அளவும் செய்முறையும் சரியாக செய்தால் எல்லோரும் பிரியாணி மாஸ்டர் தான்.வீடியோ முழுவதும் பாருங்கள் 🤝👍👌

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • வீடியோவில் சொல்ல மறந்திட்ட முக்கிய குறிப்புகள் *
    #1 கிலோ அரிசி செய்வதற்கு
    1. சீரக சம்பா அரிசி 1 கு 1.1/4 பாத்திரம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
    2. பாஸ்மதி அரிசி 1 கு 1./2 பாத்திரம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
    3. பச்சை பொன்னி அரிசிக்கு 1 கு 1.3/4 பாத்திரம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
    4. துளசி அரிசி. புல்லட் அரிசி.24 கேரட் அரிசி. மயூரி அரிசி. இவை அனைத்தும் பச்சை பொன்னி சேர்ந்தவை
    5. புழுங்கல் அரிசி ஆஃப் ஆயில் அரிசி நொய் அரிசி செய்யும் வேண்டுமானால் ஒன்னுக்கு ரெண்டு தண்ணீர் பாத்திரம் வைக்க வேண்டும்.
    6. அரிசி முன்னாடி அளந்து ஊற வைக்க வேண்டும் கண்டிப்பாக
    7. அளக்கும் பாத்திரத்திற்கு ஒரு அடையாளம் வைக்க வேண்டும் அந்த பாத்திரத்தில் தான் தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும்.
    #பூண்டு இஞ்சி
    1.1 கிலோ அரிசி 1 கிலோ கறி சேர்த்தால்
    100 g பூண்டு 100 இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்.
    2.1 கிலோ அரிசி 3/4 கிலோ கறி சேர்த்தால்
    100 g பூண்டு 75 g இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்
    3.1 கிலோ அரிசி 1/2 கிலோ கறி சேர்த்தால்
    100 g பூண்டு 50 g இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்
    4. பூண்டு தோல் உரித்து அரைத்து சேர்ப்பது ரொம்ப நல்லது.
    5. நாங்கள் சொல்லும் செய்முறை படி இஞ்சி பூண்டு சாந்து நல்ல வதங்கி என்னை பிரிந்து வர வேண்டும். இந்த மாதிரி அளவில் இஞ்சி பூண்டு சாந்து சேர்த்தால் பிரியாணி செய்யும்போது உங்களுக்கு கசப்புத்தன்மை வராது
    #வெங்காயம்
    1. பாஸ்மதி அரிசிக்கு ஒரு கிலோவுக்கு 300 கிராம் சேர்க்க வேண்டும்.
    2. சீரக சம்பா அரிசிக்கு ஒரு கிலோவுக்கு 250 கிராம் சேர்க்க வேண்டும்.
    3. பச்ச பழைய பொன்னி அரிசிக்கு ஒரு கிலோவுக்கு 200 கிராம் சேர்க்க வேண்டும்
    4. வெங்காயம் நல்ல பொன்னிறமா வதங்கினால் தான் நல்ல வாசனையும் சாப்பாடு சீக்கிரம் கெட்டுப் போகாமலும் கிடைக்கும்.
    #தக்காளி
    1. அரிசி கூட வெங்காயத்தை எந்த அளவுக்கு சேர்க்க வேண்டும் சொல்லி இருக்குமோ அதே அளவுக்கு தக்காளியும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    #சிக்கன்
    1. அரிசி கூட எந்த அளவுக்கு கறியை அதிகமாக சேர்த்து பிரியாணி செய்தால் ருசியும் டேஸ்ட்டும் அதிகமாக இருக்கும்.
    2. நாங்கள் சொல்லும் செய்முறை மாதிரி கறியை மசாலா உப்பு எலுமிச்சை பழம் சாறு தயிர் சேர்த்து பிசைஞ்சு ஊற வச்சு செய்யுங்கள் கறி நல்லா ஜூஸியாவும் மசாலாவும் நல்லா டேஸ்டாவும் கிடைக்கும். கறி உடையாமல் கிடைக்கும்.
    3. மட்டன் பீப் கறி செய்யும்போது தனியா வேகவைத்து பிரியாணி கூட சேர்த்துக் கொள்ளவும் அப்பதான் உங்களுக்கு நல்லா சாப்டா கறி நல்லா சாப்பிட கிடைக்கும்.
    #பாத்திரம் வட்டா
    1.1 கிலோ கறி 1 கிலோ அரிசி செய்வதற்கு 3 கிலோ பாத்திரத்தில் செய்தால் தான் உங்களுக்கு நல்லா அரிசி உதிரியா கிடைக்கும். வேகும் போது கறியும் உடையாது.
    2.1 கிலோ அரிசி 3/4 கிலோ கறி போட்டு பிரியாணி செய்யும்போது 2 கிலோ வட்டாவில் செய்ய வேண்டும்.
    #தம் போடும்போது
    1. பிரியாணிக்கு அளவு தண்ணீர் ஊற்றியவுடன் தவாக்களை சூடு படுத்தி கடைசியாக கீழே வைத்து தம் போடவும்
    2. தம் போடும்போது வட்டா சைடுல ஆவி வரும் அப்படி வந்து ரெண்டு நிமிடத்தில் அடுப்பை ஆஃப் பண்ணிட வேண்டும். அதற்கு மேல் நீங்கள் பார்க்காமல் விட்டால் சாதம் தீஞ்சி வாசனை மாறிவிடும் டேஸ்ட் கிடைக்காது..
    1. பிரியாணிக்கு எல்லாவற்றையும் வதைக்கி அளவு தண்ணீர் ஊற்றியவுடன் அந்த இடத்திலே உப்பு காரம் சரி பார்க்க வேண்டும். அதன் பிறகு நமக்கு வேலை அதிகமாக இருக்கும் மறந்து விடுவோம்.
    1. உங்களுக்கு பிரியாணிக்கு கலர் வேண்டுமானால் கொஞ்சமா ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம் ஏனென்றால் பிரியாணிக்கு கலர்ஃபுல்லா பார்த்தால் தான் நமக்கு சாப்பிட ஆர்வம் அதிகமாகும்
    1. குறைந்த அளவில் நாம் அரிசி பிரியாணி செய்யும்போது நமக்கு அதிக கலர் கிடைக்காது.
    1. நீங்கள் எப்போதும் பிரியாணி செய்யும்போது மினரல் வாட்டர் கொண்டு உபயோகித்தால் பிரியாணி இன்னும் அதிக சுவை கிடைக்கும்
    1. ஆர்வமும் அதிகம் உழைப்பும் இருந்து நாம் பிரியாணி செய்தால் எல்லோரும் பிரியாணி மாஸ்டர் தான்.
    1. பிரியாணியில் உப்பு காரம் கொஞ்சம் அதிகமாகி விட்டால் நீங்கள் செய்ய வேண்டியது தயிர் எலுமிச்சை பழம் சாறு நெய் இந்த மூன்றும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்தால் கண்டிப்பாக குறைந்து விடும்.
    நீங்கள் இந்த செய்முறை பிடித்திருந்தால் நான் அடுத்த முறை ஒரு கிலோ விறகு அடுப்பில் செய்யும் வீடியோ போடுகிறேன் நீங்கள் கமெண்ட் செய்தால்
    1. உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு கமெண்ட் பண்ணுங்க உடனே நான் உங்களுக்கு ரிப்ளை செய்கிறேன்.
    1. என் வீடியோ உங்களுக்கு கண்டிப்பா பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் நீங்கள் ஷேர் செய்யும்போது எங்கோ ஒரு வளர்ந்து வரும் மாஸ்டர் இந்த வீடியோவை பார்த்து அவங்க பெரிய மாஸ்டா உருவாக்கி வருவார்கள். நான் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்கு தான் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறேன்.
    1. நான் ஒரு MNC கம்பெனியில் பர்மனண்ட் ஸ்டாப் ஆக வேலை செய்கிறேன். நல்ல சம்பளம். ஆனால் எனக்கு பிரியாணி செய்வதற்கு அதிகம் ஆர்வம் இருந்தது நான் கற்றுக் கொண்டேன். அதனால்தான் உங்களுக்கு கற்றுத் தர வந்திருக்கிறேன். இந்த வருடத்தில் நான் 100 மாஸ்டர்களை உருவாக்க ஆசைப்படுகிறேன் அதற்கு தான் நீங்கள் என் வீடியோவை ஷேர் செய்ய விரும்புகிறேன். என் வீடியோவும் என்னுடைய கண்டன்டும் என் குரலும் உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக கமெண்ட் செய்யவும்.
    1. 10 கிலோ பிரியாணி செஞ்சு சாப்பிடுவதற்கும்.ஒரு கிலோ பிரியாணி செய்து சாப்பிடுவதற்கும் டேஸ்ட் வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும்.
    பிரியாணி உரிமை யாருக்கும் சொந்தமில்லை அதிக ஆர்வமும் உழைப்பவர்களுக்கு மட்டுமே 🙏🙏🙏🙏
    வளர்ந்து வரும் மாஸ்டர் உங்களுக்கு தான் ஒரு முக்கிய செய்தி என் சேனல் வீடியோவில் நீங்கள் கேட்க இருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் என் வீடியோவில் பதில் உள்ளது. எல்லாம் வீடியோவையும் தொடர்ந்து பாருங்கள்
    #kuttybiryanistore
    #functionfood
    #cooking
    #biriyanilovers
    #tamillrecipebiriyani
    #onekgbiriyani
    #1kgbiriyani

ความคิดเห็น • 222

  • @user-ot3ce6is8b
    @user-ot3ce6is8b 6 หลายเดือนก่อน +58

    நீங்க எங்களுக்கு கிடைத்த இன்னும் ஓர் ஜபார்பாய் நன்றி உங்கள் இந்த உண்மையான சேவைக்கி கடவுள் என்றும் துணை இருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน +1

      🙏🙏நன்றி நன்றி நன்றி 🤝👍

    • @R.H_sun_channelR.H_sun_channel
      @R.H_sun_channelR.H_sun_channel 6 หลายเดือนก่อน +2

      இன்னொரு ஜபார் பாய் என்று கூற வேண்டாம் அப்படி பட்ட வரா அவர் கால் தூசி க்கு வருவரா

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน +2

      ஜாபர் பாய் னா கடவுளா 🤔துபாயில் போய் மண்டி இடுங்கள்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน +2

      தமிழ்நாட்டின் மக்களின் பார்வையில் வந்த பணம் துபாயில் கொடி கட்டி பறக்கிறது.

    • @vazhgavazhamudanvazhgavazh7877
      @vazhgavazhamudanvazhgavazh7877 6 หลายเดือนก่อน +1

      ​@@kuttybiryanistore1990yaro orutthar vungala izhiva pesaranganu , neenga yen sammantham illatha orutthar Mela kova padanum...
      Ithu Pola aatkal irukka dan seivanga.. neenga avanga command delete pannidunga..

  • @balamanisoundarraajan
    @balamanisoundarraajan 6 หลายเดือนก่อน +3

    ரொம்ப சரியான பிரியாணி செய்முறை விதிகளை சொல்லி தந்தீர்கள். நன்றி

  • @veeramanimallika391
    @veeramanimallika391 2 หลายเดือนก่อน +1

    அருமை மாஸ்டர் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் தன்மை மிகவும் அருமை வாழ்த்துக்கள்.....

  • @subramaniansubbu4442
    @subramaniansubbu4442 6 หลายเดือนก่อน +9

    அருமையான விளக்கம் , நல்ல பதிவு, மிக அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @user-ym1gw1ig3b
    @user-ym1gw1ig3b 6 หลายเดือนก่อน +4

    Super nanraka porumaiyaka soli seiringa😊 thank u anna

  • @divyaDivya-xx4no
    @divyaDivya-xx4no หลายเดือนก่อน +1

    உங்களுடைய செய்முறையை பார்த்து தான் நான் செய்த பிரியாணியை எல்லோரும் பாராட்டினார்கள் உங்களுடைய பதிவு எங்களுக்கு ரொம்ப முக்கியம்❤❤

  • @DevaKumar-sz3vm
    @DevaKumar-sz3vm 6 หลายเดือนก่อน +6

    உங்கல் நேர்மை எனக்கு பிடித்தது நன்றி

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c 6 หลายเดือนก่อน +8

    விளக்கம் அருமை🎉

  • @essakiessaki8375
    @essakiessaki8375 6 หลายเดือนก่อน +10

    அழகா சொன்னதுக்கு நன்றி

  • @glorystephenn6214
    @glorystephenn6214 3 หลายเดือนก่อน +2

    Superoooooosuper pathivu Thankyou 👍

  • @beulahprasad4433
    @beulahprasad4433 4 หลายเดือนก่อน +1

    Thank you brother and sister. Arumaiya soli koduthinga brother
    God bless u and ur family 🙏🏻🙏🏻🙏🏻

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน

      🙏நன்றி . என்னுடைய சேனல்ல இன்னும் நிறைய வீடியோ போட்டு இருக்க வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக. பாருங்க 👍

  • @rasheedksa7824
    @rasheedksa7824 6 หลายเดือนก่อน +3

    மிகவும் தெள்ளத்தெளிவாக
    சொன்னீர்கள் ❤❤

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 6 หลายเดือนก่อน +3

    Super anna Aamangana yarum solla, nattangathan ninga m attumthan anna solringa romba nandringa anna❤❤❤❤❤

  • @user-ot3ce6is8b
    @user-ot3ce6is8b 6 หลายเดือนก่อน +5

    உதவி செய்த உங்கள் துணைவிக்கு மிக்க நன்றி 🙏🙏

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      🤝👍🙏🙏🙏மிக்க நன்றி நண்பா

  • @tharmaraj8178
    @tharmaraj8178 6 หลายเดือนก่อน +2

    செய்முறை மிக நன்று.❤

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 5 หลายเดือนก่อน +1

    Wowwww super❤ from Malaysia what an explanation that is a super biriyani got cashews got ghee good loving wife you have❤

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  5 หลายเดือนก่อน

      🙏🤝நன்றி my chanal all vedio visite 👌

    • @sharojavasavan6524
      @sharojavasavan6524 5 หลายเดือนก่อน

      @@kuttybiryanistore1990 ok I will

  • @goodlove4121
    @goodlove4121 4 หลายเดือนก่อน +5

    தக்காளி 🍅 அளவு மற்றும் வெங்காயம் அளவு 1 கிலோ பிரியாணிக்கு சொல்லவே இல்லை கமெண்ட்ல சொல்லுங்க சகோதரா,

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน +2

      அரிசி கூட சமமா கறி சேர்த்தால் 300 g வெங்காயம்.300 g தக்காளி.
      அரிசிக்கு பாதி கறி சேர்த்தால் 200 g வெங்காயம்.200 g தக்காளி
      நன்றி 🙏.
      Description பாருங்க அண்ணா சரியான விளக்கம் சொல்லிருக்க 🤝

    • @goodlove4121
      @goodlove4121 4 หลายเดือนก่อน +3

      @@kuttybiryanistore1990 நன்றி சகோதரா

  • @sudhaparthiban148
    @sudhaparthiban148 16 วันที่ผ่านมา +1

    அண்ணா கல்யாண சேனை கிழங்கு போடுங்கள் ❤

  • @lourduantony5690
    @lourduantony5690 6 หลายเดือนก่อน +1

    Dear kutti annan
    உங்க வீடியோ பார்த்து பிரியாணி செய்தேன் மிக மிக சுவை நன்றி!

  • @user-pn5jn2he2r
    @user-pn5jn2he2r หลายเดือนก่อน +1

    Tq sister

  • @Gnanasundari806
    @Gnanasundari806 6 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க நல்லா பேசினாங்க பேசும் போது இனிமையாக இருக்கும் ❤❤❤❤

  • @stellasuresh3228
    @stellasuresh3228 5 หลายเดือนก่อน +2

    Thank you thank you brother. 🎉🎉

  • @user-jm1mm3wr7p
    @user-jm1mm3wr7p 6 หลายเดือนก่อน +4

    Arumai 🙏🙏 anna

  • @anjidev5558
    @anjidev5558 2 หลายเดือนก่อน +1

    Thank you sister 🙏

  • @rupathi7694
    @rupathi7694 5 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @renukaskitchenintamil2741
    @renukaskitchenintamil2741 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா மிகவும் அருமையாகவும் ரொம்ப பொருமையாகவும் விளக்கமாகவும் அழகாவும் தம் பிரியாணி செய்து காட்டிணீர்கள் நேரம் கருதி சுருக்கமான விடியோவாக இருந்தால் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன்.வாழ்த்துக்கள்.🙏👌🏿👏🤚

  • @Radha-ot7el
    @Radha-ot7el 6 หลายเดือนก่อน +2

    Cattering panna training super Anna vallka valamudan puorial itam poduga

  • @ganeshtup633
    @ganeshtup633 6 หลายเดือนก่อน +4

    அருமைங்க நன்றிங்க

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      🤝👍

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      கண்டிப்பா டிஸ்கிரிப்ஷன் போய் பாருங்க நிறைய சொல்லி இருக்கேன். எல்லா அரிசிக்கும்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน +1

    Arumai Nanba...

  • @user-fn4hq7hs3t
    @user-fn4hq7hs3t 5 หลายเดือนก่อน +1

    thankyou from. sri lanka

  • @sudhaparthiban148
    @sudhaparthiban148 หลายเดือนก่อน +1

    Super anna

  • @georgeambrose3988
    @georgeambrose3988 หลายเดือนก่อน +1

    Super Good Super nice good taste ❤

  • @krishchem2021
    @krishchem2021 4 หลายเดือนก่อน +2

    Neengalum jabar bai onnu master 🎉🎉🎉

  • @Todayblessingsforyou
    @Todayblessingsforyou 6 หลายเดือนก่อน +2

    Evlo detailed discription i have never seen anna thank you

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      🙏 எங்க சேனல் வீடியோ அனைத்தும் பாருங்க இன்னும் ரொம்ப நல்லா இருக்கும் 🤝👍

  • @anjidev5558
    @anjidev5558 2 หลายเดือนก่อน +1

    Nice fantasti thank you for sharing God 🙏 bless you

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  2 หลายเดือนก่อน

      நன்றி 👍என் சேனல் வீடியோ உள்ள வாங்க நெறய வீடியோ இருக்கு

  • @fathimanaleefa3569
    @fathimanaleefa3569 4 หลายเดือนก่อน +1

    Masha Allah

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d 3 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

  • @NagalingamSeena
    @NagalingamSeena 10 วันที่ผ่านมา +1

    Arumai nanba

  • @raviselvanraviselvan1355
    @raviselvanraviselvan1355 6 หลายเดือนก่อน +2

    உங்களேக்கும் என் (உங்கள் மனைவி)சகோதரிக்கும் நன்றி

  • @balajimanoj1348
    @balajimanoj1348 5 หลายเดือนก่อน +1

    Thank you 🎉

  • @dhandapanithiyagarajan5571
    @dhandapanithiyagarajan5571 6 หลายเดือนก่อน +2

    Thanks salamaliqam baye

  • @vijayalakshnir3362
    @vijayalakshnir3362 6 หลายเดือนก่อน +1

    TQ anna Salam alekum

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      வணங்குகிறேன் 🙏🤝👍நன்றி

  • @prithivraj1606
    @prithivraj1606 4 หลายเดือนก่อน +1

    Vanakkam bro 🙋🙏🥰 Am your new subscriber. Your all videos are great easily understand people. Congratulations brother 🎉🎉🎉🎉❤❤❤
    Brother enaku 1 doubt briyani recipe pandra yarume TH-cam la ithuku answer pana matranga bro. Nenga kandipa reply panuvinga nu namburen bro🙏🙏🙏
    Bro chicken evlo neram vega vendum. Nan ithu varai 20,25 time paniten briyani nala varuthu but chicken ruber mari romba hard ah iruku chakka chakka ya. Enaku chicken poo pola panju mari venthu varanum oru viral vachi chicken ah picha poo pola panju mari arisi koda venthu varanum. Ithu mathiri kari poo pola venthu vara chicken evlo neram vega vaika vendum eppadi seiya vendum 1 kilo virku vilakka murai solavum please
    Ungal reply Anbudan ethirpakiren 🙏🥰🙏

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน

      நீங்க மட்டன் கறி பூப் போல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம். சிக்கன் நமக்கு உடனே பூ போல வெந்து கிடைச்சுடும். எனக்கு ஒரு பதில் நீங்கள் அதிகமாக எந்த அளவுக்கு பிரியாணி செய்கிறீர்கள் கூற முடியுமா. நீங்க எந்த செய்முறையில் பிரியாணி செய்கிறீர்கள் அதாவது வடி பிரியாணி (or) தம் பிரியாணியா.

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน

      1 to 3 கிலோ அளவிற்கு பிரியாணி செய்கிறீர்கள் என்றால். சிக்கன் பீஸ் சைஸ் 50 கிராம் 60 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இஞ்சி. பூண்டு சாந்து வாங்கிய உடன் தக்காளி சேர்த்து வதங்கியவுடன் கரியை சேர்த்துக் கொள்ளவும் ரெண்டு நிமிடம் மூன்று நிமிடம் அளவிற்கு வதக்கவும். அப்புறம் எப்பவும் போல அளவு தண்ணி ஊத்தி நம்ம அரிசியை சேர்த்து தம் போட்டால் சரியான நீங்க கேட்ட மாதிரி அப்படியே கரி பூ போல கிடைக்கும். சிக்கன் வேகும்போது கூட தயிர் கொஞ்சம் கூடுதலாக சேர்த்தால் இன்னும் ஜூஸியாக கிடைக்கும். இல்லை முன்னாடியே என் செய்முறை மாதிரி அந்த லெமன் தயிர் மசாலா இதெல்லாம் சேர்த்து ஊறவைத்து செய்தால் நன்றாக இருக்கும்.

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน

      இல்லை சிக்கன் பீஸ் கொஞ்சம் உடைந்தாலும் பரவாயில்லை நீங்கள் நினைத்தது போல் வேண்டுமென்றால் சிக்கன் மசாலாவில் சேர்த்து வதக்கும்போது 75% அளவுக்கு வெந்தவுடன் நீங்கள் அளவு தண்ணீர் ஊற்றி செய்ய வேண்டும். நீங்கள் சேர்க்கும் அளவோடு நீர் கம்மியாக இருந்தாலும் சிக்கன் சரியாக வேகாது. அளவு தண்ணி அதிகமாக இருந்தால் சிக்கன் பீஸ் கண்டிப்பாக உடையும். இந்த மாதிரி பிசிகல் ஆன வேலைகளை தான் என் வீடியோ கண்டன்ட்டில் நான் சொல்ல வருகிறேன்.

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน

      முக்கியமாக நாம் கறிக் கடையில் கறி வாங்கும் போது உயிர் கோழியின் எடை 2. 200 க்கு மேல் இருக்கக் கூடாது. நீங்கள் கேட்கும் பக்குவத்திற்கு இது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். கோழி தோலை உரித்தாள் கறி 1.600 to 1.800 குள்ள இருக்க வேண்டும். இந்த மாதிரி அளவில் நீங்கள் கறி வாங்கி சமைத்தால் கண்டிப்பாக பூப் போல கண்டிப்பாக கிடைக்கும். நன்றி 🙏

    • @prithivraj1606
      @prithivraj1606 4 หลายเดือนก่อน +1

      Mikka nandri 🙏🙏🙏🙏
      Enathu sandegam theernthathu 🙏🙏
      Neengal menmelum sirakka Anbu vaalthukkal Nambare🙏🥰🙏🥰🙏🥰🙏🥰🙏

  • @veeramanimallika391
    @veeramanimallika391 2 หลายเดือนก่อน +1

    மட்டன் பிரியாணி மற்றும் இறால் பிரியாணி ஒரு கிலோ அளவுக்கு சொல்லுங்கள் மாஸ்டர் நன்றி...

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  2 หลายเดือนก่อน

      நீங்கள் கேட்கும் எல்லா பிரியாணி எல்லா அளவும் என் சேனலில் உள்ளது 🙏👍🫱🏽‍🫲🏻❤️

  • @Gana_garani21
    @Gana_garani21 3 หลายเดือนก่อน +2

    Piriyanil il old man, s face

  • @gowsalyasiva6051
    @gowsalyasiva6051 6 หลายเดือนก่อน +2

    Bro epdi senjalum kada taste and smell vara mattuthu . epdi senja smell and taste varum nu sollunga bro........

    • @Divyatravels-fm3hz
      @Divyatravels-fm3hz 3 หลายเดือนก่อน

      Ajino motto...neraya podu ....alugana vangayam thakkali.....podu .. inji poonju .. wash panna ma podu..... Kundana kaluvama samai.....mukiyama kettupona chicken...na podu samachiparu.....appuram original kada taste....kidaikum

  • @malaiyappannatraj9002
    @malaiyappannatraj9002 6 หลายเดือนก่อน +2

    RAMAMALAIYAPPAN. 🎉❤

  • @mohamediliyas8315
    @mohamediliyas8315 6 หลายเดือนก่อน +3

    ஐயா மசாலா அளவு ரொம்ப கம்மியா இருக்கற மாதிரி இருக்கே? பிரியாணி மசாலா எதுவும் சேர்க்கத் தேவையில்லையா?
    தயவு செய்து பதில் போடவும்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      கொஞ்சமா அரிசி செய்யும் போது பிரியாணி மசாலா சேர்க்கத் தேவையில்லை அதிகமா அரிசி செய்யும் போது பிரியாணி மசாலா தேவை ஏனென்றால் நம்மளுக்கு வாசனை அதிகமாக கிடைக்கும். மசாலா பொருத்தவரைக்கும் உங்களின் விருப்பம்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      பிரியாணி கூட கறி ரொம்ப கம்மியா போட்டு செய்யும்போது மட்டும் தான் மசாலா கூடுதலாக சேர்க்க வேண்டும். நல்ல பிரியாணி அரிசில ஒரு கிலோ கறி ஒரு கிலோ அரிசி செய்யும் போது நமக்கு மசாலாவை தேவை இல்லை. என்னுடைய சேனலை போய் வீடியோ பாருங்க நிறைய உங்களுக்கு புரியும். குவாண்டிட்டி. கோலட்டி இதை பொறுத்து இஞ்சியும் மசாலாவும் மாறி மாறி வரும். இந்த வீடியோ டிஸ்கிரைப்சன்ல பாருங்க நிறைய சொல்லி இருக்கேன் 🙏🙏நன்றி

    • @mohamediliyas8315
      @mohamediliyas8315 6 หลายเดือนก่อน +1

      நன்றி ஐயா

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      🤝👍👍👍👍

    • @JeyakumarPushparani-di1yg
      @JeyakumarPushparani-di1yg 6 หลายเดือนก่อน

      ​@@kuttybiryanistore1990pppppppppppppap

  • @KarthikKing-bi3iz
    @KarthikKing-bi3iz 6 หลายเดือนก่อน +2

    ஐயா கரி மசாலா பொருட்கள் அளவும் சொல்லவும்.மற்றும் தயிர்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      மசாலா சேர்க்கும் போது டிஸ்பிலே வில் அளவு சொல்லி இருக்கிறேன் ஐயா பாருங்கள். இன்னும் உங்களுக்கு அதிகமா புரியுனும் என்றால் என்னுடைய டிஸ்க்ரிப்ஷன்ல பாருங்க நிறைய சொல்லி இருக்கேன். நன்றி

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      தயிர் 100 ml சேர்க்க வேண்டும்.150 ml சேர்த்து கொள்ளலாம்

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 6 หลายเดือนก่อน +2

    Annan basumathi Ricela senju kaminganna

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்களுக்காக வீடியோ வரும். பாஸ்மதி அரிசியில். சரியான அளவு தெளிவான விளக்கம் ஈஸியான செய்முறை

  • @vaishuammu8188
    @vaishuammu8188 6 หลายเดือนก่อน +3

    Bro cooker la briyani seiya soli kuduga bro

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வீடியோ போடுக்கிறேன். ஆனால் எங்கள் சேனல் உள்ள போய் பாருங்கள் வீடியோ போட்டு இருக்கிறேன் .1 கிலோ வடி பிரியாணி வீடியோ உங்களுக்கு புரியிற மாதிரி தெளிவாக நல்ல விளக்கம் பாருங்கள்🙏

  • @ArokiaRaj-co3ru
    @ArokiaRaj-co3ru 6 หลายเดือนก่อน +1

    Super bro, including my Sister weldone 🙌🏼🙏💐

  • @MohamedrizwanRizwan
    @MohamedrizwanRizwan 4 หลายเดือนก่อน +1

    Supper sir

  • @thiruselvampilomina1239
    @thiruselvampilomina1239 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் நண்றி

  • @rajisubbu859
    @rajisubbu859 5 หลายเดือนก่อน +1

    Half kg rice ikku mutton briyani measurement sis pl😊

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  5 หลายเดือนก่อน

      இன்னைக்கு நாட்டுக்கோழி பிரியாணி வீடியோ 1/2 kg போட்டிருக்கோம். அதுல மட்டன் சேர்த்து கூட சிக்கன் மசாலா இல்லாமல் மட்டன் மசாலா சேர்த்தால் ஒரே அளவு தான் வீடியோ பாத்துட்டு எந்த சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள் திரும்பவும் பதிலளிக்கிறேன் 🙏🤝👍

  • @user-yr3eh8ml1j
    @user-yr3eh8ml1j 4 หลายเดือนก่อน +1

    Anna beef briyani thanni mathri serva tharanga athu than taste vera levella erukku best combination but antha serva name enna therila utube la yium kedaikala pls upload pannuga na! Utube la pathu Briyani shop open panna serva athu mathri vekka therila ..

  • @AswinOfficial-ec2ic
    @AswinOfficial-ec2ic 4 หลายเดือนก่อน +1

    👍🏻💯

  • @yravi8526
    @yravi8526 5 หลายเดือนก่อน +1

    Super

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 6 หลายเดือนก่อน +2

    Yenna karuvepilai poduringa karuvepilai podathinganna

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน +1

      ஏன் கருவேப்பிலை சேர்க்க கூடாது.
      # அன்பால் 3 கேள்வி கேட்டுக்கொள்கிறேன். 🙏
      1. கருவேப்பிலை நம் உடம்பிற்கு நல்லதா கெட்டதா.
      2. கருவேப்பிலை சேர்க்கும்போது நமக்கு வாசனை குறையுமா?
      3. கருவேப்பிலை சேர்க்கும்போது நமக்கு பிரியாணி சுவை மாறுமா?.
      ஏதோ ஒன்றுக்கு நீங்கள் சரியான பதில் சொன்னால் நான் கருவேப்பிலை சேர்ப்பதை நிறுத்தி விடுகின்றேன். உங்களுக்காக

  • @MuthuKumar-gp4qq
    @MuthuKumar-gp4qq 6 หลายเดือนก่อน +2

    Super anna😅

  • @KiyasMvl
    @KiyasMvl 4 หลายเดือนก่อน +1

    Good

  • @dharmaraj2775
    @dharmaraj2775 4 หลายเดือนก่อน +1

    Master புது சீரக சம்பா அரிசிக்கு தண்ணீர் எப்படி உத்தனும் 1 1/2 யா இல்ல 1 1/4
    அளவுவா

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน +1

      நீங்கள் எத்தனை கிலோ அளவிற்கு செய்கின்றீர்களோ அதை சொல்லுங்கள் அதுக்கு ஏத்த தான் சொல்ல முடியும். அதேபோல் அரிசி கூட எந்த அளவுக்கு கறி சேர்ப்பீர்கள் அதையும் சொல்ல வேண்டும்.

    • @dharmaraj2775
      @dharmaraj2775 4 หลายเดือนก่อน

      @@kuttybiryanistore1990 10 kg with 10 chicken master

    • @dharmaraj2775
      @dharmaraj2775 4 หลายเดือนก่อน +1

      10 kg மேல் செய்யும் போது தண்ணீர் அளவு எவ்வளவு மாஸ்டர்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน +1

      10 kg அரிசி 10 kg கறி.1 கு 1.100 தண்ணீர். அதுவே கறி குறைத்து சேர்த்தால் தண்ணீர் அளவு ஒன்னுக்கு ஒன்னேகால் வைக்க வேண்டும் . 10 கிலோவுக்கு மேல் செய்தால் ஒன்றுக்கு 1 100 தண்ணி அளவுதான் 25 கிலோ மேலே செய்தால் 900 ml வைக்க வேண்டும்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน +1

      சீரக சம்பா அரிசி உடைந்து இருந்தால் பரவாயில்லை, ஆனால் விரைப்பாக இருக்கக் கூடாது அரிசி உள்ள சாதம் வேகாது. சீரக சம்பா அரிசியில் வடி பிரியாணி செய்தால் தான் சாதம் அதிகமாக உதிரியா கிடைக்கும். 🙏

  • @MohamedNaseer-cx1iz
    @MohamedNaseer-cx1iz 4 หลายเดือนก่อน +1

    😊

  • @lincyk8499
    @lincyk8499 6 หลายเดือนก่อน +1

    Super sister 👍👌

  • @bosepandi1846
    @bosepandi1846 4 หลายเดือนก่อน +1

    வாழைஇளை வைத்தவுடன் அடுப்பு எவ்வளவு நேரம் எரியுதுன்னு காட்டவே இல்லை

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน

      இன்னும் வீடியோ நேரம் அதிகமாகும். வார்த்தையால் சொல்லி இருக்கேன் நண்பா பாருங்க 🙏🫱🏽‍🫲🏻👍

  • @sarojat6539
    @sarojat6539 4 หลายเดือนก่อน +1

    😊 சால்டு உப்பு சேர்க்க கூடாது சொல்வது தவறு டேபிள் சால்ட் என்று சொல்வது சரி 😊

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน

      நீங்க சொன்ன பிறகு நான் போய் வீடியோ பார்த்தேன் நான் கல்லு உப்பு தானே சேர்க்க சொல்கிறேன். நீங்க சொல்வது சரியாக எனக்கு புரியவில்லை 🙏

  • @ramalingamsathishkumarsath840
    @ramalingamsathishkumarsath840 3 หลายเดือนก่อน +1

    Water for biriyani was incorrect. Peoer powder should use for biriyani otherwise it was good

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  3 หลายเดือนก่อน

      🙏நன்றி. நீங்கள் கூறியதற்கு. இந்த வீடியோ டிஸ்க்ரிப்சன் நீங்க கண்டிப்பா பார்க்கணும்.

  • @indranimercy6857
    @indranimercy6857 6 หลายเดือนก่อน +1

    Rice soaking time

  • @murugesank8205
    @murugesank8205 5 หลายเดือนก่อน +1

    Sariyana Rampam

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  5 หลายเดือนก่อน +1

      Rampam மீன்ஸ் அறுவை ok thank யோஉஉஉஉஉஉஉ. TH-cam எனக்கு maill பண்ணிறிக்காங்க பேட் கமெண்ட் வந்தா தா வளர்ச்சி அடைய முடியுமா அதுக்கு தான் உங்களுக்கு thank youuuuuu சொன்ன. என் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக 10 மணி நேரம் கூட rampam செய்வேன். என் சேனல் வீடியோ அனைத்தும் பாருங்கள் நண்பா 🙏நன்றி

  • @ArvinM-bm7ju
    @ArvinM-bm7ju 5 หลายเดือนก่อน +1

    1 kg veg briyani panunga anna

  • @user-jm1mm3wr7p
    @user-jm1mm3wr7p 6 หลายเดือนก่อน +2

    Arumai amma

  • @priyan6294
    @priyan6294 5 หลายเดือนก่อน +1

    5 kg சீராக சாம்ப அரிசிலா பிரியாணி செய்யப் போறேன் அண்ணா ஒன்னுக்கு ஒன்னேகால் கணக்கு ஆறு கால் தண்ணீர் ஊத்தினா கரெக்டா அண்ணா ஒன்னுக்கு ஒன்னு சிக்கன் சொல்லுங்க அண்ணா நன்றி

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  5 หลายเดือนก่อน +1

      இருக்கும் ஆனா அதுல நிறைய விஷயங்கள் இருக்கு. நீங்க என்ன பண்றீங்கன்னா ஏதாவது ஒரு பாத்திரத்துல அளந்து கரெக்டா ஒரு பாத்திரம் சரியா வர மாதிரி அளந்துக்க அதுல ஒன்னுக்கு ஒன்னேகால் தண்ணி வையுங்க. முதல் தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க நீங்க பயப்படாமலே சாப்பாடு சூப்பரா உதிரியா வரும். அரிசியை முன்னாடி ஊற வைங்க. 🙏

    • @priyan6294
      @priyan6294 5 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  5 หลายเดือนก่อน

      உங்களின் ஆர்வமும் அதிக உழைப்பும் ரொம்ப சூப்பரா வரும் பிரியாணி. உப்பு காரம் கண்டிப்பா செக் பண்ணுங்க கூட இருக்கவங்க 2 3 நபர் கிட்ட கொடுத்து என்ன சொல்றாங்கன்னு கேளுங்க.🤝👍

  • @rightprakash8779
    @rightprakash8779 2 หลายเดือนก่อน +1

    seeraga samba illaya

  • @selvijeeva1118
    @selvijeeva1118 6 หลายเดือนก่อน +2

    Thanks

  • @user-fw1km8zl5q
    @user-fw1km8zl5q 6 หลายเดือนก่อน +1

    Injji poodu pro alavu super pro

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      🤝👍 இன்னைக்கு ஒரு வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க 👌

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 6 หลายเดือนก่อน +2

    நீங்க எவ்வளவு நேரம் எடுத்தாலும் பரவயில்லை நீங்க இன்னும் பொருமையாகவே சொல்லுங்க

  • @dharmaraj2775
    @dharmaraj2775 4 หลายเดือนก่อน +2

    பிரியாணி குலைந்து காணப்படுகிறது

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน +2

      கேஸ் அடுப்பில் செய்யும் போது நம் பார்வைக்கு அப்படி தான் தெரியும் நண்பா 🙏

  • @vijai3176
    @vijai3176 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @RRashadn-tf8dm
    @RRashadn-tf8dm 4 หลายเดือนก่อน +1

    😶

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 6 หลายเดือนก่อน +1

    இன்னும் கொஞ்சம் ஸ்பீடு பண்ணலாமே

  • @kajamohideen1898
    @kajamohideen1898 6 หลายเดือนก่อน +1

    நல்லாவே குழப்புகிறாய்.

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      🙏நன்றி வீடியோ தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்

  • @kamaroonhajamohideen2443
    @kamaroonhajamohideen2443 4 หลายเดือนก่อน +1

    Very bad briyani

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน

      Thank you உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot 4 หลายเดือนก่อน +1

    Worst briyani

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน

      Thank you 🙏 என் சேனல்ல இன்னும் அதிகமான ஒஸ்ட் பிரியாணி இருக்கு பாருங்க நன்றி

  • @navamani854
    @navamani854 6 หลายเดือนก่อน +2

    Sir...என்னதான் இருந்தாலும் பாஸ்மதிதான் பிரியாணி வாசம் நன்றாக இருக்கும்😂

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  6 หลายเดือนก่อน

      உங்களுக்குத் தெரிந்தது. நன்றி. 🙏
      உங்களிடம் ஒரு கேள்வி அன்பினால் கேட்கிறேன்
      1. பாஸ்மதி அரிசி அதிக விரும்பி சாப்பிடுவார்களா?
      2. பொன்னி அரிசி அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா?
      3. எந்த அரிசி அதிகமா சாப்பிடுவார்கள்.

    • @judyalex7359
      @judyalex7359 4 หลายเดือนก่อน +1

      இல்லை.. இதுவும், சீரக சாம்பாவும் தான் சுவையில் முதலிடம் 👍🏻

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  4 หลายเดือนก่อน

      உலகில் பிறந்தவர்கள் அனைவரும் சீரக சம்பா அரிசி தான் சாப்பிடுவார்களா. மனிதர்கள் அனைவரும் புரிந்து கொள்பவர்களை சிறந்த மனிதர்கள் 🙏

  • @rameshmani273
    @rameshmani273 3 หลายเดือนก่อน +1

    பிரியாணி செய்முறை சூப்பரா சொன்னீங்க லாஸ்ட்டா அது பொங்கல் ஆகிவிட்டது

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  3 หลายเดือนก่อน

      அயோ போச்சு போங்க sorry. நீங்க என் சேனல் வீடியோ உள்ள போய் பாருங்க நிறைய பிரியாணி வீடியோ இருக்கு. உங்கள் உண்மைக்கு மிக்க நன்றி. 🙏

  • @karadikaradi9062
    @karadikaradi9062 5 หลายเดือนก่อน +1

    இனி. உன் சேனலை. தொடவேமாட்டண்டா.. தூங்கவைச்சிட்டியேடா...

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  5 หลายเดือนก่อน

      உங்க வாழ்க்கையில் நீங்க அப்ப தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வீட்டில் சமைக்கும் தாய்மார்களுக்கு தெரியும் என்னுடைய வார்த்தைகள். நான் ஏதாவது தவறாக பேசி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் 🙏

  • @AswinOfficial-ec2ic
    @AswinOfficial-ec2ic 4 หลายเดือนก่อน +1

    👍🏻💯

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v 5 หลายเดือนก่อน +1

    Supper

  • @amsavenisekar3759
    @amsavenisekar3759 6 หลายเดือนก่อน +1

    😊

  • @ArvinM-bm7ju
    @ArvinM-bm7ju 5 หลายเดือนก่อน +1

    1 kg veg briyani panunga anna

  • @ramjiramji6163
    @ramjiramji6163 6 หลายเดือนก่อน +2

    Super