பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு
    உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய
    பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு மீனவ கிராமத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு உலக நன்மைகள் வேண்டியும் வெயிலின் தாக்கம் குறையவும் அம்மனுக்கு பால்குடம் ஏந்தி பால் அபிஷேகம் செய்யப்பட்டது. 6,ஆம் ஆண்டாக நடைபெற்ற சித்திரை பவுர்ணமி விழாவில், முன்னதாக, பனித்திட்டு கிராமத்தில் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ ஊத்துக்காட்டு மாரியம்மன், ஸ்ரீ மகாகாளியம்மன், ஸ்ரீ கங்கையம்மன் ஆலயங்கள் உள்ளது. அதில் இன்று காலை அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் சன்னதியில் இருந்து மேல தாளங்கள் முழங்க பால்குடங்களை ஏந்தி பனித்திட்டு கடற்கரைக்குச் சென்று மீனவ மக்கள் கடவுளாக வணங்கக்கூடிய கடல் அன்னையின் கரையில் பால் குடங்களை வைத்து அபிஷேக ஆராதனைகளையும் அதனைத் தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது.
    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஏம்பலம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து 108 பால்குடங்கள் கடலோர பகுதிகளின் வழியாக மேளதாளங்கள் முழங்க வீதிபுறப்பாடாக சன்னதிக்கு வந்து ஸ்ரீ கங்கையம்மன் ஸ்ரீஊத்துக்காட்டு மாரியம்மன்
    ஸ்ரீ மகாகாளியம்மன் சன்னதிக்கு பால்குடங்களை தலையில் சுமர்ந்து வந்தனர். நேர்த்திக் கடனுக்காக பின்னர் மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி களுக்கு பால் அபிஷேகம் செய்து உலக நன்மைகள் வேண்டியும் வெப்பச்சலனத்தை குறைப்பதற்கும்பாவங்கள் தீர்ந்து நன்மைகள் நடைபெறுவதற்கும் மீனவ பெண்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
    மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. மேலும் அன்னதானங்கள் வழங்கப்பட்டதுஇந்த ஏற்பாட்டினை பனித்திட்டு பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.

ความคิดเห็น •