அளவுகோல் | MEASUREMENT ROD | INNERMAN DEVOTIONS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • 1 கொரிந்தியர் 2:15 - ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்;
    நாங்கள் செல்லும் பாதை செம்மையானதோ என்பதை, எத்தனை பேர்கள் நாங்கள் செல்லும் வழியால் செல்கின்றார்கள் என்பதினாலோ அல்லது எத்தனை பேர்கள் செல்லும் வழியாக நாங்கள் செல்கின்றோம் என்பதினாலோ நிர்ணயிக்கப்படுவதில்லை. ஒரு குடும்பத்திலே கணவன் மனைவிக்கு பத்து பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால், அந்தக் குடு ம்பத்தில் எப்போதும் சத்தமும், சந்தடியும், சண்டையும், குழப்பமு மாக இருந்தது. அவர்கள் எங்கு சென்றாலும் சமாதானத்தை குழப் புகின்றவர்களாகவே இருந்தார் கள். அவர்கள் வீட்டிற்கு எதிர்புறமாக வாழ்ந்து வந்த கணவன் மனை விக்கு பிள்ளைகள் இல்லாத்திருந்தது. ஆனாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்கின்றவர்களாகவும், நன்மை செய்கின்றவர்களா கவும், போகுமிடமெல்லாம் சமாதானத்திற்கேதுவானவைகளை பேசுகின் றவர்களாகவும், செய்கின்றவர்களாவும் இருந்தார்கள். 'சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.' எனவே ஒரு விசுவாசியானவன் பெருங்கூட்டத்தை பின்பற்றுவதாலோ, அல்லது பெரு ங்கூட்டம் ஒரு ஊழியனை பின்பற்றுவதாலோ அவர்கள் செல்லும் வழி நிறைவானது என்று கூறிவிட முடியாது. ஆண்டவராகிய இயேசு வை பின்பற்றி செல்கின்ற தேவ சித்தத்தை செய்கின்ற அவருடைய ஊழியர்களும், அவர்மேல் நம்பிக்கை வைத்து அவரை பின்பற்றி செல்கின்ற விசுவாச மார்க்கத்தாரும் வாழ்வுக்கு செல்லும் வழியிலே நடக்கின்ற வர்களாகவும், பாக்கியம் பெற்ற ஜனங்களாவும் இருக்கின்றார்கள். இன்று சிலர் தங்களுக்கென்று சில அளவுகோல்களை வைத்து, வாழ் வுக்கு செல்லும் பாதை எது என்பதை நிச்சியிக்கின்றார்கள். 'இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிரு க்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே இந்த உலகத் திலுள்ள அளவு கோலால் பரலோகத்திற்குரியவைகளை அளவிடாமல், பரலோகத்திற்குரியவைகளால் இந்து உலகத்திற்குரியவைகளை நிதா னித்து அறியுங்கள். சத்திய ஆவியானவர்தாமே சகல சத்தியத்திலும் உங்களை நடத்திச் செல்வாராக.
    ஜெபம்: நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்திலுள்ளவைகளால் பரலோகத்திற்குரியவைகளை தீர்மானம் செய்யாமல், உம்முடைய வார்த்தையின்படி வாழ எனக்கு ஞானத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
    மாலைத் தியானம் - யோவான் 14:6
    1 Corinthians 2:15 - The person with the Spirit makes judgments about all things, (KJV)
    Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada
    Background Music: Recorded by Grace Tabernacle apostolic church
    Our Website:
    gtachurch.ca/d...
    gtachurch.ca/im
    Produced by: Grace Tabernacle apostolic church, Toronto Canada

ความคิดเห็น • 3