கடன் பிரச்னை தீர்க்கும் பரிகாரத்தலம் / ருண விமோசன லிங்கம் / Thirucherai Saraparameswarar Temple
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- திருச்சிற்றம்பலம்
தீராத கடன் தீரும் / கடன் பிரச்னை தீர்க்கும் பரிகாரம் | Thirucherai Saraparameswarar Temple | ருண விமோசன லிங்க தரிசனம்
திருச்சேறை (உடையார் கோவில்)
இறைவர் திருப்பெயர்: செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: ஞானவல்லி.
தல மரம்: மாவிலங்கை.
தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம். வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், மார்க்கண்டேயர்
கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே நாச்சியார்கோவில் வழியாக குடவாசல் செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் திருச்சேறை சிவஸ்தலம் இருக்கிறது. குடவாசலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகவும் திருச்சேறை தலத்தை அடையலாம். திருச்சேறையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான சாரநாதப் பெருமாள் ஆலயமும் உள்ளது.
இவ்வாலயம் கிழக்கு நோக்கிய அமைப்புடையது. கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி உள்ளது. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையைச் சுற்றி உள்ள பிரகாரத்தில் மேற்குப் பிரகாரத்தில் தல விநாயகரும் அவரையடுத்து மார்க்கண்டேயரால் பிரதிட்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டதுமான ஸ்ரீ ருண விமோசன லிங்கம் உள்ளது.
மற்ற எங்கும் இல்லாத சிறப்பு அம்சம் இத்தலத்தில் மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, விஷ்னு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சந்நிதியில் இத்தலத்தில் காட்சியளிப்பது சிறப்பாகும். வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் துர்க்கைகளை வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும். மேலும் நடராஜப் பெருமான் சந்நிதியும் அதன் அருகில் ஸ்ரீ பைரவர் சந்நிதியும் உள்ளது. எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இங்குள்ள பைரவருக்கு உண்டு. திருநாவுக்கரசரால் தனி தேவாரப் பாடல் பெற்ற பைரவர் இவராவார்.
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல காலப் பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
என்று அவர் பாடிய இரண்டு பதிகங்களில் ஒரு பதிகத்தின் 6வது பாடலில் சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறுகிறார். ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று அபிஷேக ஆராதனை செய்தும், சகஸ்ரநாம அர்ச்சனை செய்தும் வழிபட்டால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரக தோஷங்கள் நீங்குதல் ஆகிய பலன்களைப் பெறலாம்.
சூரியன் இறைவனை பூஜை செய்யும் தலங்களில் திருச்சேறை தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 13, 14, 15 தேதிகளில் காலையில் சூரியனது ஒளி இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகை பாதங்களிலும் நேரடியாகப் படுகின்றன. அச்சமயங்களில் இவ்வாலயத்தில் சூரியபூசை மிகச்சிறப்பாக நடைபெறும்.
இந்தக்கோயில் பற்றி மேலும் ஏதாவது விவரங்கள் இருந்தால் ( அர்ச்சகர் தொடர்பு, செல்லும் வழி, போக்குவரத்து வசதி) அதை அன்பர்கள் கமெண்டில் தெரியப்படுத்தினால் அடியார்கள் ஆலய தரிசனம் செய்ய எளிதாக இருக்கும்.
இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
அன்புடன்
சிவ.ஜவஹர்
☎️ 9551623296
#சிவ_ஜவஹர்
#Siva_Jawahar
இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.
🙏🌿🌹சிவ சிவ🐄🙏🙏❤❤❤❤❤❤❤❤
@@lakshminarashiman9901
திருச்சிற்றம்பலம்🙏🙏
இத்தலத்து ஈசனை சில முறை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம் சாந்தி
@@muralishankark.s.9647 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
சிறப்பு 👍
இன்று 17.09.2024 பெளர்ணமி + புரட்டாசி மாத பிறப்பு சிறப்பான நாள் நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம் சாந்தி
@@muralishankark.s.9647 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
Shivarathiri Fourth Kalam which oil should be listed to Lord Shiva First Kalam Ghee. second Kalam Gingely oil Third Kalam Ii Elluppai oil Please tell me Thankyou
முதல் கால பூசையில் ஆனைந்தால் (பஞ்ச கவ்வியத்தால்) 1) பால், 2) தயிர், 3) மோர், 4) வெண்ணைய், 5) நெய்.அபிடேகம் செய்து குறிப்பு:-(கோமயம்- சாணம், கோசலம் (கோமூத்திரம்) சேர்க்கக்கூடாது. மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூசை நடத்தப்படுகின்றது.
இரண்டாம் கால பூசையில் : பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூசை நடத்தப்படுகின்றது.
மூன்றாம் கால பூசையில் : தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணெய் தீபத்துடன் பூசை நடத்தப்படுகின்றது.
நான்காவது கால பூசையில் : குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்து, நல் எண்ணெய் தீபத்துடன் தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிடேக பூசைகள் செய்யப்படுகிறது
மேலும் விவரங்களுக்கு:
th-cam.com/video/AAOK7bHyuX8/w-d-xo.htmlsi=j0Ns04ORjKn2u4cN
அடியேன் பார்த்த வரை ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2025 இரண்டு வருட ஆங்கில மாதத்தில் , அதில் தமிழ் மாத பிறப்பு + பெளர்ணமி திதி ஒன்றாக வருவது இந்த புரட்டாசி மாதத்தில் மட்டும் தான். யாருக்கு திருவண்ணாமலை , அச்சிறு பாக்கம் , பழநி போன்ற ஸ்தலங்களில் கிரிவலம் செல்ல முடியுமோ பயன்படுத்தவும் ப்ளீஸ் நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம் சாந்தி
@@muralishankark.s.9647
திருச்சிற்றம்பலம்🙏🙏 தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி💐💐💐