது நாம் ஏன் குழந்தைகளாவே இருந்து இருக்க கூடாது என தோன்றுகிறது
பழமை ௭ன்றுமே இனிமை தான் இப்படிப்பட்ட பாடல்களை கேட்க நாங்கள் கொடுத்து வைத்தவா்களே
நான் இந்தப் பாடலை 1974இல் மஹாபாரதம் எங்கள் ஊரில் வாசித்தபோது கேட்ட
இனிமையான பாடல்
என்னே ஒரு அருமையான பாடல் அப்பொழுது சைக்கிளில் மிகவும் வேகமாக மிதித்துக்கொண்டே கேட்போம்
அதுபோல ஒரு இனிமையான சந்தர்ப்பம் கிடைப்பது அரிது
ஆஹா!என்ன ஒரு அற்புதமான இசை, பாடல், பாடியவர்;பாடலை கேட்கும் போது தன்னிலை மறந்து விட்டேன்!
பள்ளிக்கு செல்லும் நினைவு தெரிந்த நாளில் ஒலித்த இசை....ஓய்வு பெறும் நாளில் மீண்டும் உற்சாக மூட்டும் மந்திர கீதம்.....
மிகவும் பிரபலமான பாடல், எனக்கு மிகவும் பிடித்தது.
படல்சுப்பர்
அருமையான பாட்டை கேமிராவும்
பிலிம் குவாலிட்டியும் சேர்ந்து கெடுத்திருக்கு.....
பாகவதர் படம் கூட இத விட பிரின்ட் நல்லாருக்குது .ச்சீ
S
Yess!!
Manithanaga piranthuvitten 99 percent santhosam kidayathu aanal ithu pola paattuk kekkum pakkiyam enakkum kidaithathu konjam manathirkku aaruthalaga ullathu thanks to you tube and all
இப்பவும் சிலோன் வானொலி இருந்தால் நாம் பழைய காலத்துக்கு போலாம் இன்று என் வயது 58 கடந்து செல்கிறது இப்ப எல்லா டிவி பொய் சொல்கிறது இது காலமா
சரியான வார்த்தை
இந்த பாடலை எப்பேரது கேட்டாலும் சலிக்காத பாடல். இருவரும் குறள் இனிமை
எம் எஸ் வீ எப்பிடிப் போட்ருக்காரூ!!கிராமத்து இசையை டியூனை ரொம்ப அழகாக குடுத்திருக்கார்! அந்த ஹம்மிங் ஆஃப் டிஎம் எஸ் வெகு அருமை !டிஎம் எஸ்சின் ஜெய்க்குரல் அசத்தல்! ஜெய்சங்கர் அழகோ அழகு ! வெகு அழகா நடனம் ஆடுறார்!! இதைப் பார்த்து பின்னாளில் நிறைய ப் பாடல்களும் காட்சிகளும் காப்பியடிக்கப்பட்டன! இந்த மியூசிக்க கேட்டாவே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்!! இதுலே எல்லாப்பாட்டுமே நல்லா இருக்கும்!!
காலம் பொன்னானது
கடமைக் கண்ணானது
இதுவும் அருமையா இருக்கும்!! அழகான மனதை அள்ளும் மனோகரமான கீதம் !!
Isai vijayabashkar
@@phideas8364 !!அப்பிடியா?! நல்லாச் செக் பண்ணீச் சொல்லுங்க!!எனக்கு இது எம் எஸ் வீ ன்னு ஞாபகம்!! காலம் பொன்னானது கடமைக் கண்ணானது !இதைப் பற்றி அவர் ஒரு பேட்டியில் சொல்லீருந்தார் ! அதனால் கேட்கிறேன்!! எனக்கு ஆதாரத்தோட தர முடியுமா பார்த்திபன்?!எனிவே நன்றீ !!Have a good day!!
செக் விக்கி பிடிய
@@phideas8364 !!I don't understand your words!!What's that mean ?!You don't know Tamil?!then you can write it in English!!
, விக்கிபீடியா .கம் இணையதளத்தில் படத்தின் பெயர் போட்டு சர்ச் செய்து பாருங்கள் படத்தின் அனைத்து தகவலும் தெரியும்
சிறு பிராயத்தில் இலங்கை வானொலியில் அதிகம் கேட்ட பாடல். ஜானகியம்மா இளமை நாட்டிய ஷாலை என்று பாடுகிறார்
அப்படியா..? திரும்ப கேட்டுட்டு வாரேன் சகோ
Super o super
சாலை என்றுதான் பாடுகிறார்.துல்லியமாக கேட்கவும்.
சாலை என்று பாடுகிறார்.துல்லியமாக கைப்பேசியின் ஒலிப்பானை காதின் மேல் வைத்து கேட்டேன் நண்பரே!!!
கேட்கக் கேட்க ஒரே கொண்டாட்டம் தான்!!கும்மாளம் தான்... இந்த பாடலைப் பற்றி வேறெதுவும் சொல்லமுடியவில்லை. ஆத்தங்கரை விளையாட்டு அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்...
இந்த பாடலின் பெருமை முழுதும் இசையமைத்த விஜய பாஸ்கர் அவர.களை யே சாரும்
நான் ம தி தா இந்துக்கல்லூரியில் படிக்கும்போது கேட்ட பாடல்.இன்று வரை ரசிக்கும் பாடல்.
என்னுடைய சிறிய வயதில் அடிக்கடி கேட்ட பாடல் என்ன அருமையான பாடல் ஜானகி அம்மா குரல் அருமை