நன்மை தீமைகள் குறித்து முட்டாள்தனமான விளக்கம் . ஆதாம் ஏவாள் நன்மை தீமைகள் அறிந்து கொள்ளவா ? விருட்சம் உண்டாக்கப்பட்டது .இது வேதத்தோடு ஒத்துப்போகாத விளக்கம்
@@paralogasathiyangal4055 ஆதாம் ஏவாள் ! நன்மை தீமைகள் அறிந்து கொள்வதற்காக விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டிய அவசியம் இல்லை அது தேவனால் விலக்கப்பட்ட விருட்சம் என்பதை புரிந்து கொண்டு அவ்விருட்சத்தின் கனியை புசியாமல் இருப்பதே தேவ கட்டளை . கட்டளையை மீறுவதும் மீறாமல் இருப்பதும் ஆதாம் ஏவாளின் சுயாதீனம் . கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிக்கிறார்களாக என்பதில் தான் இருக்கிறது . நன்மை தீமை அறிந்து கொள்வதற்காக அல்ல * தேவன் தம்மையும் , தமது வார்த்தையையும் சார்ந்திருந்துதான் மனிதன் நன்மைகளை மாத்திரம் அறிய வேண்டும் என்று விரும்புகிறார் ( உபா 10 : 13) ஆதாம் ஏவாள் தேவனின் நன்மையை மாத்திரம் அறிந்து நடந்தால் போதும் தீமைகளை அறிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் எதற்கு ? ஆதாம் ஏவாள் நன்மை தீமை அறிந்து கொண்டு தேவ கட்டளைக்கு மாறாக நடப்பதற்காக சிருஷ்டிக்கவில்லை . நன்மை தீமை அறிந்து கொள்வார்களானால் ? தங்களுக்கு நன்மையாக தோன்றுகிறவைகளை அடைந்துக் கொள்ளும்படி தீமையை நாடி போவார்கள் (ரோமர் 3 : 8). மனிதனால் நன்மையை மாத்திரம் செய்யமுடியாது ( 3 யோவான் 11) ( ரோமர் 7 : 12 , 21 )கடைசியாக ரோமர் 12 : 2 # கர்த்தரின் நன்மையை மாத்திரம் அறிந்து வாழ வேண்டிய மனிதன் நன்மையோடு கூட தீமையையும் அறிந்து வாழ வேண்டிய அவசியம் தேவ கட்டளையல்ல . கர்த்தரின் நன்மையை மாத்திரம் அறிந்து வாழ்வதே தேவ கட்டளையும் அதுவே தேவ சித்தமாக இருக்கிறது * இந்த புரிதல் உங்களுக்கு போதுமா ? இதை விட விளக்கம் அவசியமில்லை என்கிறேன் மேலும் அறிந்துகொள்ள ABC ministry, sankari Taluk, salem District, Tamilnadu
Amen Amen Amen Amen Appa.......❤❤❤❤
Praise the lord 🙏🏻
நன்மை தீமைகள் குறித்து முட்டாள்தனமான விளக்கம் . ஆதாம் ஏவாள் நன்மை தீமைகள் அறிந்து கொள்ளவா ? விருட்சம் உண்டாக்கப்பட்டது .இது வேதத்தோடு ஒத்துப்போகாத விளக்கம்
வேதத்தோடு ஒத்துப் போகும் வசனத்தை சொல்லுங்க சகோதரரே
@@paralogasathiyangal4055 ஆதாம் ஏவாள் ! நன்மை தீமைகள் அறிந்து கொள்வதற்காக விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டிய அவசியம் இல்லை அது தேவனால் விலக்கப்பட்ட விருட்சம் என்பதை புரிந்து கொண்டு அவ்விருட்சத்தின் கனியை புசியாமல் இருப்பதே தேவ கட்டளை . கட்டளையை மீறுவதும் மீறாமல் இருப்பதும் ஆதாம் ஏவாளின் சுயாதீனம் . கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிக்கிறார்களாக என்பதில் தான் இருக்கிறது . நன்மை தீமை அறிந்து கொள்வதற்காக அல்ல * தேவன் தம்மையும் , தமது வார்த்தையையும் சார்ந்திருந்துதான் மனிதன் நன்மைகளை மாத்திரம் அறிய வேண்டும் என்று விரும்புகிறார் ( உபா 10 : 13) ஆதாம் ஏவாள் தேவனின் நன்மையை மாத்திரம் அறிந்து நடந்தால் போதும் தீமைகளை அறிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் எதற்கு ? ஆதாம் ஏவாள் நன்மை தீமை அறிந்து கொண்டு தேவ கட்டளைக்கு மாறாக நடப்பதற்காக சிருஷ்டிக்கவில்லை . நன்மை தீமை அறிந்து கொள்வார்களானால் ? தங்களுக்கு நன்மையாக தோன்றுகிறவைகளை அடைந்துக் கொள்ளும்படி தீமையை நாடி போவார்கள் (ரோமர் 3 : 8). மனிதனால் நன்மையை மாத்திரம் செய்யமுடியாது ( 3 யோவான் 11) ( ரோமர் 7 : 12 , 21 )கடைசியாக ரோமர் 12 : 2 # கர்த்தரின் நன்மையை மாத்திரம் அறிந்து வாழ வேண்டிய மனிதன் நன்மையோடு கூட தீமையையும் அறிந்து வாழ வேண்டிய அவசியம் தேவ கட்டளையல்ல . கர்த்தரின் நன்மையை மாத்திரம் அறிந்து வாழ்வதே தேவ கட்டளையும் அதுவே தேவ சித்தமாக இருக்கிறது * இந்த புரிதல் உங்களுக்கு போதுமா ? இதை விட விளக்கம் அவசியமில்லை என்கிறேன் மேலும் அறிந்துகொள்ள ABC ministry, sankari Taluk, salem District, Tamilnadu
விருட்சம் உண்டாக்கப்பட்டது நன்மை , தீமை அறிந்துக் கொள்வதற்காக அல்ல . மனிதன் சுயத்தை சார்ந்துக் கொள்கிறானா ? அல்லது தேவனைச் சார்ந்துக் கொள்கிறானா? என்பதை சோதிப்பதற்காக . மனிதன் சுயாதீனம் உடையவனாக ம்ட்டுமல்ல , மனச்சாட்சி உடையவனாகவும் சிருஷ்டிக்கப்பட்டான் . காரணம் , மனிதன் சுயாதீனத்தைப் பயன்படுத்தி தானாகவே தேவனுக்குக் கீழ்படிலதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் தேவனுடைய விருப்பம் . மனிதனைக் கட்டாயப்படுத்திக் கீழ்படிய வைக்க தேவன் விரும்பவில்லை . விசுவாசத்தின் அடிப்படையில் அவன் கீழ்ப்படிய வேண்டும் . அதாவது , அன்பினால் கீழ்ப்படிய வேண்டும் ( யோவான் 14 ; 15 , 21 , 23 ) . ஆகையால்தான் மனிதனை சோதிப்பதற்கு ஒரே ஒரு எளிய கட்டளையைக் கொடுத்திருந்தார் . மனிதன் சோதிக்கப்படுவதற்கு சாத்தானை , தேவன் அனுமதித்திருந்தார் ( யோபு 1 ; 12 , லூக்கா 22 ; 31 ) . விசுவாசம் என்பது மனச்சாட்சியோடு சம்பந்தப்பட்டது ( 1தீமோத்தேயு 1: 18 ,19 , 1தீமோத்தேயு 4 ; 1 , 1 தீமோத்தேயு 3 ; 9 , 1 தீமோத்தேயு 1; 5 ) . மனச்சாட்சி தேவனுடைய சத்தமாக இருக்கிறது . மனிதன் அதற்குக் கீழ்படியவோ . அதைத் தள்ளி விடவோ முடியும் . மனிதன் மனசாட்சியின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து , ஜீவ விருச்சத்தின் கனியை புசிப்பது என்பது தேவனைச் சார்ந்துக் கொள்வதாகும் . தேவன் ஆவியாயிருக்கிறபடியால் , தன்னுடைய ஆவியில் தேவனுடைய ஆவியைப் பெற்றுக் கொள்வதாகும் ( யோவான் 4 : 24 ) . ஆனால் , மனிதன் மனசாட்சியின் சத்தத்தைத் தள்ளிவிட்டு , சுயசித்தத்திற்கும் , சுயத்திற்கும் கீழ்படியும்படி சாத்தானால் மோசம் போக்கப்பட்டான் . அன்புக்கு எதிரி சுய நலம் ( ரோமர் 5 : 5 ) .
ஆதாமைப் போலவே , இஸ்ரவேல் ஜனங்களும் தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க சுமார் 1500 ஆண்டுகள் முயற்சி செய்தனர் . அவர்களால் முடியவில்லை . ஆதாமைப் போலவே இஸ்ரவேல் ஜனங்களும் மீறினார்கள் ( ரோமர் 5 ; 17 , 18 , 19 , 20 ) . காரணம் , ஆதாமின் சுபாவத்தை அனைவரும் பெற்றுக் கொண்டிருக்கிறோம் ( ரோமர் 3 ; 9 , 10 , 11 , 12 , 23 ) . இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தேவன் கட்டளையைக் கொடுத்தது கடைபிடிப்பார்கள் என்பதற்காக அல்ல , அவர்களை சோதிப்பதற்காக . அவர்கள் இருதயத்தில் இருக்கும் சுயத்தை அறிந்துக் கொள்வதற்காக . மாம்சம் ஒன்றும் உதவாது என்பதை காண்பிப்பதற்காக . அவர்களால் அதைக் கடைப்பிடிக்க முடியாது என்பதை நிஜத்தில் நிரூபிப்பதற்காக . அவர்களைத் தாழ்மைப்படுத்துவதற்காக . தேவனுடைய கிருபைக்குக் கீழாக அவர்கள் வரவேண்டும் என்பதற்காக (உபாகமம் 8 : 2 , 3 , அப்போஸ்தலர் 1 : 8 , ரோமர் 6: 14 ) .
இயேவைப் பின்பற்றுவதுதான் நன்மையானது . பரிசுத்த ஆவியினால் இயேசுவைப் போலவே வாழ்வது . கிறிஸ்துவின் ஜீவனில் வாழ்வது ( 1பேதுரு 2 : 20 , 21 , 22 , 23 , 1 யோவான் 2 : 6 , பிலிப்பியர் 1: 21 , ரோமர் 8 : 12 , 13 , 28 , 29 , மத்தேயு 7 : 11 , யாக்கோபு 1 : 17 ) . மாம்சத்தைப் பின்பற்றுவதுதான் தீமையானது . மாம்சம் என்பது சுயத்தைக் குறிக்கிறது ( ரோமர் 8 : 18 ) . சுயத்தைக் காட்டிலும் தேவனுடைய பார்வையில் மிகப் பெரிய பாவம் வேறொன்றுமில்லை . எல்லாப் பாவமும் சுயம் என்ற கருவிலிருந்துதான் உற்பத்தி ஆகிறது . சுயம் ( மாம்சம் ) அழிந்தால் பாவம் ஒன்றுமில்லை ( கலாத்தியர் 2 : 20 , கலாத்தியர் 5 : 24 , ரோமர் 6 : 6 ) . சுயம் சாக சிலுவையின் வாழ்வு வேண்டும் ( லூக்கா 9 : 23 , லூக்கா 14 : 26 , 27 , 33 ) . இதுவே மெய்யான சத்தியம் . பூரணமான சுவிசேஷம் .