சங்கரன்கோவில், நெல்லை மாவட்டத்தில் நிறைவடைந்த வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்த முதல்வர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • சங்கரன்கோவில்,
    நெல்லை மாவட்டத்தில் நிறைவடைந்த வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைக்கவும், புதிய வளர்ச் சித்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை புறப்பட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு விமான நிலையத்தில் வந்து இறங்கினார். இதையடுத்து புதுக்கோட்டை அடுத்த வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த மு க ஸ்டாலினை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துப் பெற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் செண்பக விநாயகம், சவுக்கை யூ எஸ் டி சீனிவாசன், வாசு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் மனோகரன், புனிதா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிவசங்கரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் விஜயா சௌந்தர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், புளியங்குடி நகரச் செயலாளர் அதோனிச்சாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் ரூபி பாலசுப்ரமணியன், சிவகிரி சேது சுப்பிரமணியன்,நகரத் துணைச் செயலாளர் காந்திமதி அம்மாள், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், ஓட்டுனர் அணி அன்புராஜன், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, வெள்ளத்துரை, மேல நிதிநல்லூர் பால்ராஜ், குலசேகரன், பூசை பாண்டியன், கடற்கரை, பசுபதிபாண்டியன், வழக்கறிஞர் பிச்சையா, அருணாச்சலம், நகர இளைஞரணி, முருகேஷ், சதீஷ், அப்பாகுட்டி அருணாசலம், பி வி பாலசுப்பிரமணியன், வெங்கடேஷ், ராஜராஜன், சுற்றுச்சூழல் ஜலால், விஜயா பாண்டியன், உள்ளார் ரமேஷ், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    தென்காசி மாவட்ட செய்தியாளர் திருமலைக்குமார்

ความคิดเห็น •