நாச்சியார் திருமொழி ஆண்டாள்/"கற்பூரம் நாறுமோ....../திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பாடத்திட்டம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.
    ஆண்டாளின் இயற்பெயர் கோதை.
    ஆண்டாளின் சிறப்புப்பெயர்
    "சூடிக்கொடுத்த சுடர்கொடி"
    ஆண்டாள் பெயர்க்காரணம்
    ஆண்டவனையே ஆண்டதால் ஆண்டாள் என பெயர் பெற்றார்.
    ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை
    பெரியாழ்வார்.
    பூமகளின் அம்சமாக தோன்றியவர்.
    துளசி வனத்தில் கண்டெடுக்கப்பட்டவர்.
    ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர்.
    பாடிய நூல்கள்: திருப்பாவை,(30 பாடல்கள்) நாச்சியார் திருமொழி (.143 பாடல்கள்)
    கற்பூரம் நாறுமோ பாசுரம் மூலமாக ஆண்டாள் அதைத் தெரிவிக்கிறாள்.
    கனவிலே கண்ணனோடு ஏற்பட்ட உறவும் நீட்டிக்கப் பெறவில்லை. கவலையால் அவள் முகம் துவண்டது. எப்போதும் கண்ணனுடன் சேர்ந்திருக்கும்படியான அனுபவத்தைப் பெறவேண்டுமே! அதற்கு, எப்போதும் அவனுடன் சேர்ந்திருக்கும் ஒன்று, அந்த அனுபவத்தைச் சொல்லி அதைக் கேட்கவாவது வேண்டுமே! என்ன செய்வது? கோதைக்கு அவன் திருப்பவள வாய் வைத்து கர்ஜிக்கும்
    பாஞ்சஜன்யத்தின் நினைவு வந்தது. எப்போதும் அவன் கைகளிலே ஒட்டி உறவாடும் அந்த சங்கு அடைந்த பெரும் பேற்றை எண்ணி எண்ணி உகக்கிறாள் ஆண்டாள்.
    பகவானின் வலதுகையில் உள்ள சக்கரத்துக்கு இல்லாத பெருமை, இடது கையில் உள்ள சங்குக்கு உண்டு. அது என்ன? சங்கானது, பகவானுடைய இடதுகையை விட்டு நொடிப்பொழுதும் நீங்குவதே இல்லை. ஆனால், சக்கரமோ எதிரிகளை அழிக்க பகவானுடைய கையை விட்டு நீங்கி, மறுபடியும் அவருடைய கைகளில் வந்து சேரும். அவ்வாறு கண நேரமேனும் பகவானைப் பிரியும்படி நேர்கிறதே! அடுத்து, சங்குக்கு பகவானுடைய திருவாயினில் படும் பேறு உள்ளது. அதாவது, சங்குக்கு பகவானின் திருவாயமிர்தம் கிடைக்கும். சக்கரத்துக்கு அந்த பாக்கியம் இல்லை. அதனால், சக்கரத்தாழ்வானைவிட சங்கத்தாழ்வானுக்கு பகவான் மீதான வைபவம் அதிகம்.
    இப்படி, அவன் பவள உதடுகளின் வாசனையை நுகர்ந்த சங்கே அந்த அனுபவத்தை எங்களுக்கும் கூறேன் என்று, பகவத் அனுபவம் இருக்கும்படியைப் பலவாறு கேட்கிறாள் கற்பூரம் நாறுமோ என்ற இந்த ஏழாம் திருமொழியில்.
    கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?
    திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
    மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
    விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண் சங்கே.
    பாடலின் பொருள்
    கண்ணனுடைய பவள வாய் உதடுகளில் பச்சைக் கற்பூர வாசனை வீசுமோ? தாமரைப் பூ மணம்தான் வீசுமோ? அவன் பவள வாய் தித்தித்ப்புச் சுவையுடன் இருக்குமோ? கடலில் பிறந்த வெண்மையான பாஞ்சஜன்னிய சங்கே! குவலயாபீட யானையின் கொம்பினை ஒடித்த அந்தக் கண்ணபிரானின் உதட்டின் சுவையையும், வாசனையையும் பற்றி, ஆசையுடன் உன்னிடம் கேட்டறிய விரும்புகின்றேன். இதைப் பற்றி எனக்குச் சொல்வாயா?
    பாடல் 2
    கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்
    உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
    திடரில் குடியேறித் தீய வசுரர்,
    நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே.
    பாடலின் பொருள்:
    உப்புக் கடலில் பிறந்த நீ, இறைவனை வெறுத்த பஞ்சசனன் என்னும் அசுரன் உடலுக்குள் வளர்ந்து, இரண்டு இடங்களையும் கருதாமல், ஊழிக்காலத்தை நிர்வகிப்பவனான திருமாலின் கைத்தலங்களில் குடிபுகுந்து தீய அசுரர்கள் அழிவுபட, முழங்கும் பேறு பெற்றாய் நல்ல சங்கே!
    பாடல் 3:
    தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,
    இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்
    வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,
    குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே.
    உன் அழகுக்கும் மேலே திருமாலுக்கு அழகூட்டும் கோலம் உடைய சங்கே! சரத் காலத்தில் முழுநிலா நாளன்று பெரிய மலையிலே சந்திரன் உதயமாகி ஒளிவிடுவது போலே, வடமதுரை அரசனான கண்ணனின் திருக்கையினில் நீயும் குடிபுகுந்து உன் பெருமைகள் தோன்ற விளங்குகிறாய்
    பாடல் 4
    சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,
    அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,
    மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,
    இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே
    வலம்புரிச் சங்கே… சந்திர மண்டலம் குளிர்ந்த ஒளி வீசித் திகழ்வதுபோல, தாமோதரனாகிய கண்ணபிரானின் கையினில் திகழ்கிறாய்… அவன் நாயகிகள் அவனைவிட்டுப் பிரியாதிருப்பதைப் போல, என்றும் இடைவிடாது அவனுடனேயே இருந்து, அவன் காதுகளில் மந்திரம் பேசுகிறாயா? இத்தகைய உன் செல்வத்துக்கு இந்திரனும் ஒப்பாக மாட்டான்.
    பாடல் 5
    உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை,
    இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,
    மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,
    பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே
    பாஞ்சஜன்னியமே… கடலில் உன் இனத்தைச் சேர்ந்த மற்ற சங்குகளை, இவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று மதித்துப் பேசுவார் எவரும் இல்லையே! ஒரே கடலில் வாழ்ந்த உங்களுக்குள், நீ ஒருவன் மட்டுமே உலக சக்ரவர்த்தியாகத் திகழும் மதுசூதனனின் வாயமுதத்தைப் பல நாள்களாகப் பருகும் பேறு பெற்றிருக்கிறாய்.
    #PGTRB#நாச்சியார்திருமொழி#ஆண்டாள்

ความคิดเห็น • 54

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +1

    💕💞❤ஓம் நமோ ஆண்டாள் எம்பெருமான் திருவடிகளே சரணம் சரணம்❤💞💕

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +1

    💞💕❤ஓம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஅரங்கநாதபெருமாளே போற்றி போற்றி❤💕💞

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +1

    💓💕❤ஓம் நமோ லட்சுமி நாராயணப்பெருமாளே போற்றி போற்றி❤💕💓

    • @vv12777
      @vv12777  ปีที่แล้ว

      நன்றி🙏🙏💐

  • @vasudevanp7799
    @vasudevanp7799 ปีที่แล้ว +1

    THANKS

    • @vv12777
      @vv12777  ปีที่แล้ว

      நன்றி🙏💐

  • @vasudevanp7799
    @vasudevanp7799 ปีที่แล้ว +1

    Vow!

    • @vv12777
      @vv12777  ปีที่แล้ว

      நன்றி🙏🙏💐

  • @lokesharun581
    @lokesharun581 ปีที่แล้ว +1

    Than you mam ❤

    • @vv12777
      @vv12777  ปีที่แล้ว

      நன்றி...🙏💐

  • @arasuarasu4328
    @arasuarasu4328 3 ปีที่แล้ว +2

    நன்றாக புரிகிறது நன்றி அம்மா

    • @vv12777
      @vv12777  3 ปีที่แล้ว

      நன்றி மகனே 💐💐💐🙏🙏🙏🙏

  • @abiramaaruthra848
    @abiramaaruthra848 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 🙏🙏

  • @ganeshk1583
    @ganeshk1583 2 ปีที่แล้ว +1

    Thanku you amma

    • @vv12777
      @vv12777  2 ปีที่แล้ว

      நன்றி மகனே🙏🙏💐

  • @maharajakarthi3544
    @maharajakarthi3544 9 หลายเดือนก่อน

    எம்பெருமான்

  • @vimalraja1538
    @vimalraja1538 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍👌👌👏👏🙏🙏🙏நன்று.

  • @tnpsctamil7852
    @tnpsctamil7852 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏
    இன்று எனக்கு முதுகலைப் பருவத் தேர்வு ...
    நாள் பக்தி இலக்கியம். மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா🥰🥰🥰

    • @vv12777
      @vv12777  2 ปีที่แล้ว

      நன்றி மகனே💐💐👍🙏🙏🙏

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 ปีที่แล้ว +1

    🙏🙏👏👌🌹🏵️🌺🌷

    • @vv12777
      @vv12777  ปีที่แล้ว

      நன்றி🙏🙏💐

  • @2kspeedff360
    @2kspeedff360 2 ปีที่แล้ว +2

    Thanks🙏🌹❤

    • @vv12777
      @vv12777  2 ปีที่แล้ว

      நன்றி💐💐🙏🙏

  • @RebecalAgastin
    @RebecalAgastin 5 หลายเดือนก่อน +1

    Tq😍

    • @vv12777
      @vv12777  5 หลายเดือนก่อน

      நன்றி🙏💐

  • @ASN2005
    @ASN2005 ปีที่แล้ว +2

    TQ so much mam. Tmrw is my xam. This vdo is very useful

    • @vv12777
      @vv12777  ปีที่แล้ว +1

      நன்றி...நன்றாகத் தேர்வு எழுதுங்கள்🙏🙏💐💐💐

    • @ASN2005
      @ASN2005 ปีที่แล้ว +1

      @@vv12777 நன்றி mam 🌟🙏✨

    • @vv12777
      @vv12777  ปีที่แล้ว +1

      🙏🙏💐💐💐💐

  • @dharanip5621
    @dharanip5621 2 ปีที่แล้ว +2

    😍😍😍 thank you

    • @vv12777
      @vv12777  2 ปีที่แล้ว +1

      நன்றி💐💐🙏👍

  • @priyadharshinidharuman3897
    @priyadharshinidharuman3897 2 ปีที่แล้ว +2

    Thank you Mam...

    • @vv12777
      @vv12777  2 ปีที่แล้ว

      நன்றி🙏🙏💐💐💐👍🌹

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 2 ปีที่แล้ว +2

    இனிமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள் அம்மா. நன்றி..

    • @vv12777
      @vv12777  2 ปีที่แล้ว

      நன்றி🙏🙏💐

  • @puviyarasipuviyarasir4527
    @puviyarasipuviyarasir4527 2 ปีที่แล้ว +2

    It's very useful to me ☺️ thank you sister
    Iam thiruvalluvar University sister

    • @vv12777
      @vv12777  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி💐💐💐🙏🙏🙏

  • @SRIRAM-xh9fu
    @SRIRAM-xh9fu 2 ปีที่แล้ว +1

    Superrrr semma 🥰

    • @vv12777
      @vv12777  2 ปีที่แล้ว

      நன்றி👍🌹🌹💐💐🙏

  • @d.kcommunisttamizhan9127
    @d.kcommunisttamizhan9127 ปีที่แล้ว +1

    ஆண்டாள் 7ஆம் நூற்றாண்டு

    • @vv12777
      @vv12777  ปีที่แล้ว

      நன்றி...நூற்றாண்டுகளில் பாட வேறுபாடு உண்டு...7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்...

  • @anjanat8388
    @anjanat8388 3 ปีที่แล้ว +2

    Thank you mam

    • @vv12777
      @vv12777  3 ปีที่แล้ว

      நன்றி👍👍💐💐🙏

  • @subavenkatesan4870
    @subavenkatesan4870 2 ปีที่แล้ว +1

    Super

    • @vv12777
      @vv12777  2 ปีที่แล้ว

      நன்றி💐💐💐🙏

  • @chennaiponnu8571
    @chennaiponnu8571 2 ปีที่แล้ว +4

    Super explanation but nega 5 pattu porul tha solli irukiga enaku 10 pattu kuduthuruka ga nega innum irukum 5 pattu porul video poduka pls

    • @vv12777
      @vv12777  2 ปีที่แล้ว

      நன்றி.பாடலின் முதல் வரிகளை அனுப்புங்கள்...💐💐👍🙏

  • @Santhosh-ij6nv
    @Santhosh-ij6nv ปีที่แล้ว +1

    Madam nalaiku exam ku good lesson. Madam thank you

    • @vv12777
      @vv12777  ปีที่แล้ว

      நன்றி🙏🙏💐

  • @vasumathidesikan1097
    @vasumathidesikan1097 ปีที่แล้ว +1

    Karupporam .naarumo is the right way & not Karpooram. please refer Nalayira divya prabandam book

    • @vv12777
      @vv12777  ปีที่แล้ว

      நன்றி....

  • @vasudevanp7799
    @vasudevanp7799 ปีที่แล้ว +1

    THANKS

    • @vv12777
      @vv12777  ปีที่แล้ว

      நன்றி

  • @namachivayam.k.namachi7033
    @namachivayam.k.namachi7033 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏