157) காலையில் பாட்டு எழுதி மதியம் படப்பிடிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • பிலிம் நியூஸ் ஆனந்தன் அண்ணன் ஒரு நடமாடும் சினிமா என்ஸைக்ளோபீடியா. அவர் என்னிடம் சொன்ன சுவையான சம்பவங்களில் சிலவற்றை மட்டும் இங்கே சொல்லி இருக்கிறேன்.

ความคิดเห็น • 70

  • @Abitha0907
    @Abitha0907 ปีที่แล้ว +2

    கவிஞர் கண்ணதாசனின் அபார திறமைகள் வியக்க வைக்கின்றன தகவலுக்கு நன்றி. நான் ஜீவா இலங்கையிலிருந்து.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 ปีที่แล้ว +6

    கவியரசர் பற்றி சுவையான சம்பவங்கள் அதிகாலையில் கேட்டவுடன் புத்துணர்ச்சி தருகிறது. அவர் வடித்த காவியங்கள் தான் எத்தனை. அத்தனையும் காலம் வென்று நிற்கும்.
    வணக்கம் ஐயா 🙏💐

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +2

    கவிஞர் அவர்களை நினைத்து கண்கள் குளமாகிறது நல்ல பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அறியாத தகவல் தந்தீர்கள் நன்றி ஐயா

  • @arumugamannamalai
    @arumugamannamalai ปีที่แล้ว +14

    கவிஞர் ஒரு கவியரங்கத்தில் பாடிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது :"தோன்டுகின்ற போதெல்லாம் சுரக்கின்ற செந்தமிழே
    வேண்டுகின்ற போதெல்லாம் விளைகின்ற நித்திலமே
    உனைத் தவிர உலகில் எனைக் காக்க
    பொன்னோ பொருளோ
    போற்றி வைக்க வில்லையம்மா
    என்னைக் கரையேற்று
    ஏழை வணங்குகிறேன் "
    தமிழ்த் தாயின் தவப்புதல்வன் கவியரசுவை தமிழ்த் தாய் என்றும் கைவிட்டதில்லை. எனவே ஆசுகவி ஆனார் நம் கவிஞர் கண்ணதாசன் 🙏🙏

    • @babyravi7956
      @babyravi7956 ปีที่แล้ว +1

      துரை அண்ணா கவிஞரின் கவிஅரங்க கவிதைகள் சொ.சொ.மீ.சுந்தரம் ஐயாவிடம் நிறைய உள்ளது.அதை வாங்கி புத்தகமாக்குங்கள்.படித்துக்காட்டுங்கள்.

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +4

    இனிய காலை வணக்கம் அண்ணா.
    அற்புதமான பதிவும் அறியாத தகவலும்.. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத இசைதேவனும்கவிதேவனும்.. அற்புதமான பொற்காலப்பாடல்கள் எத்தனை எத்தனை?.. 🙏💐💐💐💐💐 மறக்க முடியாத காலங்கள் 👏👏👏
    நன்றி நன்றி அண்ணா
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐 வாழ்க வளர்க வெல்க 👍👍🌹🌹😀

  • @aswintamilstories
    @aswintamilstories ปีที่แล้ว +9

    காலையில் கவிஞரைப் பற்றி உங்களிடமிருந்து கேட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி 🙏
    வாழ்க கவிஞர் கண்ணதாசன் புகழ் 🙏🙏🙏💓💓💓💓

  • @gowrisankar237
    @gowrisankar237 ปีที่แล้ว +3

    கண்ணதாசனே கவிமேகமே காலனால் பாதிக்கப்பட்டாலும் காலத்தால் நிலை பெற்றவனே என் கண்ணதாசனே கவிமேகமே!

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +1

    Mr. Annadurai it has been a long time since last hear you.
    Ever green memories explained by you are praise less. Thank you.

  • @vibulananthans0210
    @vibulananthans0210 ปีที่แล้ว +2

    ஆமாம். தங்களின் பல காணொளியில் இது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. காரணம் அந்தக் காலத்தில் எப்படி ஆத்மார்த்தமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். எப்படியெல்லாம் மற்றவர்களை மதித்து மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அற்புதம் அருமை. இதையெல்லாம் கேட்ட பின்னர் இன்றைய நிலையைப் பார்த்து பெருமூச்சு தான் வருகிறது.

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran ปีที่แล้ว +4

    அலுக்கவே இல்லை. கவிஞரின் திறமையும் அவர் பெற்ற தமிழ்ப்புலமையும் செவிமடுக்கின்ற போழ்து.
    புலமை திறமையாலும் தொடர்ந்து பயணிப்பதாலும் சிறக்கும் என்ற போழ்திலும் இறையருளே பூரணத்துவத்தையும் புகழையைம் அள்ளித்தரும். அரசவைக்கவியோடு
    அருட்கவியும் ஆனவர் கவியரசு கண்ணதாசன்.
    🙏🙏🙏

  • @meenumanivannan5550
    @meenumanivannan5550 ปีที่แล้ว +6

    தாய் தமிழை தமிழால் பதிகம் செய்த நம் கவிஞர் புகழ் இப் புவி உள்ளவரை இருக்கும். வாழ்க தமிழ்

  • @anandr7842
    @anandr7842 4 หลายเดือนก่อน

    எத்தனை தான் பாராட்டினாலும் கவியரசரின் திறமைக்கு போதாது அவர்இமயம்.

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 ปีที่แล้ว +18

    திரு. துரை அவர்களுக்கு ஆசிகளுடன் துவங்குகிறேன். (1) இதுநாள் வரை அறியாத திரைக்கலை பத்திரிக்கைக்கு கவிஞர் எழுதி அளித்த வாழ்த்துப்பாவையும் , பத்திரிக்கையாளர் சங்கத்துக்காக அளித்த மற்றொரு பாடலையும் அறிய வைத்தமைக்கு நன்றி. இந்த இரண்டு பாடல்களும் "பாடிக்கொடுத்த மங்கலங்கள்" புத்தகத்தில் ஏன் இடம் பெறவில்லை என்று தெரியவில்லை. இதைப்போன்ற கவிதைகளை சேகரித்தால் கவிஞரின் தனிக்கவிதை திரட்டு என்று எட்டாவது தொகுதி வெளியிடலாமே. (2) முன்னாட்களில் ஒரு திரைப்படம் வெளியானதும் உடன் பாட்டு புத்தகமும் வெளியிடுவார்கள். அந்த புத்தகத்தில் ஒவ்வொரு பாட்டையும் எழுதிய கவிஞர்கள் பெயரும் ஆதார பூர்வமாக இருக்கும். பிற்காலங்களில் அந்த புத்தகங்களை re print செய்தும் விற்பனைக்கு கிடைத்தது. அப்படி பழைய பாடல் புத்தகங்கள் கிடைத்தால் கவிஞரின் திரை இசைப்பாடல்கள் ஆறாவது தொகுதி வெளியிடலாம். இதுவரை கவிஞரின் சுமார் 2500 பாடல்கள் மட்டுமே நூல் வடிவில் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட பழைய பாடல் புத்தகங்களை வைத்திருப்பவர்கள் கடனாக அல்லது இரவலாக கொடுத்தால் என்னிடம் ஏற்கனவே உள்ள புத்தகங்களுடன் சரிபார்த்து கவிஞரின் திரை இசைப்பாடல்கள் ஆறு மற்றும் ஏழாவது தொகுதியை கண்ணதாசன் பதிப்பகம் மூலம் வெளிக்கொணர நான் முன்வரத் தயாராக இருக்கிறேன்.

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว

    நிணைத்தவுடன் பாட்டெழுதும் காளமேகக்கவிஞர்/தமிழ்த்தாயின் தவப்புதல்வர்/கவிஞர்களில் முதல்வர்/

  • @papayafruit5703
    @papayafruit5703 ปีที่แล้ว

    கேட்க கேட்க மெய் சிலிர்குது!!!!

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்களை சுவைபட சொன்ன விதம் சிறப்பு. கவியரசர் புகழ் ஓங்குக!

  • @kannangopalaln7683
    @kannangopalaln7683 ปีที่แล้ว +3

    கவியரசர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்

  • @jayakumarrajagopal5463
    @jayakumarrajagopal5463 ปีที่แล้ว +1

    மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி இவன் தந்தை எனனோற்றான் கொல் எனும் சொல்.வள்ளுவன் வாக்கு பொய்க்கவில்லை.இன்றைய தலைமுறைக்கு தமிழ் பால் ஊட்டிய கவியரசர் புகழை மேலும் வளர்க்க ஆண்டவன் உமக்கு நீண்ட ஆயுளை அருளட்டும்.

  • @kalidossp1230
    @kalidossp1230 ปีที่แล้ว +2

    Nice, Great Kannadasan Ayya. Romba gap vidatheenga Sir. Adikkadi post podungal. Request only.

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 ปีที่แล้ว +2

    அருமை.... நன்றி

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 ปีที่แล้ว +2

    நினைவுகளை நினைவு கூர்வதிலும் இன்பம். அதைவிட அதில் உள்ள உயிரோட்டத்தை உணர்ந்து கொள்வது என்பது பேரின்பம். இப்படிப்பட்ட கலைஞர்களுடன் வாழ்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்களாக இருப்பார்கள்.

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 ปีที่แล้ว +3

    வெகு நாளைக்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல பதிவு.

  • @muthukumaarrigthsignalz3259
    @muthukumaarrigthsignalz3259 ปีที่แล้ว +6

    அய்யா இது போன்ற பல அரிய தகவல்களை சேகரித்து எங்களை ஆனந்த கடலில் ஆழ்த்துங்களேன். வாழ்க கவியரசர்.

  • @narayankanna2870
    @narayankanna2870 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @vpalaniappan1045
    @vpalaniappan1045 ปีที่แล้ว +1

    நன்றி அணணா துரை

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 ปีที่แล้ว +8

    கேட்டதும் மனதில் தோன்றியது. கவிஅரசர்
    தெய்வீக கவிஞர்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பதிவு! "போலீஸ்காரன் மகள்" திரைப்படத்தில், நெஞ்சம் பதறி.. கண்கள் குளமாகி..... கலங்கும் வண்ணம் Sridhar அமைத்த காட்சிக்கு, ஒரு குந்தகமும் ஏற்படுத்தாது, காட்சியினை மெருகூட்டும் வண்ணம், உடனடியாகப் பாடல் எழுதி, எம்எஸ்வி உடனடியாக இசையமைத்து, சீர்காழி தனது கம்பீரமான குரலால் உடனடியாகப் பாடி சிறப்பித்துள்ளது.... ஒரு வரலாற்று நிகழ்வாகும்! பதிவிட்டு மகிழ்ந்த தங்களுக்கு நல்வாழ்த்துகள்!!

  • @touringdairy9835
    @touringdairy9835 ปีที่แล้ว +4

    கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் மற்றும் வாழ்க்கை பாடங்கள்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 ปีที่แล้ว +2

    Moothoor sollum Muthir nelli kaniyum mudalli kasakum pin
    Inikkum,kaviarasar is a real
    Real Genius

  • @jbphotography5850
    @jbphotography5850 ปีที่แล้ว +8

    தமிழ் தாயின் தவப்புதல்வன் ஒருவரின் முகத்தை பார்த்து உடனே எழுதி கொடுக்கின்ற அற்புதம் எங்கள் கவியரசரின் சிறப்பு வாழ்க கவியரசு புகழ்

  • @balurr9244
    @balurr9244 ปีที่แล้ว +1

    Arumai Anna

  • @vijaykrt7068
    @vijaykrt7068 ปีที่แล้ว +1

    Kaalai Vanakkam Super sir arumai

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 ปีที่แล้ว +1

    தமிழ் உலகத்தின் தவப்பயன் கவிஞரின் படைப்புகள்.

  • @m.viswanathan6812
    @m.viswanathan6812 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள். அருமை.

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 ปีที่แล้ว +3

    இன்றைக்கு ஒரு பாடல் எழுத 1 மாதம் எடுத்துக்கொள்கிறார்கள். அதற்கு இசையமைத்து பாடல் பதிவு செய்ய 6 மாதம் ஆகிறது. வாழ்க கவிஞர்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว

    Ayya Engal Kaviarsssr Great Tamil danced her in tunes

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว

    தமிழால் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு சிறப்பு. கண்ணதாசன் அவர்களால் தமிழ் மொழிக்கும் சிறப்பு. ஒரே விதமான ஒலிகளை உச்சரிக்கும் வார்த்தைகளை தமிழை தவிர வேறு மொழியில் முடியாது. அதைபோல வசன நடைகளையும் சொல்லலாம். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மனோரமா அவர்கள் பேசிய கம்முனு கிட என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை தெலுங்கில் கிடைக்கவில்லை என்று ஒரு தகவல் உண்டு. அப்படிபட்ட தமிழின் சிறப்புகளை உலகறிய செய்த பெருமை கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களை சேரும். மாலை வண்ணமாலை. பார்த்தேன் ரசித்தேன். நீங்கள் கூறிய பொன்னென்பேன் சிறு பூவென்பேன் பாடல்களை உதாரணமாக சொல்லலாம். வாழ்க கவிஞர் கண்ணதாசன் ஐயா.

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +2

    நடிகர் விவேக் சொல்லி சிலவேடங்கள்ஒத்துக்கொண்டீர் கள்.அப்படிவரவேற்புஅவைகளு க்கு.டாக்டர்நர்ஸசீன்.என்கணவர்டாக்டர்.அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன்கூடஇருந்துமற்றநகைச் சுவைபோலஇதைரசிக்கமுடியலையேனுநினைப்பேன்.படிக்கும்காலத்தில் சினிமாசெய்திபடிக்கமுடியாத போதுபிலிம்நீயூஸ்ஆனந்தனது செய்திகள் ஷார்ட்நோட்ஸ் போல. நன்றி!!

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว

    Valuable facts and the treasured legacy left behind by your Father and his team A K 💝💫👌

  • @yoganandamm
    @yoganandamm ปีที่แล้ว +1

    கவியரசு அவர்களின் படைப்புகளைப் பற்றிய அரிய தகவல்களைத் தொடர்ந்து சுவை குன்றாது வழங்கி வரும் உங்களுக்கு எங்கள் பாராட்டுகளும் நன்றிகளும். ஒரு வேண்டுகோள்: பாரதப்பிரதமர் நேரு அவர்கள் மறைந்தபோது தங்கள் தந்தையார் எழுதிய இரங்கற்பாவினை யாராலும் மறக்க முடியாது. கோவைப் பொருட்காட்சி மேடையில் தனது கம்பீரமான குரலில் திரு சீர்காழி வழங்கியது இன்றும் என் நெஞ்சையும் செவிகளையும் விட்டு அகலவில்லை! சீர்காழி அவர்களால் பாடப்பட்ட அந்தப் பாடல் உங்களிடம் உள்ளதா? அதனை (தேடிக் கண்டு பிடித.தாவது) பதிவேற்றம் செய்ய இயலுமா? உணர்ச்சி வெள்ளமும் போட்டி போட்டுப் பெருகும் அந்த அனுபவத்தைப் பெறும் வாய்ப்பு எங்களுக்கு மீண்டும் வாய்க்குமா?

  • @madhan8402
    @madhan8402 ปีที่แล้ว +1

    அய்யா கவிஞர் முதலில் tuneku எழுத பயிற்சி எப்படி எடுத்தார் video போடுங்க

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 ปีที่แล้ว

    அருமை...மிக்க நன்றி..

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 ปีที่แล้ว

    Mr Annadurai sir Really you are very great son of Kavi Arasar Kannadasan Here I remember one Thirukkural Magan thanthaiku aatrum udavi ivan thanthai ennotran kol enum soll If any mistake in the Thirikkural please forgive me I thank you very much for the information about your father God bless you

  • @devarajankrishnaiah9770
    @devarajankrishnaiah9770 ปีที่แล้ว

    தெய்வம் மனித வடிவில் தலைச்சிறந்து
    ( incomparable )
    உலகத்த்துக்கே வழிகாட்டியாக அனுப்பிய தூதர் - என்பதை யவராலும் மறுக்க முடியாத உண்மை.

  • @manickamponnusamy3465
    @manickamponnusamy3465 ปีที่แล้ว

    Anna vin perudan thigalum Durai avagalukku surukkamaagavum Thelivaagavum, rasikkum vagayil sollum thangalukku,thangalin thanthayil ninaivaal kanneerudan paaraattukiren.

  • @romankanna283
    @romankanna283 ปีที่แล้ว

    Sir...my name kuda kannadasan dhan 😍 from sowcarpet 🙋

  • @remingtonmarcis
    @remingtonmarcis ปีที่แล้ว +2

    கவிஞரின் கவி கேட்க காலம் போதாது -
    கண்ணதாசனின் புகழ் பாட இப்பிறவி போதாது -
    முத்தையாவின் முத்தான தமிழ் சுவைக்கா தமிழன் இவ்வுலகிலேது !

  • @venkataramanashok3171
    @venkataramanashok3171 ปีที่แล้ว +1

    Anna durai Sir. தாங்கள் பகிர்ந்து கொள்ளும் விவரங்களுக்கு மிக்க நன்றி. பல பாடல்களில் ஆரம்பத்தில் சில வரிகள் வரும். For example, சிலர் சிரிப்பார்…… in Carnatic music it is callled virutham
    இதைப் பற்றி சொல்லவும்….. Director கேட்டாரா அ்அல்லது கவியரசரே எழிதினாரா ? பாசமலர் கூட…. நன்றி

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 ปีที่แล้ว

    What a coincidence. இன்று (1/4/2023) youtubeல் அனந்த கிருஷ்ணன் என்பவர் போலீஸ்காரன் மகள் படத்தின் இந்த மன்றத்தில் ஓடி வரும் பாடலுக்கு தெலுங்கு பதிப்பான கான்ஸ்டபிள் கூத்தரு படத்தின் காட்சியை remix செய்து பதிவேற்றிருந்ததை பார்க்க நேர்ந்தது. உடனே அந்த தெலுங்கு படத்தின் மற்ற எல்லா பாடல்களுக்கான காட்சிகளையும் பார்க்க தோன்றியது. பார்த்து முடித்தபின் மனதுக்குள் போலீஸ்காரன் மகள் படத்தின் மேன்மையை எண்ணி புளங்காங்கிதம் அடைந்து நண்பர்களோடும் என் ஆற்றாமையை பகிர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் தற்செயலாக உங்கள் சானலின் 157வது எபிசோடை பார்க்க நேர்ந்தது. அதில் நீங்கள் அதே போலீஸ்காரன் மகள் படத்தின் பாடல் விளக்கங்களையும் அதையொட்டி நடந்த சம்பவங்களையும் கூறியுள்ளதை கேட்டு ஆச்சரியப்பட்டுத்தான் what a strange coincidence என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு இந்த பதிவை போட்டுள்ளேன்.

  • @bas3995
    @bas3995 ปีที่แล้ว +1

    கவியரசர் மெல்லிசை மன்னர் ஶ்ரீதர் கூட்டணி என்றால் சொல்லவும் வேண்டுமோ?. கேட்கவே உள்ளம் கள்வெறி கொள்கிறது. இன்று இருக்கும் சூழ்நிலையில் எவருக்கும் இது சாத்தியம் ஆகுமா என்பது பெரும் கேள்விக்குறி. வாழ்க கவியரசர் வாழ்க செந்தமிழ்

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 ปีที่แล้ว

    Superb episode sir.

  • @saravananm9777
    @saravananm9777 ปีที่แล้ว

    I have been searching this book for many years. nowhere it is available sir.. really it a treasure of tamil cinema

  • @kannanravi8617
    @kannanravi8617 ปีที่แล้ว +1

    திருமிகு. அ. கண்ணதாசன். அவர்களுக்கு வணக்கம். நான் கவிஞருடைய தீவிர ரசிகன் கவிஞர் ஐ மீட்டீங்கில் இரண்டு முறை பார்த்திருக்கிறேன். தவிர உங்கள் you tube தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். அற்புதமாக உள்ளது. நன்றி. . நான் தெரிந்துக்கொள்ள 2.விஷயங்கள் யாதெனில். 1.நாஞ்சில் கி. மனோ.
    2.அன்றைய 1967 மந்திரி மாதவன். ஆகிய இருவரும் கவிஞருக்கு எதிரி என்கிறார்கள். நான் இருவர் பேச்சு யையும் கேட்டு இருக்கிறேன். கவிஞரை எந்த விமர்சனம் செய்ததில்லை. எனக்கு அளவுகடந்த மரியாதை கவிஞர் மேல் என்பதால் விளக்கம் தருவீர்கள். என்று நம்புகிறேன். வணக்கம். நன்றி.

  • @madanagopalmuthaiyan1497
    @madanagopalmuthaiyan1497 ปีที่แล้ว

    "உறவு வரும் மறுநாள் பிரிவு வரும்" P. சுசீலா பாடிய பாடலை இயற்றியவர் யார்? இப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது? இப்பாடலைப் பற்றிய விவரங்களை சொல்ல முடியுமா?

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 ปีที่แล้ว

    Nice information sir.

  • @MuthuKumar-ir9rh
    @MuthuKumar-ir9rh ปีที่แล้ว

    🌹🌹🌹🙏🙏🙏👌👌👌👌👌

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 ปีที่แล้ว

    I think a song take four minute to complete and the same was written within two minutes by Kavignar!

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 ปีที่แล้ว +1

    ஐயா! இது போல் ஆலயமணி படத்திற்கும் பாட்டு எழுதித்தர கேட்டார்களாம். கவிஞர் அரசியல், திரையுலகம் இரண்டிலும் அப்போது மிகவும் பிசியாக இருந்ததால், அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு, திரும்பி வந்து பாடல்களை எழுதித்தருவதாக சொன்னாராம். தொடர்ந்து GNV பிக்சர்ஸ் கேட்டபோது கவிஞரின் உதவியாளர் "என்னண்ணே இது? அவர்கள் கேட்டவுடன் சட்டி சுட்டுது, கை விட்டுதுன்னு எழுதித்தரவேண்டியதுதானே?" என்றாராம். அப்படி வந்ததுதான் " சட்டி சுட்டதடா! கை விட்டதடா!" பாடல் என்ற ஒரு செய்தி ஒரு வார இதழில் படித்ததாக நினைவு. இது உண்மையா?

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 ปีที่แล้ว

    ஸ்ரீதரின் போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி படங்களில் சுசீலா பாடவில்லையே ஏன்? ஸ்ரீதரின் மற்ற படங்களைப்போல் அல்லாமல் இந்த இரண்டு படங்களில் பெண் குரலின் பாடல்கள் எடுபடாமல் போனதற்கு இதுதான் காரணமோ!

  • @savijayakumar3457
    @savijayakumar3457 ปีที่แล้ว +2

    சோகமான முடிவு கொண்ட ஒரு திரைப்படத்தின் முடிவில் பாடல் வைத்தால் மக்கள் அதை உட்கார்ந்து பார்த்திடுவார்களா? கவியரசர் பாடலை எழுதி மெல்லிசை மன்னர் இசையமைத்தால் படம் முடிந்து பாடலும் முடியும் வரை இருந்து கேட்டுவிட்டு கனத்த இதயத்தோடும் கலங்கிய கண்களோடும் ரசிகர்கள் அரங்கைவிட்டு வெளியேறுவார்கள். அந்த படங்களும் வெற்றி பெற்ற படங்களாக அமைந்துவிடும்.

    • @aasaimaligai
      @aasaimaligai ปีที่แล้ว

      மிகவும் அருமையான பதிவு துறை அவர்களே மிகவும் அழகமகிழ்ந்தேன். தென் மாவட்டத்தில் கவிஞரோடு பயணப்பட்டது என் எண்ணத்திரையில் நிழலாடுகிறது (அது ஒரு கனா காலமாக). 1962 முதல் 1966 வரை புகைப்படத் தொழில் வாயிலாக அவரது காரில் தமிழ் தேசிய கட்சிக்காக சொல்லின் செல்வர் சம்பத் அவர்களுக்காக அவர் செயல்பட்ட நேரத்தில்அவருடன்பயணம் செய்தேன். அதனை ஒரு பெரும் பாக்கியமாக கருதி பெருமைபடுகிறேன். விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன். பழைய நிகழ்வுகளை உங்களுடன் பகிர்வதற்காக உங்கள் அன்பின் ஆசை தம்பி மதுரை......

    • @karuppiahsubramanian5104
      @karuppiahsubramanian5104 ปีที่แล้ว

      @@aasaimaligai கா

    • @karuppiahsubramanian5104
      @karuppiahsubramanian5104 ปีที่แล้ว

      காட்சி வந்ததும் பாட்டு வந்ததா, பாட்டுவந்ததும் காட்சி வந்ததா? அற்புதம் கவிஞர் புதல்வர் அண்ணாதுரை அவர்களுக்கு பாராட்டு கள்...