இரவு 7.00 மணி DD தமிழ் செய்திகள் [06.07.2024]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • 1) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது - மக்களவையில் 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
    2) ஈரான் அதிபராக Masoud Pezeshkian தேர்வு - பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து - இருதரப்பு உறவுகள் மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்க தயார் என அறிவிப்பு.
    3) நாட்டின் எதிர்காலம் துடிப்புமிக்க, அர்ப்பணிப்புடன் செயல்படும் இளைஞர்களின் கைகளில் உள்ளது -குடியரசுத் துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் உரை.
    4) தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படு‍கொலை செய்யப்பட்ட சம்பவம் - மாயாவதி உட்பட பல்‍வேறு தலைவர்கள் கண்டனம்- 10 தனிப்படைகள் அமைப்பு
    5) படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மத்திய இணையமைச்சர் எல் முருகன் நேரில் அஞ்சலி - சம்பவத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும் என பேட்டி.
    6) ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உறுதி.
    7) ஆரூயிர் - அனைவரும் உயிர் காப்போம் திட்டம் - சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
    8) சென்னையில் ந‍டைபெற்ற பாஜக செயற்குழு கூட்டம் - மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் உள்ளிட்டோர் பங்கேற்பு.
    *** கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவ விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    9) முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற 116 ரன்னை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே அணி.

ความคิดเห็น •