தம்புள்ளை குகை விகாரை Dambulla golden temple | ART VAKADEKA |தரம் 10 11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • மத்திய மாகாணத்தின் தலைநகர் கண்டியிலிருந்து வடக்கே 27 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கிறது பொற்கோவில். அண்ணார்ந்து பார்க்கும் அளவுக்கு புத்தர் சிலை ஒன்று சாந்தமாய் அமர்ந்திருக்க டிராகனின் வாய்க்குள் பயணிக்கும் த்ரில்லுடன் சுமார் 160 மீற்றர் உயரத்தில் சிறு மலை மீது அமைந்துள்ளது பொற்கோவில்.
    குகைக்கோவிலாக சிறப்புப்பெற்றுள்ள இந்த பொற்கோவிலைச் சுற்றி 80 இற்கும் மேற்பட்ட குகைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 குகைகளில் கௌதம புத்தரின் 153 சிலைகளும், 3 அரசர்களின் சிலைகள், 4 இந்துக் கடவுள்களான விஷ்ணு, பிள்ளையார் சிலைகளும் காணப்படுகின்றன. அமர்ந்த, நின்ற, சயன நிலை என புத்தர் சிலைகள் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படுகின்றன.
    ஓவியங்கள் என்றதும் மனதுக்கு வருவது சீகிரிய ஓவியங்கள் மட்டும் தான் ஆனால் தம்புள்ளை குகை ஓவியங்கள் நம் நாட்டிற்கே உரித்தான கலை அம்சங்களைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 2100 மீற்றர் பரப்பளவுக்கு சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதுடன் புத்தரும், அவரின் போதனைகளை கேட்கும் சீடர்களும் ஓவியங்களாக தீட்டியுள்ளனர். 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இவ் ஓவியங்கள் தீட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவ் ஓவியங்கள் அழிவடையாது பாதுகாப்பதற்காக 1938 ஆம் ஆண்டு கதவுகள் செய்யப்பட்டு குகைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 77 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு செய்யப்பட்ட கதவுகளும் அதில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகளும் இன்றும் அழிந்து போகாமல் இருப்பதுஅதிசயம்.பௌத்தர்களின் கலைக்கலாசாரத்துடன் ஒன்றிணைந்து முதலாம் நூற்றாண்டில் வலகம்பா மன்னனால் கட்டப்பட்டது இவ் விகாரை. மன்னனின் பாதுகாப்பிற்காக இவ்விகாரை அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

ความคิดเห็น • 6

  • @kiyaskiyas2660
    @kiyaskiyas2660 ปีที่แล้ว +1

    U dea video super 👍

  • @user-kr4je6mu1c
    @user-kr4je6mu1c 4 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍👍👍👍

    • @ARTVAKADEKA
      @ARTVAKADEKA  4 หลายเดือนก่อน

      Thanks for your watching

  • @agiagilancreations6146
    @agiagilancreations6146 3 ปีที่แล้ว +3

    👉🙏🔥🔥🔥🔥nice sir
    the clear explanations sir
    i really enjoyed this video
    thank you for your great work sir ......🔥🔥🔥🔥🙏🔥

    • @ARTVAKADEKA
      @ARTVAKADEKA  3 ปีที่แล้ว +1

      Ok good Nalla sei thanks