ISAIRATHI
ISAIRATHI
  • 15
  • 599 136
வரலக்ஷ்மி தாயே வருக / VARALAKSHMI THAYE VARUGA By A.Inbarathi Ph.D
வரலக்ஷ்மி நோன்பிருந்து பூஜை செய்பவர்கள் வீட்டிற்கு அன்னை மகாலக்ஷ்மி வருகை புரிந்து ஆசிர்வதிப்பாள். மகாலக்ஷ்மி இருக்கின்ற வீடு இன்பம் நிறைந்த வீடு. அங்கு வாழ்பவர்கள் அனைத்து இன்பங்களையும் பெற்றவர்கள். நாமும் அவளது தெய்வீகத்தோற்றத்தையும், ஊஞ்சலாடும் அழகினையும், அருளினையும், பெருமைகளையும் பாடி நம் இல்லத்திற்கு அழைப்போம்.
பதினாறு வகைச்செல்வத்துக்கும் அதிபதி மகாலக்ஷ்மி.
மகாலக்ஷ்மியின் வடிவங்களான அஷ்டலக்ஷ்மிகள்:
ஆதிலட்சுமி :ஆரோக்கியமான உடல்நலத்தைத் தருபவள்
தான்யலட்சுமி :நிலவளத்தைப் பெருக்கித் தானியங்களை அள்ளித்தருபவள்
தைரியலட்சுமி : கஷ்டங்களை எதிர்கொள்ளத் தேவையான தைரியத்தைத் தருபவள்
கஜலட்சுமி :எல்லாவிதமான பாக்கியங்களையும் வழங்குபவள்
சந்தானலட்சுமி: வம்சம் விளங்கிட குழந்தைப்பேற்றினை அருள்பவள்
விஜயலட்சுமி : எடுத்த காரியங்களில் வெற்றியினைத் தருபவள்
வித்யாலட்சுமி :கல்வி கலைகளில் தேர்ச்சியையும் ஞானத்தையும் கொடுப்பவள்
தனலட்சுமி :செல்வத்தைப் பெருக்கித் தருபவள்
มุมมอง: 2 904

วีดีโอ

தாலாட்டுப் பாடல் 2 -அன்னமேநீ கண்ணுறங்கு.../ Thalattu Padal 2 - Anname nee kannurangu.. A.Inbarathi
มุมมอง 1K8 หลายเดือนก่อน
தாலாட்டுப்பாடல் - அழுகின்ற குழந்தையை அமைதிப்படுத்தும்; தூங்காத கண்களைத் தூங்கச்செய்யும்; அன்னையின் அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்தும்; தாயின் அரவணைப்பை இசையில் கொண்டுவரும்.
ஜெயஜெய துர்கா சரணம் /JEYA JEYA DURGA SARANAM - திருமண, காரியத்தடைகளை நீக்கும் துர்க்கை வழிபாடு.
มุมมอง 1.1K9 หลายเดือนก่อน
துர்க்கை வெற்றிக்குரிய தெய்வம். அவள் - மங்கல ரூபிணி; மாங்கல்யம் காப்பவள்; தொடங்கிய செயல்கள் வெற்றி பெற அருள்பவள். திருமணத்தடைகள், காரியத்தடைகள் நீங்க ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுவது சிறப்பாகும். சங்க காலத்துக்கொற்றவை வழிபாடு இன்று துர்க்கை வழிபாடாக வழக்கில் உள்ளது. சோழர்களின் காவல் தெய்வமாக இருந்த சிறப்புக்குரியவள் துர்கா. துர்க்...
தாலாட்டுப் பாடல் - சின்ன இதழ் சிரித்திருக்க .... / Thalattu Padal - Chinna Ethazi srithirukka ....
มุมมอง 2.4K10 หลายเดือนก่อน
தாலாட்டுப்பாடல் - இசைக்கு மயங்குவதும் கேட்டு ரசிப்பதும் மனிதர்களின் இயல்பு. குறிப்பாக தாலாட்டுக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. தாலாட்டுப்பாடல் தாய் தன் பிள்ளை மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துகிறது; குழந்தையை அமைதியாக, சுகமாகத் தூங்கச் செய்கிறது.
ஶ்ரீ மகா கணபதே நமோ / விநாயகர் போற்றி / SRI MAHA GANAPATHE NAMO /VINAYAGAR POTRI SONG by A.Inbarathi
มุมมอง 7Kปีที่แล้ว
முழுமுதற் கடவுள் விநாயகரின் பெருமைகளையும் சிறப்புக்களையும் போற்றிப் பாடப்பட்ட பாடல். இதைக் கேட்க நினைத்த காரியம் நிறைவேறும்; தொடங்கிய செயல்கள் வெற்றி பெறும்; மன அமைதி கிட்டும்; நாள்தோறும் கேட்க நலங்கள் கூடும்.
காமாட்சித் தாயே வருக! / Kamatchi Thaye Varuga by Inbarathi Arunachalam
มุมมอง 29Kปีที่แล้ว
அன்னை காமாட்சியை இஷ்ட தெய்வமாகவும், குல தெய்வமாகவும் கொண்டவர்கள் நாள்தோறும் கேட்டு அன்னையின் அருள் பெறவேண்டிய பாடல். காஞ்சியிலும், தேவதானப்பட்டியிலும், மாங்காட்டிலும் கோயில் கொண்டுள்ள அன்னை காமாட்சியை வேண்டியும், போற்றியும் பாடப்பட்டுள்ள பாடல்.
ஸ்ரீபராசக்தி மாரியம்மன் போற்றி - விருதுநகர் மாரியம்மன் கும்மிப் பாடல்/Sri Parasakthi Mariamman potri
มุมมอง 13Kปีที่แล้ว
விருதுநகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபராசக்தி மாரியம்மனைப் போற்றியும் அம்மனின் அருள்வேண்டியும் பாடியுள்ள பாடல். அம்மனின் அருள் வேண்டி பங்குனி மாதத்தில் பக்தர்கள் பொங்கலிட்டு, காப்புக்கட்டி, 21 நாள்கள் விரதமிருந்து, நேர்ந்தவண்ணம் கயிறுகுத்தி,அக்னிசட்டி ஏந்தி, ஆஹோ ஐயாஹோ கோஷமிட்டு, உருவபொம்மை செலுத்துகின்றனர். திருவிழா சாட்டுதலில் தொடங்கி கொடியேற்றம், மண்டகப்படியில் அம்மன் எழுந்தருளல், தேரோட்டம் என 21...
முருகா சரணம்! ஓம் சரவணபவ ஓம்! / MURUGA SARANAM OM SARAVANABHAVA OM SONG by INBARATHI ARUNACHALAM
มุมมอง 4.7K2 ปีที่แล้ว
முருகனின் சரவணபவ என்னும் சக்திவாய்ந்த ஆறெழுத்து மந்திரத்தைச் சரணடைந்தவர்க்கு எல்லா நன்மைகளும் மங்கலமும் நிம்மதியும் உண்டாகும். இப்பாடல் முருகனுக்கு உகந்த கார்த்திகை, விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், சஷ்டி, நாள்களில் கேட்பதற்கு ஏற்றது. முருகபக்தர்கள் கார்த்திகை, வைகாசி மாதங்களிலும், எல்லா நாள்களிலும் கேட்டு மனநிறைவும், முருகன் அருளும் பெறலாம்.
நவராத்திரி நாயகியே வாருமம்மா! /navarathiri nayakiye vaarumamma by Inbarathi
มุมมอง 6K2 ปีที่แล้ว
நவராத்திரியின்போது ஒன்பது சக்திகளின் வடிவாக நம் இல்லத்திற்கு வருகின்ற துர்க்கையாகிய மகிஷாசுரமர்த்தினியை மகிழ்ச்சியோடு வரவேற்போம். மகிஷனை அழித்த பெருமை மிக்க மகிஷாசுரமர்த்தினி அனைத்துக் கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்றுச் சிறந்தவள். நவராத்திரி நாயகியின் வெற்றியை நாம் தசராவாகக் கொண்டாடுகிறோம். ஆடலையும், பாடலையும் விரும்பும் அன்னைக்கு இப்பாடல் சமர்ப்பணம். நவராத்திரியின்போது மட்டுமல்லா...
வரலக்ஷ்மி வருகவே! / VARALAKSHMI VARUGAVE! by INBARATHI
มุมมอง 512K2 ปีที่แล้ว
வரலக்ஷ்மி வருகவே என்று உள்ளம் உருக அழைப்போர்க்கு அன்னை மகாலக்ஷ்மியின் அருள் பூரணமாகக் கிடைக்கும்; மங்கலம் நிலைக்கும்; செல்வம் பெருகும்; எல்லாப் பேறுகளும் கிட்டும்; சகல ஐஸ்வர்யங்களும் நிறையும். வரலக்ஷ்மி நோன்பு, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஆடிமாதம் மட்டுமல்லாது அனைத்து மாதங்களிலும், அனைத்து நாள்களிலும் கேட்க வேண்டிய பாடல் இது. இப்பாடல் ஒலிக்கும் இடமெல்லாம் இலக்ஷ்மி கடாட்சம் நிறையும்.
குலதெய்வம் போற்றி /Sivakasi Alankoil Periya Pandara Swami Potri/ உலகமாதா பெரிய பண்டார சுவாமிபோற்றி
มุมมอง 8K2 ปีที่แล้ว
சிவகாசி ஆலங்கோவில் பெரியபண்டார சுவாமிகளைப் போற்றியும், வேண்டியும் பாடப்பட்டுள்ள குலதெய்வ வழிபாட்டுப் பாடல். இக்கோவிலின் மூல வழிபாட்டுத் தலமாகிய உடன்குடி, தேரியூர் தங்கப் பெரிய பண்டார சுவாமிகள் கோவில் பற்றிய செய்தியும் இதில் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. by INBARATHI
SIVALINGAM POTRI OHM NAMASIVAYA / சிவலிங்கம் போற்றி ஓம் நமச்சிவாய by INBARATHI
มุมมอง 1.5K2 ปีที่แล้ว
சிவபக்திப் பாடல். ஆதியோகி சிவனின் மகிமைகள், சிவனின் திருவிளையாடல்கள், சிவனின் தோற்றப்பொலிவு, இலிங்கத்தின் சிறப்பு, பிரதோஷமகிமை, நமசிவாய நாமத்தின் மகிமை, சிவனடியார் பெருமை, பற்றிய பாடல். சிவனுக்கு உகந்த நாட்களில் இப்பாடலைக் கேட்போர் அனைவருக்கும் சிவனருளும், சகல நன்மைகளும் கிடைக்கும். Sivabakthi songs,
ஸ்ரீஹரி போற்றி by INBARATHI
มุมมอง 4.4K3 ปีที่แล้ว
பெருமாள் பக்திப் பாடல். ஏகாதசி நாள்களிலும், புதன், சனிக்கிழமைகளிலும், மார்கழி, புரட்டாசி மாதங்களிலும் கேட்க வேண்டிய நாராயணப் பெருமாள் பற்றிய பாடல்.
ஸ்ரீசக்தி போற்றி /அம்மன் பக்திப் பாடல் by INBARATHI
มุมมอง 6K3 ปีที่แล้ว
ஸ்ரீசக்தி போற்றி / SREE SAKTHI POTRI / அம்மன் பக்திப் பாடல் / AMMAN BAKTHI PAADAL / DEVOTIONAL SONG விருதுநகா் மாரியம்மன், வெயிலுகந்தம்மன், மகேஸ்வரி, மகிஷாசுரமர்த்தினி, துர்க்கை, காளி, பத்ரகாளி என சக்தியின் அம்சங்கள் இடம்பெறும் சக்தி போற்றிப் பாடல்.