T. Janakiraman - Amma Vandhaal | பவா செல்லதுரை | பெருங்கதையாடல் 4 | தி ஜானகிராமன் - அம்மா வந்தாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • வம்சி புக்ஸ் & கனலி கலை-இலக்கிய இணையதளம் இணைந்து வழங்கும்
    பவா செல்லத்துரையின் பெருங்கதையாடல் - 4
    தி ஜானகிராமன் - 'அம்மா வந்தாள்'
    Bava Chelladurai Perunkathaiyadal - 4
    T. Janakiraman - Amma Vandhaal
    #BavaChelladurai
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

ความคิดเห็น • 364

  • @-modernliterature3517
    @-modernliterature3517 4 ปีที่แล้ว +134

    பவா அப்பாவின் கதை சொல்லி கேட்பது ஒரு வகையான புத்தகம் படிக்கும் அனுபவம். மென்மேலும் உங்கள் மூலம் கதை கேட்க விரும்பிகிறேன். உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.
    நன்றியுடனும் மகிழ்வுடனும் இலக்கிய கர்வி பிரபாகரன்.

    • @valarmathy2251
      @valarmathy2251 4 ปีที่แล้ว +2

      நான் மீண்டும் இந்தியா வந்தால் பவா கதைகள் நேரில் உட்கார்ந்து கேட்க .......

    • @renoldaravind1122
      @renoldaravind1122 4 ปีที่แล้ว

      I also egar to meet him.

    • @santhoshchannel6594
      @santhoshchannel6594 4 ปีที่แล้ว

      Fine, thanks...

    • @rajenthiranp7476
      @rajenthiranp7476 4 ปีที่แล้ว

      I

    • @leelavathyhistory1676
      @leelavathyhistory1676 4 ปีที่แล้ว

      @@valarmathy2251 x

  • @sabapalanivel8150
    @sabapalanivel8150 4 ปีที่แล้ว +81

    அன்பின் பவா சார்,
    அப்படியே உங்கள் பின்னால் வந்துவிடத் தோன்றுகிறதே!! அங்கே கதை கேட்பவர்கள் எப்படி வீடுதிரும்புகிறார்கள் உங்களை விட்டு.♥

    • @Natisk11
      @Natisk11 หลายเดือนก่อน

      ​@@Selvaraniizethe character is a natures own creation, shame is just a overlay when you try to fix in your religion, aesthetic and ego.

  • @Prem-pdkt
    @Prem-pdkt 3 ปีที่แล้ว +4

    நான் இதுவரை கதை கேட்டதும் இல்லை, விரும்பி படித்ததும் இல்லை. தங்கள் கதை கேட்டபின் மனதில் ஒரு அமைதியும், நிதானமும் கிடைக்கிறது. நான் சில நாட்கள் இக் கதையினிலே பயணம் செய்கிறேன். நன்றிகள் கோடி.
    பிரேம் குமார்

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 11 หลายเดือนก่อน

    எழுத்தாளர் திரு. பவா அவர்களின் கதை சொல்லல் பணி போற்றுதலுக்குரியது!
    நாவலாசிரியரின் படைப்பை நம் மனக்கண்முன் திரு. பவா அவர்கள் கொண்டுவந்து நிறுத்தும் பாங்கு மிகவும் போற்றுதலுக்குரியது!
    படைப்பு ஒரு திறமை எனில், விவரிப்பதுவும் மிகப் பெரிய திறமையே!
    ஆழ்ந்து கூர்ந்து படித்தாலன்றி, இவ்வாறு விவரிக்க இயலாது!
    திரு. பவா நம்மையும் அவரைப் போன்று ஆழ்ந்த , கூர்ந்த, பண்பட்ட விதைகளாக்க முயற்சிக்கின்றார்! வாழ்க அவரின் இத்தொண்டு! வளர்க மனித நேயம்!

  • @KalaiSelvi-cd1bo
    @KalaiSelvi-cd1bo 4 ปีที่แล้ว +5

    பவா சார் கதை செல்லி கேட்கும்போதே அந்த புத்தகங்களை படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது மிகவும் நன்றி அய்யா

  • @thirumalaidurairaj3923
    @thirumalaidurairaj3923 4 ปีที่แล้ว +3

    நான் ஜானகிராமனின் பைத்தியமான ரசிகன் அம்மாவந்தள்
    மோகமுள்
    செம்பருத்தி
    உயிர்தேன்
    மரபசு நளபாகம்
    மேலும் சிறுகதை தொகுப்பு எல்லாம் படித்திருக்கிறேன்
    இந்தநாவல்களை பற்றி யாருடுடானவது கலந்துறையாடல் செய்ய வேண்டும் என்றஆதங்க படுவேன் ஆனால் இப்பொழுது பவா செல்லப்பாவின் மூலம் சந்தோஷமாக இருக்கிறது!
    மரபசுவை படிக்கம்பொழுது மயிர்கூச்சரந்தது என் ன அறபுதமான பாத்திரபடைப்புகள்
    அலங்காரத்தம்மாள் இந்து அப்பு, தண்டபானி!யப்பா
    மோகமுள்ளில் பாபு யமுனா? சேகர்
    அப்ப அப்ப சொல்லிமாளாது!

    • @palanibaskar5726
      @palanibaskar5726 4 ปีที่แล้ว

      நானும் தி.ஜாவின் பைத்தியமான ரசிகன்.

    • @thirumalaidurairaj3923
      @thirumalaidurairaj3923 4 ปีที่แล้ว +1

      @@palanibaskar5726 ஜானகிராமனின் வாசிப்பாளார்களை அறிந்ததில் மகிழ்ச்சி நணபரே!

  • @user-le2gb5lv9v
    @user-le2gb5lv9v 4 ปีที่แล้ว +2

    நான் 80 களில் ஒரு முறையும் 2018ல் ஒரு முறையும் அம்மா வந்தாள் வாசித்து பரவசப்பட்டிருக்கிறேன். மீண்டும் வாசிக்கும் போதும் தி.ஜா.அசத்தியது எனக்கு வியப்புதான்.
    உங்களுடைய கதை சொல்லவில் எனக்கு முன்பெல்லாம் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை -எழுத்து என்பது சொல்லிக் கேட்பதற்க்கில்லை - வாசிக்கத்தான் என்ற என் எண்ணத்தை இந்த நாவலை நீங்கள் சொல்லக் கேட்கும் போது மாற்றி விட்டது. வெகு நேர்த்தியாக அனுபவித்ததை உணர்வுப்பூர்வமாக சொல்ல முடிகிறது. சப்ஜெக்ட் தாண்டி வெளியில் அவ்வப்போது வந்து அதையொட்டி சொல்லிச் செல்வது இன்னும் கூடுதல் அர்த்தத்தைக் கூட்டுகிறது. தி.ஜா.வின் தவம், சிலிர்ப்பு, பரதேசி வந்தான் கேட்டும் முழுமையடைந்தேன் -பிரபஞ்சனின் கதையையும் கேட்டேன். வெளி விஷய உரைகளையும் கேட்டிருக்கிறேன். நன்றி - தொடர்வேன்.

  • @பாமாகாமா
    @பாமாகாமா 2 ปีที่แล้ว +1

    எத்தனை தரம் கேட்டாலும் புதுமை உங்களின் குரலில் கேட்பது ஏன் அதையே வாசிக்கும் போது கிடைப்பதில்லை பவா?.. வியப்பிலேயே பராசக்தி

  • @sudharsan81
    @sudharsan81 4 ปีที่แล้ว +24

    வேலூர் லிங்கம் சாருக்கு மிக பெரிய பரிசு..ஸ்ருதி கபிலன் அண்ணாவுக்கும் அவரது குழுவிற்கும் நன்றி

  • @santhakumarijk2729
    @santhakumarijk2729 5 หลายเดือนก่อน

    பல மீறல்கள்...
    துரோகமல்ல
    என்று முடித்து...
    பல மணி நேரமாக
    மனம் விசைபடும்
    பந்தானது....
    BHAVA SIR..
    THANK YOU VERY MUCH.

  • @inthumathia1929
    @inthumathia1929 4 ปีที่แล้ว +2

    நான் இப்பொழுதுதான் பவா சார் கதை கேட்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது .

  • @Rastrakoodan
    @Rastrakoodan 4 ปีที่แล้ว +8

    அநாவசிய பிறாமண துவேச ம் தவிர..அருமையான சொல்லாடல்..

    • @narayankashyap1063
      @narayankashyap1063 4 ปีที่แล้ว +1

      "அநாவசிய பிறாமண துவேசம்"
      இந்த ஆர்ட் மூவி ஆடியன்ஸுக்கு எதுக்கு தேவையில்லாத கமெர்ஷியல் மசாலா தூவூராருன்னு புரியலை !!!

  • @tkssbl1928
    @tkssbl1928 3 ปีที่แล้ว +6

    ஐயா,உங்கள் கதை சொல்லலும்,ஞாபக சக்தியும் அபாரம்.நன்றி.

  • @vijayakumararjunan2354
    @vijayakumararjunan2354 2 ปีที่แล้ว

    தொழர்.தி.ஜ .மிகமெரிய ஆளுமை.எற்க்னவே நான். படித்துள்ளேன்.அனால்நீங்கள் கதை சொல்லியவிதம் ன்னை பாதித்தது நான் ஆராண.அருகில் ஒருகிராமம் பொதவாக தி.மாவட்டம் மிக பின்தங்கியதாக நான். நினை ப் பேன் .உங்களை தெரிந்த பிறகு நான் 👍

  • @arcusinfotech3487
    @arcusinfotech3487 4 ปีที่แล้ว +2

    இந்த கதையாடலை கேட்டு கொண்டே இருந்த சுவாரசியமான நேரத்தில் ஜானகிராமன் கதையைச் சுருக்கிவிட்டர் ..

  • @venkatvarathan4524
    @venkatvarathan4524 3 ปีที่แล้ว +2

    யதார்த வாழ்வியல் உண்மைகளுக்குள் உலவ விட்ட உணர்ச்சி குவியல் மிகச் சிறப்பு

  • @anbudannagarajanponneri4144
    @anbudannagarajanponneri4144 2 ปีที่แล้ว +1

    , பாவா ஐயாவுக்கு மீண்டும் நன்றிகள் ---என்றும் அன்புடன் , நாகராஜன் பொன்னேரி

  • @sornamramayah3908
    @sornamramayah3908 4 ปีที่แล้ว +1

    இந்த நாள் எனக்கு ஆத்ம சந்தோசம். ஜானகி ராமனைத் எனக்கு தெரியாது. உங்களில் நான் அவரைக் காண்கிறேன். சாதாரணமான மனுஷியாக பிறந்தும் வாழ்ந்த எனக்கு அலங்காரம் ஒரு ஆச்சர்யம். பெண்ணின் ஆளுமை ஒரு சந்தோசம். உங்களுக்கு பாராட்டுக்கள்.பணி தொடரட்டும்.

  • @venkatesan.ssubramani.t.m959
    @venkatesan.ssubramani.t.m959 ปีที่แล้ว

    எனோ தெரியவில்லை இப்போதெல்லாம் பாவா ஐயா சொல்லும் கதையை காது கேட்கவேண்டும் என்று தூண்டுகிறது. வாசிப்பதைவிட கதையா கேட்டுக்கொண்டே என் வேலையையும் செய்கிறேன். நன்றி ஐயா.

  • @sampathsr7936
    @sampathsr7936 4 ปีที่แล้ว +11

    இன்னமும் நடந்து கொண்டிருக்கும்
    உண்மை"சம்பவங்களே" ஜானகீராமன் எழுதியுள்ளாா்.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 3 ปีที่แล้ว +4

    வேதத்தின் முடிவான விளக்கம். "தத்துவமஸி" தமிழில் "அது நானாக இருக்கிறேன்".... ஓய்வு பெற்ற நான் பாவாவின் குரலில் கரைவதுதான் என் முழு நேர பொழுது போக்கு. கதையில்வரும் நிகழ்ச்
    சிகளோடு ஒன்றிவிடுவேன் "அது நானாக இருக்கிறேன் " என்பதை போல.......திருச்சி ராமலிங்கம். நன்றி பாவா 🙏

  • @tamilootru1187
    @tamilootru1187 4 ปีที่แล้ว +22

    திஜா வின் மரப்பசு நாவலுக்குப்பிறகு நான் அறிந்த நாவல் இது. படித்த நாவலைவிட கேட்ட நாவல் இது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நன்றி பாவா ஐயா...

  • @balakrishnan9360
    @balakrishnan9360 3 ปีที่แล้ว

    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனை நீங்கள் உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் இது மாதிரி தமிழ் இலக்கியங்களின் பெருமையை நாம் தான் கொண்டு செல்ல வேண்டும் நம் சந்ததிகளுக்கு
    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

  • @priyan1007
    @priyan1007 4 ปีที่แล้ว +1

    பவா இந்த கதையை கேட்கறப்ப பல ஞாபகங்கள் என் வாழ்க்கையை ஒரு நேரம் திரும்பி பாத்தா மாதிரி இருக்கு

  • @SamaravelImayavaramban
    @SamaravelImayavaramban 4 ปีที่แล้ว +8

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கதை என்பது வாசிப்பாளனிற்கு ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.
    அப்படிபட்ட நடுக்கத்தில் இதை எழுதுகிறேன்...

  • @paridhianban1
    @paridhianban1 4 ปีที่แล้ว +5

    பல நிகழ்வுகளை எங்களுக்கு பரிசாக அளிக்கும் கபிலனுக்கு நன்றிகள்

  • @cheramaanviews9669
    @cheramaanviews9669 2 ปีที่แล้ว +1

    அருமை.... அருமை 'அம்மா வந்திருப்பாள்'அனைவரின் நினைவுகளிலும் பேயானாலும் தாய்தானே என்பதை போல...

  • @parthibanr182
    @parthibanr182 4 ปีที่แล้ว +3

    கதை சொல்லும் விதம் அருமை..ஆனால் கதை படித்தவர்களுக்கு தான் இந்த பதிவு நன்றாக புரியும்.....

  • @parameahwariparamesh3910
    @parameahwariparamesh3910 4 ปีที่แล้ว +3

    பவா அண்ணா நீ பல. நேரத்துல. என் அம்மா என் கவலைய மாத்துன. அம்மா 😍😍

    • @jeyachristy6549
      @jeyachristy6549 3 ปีที่แล้ว

      ஆமாம், ஆண் தாய்

  • @dpsinnisai2121
    @dpsinnisai2121 4 ปีที่แล้ว +3

    நான் 5 வருடத்திற்கு முன்னால் படித்த புத்தகம் மிகவும் அருமை.
    உங்கள் வார்த்தையில் கேட்கும் போது அருமையாக உள்ளது. 🙏🙏🙏

    • @dhanabothi
      @dhanabothi 4 ปีที่แล้ว

      நீங்கள் ஏன் எப்போதும் தலைமை ஆசிரியரகளை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்?
      ஒரு சிலரை வைத்து எல்லோரையும் சொல்வது தவறு,
      மற்றபடி உங்கள் கதை சொல்லும் விதம் அருமை.

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 4 ปีที่แล้ว +4

    பவா ஐயா உங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் மனம் கவர்கிறது . நன்றி ் ஒரு விண்ணப்பம் கவிஞர், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் உங்கள் நடையில் கேட்க வேண்டும்

  • @balakumaran5557
    @balakumaran5557 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை அய்யா
    அவன் சிந்துவை ஏற்றுக்கொண்டது போல் அவன் அம்மாவை ஏற்றுக்கொண்டான்
    நன்றி பவா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 4 ปีที่แล้ว

    பாவா கதை சொல்வது பிராமண
    சமூகத்தின் பேச்சு மொழியை சில இடங்களில் அப்படியே பிரதிபலிக்கிறார். நன்றாக கதையை சொல்கிறார். எனது பாராட்டுக்கள்

  • @mukilarasanmukilarasan1086
    @mukilarasanmukilarasan1086 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா. நான் ஒரு ஓவிய கலையில் பயணிக்கிறேன்,அனைத்து அழகில் மனம் லக்கிறது. உங்கள் மொழிச்சுவையில் மறுலக்கத்தில் பயணம் செய்யவைக்கிறது, நன்றி ஐயா!

  • @vishanthdivakar
    @vishanthdivakar 3 ปีที่แล้ว

    வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் தங்களின் கதையாடல்‌ வாயிலாக கேட்க வேண்டும் பவா அப்பா ❤️

  • @srinivasanmadusampathkumar6671
    @srinivasanmadusampathkumar6671 4 ปีที่แล้ว +3

    Amma Vanthal is a very deep story. Most people read it admire it and go away. But very few understand and accept the bitter truth of the reality. Bava touches it briefly. Thanks to Mr Jayamohan and Bava.

  • @palanibaskar5726
    @palanibaskar5726 4 ปีที่แล้ว +23

    லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒருவன் ஆயிரம் ரூபாயை திருப்பதி உண்டியலில் போட்டு பாவத்தை துடைக்க நினைப்பது போல், தான் பெற்ற மிகவும் பிடித்துப் பிள்ளையை வேத விற்பன்னர் ஆக்கி தன் குற்ற உணர்விலிருந்து வெளி வர துடிக்கும் ஒரு பெண்ணின் (அலங்காரத்தம்மாள்) கதை தான் அம்மா வந்தாள்.

    • @devaak3957
      @devaak3957 3 ปีที่แล้ว

      கற்பனை தவறான எண்ண ஓட்டத்தை ஏற்படுத்தும்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 หลายเดือนก่อน

    இந்தக் கதையை நான் வாசித்ததில்லை. கேட்க நன்றாக இருந்தது.

  • @viswabala3078
    @viswabala3078 2 ปีที่แล้ว

    Arumayana Kathy master piece of thi .janakiraman

  • @karthicklijo
    @karthicklijo 4 ปีที่แล้ว

    பாவ ஐயா! நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்த நிமிடங்கள்! உங்கள் கதையில். நன்றி

  • @geetharajaram8919
    @geetharajaram8919 4 ปีที่แล้ว

    பவா ஐயா அவர்களுக்கு வணக்கம் அம்மா வந்தாள் கதையை நீங்கள் சொல்லி நான் கேட்ட போதுஎனக்குள் வருத்தமும் கதை படித்ததூ போல திருப்தி அடைந்தேன் நன்றி

  • @SanthoshKumar-if6bo
    @SanthoshKumar-if6bo 4 ปีที่แล้ว +1

    ஏனோ இந்த கதை முடியும் போது .... இந்த கதையில் வருகிற யருகாகவோ..... என்னையும் மீறி கண்ணீர் துளிகள் முட்டி முளைக்கிறது......... நன்றி பவா.

  • @meganmadurairaguram6368
    @meganmadurairaguram6368 4 ปีที่แล้ว

    T.ஜானகிராமன் எழுதியே அம்மா வந்தாள் என்ற பெருங்கதையாடல் சொல்லுகின்ற விதம் வசீகரம், இனிமை, எதார்த்தம், ஆனந்தம்
    வாழ்த்துக்கள்

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 3 ปีที่แล้ว

    நன்றி .40
    வருடங்களுக்கு முன்பு படித்தது. மீண்டும் படிக்க ஆசை வந்து விட்டது.நன்றி

  • @user-gc2ov4ij1b
    @user-gc2ov4ij1b 4 ปีที่แล้ว

    மதிப்பிற்கு கூறிய ஐயா அவர்களுக்கு சமீப கலமாக உங்கள் கதைகளை் கேட்டு வருகிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதைகளை கேட்ட பிறகு வசிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் புதுச்சேரி யை சேர்ந்தவர்.

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 4 ปีที่แล้ว +6

    Fantastic.My days are going well by hearing Stories told by you.Really Superb way of telling.God bless you Bava sir

  • @piraimathi9041
    @piraimathi9041 4 ปีที่แล้ว

    ஏதோ ஒரு காரணத்தால் அம்மா வந்தாள் முழுமையாகப்படிக்க முடியாமல் தடை பட்டுக்கொண்டே சென்றது..இன்று முழுமையும் கேட்டுத் தெரிந்தோம் என்ற நிறைவு..படிப்பதை விட பவா சார் சொல்லிக்கேட்பதில் அந்தக் கதை இன்னும் மேன்மையடைகிறது..ஒவ்வொரு கதையும் கேட்டு முடிக்கும்பொழுது மனசு நிறைந்து கொண்டே போகின்றது...கடல் மாதிரி...

  • @kalaisri00
    @kalaisri00 4 ปีที่แล้ว +13

    மகிழ்ச்சி அற்புதமான ஒளிப்பதிவு. நன்றி சுருதி டிவி

  • @thamizhdhaesam3242
    @thamizhdhaesam3242 2 ปีที่แล้ว +1

    அப்துல்கலாமை செம்ம கலாய்!

  • @rajir8796
    @rajir8796 4 ปีที่แล้ว

    மிக மிக அற்புதமான கதை இந்த கதையில் வரும் எல்லா கதாபாத்திரம் அருமை நன்றி
    R. ராஜி

  • @amateurengineer1906
    @amateurengineer1906 5 หลายเดือนก่อน

    I had listened to the audio book (amma vandhal in storytel) - but could not understand it. after listening to bava re-telling, many of the subtlelty opens like a light bulb. Thankyou very much

  • @annamalairaju4017
    @annamalairaju4017 4 ปีที่แล้ว

    நானே இந்தக்கதையை படித்திருந்தால் கூட உள்வாங்கியிருக்க மாட்டேன்
    அவ்வளவு அருமை
    உங்கள் குரல் வளம் மிகவும்
    அருமை

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 ปีที่แล้ว +11

    One of the best novel of Thi Jaa unfortunately written in Tamil if it is any other language he would have got Nobel Prize

    • @kavinmathigopal706
      @kavinmathigopal706 3 ปีที่แล้ว +1

      En intha ulagathila noble prize than perusaa??

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 2 ปีที่แล้ว

    கமெண்ட் ஸ் பக்கம் வந்து படித்துப் பார்த்தேன்,
    என்ன சொல்ல, கதையை கேட்டவர்கள் யாரும்,தி ஜா வைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்பதுதான், நெருடலாக உள்ளது.

  • @hajirabegamnawaabdeen3598
    @hajirabegamnawaabdeen3598 4 ปีที่แล้ว +1

    நீங்கள் கதை சொல்லும் போது கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கிறது ஐயா.. வாழ்த்துக்கள் .. வாழ்க பல்லாண்டு

  • @samanbazhagan1949
    @samanbazhagan1949 3 ปีที่แล้ว +2

    வேதம் படித்ததின் விளைவாக அப்புவுக்கு இந்துவுடன் உறவுகொள்ள தோன்றவில்லை என்ற ஒரு முடிவுக்கு நாம் வரநேர்ந்தால், அது சரியா என்று தெளிய,The Call of the Vedas என்கிற Prof. A.C.Bose எழுதி பாரதிய வித்யா பவனால் வெளியடப்பட்ட புத்தகத்தை படித்தால், Path of Splendour என்கிற அத்தியாயம் நம்மை வியப்படையச்செய்யும்; முக்கியமாக 'காலை' யைப்பற்றி வர்ணிக்கின்ற வரிகள். இந்த ஆசிரியரின் பார்வையில் வேதம் என்பது ஒரு உன்னதமான உலகம் போற்றும் கவிதை. அப்படிப்பட்ட கவிதையை ஆழ உணர்ந்து கற்ற அப்பு, வேறு காரணமாகத்தான் - அது சரியானதாக இருக்கலாம் - இந்துவை அணுகவிடாமல், தானும் அணுகாமல் இருந்துவிட்டிருக்கலாம் என்று ஒரு தாழ்மையான கருத்து எனது.

  • @kulashekart4040
    @kulashekart4040 4 ปีที่แล้ว +4

    கதையின் நுட்பமான தரிசனங்களை அலங்காரமே ஏற்றிருக்கிறாள். அலங்காரத்தை புரிந்த கொள்கிற ஞானத்திற்கு ஒவ்வொருவரும் தி.ஜாவாக உளமாற வேண்டும். அந்த பரவசங்களை நேரில் சந்திக்கையில் பகிர்கிறேன்.

  • @nikilanjourney5213
    @nikilanjourney5213 4 ปีที่แล้ว

    பாவா அவர்களுக்கும் ஒளிப்பதிவாளர் கபிலன் அவர்களுக்கும் அருமையான ஒரு கதை சொல்லாடலை தந்ததற்கு நன்றி

  • @esakkithalavai4712
    @esakkithalavai4712 4 ปีที่แล้ว +2

    பவா அவர்களுக்கு வணக்கம்..பெருங்கதையாடலில் தாங்கள் சொன்ன சுமித்ரா கதையையும் கேட்டேன்... தற்போது அம்மா வந்தால் நாவல் கேட்டு முடித்தேன்... ஆனால் சுமித்ரா மேல் உள்ள தயவு தாட்சண்யம் அலங்காரம் மேல் உங்களுக்கு இல்லை...

  • @thirumalaidurairaj3923
    @thirumalaidurairaj3923 4 ปีที่แล้ว +2

    தி.ஜா வின் சிறுகதைகளில்
    தவம்
    பரதேசிவந்தான்
    அவருடைய சிறுகதை தொகுப்பஎல்லாம் அற்புதம் அதில்
    வேண்டாம் பூசனி சிறுகதையை படித்த விட்டு நெஞசம் அடைத்தது அழுதுவிட்டேன்!

  • @balakrishnan9360
    @balakrishnan9360 3 ปีที่แล้ว +1

    வேத பாடசாலை கல்வி கற்கும் முறை, உணவு பழக்கவழக்கங்கள் அருமை
    நம் தேசத்தின் கலாச்சார பெருமை
    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

  • @curiedevi7382
    @curiedevi7382 2 ปีที่แล้ว +2

    Very very super sir. What a lovely feeling I realized now. For the past few hours I was in another atmosphere. Thank you very much.

  • @ravichandhran408
    @ravichandhran408 4 ปีที่แล้ว

    ஒரு நாவலை இவ்வளவு அழகா யாருமே சுவாரசியமாக சொன்னதே இல்லை நன்றி பவா சார்
    எல்.ஜி.ரவிசந்தர்
    திரைப்பட இயக்குனர்

  • @arulmathi3388
    @arulmathi3388 3 ปีที่แล้ว

    உண்மையிலேயே இக்கதை முப்பருவத்திலும் பார்த்து ரசிக்கும் அகண்ட காவேரிதான்

  • @chitraj7659
    @chitraj7659 3 ปีที่แล้ว +2

    Very beautiful speech..my habit daily hearing your speech..nice .God bless you sir🙏🙏

  • @arulnambi2556
    @arulnambi2556 4 ปีที่แล้ว

    மனதை இரணகளமாக்கிறது சில வரிகள், அடுத்த வரியில் அதற்கு மருந்து போடுகிறது பல வரிகள், கதைகள் முடிவதில்லை, முடிவும் இல்லை. சிறு வயதில் தோன்றிய இலக்கிய ஆர்வம் பாதைகள் மாறி வெகு தொலைவிற்கு வந்தவனை பாவா அவர்களின் கதை சொல்லின் மூலம் பூமியில் இந்த இறைச்சல் மிகுந்த நகரப்பகுதியில் வசிக்கும் எனக்கு ஏதோ விண்வெளியில் இருந்து எனக்கு அமைதியான ஒரு அலைவரிசை என்னை தன்பக்கத்தில் அழைக்க, செயல் இழந்து போன என் அலைவரிசையை பழது பார்த்து சரி செய்ய, பாவாவின் வார்த்தைகளும், குரலும் ஈர்ப்பு விசையால் அந்த அலைவரிசையுடன் என்னை இணைத்துக் கொள்ள முற்பட்டு கொண்டு இருக்கிறது.

  • @rajguberrajguber260
    @rajguberrajguber260 5 หลายเดือนก่อน

    Super

  • @paridhianban1
    @paridhianban1 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி பவா

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 4 ปีที่แล้ว +1

    வாழ்வியல் குழப்பங்கள் அனைத்தும் படித்தவர்கள், பனக்கார்கள் இவர்களிடம் மட்டும் மிகுந்து கானப்படுகிறதே. பாமரனிடமும், பஞ்ச பரதேசிகளிடமும் இந்த அசிங்கங்கள் இல்லையே ஏன். நான் நம்புகிறேன் கடவுள் அவர்கள் அருகாமயில் இருப்பதால். Man is to err. But erring always cannot be a man/human. தங்களது கதை சொல்லும் பானி அலாதியானது. பாராட்டுக்கள்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +3

    T. Janakiraman - Amma Vandhaal | பவா செல்லதுரை | பெருங்கதையாடல் 4 | தி ஜானகிராமன் - அம்மா வந்தாள் - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நேரம் ஒதுக்கி கேட்டுப் பாருங்கள். நன்றி சார் திரு பவா செல்லதுரை

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 3 ปีที่แล้ว +4

    07:15 ஏன் இல்லை இன்னமும் வேதபாடசாலை கும்பகோணம் காவிரிகரையில் சிறப்பாக நடந்துகொண்டுதான் இருக்கிறது

  • @user-maha5820
    @user-maha5820 3 ปีที่แล้ว

    வேற லெவல் சார்..... அப்புவோடு சேர்ந்து வாழ்ந்து விட்டோம்..... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ravisankar-jy4td
    @ravisankar-jy4td 3 ปีที่แล้ว

    கற்றலில் கேட்டலே நன்று என்பதை உணர்ந்தேன்.

  • @ravisankar-jy4td
    @ravisankar-jy4td หลายเดือนก่อน

    தட்டுல சாப்டா எச்சில்னு நெனைக்கற ஒரு பரம்பரை தானே எச்சில்பட்டு நிற்காத்தை அறியாமல் வாழ்வது என்ன ஒரு சுயமுரன்.

  • @sarsonsar0
    @sarsonsar0 4 ปีที่แล้ว +7

    இது போன்ற ஒரு கதையை தமிழ் சமூகத்தில் அதுவும் 1960களில் எழுத ஒரு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும் என்று இந்த நாவலை இரண்டு வருடங்களுக்கு முன்பு படிக்கும் பொது தோன்றியது. இப்போது பவாவின் வழியாக கதை கேற்பது இன்னும் மேல்.

  • @anbuarasi4888
    @anbuarasi4888 4 ปีที่แล้ว

    ரொம்ப அருமை ஐயா ....நிறைவான கதை

  • @orkay52
    @orkay52 6 หลายเดือนก่อน

    Bava"s story telling is like viewing cinema,but we can view the cinema by closing our eys

  • @mathivananmathivanan8866
    @mathivananmathivanan8866 4 ปีที่แล้ว +1

    மிக மிக அழகு

  • @manibeulamary94
    @manibeulamary94 4 ปีที่แล้ว

    ஏதோ விலங்கிலிருந்து கிடைத்த மோர் சாதம் செம

  • @mythilikumaraswamy3671
    @mythilikumaraswamy3671 4 ปีที่แล้ว +2

    I have read the novel as a young woman. Could understand better when I read again. Have not been able to share my reading and understanding with anyone in all these more than 3 decades. This gave me a wholesome experience of reading it again.

  • @subramaniamsadayandi480
    @subramaniamsadayandi480 4 ปีที่แล้ว

    Bava you great no words to describe subra R. S. Malaysia

  • @kalaivani5278
    @kalaivani5278 3 ปีที่แล้ว

    நன்றி பவா சார்

  • @nagarajmanim6464
    @nagarajmanim6464 4 ปีที่แล้ว

    மெல்ல கரம் பிடித்து கதைக்குள் அழைத்துச் சென்று என்னை கரைய வைத்த பவா செல்லத்துரைக்கு நன்றி

  • @jayamalini5580
    @jayamalini5580 4 ปีที่แล้ว

    நன்றி பாவா

  • @logusundarp813
    @logusundarp813 4 ปีที่แล้ว +2

    பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @subhaarunachalam
    @subhaarunachalam 4 ปีที่แล้ว +4

    thanks sruti TV... என் வாழ்வில் கலந்த ஸ்ருதி TV கு என் அன்பும் மகிழ்வும்.
    love u பவா அண்ணா...♥️

  • @cinemavv
    @cinemavv 4 ปีที่แล้ว +1

    நன்றி.நன்றி.

  • @user-ll2cj1wl1l
    @user-ll2cj1wl1l 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @vijayanand8587
    @vijayanand8587 3 ปีที่แล้ว +4

    அருமை சார். ஆனால் திருஷ்டி பொட்டு போல் ... உங்கள் சொல்லாடலில் Bible, சுவிசேஷம், திருக்குரான் என்றால் இனிப்பதும் கீதை என்றால் கசப்பதுமே திராவிட பகுத்தறிவா பவா சார்? திட்ட மிட்டு பைபிள், குரானை வலிந்து திணிப்பது தவறு.

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 10 หลายเดือนก่อน

      கீதையில் தானுங்க கிருஷ்ணர் இந்து மதத்தில் நாலு ஜாதியை நான் தான் படைச்சேன் அவனவன் ஜாதிக்கு உண்டான வேலைய பாக்கணும். அதை உட்டுட்டு நானும் படிப்பேன் என்று அதர்மம் ? செய்தால் நான் அவதாரம் எடுத்துனு வந்து அதர்மத்தை அழித்து மனு தர்மத்தை காப்பேன் என்று அவர் தானங்க சொல்றாரு!

  • @tamilvanan9203
    @tamilvanan9203 ปีที่แล้ว

    ❤❤❤

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 4 ปีที่แล้ว +8

    மனம் நிறைந்த நன்றிகள்...
    பவாக்கும் சுருதி தொலைக்காட்சிக்கு... ப்பா என்ன கதை... மனம் மிகவும்... அமைதி யின்றி தவிக்கிறது..

  • @LEF1980
    @LEF1980 4 ปีที่แล้ว

    மிக மிக அருமை பவா தோழர்.

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 4 ปีที่แล้ว

    நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும், நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்..
    ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும், உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்..

    • @torakutty9668
      @torakutty9668 3 ปีที่แล้ว

      I think that incident done my life what a surpride storytelling noveld now i find writer world throughyou
      God bless you sir
      I ask one requedt can you give your mobilr umberd please
      Thank you

  • @rahupathi1971
    @rahupathi1971 4 ปีที่แล้ว +10

    பவா தி ஜ வின் உயிர்த்தேன் நாவல்
    சொல்முடிந்தால் ...please

  • @vellaisamy82
    @vellaisamy82 4 ปีที่แล้ว

    நன்றி பவா

  • @kalimuthu5182
    @kalimuthu5182 4 ปีที่แล้ว

    நன்று... நன்றி....

  • @revathysridhar8786
    @revathysridhar8786 8 หลายเดือนก่อน

    Thank you sir

  • @ajanthanbalasubramaniam3513
    @ajanthanbalasubramaniam3513 4 ปีที่แล้ว +3

    Bava love u. Thank u bava for all the kindness and love for all the human being.

  • @r.priyarameshkumar167
    @r.priyarameshkumar167 3 ปีที่แล้ว +3

    ஐயா ,உங்கள் கதை கூறும் விதம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். இந்துவுக்கும் அலங்காரத்துக்கும் வித்தியாசம் உண்டு. இந்து வயதில் சிறியவ. இளம் விதவை.அலங்காரம் ஆறு குழந்தைகளுக்கு அம்மா,அதில் மூன்று தவறான உறவால் வந்தது.இது எப்படி இந்துவை ஏற்றுக்கொண்டால் அம்மாவையும் ஏற்றுக்கொண்டதாகும்.எந்த பெண்ணும் துரோகம் செய்ய காரணம் சொல்லமுடியாது. இதற்க்குப்பெயர் துரோகம்இல்லை என்றுஒரு இடத்தில் கூறி உள்ளிர் .பின்னர் இதற்க்கு பெய்ர என்ன. ஒரு வீட்டில் கல்யாணவயது பெண்இருந்தால் சிவசுமாதிரி ஒருவனை மாப்பிள்ளையாக்க விரும்புவிர்கால.சிவசுக்கு மனைவியிருந்தால் அது துரோகம்இல்லையா.பல கதைகலில் பெண்களுக்கு
    கணவன் துரோகம் செய்தால், அதை கண்டிக்கும் சமுதாயம் ஆண்களுக்கு செய்யும் துரோகத்தை எப்படிஏற்ப்பது.இந்த உலகம் துரோகம் என்று நம்மை பயமுறுத்தி வைத்திருக்கிறது என்று கூறினிர் .அப்படி என்றால் எதற்க்கு கல்யாணம். எப்படி வேண்டுமானால் வாழாம். அலங்காரம் தவறானவல் என்றும் இருந்தபோதும் அவள் கணவன் உண்மையாக இருக்கக்கவேண்டும், துரோகம் எல்லராலும் செய்யமுடியாது சுயநலம், தன் ஆசையைமட்டு நிறைவேற்ற நினைப்பவர்கள் துரோகம்செய்வர். அலங்காரத்தை அவள் கணவர் வேண்டாம் என்று கூறி இருந்தால் இந்த உலகம் அவளை வேறமாதிறி பார்திருக்கும். அவள் கணவனால்தான் சிவசு ஒருத்தனை அவளால் உறவுகொள்ள முடிந்தது. அவள் கணவன் வேண்டாமென்றால், பல சிவசுகள் அவளை திண்றிருப்பார்.எனவே துரோகத்தை ஆதரிக்காதிற்கல் . அலங்காரத்திறக்கு அவள் கணவன் துரோகம் செய்திருந்தால் ,அதை தவறு என்று ஐய்யா கூறிஇருப்பார். இதுதான் உலகத்தின் எதாற்தம் என்று சொல்லி தவறான உணர்வுக்கு மதிப்பளித்தால் ,மனிதன் மிருகமாக மறிவிடுவான்.

  • @suhahasan60
    @suhahasan60 3 ปีที่แล้ว

    சந்தர்ப்பம் கிடைத்தால் நேரில் ஒருமுறையாவது கதை கேட்டுவிடவேண்டும். இலங்கையிலிந்து