திருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுமலம்🙏🏻

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • 03.024 மண்ணின்நல் லவண்ணம்
    அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
    திருமுறை : மூன்றாம்-திருமுறை
    பண் : கொல்லி
    நாடு :சோழநாடு காவிரி வடகரை
    தலம் : சீர்காழி - 12-கழுமலம்
    சுவாமி : பிரமபுரீஸ்வரர்
    அம்பாள் : திருநிலைநாயகி.
    மண்ணின்நல் லவண்ணம்
    வாழலாம் வைகலும்
    எண்ணின்நல் லகதிக்கி
    யாதுமோர் குறைவிலைக்
    கண்ணின்நல் லஃதுறுங்
    கழுமல வளநகர்ப்
    பெண்ணின்நல் லாளொடும்
    பெருந்தகை யிருந்ததே. 1
    கருந்தடந் தேன்மல்கு
    கழுமல வளநகர்ப்
    பெருந்தடங் கொங்கையோ
    டிருந்தஎம் பிரான்றனை
    அருந்தமிழ் ஞானசம்
    பந்தன செந்தமிழ்
    விரும்புவா ரவர்கள்போய்
    விண்ணுல காள்வரே. 11

ความคิดเห็น • 2