Jeyamohan | Vainavangal | எழுத்தாளர் ஜெயமோகனின் " வைணவங்கள்" உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • புதுச்சேரியில் ஆசிரியர் ஜெயமோகன் எழுதிய மகாபாரத நாவலான வெண்முரசு குறித்து மாதந்தோறும் கலந்துரையாடல் நிகழ்கிறது. புறவயமான பல்வேறு மாறுபட்ட சூழல்களிலும் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக இந்தக் கூட்டங்கள் நிகழ்கின்றன, மேலும் பல வருடங்கள் தொடரும் .
    புதுவை வெண்முரசு கூடுகை நிகழ்வை ஒருங்கிணைக்கும் ஜெயமோகனின் வாசகர் திரு. அரி கிருஷ்ணன் அவர்களது அறுபதாம் அகவை நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜெ, "வைணவங்கள்" என்ற தலைப்பிலான இந்த உரையை நிகழ்த்தினார். அவரது மனைவி எழுத்தாளர், அருண்மொழியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் இது அறுபதாம் அகவை ஆண்டு ஆகவே எங்கள் பிரியத்துக்கிணங்க விழா மேடையில் ஜெ தம்பதியினர் மாலை மாற்றிக்கொண்ட பின்னர் இவ்வுரை துவங்கியது. இதன் தொடர்ச்சியாக ஒருநாள் விழாவின் அடுத்த பகுதியில் தமிழ் விக்கி தூரன் விருது பெற்ற மானுடவியல் ஆய்வாளர் கரசூர் பத்மபாரதிக்கு பாராட்டு விழாவும் நிகழ்ந்தது.
    எழுத்தாளர் ஜெயமோகனின் மேடை உரைகள் அவரது புத்தகங்களுக்கு நிகராகவே பெருமதிப்புடையவை. இந்த வைணவங்கள் உரை, நாமறிந்த வைணவத்தின் தோற்றுவாய் குறித்தும், தத்துவம் சார்ந்து அதிலுள்ள பல்வேறு வகைப்பாடுகளை விளக்கும் விதமாகவும் , உலகம் முழுவதுமுள்ள ஒத்த கருத்துடைய வழிபாடுகளை முன்வைத்தும் நிகழ்ந்தது. சில நாட்கள் முன்பாக ஜெ, நாமக்கல்லில் "விடுதலை என்பது என்ன" என்றொரு உரை நிகழ்த்தினார். அது ஆன்மீகவயமான பல அறிதல்களை கொடுப்பதாக இருந்தது, இந்த உரையை அதனுடைய ஒரு தொடர்ச்சியாகவும் நாம் இணைத்துப் புரிந்துகொள்ளலாம்.
    Credits:
    Background music used under creative common license. No copyright intended for the music.
    freemusicarchi...

ความคิดเห็น • 20

  • @globalalfainc
    @globalalfainc 2 ปีที่แล้ว +5

    யதார்த்தமான ஆன்மீக உரை...பலமுறை கேட்டால் நமது ஊறிப்போன படிமங்கள் தெளிவு அடையமுடியும். மீண்டும் கேட்கிறேன்.

  • @thirumoorthyg1
    @thirumoorthyg1 2 ปีที่แล้ว +5

    Tamil society is so blessed to have great Jeyamohan !!! What a clarity, contemplation !!! Thanks for posting this !!!

  • @anestraj443
    @anestraj443 2 ปีที่แล้ว +2

    Thanks for uploading this ❤️... ஆழமான உரை

  • @narmathatextile4038
    @narmathatextile4038 2 ปีที่แล้ว +1

    என்னை பல்லாண்டு காலம் துளைத்தெடுத்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது தங்களது இந்த சொற்பொழிவில் நன்றி ஐயா! வணக்கம்🙏

  • @bsragavan1
    @bsragavan1 2 ปีที่แล้ว +3

    மேதமை...மேதமை...ஆசானே... தலை வணங்குகிறேன் உங்கள் மேதமைக்கு

  • @radhikakrishnan2030
    @radhikakrishnan2030 2 ปีที่แล้ว +2

    Perumale ❤❤🎉🎉

  • @rajithav4457
    @rajithav4457 2 ปีที่แล้ว

    🙏நன்றி அருமை.

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 2 ปีที่แล้ว

    Very great speech 🙏🙏🙏

  • @rajanichandrasekar5330
    @rajanichandrasekar5330 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว

    மேதையென யாரும் இல்லை தான்கற்றறிந்ததை விரித்துரைப்பாரே யாரும்.

  • @porkannan411
    @porkannan411 2 ปีที่แล้ว

    Thanking J

  • @yaazhcommunication9622
    @yaazhcommunication9622 2 ปีที่แล้ว

    Sir.. It can't audible properly... Kindly check it sir...

  • @harishsp7152
    @harishsp7152 ปีที่แล้ว

    22:18

  • @porkannan411
    @porkannan411 2 ปีที่แล้ว

    Audio disturbance

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว +2

    ராமன் கிருஷ்ணர் சிற்றரசர்கள் ராமாயணம் மகாபாரதம் இதிகாசத்தால் பெரிய கடவுளாக ராமரும் கிருஷ்ணரும் கட்டமைக்கப்பட்டு பரப்பப்பட்டது .ஆனால் இருவரும் பெரிய வீரர்கள் இல்லை.ராஜராஜசோழன் ராஜேந்திர சோழன் ஆரியப்படைகடந்த பாண்டிய நெடுஞ்செழியன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆகியோர் ராமர் கிருஷ்ணர் இருவரை விடப் பெரும் வீரர்கள் பேரரசர்கள் இவர்களை அரசர்களாக தமிழர்கள் பார்த்தார்கள் கடவுளாகப் பார்ப்பதில்லை.கடவுள் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டதாக தமிழர்கள் பார்த்தார்கள்.பிச்சைக்காரபிலாசபியால் வளர்ந்தது சைவம் வைணவம் புத்தம் கிறிஸ்தவம் இஸ்லாம் சமணம் போன்ற அனைத்து மதங்களும்.உழைப்புதான் பொருளாக வடிவெடுக்கிறது என்று கூறியவர் கார்ல் மார்க்சு என்ற யூதபிராமணர் நன்றி.காரணம் அவர் யூதர் ஆறாவது கீழ்நிலை சாதியாக ஐரோப்பியாவில் அவமானப்பட்டார் அவர் உண்மையைத் தேடி பயணப்பட்டார் உண்மையை உலகுக்குச் சொன்னார்.

    • @alkemiebala
      @alkemiebala 2 ปีที่แล้ว

      Bullshit

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 2 ปีที่แล้ว

      Poda mental

    • @asokanvarunan4102
      @asokanvarunan4102 2 ปีที่แล้ว

      அ௫..மை...நன்றி...நி...தமிழன்னாக..இ௫ப்பின்..ெப௫..மை...ெகாள்ே..வன்..