Aayiramthan Kavi Sonnen | Naatpadu Theral 2 - 02 | Vairamuthu | SPBalasubrahmanyam ARGandhi Krishna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 266

  • @kannanr4780
    @kannanr4780 2 ปีที่แล้ว +18

    எனக்கொண்ணு ஆனதுன்னா உனக்கு வேற பிள்ளையுண்டு
    ஒனக்கேதும் ஆனதுன்னா எனக்குவேற தாய் இருக்கா .இந்த வரிகள்
    மெய் சிலிர்க்க வைக்கின்றன.

    • @RK_APK
      @RK_APK 2 ปีที่แล้ว

      @Kannan r வரலாறு படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்வரிகள் இவை

  • @kanna-ui2tw8uc2u
    @kanna-ui2tw8uc2u 2 ปีที่แล้ว +26

    எத்தனை அழகாக இசை அமைத்து கேட்டாலும் .. கவியரங்க மேடையில் , உங்களுக்கேயான அந்த மொழி நடையில் நீங்கள் வாசித்து கேட்பது போல் வராது .. இந்த ஒரு கவி மட்டும் !!

    • @muthuramalingamp3776
      @muthuramalingamp3776 2 ปีที่แล้ว

      மிகச் சரியாகக் கூறினீர்கள். என் ஆழ் மன உணர்வும் இதுவாகத் தான் இருந்தது நண்பரே....

  • @jayakumar-jp2mj
    @jayakumar-jp2mj 2 ปีที่แล้ว +15

    கதகதன்னு களிகிண்டி களிக்குள்ளே குழிவெட்டி கருப்பட்டி நல்லெண்ண கலந்து தருவாயே….இந்த மாதிரியெல்லாம் வைரமுத்துவால மட்டுந்தான் எழுத முடியும்.எப்படின்னா…அந்த வாழ்க்கைய அவரு
    வாழ்ந்தவாரு

  • @karthia6827
    @karthia6827 2 ปีที่แล้ว +7

    Spb மறையவில்லை வைரமுத்து வரிகளில் மீண்டும் உயிர் பெற்று விட்டார்

  • @manipk205
    @manipk205 2 ปีที่แล้ว +61

    பொதுவுடைமைக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கவியரசு கண்ணதாசன், கவிவேந்தர் வாலி இவர்களெல்லாம் இல்லையே என்கிற குறையைத் தமிழுக்கு இப்போது நிறைவுசெய்பவர் கவிப்பேரரசு வைரமுத்து ஒருவரே.

    • @manivannan5456
      @manivannan5456 2 ปีที่แล้ว +2

      யாவும் நன்று.
      👌👍👏🙏
      இறுதியில்,
      Title cards --இல் வருகிற பெயர்கள் மிக வேகமாக ஓடி மறைகின்றன.
      இனி, அவை மெதுவாகவே மேலேறட்டும், அண்ணா.

  • @BALASUBRAMANI-zb1or
    @BALASUBRAMANI-zb1or 2 ปีที่แล้ว +31

    கேட்கும் போதே கண்ணீரை வரவழைக்கும் எஸ்பிபி குரல் வாசிக்கும் போதே கண் கலங்க வைக்கும் கவிப்பேரரசு வரிகள் காட்சிகளைக் காணும் போது கண்களைக் குளமாக்கும் காந்தி கிருஷ்ணாவின் காட்சிகள் அனைத்தும் அற்புதம். அனைத்து அன்னையர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம் 🙏🙏

  • @aadhithanarunmozhi27
    @aadhithanarunmozhi27 2 ปีที่แล้ว +26

    ஐயா, எனக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கவிதை வரிகள். SPB ஐயாவின் குரலில் இந்த கவிதை மனதை ஏதோ செய்துவிட்டது🥺🥺🥺😭😭😭. எப்பவோ கேட்ட கவிதை இது. நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் இந்த கவிதையை பற்றிச் சொல்லியது ஞாபகம் இருக்கிறது. அப்போ மனப்பாடம் ஆன வரிகள் இன்னைக்கு கேட்கும்போது கூட நானும் கூடவே பாடிட்டே வந்தேன்.

  • @ajayji8989
    @ajayji8989 2 ปีที่แล้ว +12

    நாட்படுதேறலின் இந்தப் பாட்டில் மெய்மறந்துபோனேன். நெகிழ வைக்கும் வரிகள். வைரமுத்து காலத்தில் நான் வாழ்கிறேன். இன்று வைரமுத்து தமிழின் அடையாளம்.

  • @selvamk5628
    @selvamk5628 2 ปีที่แล้ว +8

    இன்னைக்கி கூழாங்கற்களாக வந்து கொண்டிருக்கும் சினிமா பாடல்களுக்கு இடையே நாட்படுதேறலில் முத்துக்களாக பதிக்கும் வைரம் வாழ்க.

  • @rameshthala242
    @rameshthala242 2 ปีที่แล้ว +11

    அம்மாவுக்காக உலகத்துல இப்படி யாரும் கவிதை எழுதுனது கிடையாது வரிகள் அருமை
    பாட்டகேட்டு முடிச்சதும் அழுதுட்டேன்.

  • @saravanank113
    @saravanank113 2 ปีที่แล้ว +12

    எத்தனை முறை
    ஆற்றின் அழகு
    பார்க்க பரவசம் !
    எத்தனை முறை
    தாயின் வரிகள்
    கேட்க புது சுகம்!
    அருமை
    அற்புதம்
    நாட்படுதேறல் - 2
    ஆயிரம் தான்
    கவி சொன்னேன்....

  • @lovechaneel3242
    @lovechaneel3242 2 ปีที่แล้ว +12

    இந்தப் பாட்டு கேட்கும் பொழுது என்னை அறியாமலே கண்களின் இருந்து கண்ணீர் வருகிறது

  • @napamaagamchannel5922
    @napamaagamchannel5922 2 ปีที่แล้ว +9

    எத்தனை முறை பார்த்தாலும், அட கண்ணும் இரண்டும் கலங்குதய்யா, பெத்த தாயி எப்போதும் உசுரு தான்னு எழுதி, அத பாட்டா வடிச்ச எங்க வடுகப்பட்டி வாத்தியாருக்கு வாழ்த்துகள் ஐயா...

  • @manimegalais8836
    @manimegalais8836 2 ปีที่แล้ว +8

    வைரமுத்துவின் காலத்தால் அழியாத காவியம்.போகப் போக பாருங்க.கோடிக்கணக்கான பேரோட கவனத்தை ஈர்க்கும் பாடல் இது இருக்கும்.

    • @amravi1804
      @amravi1804 2 ปีที่แล้ว

      உண்மை

  • @yaazhdhuruvan2776
    @yaazhdhuruvan2776 2 ปีที่แล้ว +10

    இமயக் கவிஞனின் இதயத்திலிருந்து
    முகிழ்ந்து வந்த
    முத்தான வரிகளை ...
    SPB யின் குரலில் கேட்டு
    முடிக்கும் போது... வந்த என் இரண்டு துளி கண்ணீரே...
    என் கவிஞனுக்கு காணிக்கை..
    இன்னும் பல படைக்க...
    என் வாழ்த்துகளும்... வணக்கங்களும்...
    - வினோத் பரமானந்தன்

  • @vaiyapuricongress5072
    @vaiyapuricongress5072 2 ปีที่แล้ว +8

    எனக்கொண்ணு ஆனதுன்னா உனக்கு வேற பிள்ளை உண்டு உனக்கேதும் ஆனதுன்னா எனக்கு வேற தாயிருக்கா? என்று கவிஞர் கேட்கும்போது தாயில்லாத என்னைப்போன்ற கோடிக்கனக்கான பிள்ளைகளின் வலிகளை வேதனைகளை சொல்லியபாங்கு பராட்டத்தக்கது!

  • @mydream5437
    @mydream5437 2 ปีที่แล้ว +12

    மனதைக் கொள்ளை கொள்ளும் வரிகள். உயிரை உருக்கும் எஸ்.பி.பியின் குரல். கேட்கக் கேட்க சலிக்கவில்லை.

  • @cholansangam2557
    @cholansangam2557 2 ปีที่แล้ว +8

    வைரமுத்துவின் மகுடத்தில் ஒரு மாணிக்கக் கல்.
    தாய்மையைப் போற்றும் அற்புதமான ஆழமான வரிகள்.
    கவிப்பேரரசுக்கு கோடான கோடி வணக்கமும் நன்றியும்….

  • @murugeshwari.m8665
    @murugeshwari.m8665 2 ปีที่แล้ว +2

    வறுமையில நாம பட்ட
    வலி தாங்க மாட்டாம,
    பேனாவை நான் எடுத்தேன்
    பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன் ! என்ற நான்கு அடிகளில் நீங்கள் சிறு வயதில் பட்ட கஷ்டம், அதைக் கடக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள், அயராத உழைப்பு,அதே நேரத்தில் நீங்கள் செம்மொழியாம் தமிழ் மொழியின் மீது கொண்ட அதீத அன்பு,பற்று என அனைத்தும் இப்பாட்டில் சங்கமித்து எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் அழகான மெல்லிசையில் தாயின் மகத்துவத்தை கண்முன்னே நிறுத்துகிறது .

  • @fathimabegum6841
    @fathimabegum6841 2 ปีที่แล้ว +7

    எஸ் பி பி குரல் வைரமுத்து அவர்களின் விரல் இந்த இரண்டும்
    உலகை ஆச்சரியப்படுத்திய அதிசம்

  • @vanakampa9222
    @vanakampa9222 2 ปีที่แล้ว +7

    நான் எங்க அம்மாவ நெனச்சு அழுதுட்டேன்....இந்த வரிகளை என் அம்மாவுக்கு காணிக்கை செய்கிறேன்
    நன்றி வைரமுத்து அய்யா

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 2 ปีที่แล้ว +5

    அம்மா
    என்ற சொல்லுக்கு
    என்ன வலிமை
    என்பதை சொல்லும் கவிதை இது
    அம்மாக்களை மதிக்க வைக்கும் விதை இது
    தாமதமான கவிதை
    எனினும்
    தாய்க்கு அஞ்சலி செய்துவிட்ட முழுமை இந்த கவிதை

  • @bhoopathiraja9797
    @bhoopathiraja9797 2 ปีที่แล้ว +5

    பாசமுள்ள வேளையில காசுபணம் சேரலையே
    காசுவந்த வேளையில பாசம்வந்து சேரலையே …சிக்கல் நிறைந்த மனிதஉறவின் நெகிழ்வு இப்பாடலில்.வெல்டன் வைரமுத்து.

  • @jothirathinam1056
    @jothirathinam1056 2 ปีที่แล้ว +5

    என்ன சொல்வேன் எப்படிச் சொல்வேன் வறுமையின் பிடியில் நான் இருந்திருந்தால் இருக்கி இருப்பேன் மற்றொருவர் கழுத்தை ஆனால்,அச்சூழலை எனக்கு வர விடாது என்னைக் கட்டிக்காத்தாள் என்னைக் கட்டியவள். தாயோர் பக்கம் காத்திட, தந்தையோர் பக்கம் பார்த்திட, செந்தாமரைத் தேனைக் குடித்து விட்டு வண்டானது சிறகசைத்துப் பறப்பது போல நானும் பறக்கின்றேன்.தாங்கள் பிரபஞ்சத்தைப் பிய்த்தெறிய பேனாவைக் கையில் எடுத்தீர்.நானோ பிரபஞ்சத்தை மாற்றி அமைத்திட அந்தப் பேனாவால் எழுதக்கூடிய வருங்கால சந்ததிகளை உருவாக்கும் ஆசிரியப் பணிக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன் கவிஞரே.

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 2 ปีที่แล้ว +4

    அங்கம்மா தாயே
    ஒத்தவரி எழுதலைன்னு தங்க பிள்ளை மனம் வருந்தி
    காலம் தாழ்த்தி எழுதினாலும்
    ஞாலமெலாம் உன் புகழை ஒத்த பாட்டில்
    ஒலகம் பரவ விட்டார் அம்மா

  • @starboyra8041
    @starboyra8041 2 ปีที่แล้ว +7

    ஒரு முழு சினிமாவ பாத்ததுபோல இந்தப் பாட்டு இருக்கு.வைரமுத்து சாரோட வரிகளைப் புரிஞ்சு காந்திகிருஷ்ணா நல்லா டைரக்ட் பண்ணியிருக்காரு.எஸ்.பி.பி..உருக்கம் .அவரை நெனச்சு அழுவதா பாட்டைக் கேட்டு அழுவதா

  • @ganapathyjanakiraman6868
    @ganapathyjanakiraman6868 2 ปีที่แล้ว +1

    இப்பாடல் வரிகளையோ காட்சிகளையோ தனித்தனியாக பார்த்தாலே நெஞ்சு கனத்துவிடும், இரண்டையும் சேர்த்து பார்க்க... அப்பப்பா... கல் நெஞ்சுதான் வேண்டும்!!

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 2 ปีที่แล้ว +7

    இன்று அன்னையர் தினமா ?
    இல்லையே
    ஆனாலும்
    பூமி எங்கும் பரவியுள்ள அத்தனை தமிழனும்
    அவனவன் தாயை நினைக்க வைத்து கலங்க விட்டீர் அய்யா
    உன் தமிழும் தாயும் ஒன்று
    இரண்டும் அன்பின் பலத்தால் வென்று
    மனதை பிசையவைக்கிறதே

  • @vinothkannan7230
    @vinothkannan7230 2 ปีที่แล้ว +5

    Wow Vairamuthu and SPB….Super Combination from Ponmaalaippozhuthu and Panivizhum Malarvanam and Kadhaley en Kaadhale etc…etc …so many Songs.

  • @நா.தேன்நிலவன்
    @நா.தேன்நிலவன் 2 ปีที่แล้ว +10

    அன்புள்ள;
    அய்யாவுக்கு...
    எனது அன்பான வணக்கம்!
    இது அன்னைக்கு மகன் பாடும் தாலாட்டு !
    அதை கேட்டு கேட்டு எங்கள் வாழ்வே பரிபூரணமாகட்டும்.
    நன்றி!

  • @cmrpandian
    @cmrpandian 2 ปีที่แล้ว +10

    நகரத்தில் பிறந்து வாழும் மக்களுக்கு,
    ஒரு கிராமத்து தாயின் வாசத்தை உணர்த்தும் வரிகள்
    ❤️❤️❤️🙏🏻

  • @saravana3061987
    @saravana3061987 2 ปีที่แล้ว +8

    பாசம் உள்ள வேளையிலே
    காசு பணம் கூடலையே!
    காசு வந்த வேளையிலே
    பாசம் வந்து சேரலையே!

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 2 ปีที่แล้ว +3

    ஆத்தா அங்கம்மா
    ஒத்த வரி எழுதலனு
    தாமதமா எழுதினாலும்
    உம்புள்ள
    தாய் காவியம் படைச்சிட்டாரு தாயே
    போதுமம்மா உன் பொறப்பு
    இடுப்பு வலி பொறுத்தவரே
    முத்து புள்ள பொறந்ததும்மா
    நிம்மதியா நீ உறங்கு
    உன் மொழியில் வாழ்த்திவிடு
    வைரமா ஜொலிக்கும் உன் பிள்ளையை
    உம்புள்ள
    உன்னை உசரத்தில் வச்சாரு
    ஊர் புகழ வச்சாரு
    காவியம் படைச்சாரு
    உன்னை உலகில் நிலை கொள்ள வச்சாரு
    அங்கம்மா காவியம் எழுதிட்டாரு
    எங்கம்மானு அவனவனை அழ வச்சிட்டாரூ

  • @baskarv4195
    @baskarv4195 2 ปีที่แล้ว +4

    மற்ற பாடல்களின் உணர்ச்சிகள் ஊட்டப்பட்டவை/இளநீர் கண்திறந்தார்போல இந்தப் பாடலின் உணர்ச்சிகள் இதயத்திலிருந்து பீரிட்டு கண்களை நிறைந்தவை/பெருந்தளத்துக்கு இந்தப்பாடல் நகர்த்தப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி/

  • @swethaswetha5216
    @swethaswetha5216 2 ปีที่แล้ว +12

    SPB voice + vairamuthu lyrics ❣️❣️❣️❣️ nice cinematography 🔥

  • @lovechaneel3242
    @lovechaneel3242 2 ปีที่แล้ว +4

    என் நண்பன் சார்லஸ் நடிப்பு அருமை

  • @தமிழ்வணக்கம்-ய4வ
    @தமிழ்வணக்கம்-ய4வ 2 ปีที่แล้ว +3

    வைரமுத்து சாரோட இந்தக் கவிதையை என் 6 வயசு குழந்தை அப்படியே மனப்பாடமா சொல்லும்..இப்ப SPB குரல்ல பாட்டாவும் கேக்க ரொம்ப நல்லாருக்கு.குழந்தைங்களுக்கு இப்ப இந்த மாதிரி பாட்டுதான் இப்ப வேணும். புரியாத வார்த்தையில இப்ப வர்ற புதுப் பாட்டையெல்லாம் கேக்க கேக்க பயமாயிருக்கு….கவலையாயிருக்கு.

  • @ramanujans.v.7828
    @ramanujans.v.7828 2 ปีที่แล้ว +1

    அழுதேன்! அழுதேன்! அழுது கொண்டே இருக்கின்றேன்!
    வறண்ட மனமும், வண்டல் மண்ணும் பெறற்கரிய பெற்றோர் ஆகினரோ?
    உனக்கொன்னு ஆனதுனா, எனக்கு வேற தாய் யாருமில்லை! இந்த உண்மை தான் நாட்படு தேறல் ஆகின்றது!
    கவிப் பேரரசு அவர்களே, இன்னும் எத்தனைத் தேறல்கள் உண்டோ, அவை அத்தனையையும் உலகம்வாழ் தமிழர்களுக்கு பத்திரம் செய்து தாரும் ஐயா! நாங்கள் பத்திரமாக, பாதுகாப்பாக இனியாவது தமிழ்த்தொண்டு ஆற்றிக் காத்து வைப்போம்!
    மிக்க நன்றியும் வணக்கமும்!

  • @manoraju7193
    @manoraju7193 2 ปีที่แล้ว +2

    அண்ணனுக்கு வணக்கம்
    ஆயிரம் தான் கவி சொன்னேன் பாடல் பெற்ற தாயின் சிறப்புப் பற்றி கவிப்பேரரசு மிக அழகாகப் படைத்துள்ளார் . தாயின் நிலை கவிஞரின் மனநிலை இடையில் தந்தையின் குணம் என ஒரு கவிதையின் சில வரிகளில் 5 மணித்துளிகளில் திரைப்படமாக்கித் தந்துள்ளார் . தாயின் பெருமை பற்றிக் கூறும் பொழுது ஒவ்வொரு வரியும் வார்த்தையும் உண்மையைக் கூறியள்ளது அருமையிலும் அருமை . கவிப்பேரரசு அவர்களுடன் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக உடன் பயணிக்கும் நான் அந்த உணர்வுகளை உண்மை என்று கூற தகுதியானவன் . கவிப்பேரரசு அவர்களின் தாயினது உணர்வுடன் கூடிய சமையலை உணவை பல நாட்கள் நானும் சாப்பிட்டுள்ளேன் . அதனால் தான் நானும் ஒரு மகன் என்ற உணர்வினால் உந்தப்பட்டு இப்பாடல் வரிகளாலும் காட்சியாலும் கண்ணில் நீர் தாரை தாரையாக வழிய பார்த்துக் கொண்டு இருந்தேன் . மன அழுத்தம் கூடியது என்னால் அதிலிருந்து மீள இயலவில்லை .
    இப்பாடலில் இனியவன் இசையுடன் மறைந்த நம் அன்புக்குரிய எஸ் பி பி அவர்களின் உணர்ச்சி கூடிய குரலும் காட்சியில் வந்து செல்லும் அனைவரின் நடிப்பும் அதிலும் வேல ராமமூர்த்தியின் அசத்தலான நடிப்பும் காட்சிப் படுத்திய விதமும் மகிழ்ந்து பாராட்டத்தக்கது . அண்ணன்
    கவிப்பேரரசு அவர்களின் வரிகளின் தாக்கம் பல நாட்களுக்கு என் நெஞ்சில் நிறைந்திருக்கும் .
    என்றும் அன்புடன்
    தேவாரம் முனைவர் இரா.மனோகரன்
    சின்னமனூர் .

  • @ulaathecocktail555
    @ulaathecocktail555 2 ปีที่แล้ว

    எழுதிய கவிதைக்கு, மெட்டு அமைத்த விதம் அருமை. தன் குரலினால் உயிர் கொடுத்த SPB அருமை. வைரமுத்து அவர்களே..... நீங்கள் என்றும் அருமை

  • @sundarimurugan5248
    @sundarimurugan5248 2 ปีที่แล้ว +1

    எனக்கொண்ணு ஆனதுன்னா , உனக்கு வேற பிள்ளை உண்டு, உனக்கேதும் ஆனதுன்னா எனக்கு வேற தாயிருக்கா? என்னும் வரிகளில் என் இதயம் கனத்து, கண்கள் குழமாகின. ஆம் 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என் தாயை நான் இழந்து. தாயில்லா என்போன்ற பிள்ளைகளுக்குத் தான் தெரியும் அவளின் உண்மையான அன்பு. பாடல் அருமை. விமர்சிக்க வயதில்லை. வணங்குகிறேன் தங்களின் புலமையை.

  • @Suriyamanikandan19956
    @Suriyamanikandan19956 2 ปีที่แล้ว +5

    ஒத்த வரி சொல்லவில்லை என்று கூறிய கவியை; இன்று ஆயிரம் வாய்கள் பாடிக் கொண்டு இருக்கிறது.......😭😭😭😭
    🔥🔥🔥உங்களுடைய வரியும்,
    SPB sir குரலும் பூவோடு சேர்ந்த நாராய் மணக்கிறது....😍😍😍😍😍
    கா.சூரியா
    உதவிப் பேராசிரியர்,
    திருச்சிராப்பள்ளி.

  • @abinathchandran3953
    @abinathchandran3953 2 ปีที่แล้ว +1

    என் மனசுக்கு புடிச்ச மிக நெருக்கமான கவிதை வரி. நீங்கள் தாயைப் போற்றிய விதம் அற்புதமான வரி மட்டும் இல்ல ஆழமான வரியும் கூட. நம்ம பள்ளியில் பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் பெற்றோர்களை சந்திக்க வேண்டிய சூழல். அப்ப அந்த நிகழ்ச்சியில் தங்களுடைய பாடலை ஒளிபரப்பு செய்தேன். அப்பொழுது பெற்றோர்களின் உணர்ச்சியைப் பார்த்து என் கண்கள் கலங்கியது. எத்தனை எத்தனை கதறல்கள். கண்கலங்கிய தாய்மார்கள் ஒன்றல்ல இரண்டல்ல. ஐயா நானும் ஒரு தாய்க்கு மகன் என்ற உணர்வு இப்பாடலின் வரிகளினாலும், காட்சிகளினாலும் எனது கண்ணில் நீர் தாரை தாரையாக வழிந்தோட பார்த்துக்கொண்டிருந்தேன்."எனக்கொன்னு ஆனதுன்னா
    உனக்கு வேறு பிள்ளை உண்டு
    உனக்கு ஒன்னு ஆனதுன்னா
    எனக்கு வேற தாய் இருக்கா?"எனது தாயார் மறைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டது. இக்கவிதை கேட்டு இன்றும் என் மனம் பதறுகிறது. தாயில்லாத என்னைப் போன்ற கோடிக்கணக்கான பிள்ளைகளின் வலிகளையும் வேதனைகளையும் தாங்கள் சொல்லிய விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது ஐயா.

  • @ravikumarb3569
    @ravikumarb3569 2 ปีที่แล้ว +3

    தாய்மை இருக்கும்வரை இந்தப் பாடல் காற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும்.

  • @inavihsnehru7821
    @inavihsnehru7821 2 ปีที่แล้ว

    நெஞ்சு கணக்கிறது கவிஞரே..
    உன் வரிகளும் அதனை SPBயின் குரலில் கேட்பதும்..
    சாகாவரம் ஒன்று உண்மையானால்..
    அது கட்டாயம் உமக்கு தான்

  • @manathin_kirukalgal
    @manathin_kirukalgal 2 ปีที่แล้ว +9

    உன் எழுதுகோல் கதறியதில் என் கண்கள் கலங்குகிறது கவிஞர் அய்யா...

  • @varadharajan.m1969
    @varadharajan.m1969 2 ปีที่แล้ว

    பாட்டோட ஒவ்வொரு வரியும் வந்து அப்படியே மனதை உலுக்குகிறது ஒவ்வொரு இடத்திலும் பொருத்தவரை அப்படியே வாழ்க்கையே வாழ்ந்து அனுபவித்த வரிகளைக் கொண்டு எஸ்பிபி ஐயா குறலின் மூலம் மிகவும் அருமையாக அனைவரையும் நெகிழ வைத்துள்ளது தொடரட்டும் உங்களது தமிழ் பயணம் இதனை போல் மேலும் நிறைய எழுதுங்க அதிகமாக நாங்க அதனை வாசிக்க வேண்டும் கேட்க வேண்டும்

  • @Ramkumaran2017
    @Ramkumaran2017 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களது பாடல் வரிகள் நெஞ்சை பிளந்து
    நெடுந்தூரம் செல்லுது
    நெடுஞ்சாலை கடக்கும் போதெல்லாம்
    நினைப்பதான் கசக்குது
    நெத்தியில வகுடெடுத்ததில்ல
    நெல்லு சோறு உண்ணதில்ல
    ஆனா
    நித்தமும் உன் நினைப்பு
    நித்திரையில கொல்லுதம்மா
    அனைவரது அம்மாவுக்கும்
    சமர்ப்பணம்
    இப்படிக்கு
    இயற்பியல் துறை ஆசிரியர்
    குயின் மீரா சர்வதேச பள்ளி.

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 2 ปีที่แล้ว +2

    இரண்டு உலக அழகிகளுக்கு கவிதை படைத்தவர் உங்க மகன்
    தாயே
    உங்களை யும் அழகியாக்கி இருக்கிறார்
    இந்த கவிதையில்

  • @rollickingragha1483
    @rollickingragha1483 2 ปีที่แล้ว +1

    உம்மொழி அழகா,
    உம்மொழி வழி வந்ததால் கவி அழகா,
    ஊனும் உறைந்ததையா வலி மறந்து...
    ஊற்றாய் உம் எழுத்தினுடே,
    உரசிய வளியும் தன்னிலை மறக்குதையா...
    உம் ஒவ்வொரு வரிக்கும் வசந்த நினைவுகள் இமை நீரோடு நெருடி செல்லுதையா...
    சுபராகவி ரவி,
    உதவிப் பேராசிரியர்,
    திருச்சி.
    (பேராசிரியர் குபேந்திரன் குழு)

  • @SelvamSelvam-cs4hz
    @SelvamSelvam-cs4hz 2 ปีที่แล้ว +2

    இதை கவிதையாக வாசித்த போதே அழுது கண்கள் குளமானது இன்னும் இதை எஸ். பி அவர்களின் குரலில் பாடலாக கேட்ட போது கண்கள் கடலானது வாழ்க தமிழ் வளர்க உன் புகழ் 👌👌👌👌👌👌

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 2 ปีที่แล้ว +4

    மேடையிலே
    தாய் பற்றி கவி பாடி நீர் கலங்க
    மேடைக்கு கீழே அவரவர் தாய் பற்றி நினைக்க வைத்தீர்
    அதெல்லாம் பெரிதல்ல
    என் உயிர் கலைஞரே
    தன் அன்னை அஞ்சுகத்தம்மாவை
    நினைத்து மௌனமாக ஆழமான சிந்தனையில் அமரந்து உறைந்து போன காட்சியை நான் கண்டேன்

  • @ranjithgkumar4097
    @ranjithgkumar4097 2 ปีที่แล้ว +1

    கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம் !
    தாயின் தாலாட்டாக இக்கவிதையை பாடலாகப் படைத்துள்ளார் . இன்றைய நாட்படு தேறலின் ஆயிரம் தான் கவி சொன்னேன் என்ற தலைப்பே மாறுபட்டதாக அமைந்துள்ளது . மிகப்பெரிய கவிஞராக இருந்தும்கூட தனது தாயைப்பற்றி ஆழ் மனத்து உணர்வுடன் வரிகளாக்கி அவ்வரிகளை காட்சிப்படுத்திய முறை அக்காட்சிகளின் வாயிலாக நாம் புரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொன்றும் தேர்வு செய்து படைத்துள்ளார் . அவருக்கு நிகர் அவரே தொடர்ந்து நாட்படு தேறல் தொடர் வர வேண்டுமென அன்போடு வாழ்த்துகிறேன் .
    அன்புடன்
    டாக்டர் மா.சேதுராம்
    ஜோதிடர்
    ஜி.ஆர்.டி அறக்கட்டளை
    முதன்மை செயல் அலுவலர்
    சின்னமனூர் .

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil 2 ปีที่แล้ว +4

    பாடும் நிலாவின் குரல்...🌺🌺🌺
    பல்லவியின் வரிகளும் மெட்டும் இனிமை... சுவைத்தேன்
    சரணங்களில் வரிகள் நல்லாயிருக்கு.

  • @kanis2116
    @kanis2116 2 ปีที่แล้ว +5

    வைரமுத்துவோட ஜீவனுள்ள வரிகளுக்கு எஸ்பிபியைத் தவிர வேற யாரையும் நெனச்சுப்பாக்க முடியல. இனியவனும் நல்லா இசையமைச்சுருக்காரு. ரொம்ப காலம் இந்தப் பாட்டு வைரமுத்துங்கிற தமிழனின் பெருமை சொல்லும்.

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 ปีที่แล้ว

    கவிப்பேரரசின் கனிந்த உள்ளம். எஸ் பி பியின் இனிய குரல்.

  • @revathirengarajan2012
    @revathirengarajan2012 2 ปีที่แล้ว +1

    SPB அவர் குரல் துக்கக் கரண்டி கொண்டு உள்ளத்தைக் களிகிண்டி விட்டது.உயிரைப் பிழியும் பாடலில் லழியும் கண்ணீராய் அதில் வழிய விட்ட எண்ணை மிதக்கிறது.குறுக்கே மிதக்கும் இனிப்பு, தாயின் அன்பு.எவ்வளவோ அம்புகள் தாய்க்கு ஏங்கும் வளர்ந்த சேய்களின் இதயங்களில் தைக்க வைக்கும் பாடல்.

  • @selvarajperumal4552
    @selvarajperumal4552 2 ปีที่แล้ว

    திரு வைரமுத்து ஐயா அவர்களே. முதல் இரண்டு வரி பாடலிலே நான் பாடலை நிறுத்தி விட்டு கலங்கி விட்டேன்.
    எனக்கும் இருக்கும் குற்ற உணர்வாள்.
    என் குருவின் குறள் மேலும் என்னை அழ வைத்துவிட்டது😭😭😭
    இன்று அவளும் இல்லை...
    அவரும் இல்லை...
    இந்த பாழை போன கொரோனாவால்.

  • @BTS-YVS7TAMIL429Y3OV
    @BTS-YVS7TAMIL429Y3OV 2 ปีที่แล้ว

    இவர்களைப் போல் வர்ணித்து சொல்ல வார்த்தையும் வயதும் போதவில்லை🥲🥲
    ஆனால் பாடலைக் கேட்கும் போது கண்ணீர் பெருக தொடங்கிவிட்டது💯🥲🥲💜🇮🇳

  • @chidambaranathan2917
    @chidambaranathan2917 2 ปีที่แล้ว +4

    Most Respected Ayya KaviPerarassu, I am unable to Control my Tears , I lost my Mother Last year, We lost a great Legends SPB Sir, Modern living Pattinathar is a Vairamuthu Sir, Ayya You are Great, by Your Well Wisher Dr S Chidambaranathan Assistant Professor and Head Department of Economics Rajapalayam Rajus College Rajapalayam

  • @KAVIKARTHIK_OFFICIAL
    @KAVIKARTHIK_OFFICIAL 2 ปีที่แล้ว +2

    கவிப்பேரரசு தாயிக்கு இதைவிட சிறந்த பரிசு ஏதுமில்லை..... தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் கவிப்பேரரசை பெற்று தந்த அந்த இரு தெய்வங்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏 💐💐💐💐

  • @dhanraj72
    @dhanraj72 2 หลายเดือนก่อน +1

    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    கண்கள் பார்வை
    அடையும்...!
    காதுகள் கேட்க ஆரம்பிக்கும்....!
    இதயம் துடிக்க
    துவங்கும்...!
    மனித பிணங்கள்
    எழுந்து நடக்கும்....!
    சமூக அவலம்
    நெருப்பில் சாகும்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    பாமரன் கவிஞன் ஆவான்....!
    எழுதத் தெரியாதவன் எழுத்தை ஆள்வான்....!
    அறியாமை தீ
    அணைந்து போகும்...!
    அறிவாளியாகி
    அனைத்தும் பெறுவான்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    கடலில் எறிந்தால் மீனாக நீந்துவான்...!
    வானத்தில் எறிந்தால் கழுகாகி பறப்பான்....!
    மண்ணுக்குள் புதைத்தால் விதையாகி முளைப்பான்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    புவி ஈர்ப்பு....
    சக்தி இழக்கும்...!
    எழ முடியாதவனுக்கு
    சிறகு முளைக்கும்....!
    நட்சத்திரங்கள் எல்லாம் இவனை அண்ணாந்து பார்க்கும்...!
    தூரம் -
    நேரமெல்லாம் காணாமல் போகும்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!

  • @t.govindarajutheeko2734
    @t.govindarajutheeko2734 2 ปีที่แล้ว

    கவிதையே பாடலாய் நிகழ்ச்சியில் நேரடியாக எஸ்.பி.பி. பாடியபோது கேட்டேன்.அப்போது ஏற்படாத ஒர் உணர்ச்சி இப்போது அவர் இல்லாதபோது உணரமுடிகிறது ‌.கவிதையின் பாடுபொருள் அம்மா என்பதால் உலகம் உள்ளவரை இப்பாடல் ஒலிக்கும்.அப்பாவுக்குக் கிடைக்காத ஒன்று அம்மாவின் வாழ்நாளில் கிடைத்திருக்கிறது.அம்மா நீங்கள் அதிர்ஷ்டசாலி ‌வைரமுத்து நீங்கள் பெற்ற பிள்ளை.கவிதை உங்கள் பிள்ளை பெற்ற தாய்‌
    கண்கள் பனிக்கின்றன
    கவிப்பேரரசே
    வழிந்தோடிய ஓர் கண்ணீர்துளி
    உங்கள் காலடிதேடி

  • @vpmani5144
    @vpmani5144 2 ปีที่แล้ว

    இக்கவிதை பல ஆண்டுகளுக்கு முன்பு... காமராஜர் அரங்கில் *தலைவர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில் அரங்கேறியது...* அமர இடம் கிடைக்காமல் நின்றுகொண்டே நேரில் பார்த்தேன்.!! ஆம் *கவிதை பாடலாக* என்ற தலைப்பில்...🙏🙏🙏😰😰😰👌👌👌
    அற்புதமான - அறிய கவிதை... அடி மனதை தொட்ட கவிதை... அனைத்து தாய்களுக்கும் அஞ்சலி செலுத்திடும் கவிதை... "கவிப்பேரரசர்" அவர்களைப்போல பலருக்கு இன்றும் பொருந்தும் கவிதை🙏🙏🙏🙏🙏 3 முறை கண்ணீருடன் கேட்டு... 21 வணிக - கழக முக்கிய குழுக்களுக்கும் அனுப்பி - மன ஆறுதலும் பெற்றேன்.!!! 🙏🙏🙏⚖️⚖️⚖️👍👍👍எந்நாளும் பணிவுடன் கவிப்பேரரசர் அவர்களை வணங்கி மகிழும் - அன்பு இளவல்... சேப்பாக்கம் V.P.மணி மாநில கூடுதல் செயலாளர் - பேரமைப்பு💐💐💐⏰⏰⏰🤝🤝🤝

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 9 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பு உச்ச வரிகள் பேரரசே நடிப்பு இசை spb காந்த குரல் யாவும் உச்சம்

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 2 ปีที่แล้ว +3

    உன் எழுத்தின் அதிர்வு
    இன்னும் என்னை அடிக்குதய்யா
    உன் தாய்க்கான கவிதையிலே
    என் தாயிடம் மன்னிப்பை
    உலகறிய கேட்டுவிட்டேன்
    மனப்பாரம் குறைந்தது
    உன்னால் எனக்கு தீர்ந்தது

  • @dhakshinamoorthiarumugam3888
    @dhakshinamoorthiarumugam3888 2 ปีที่แล้ว +1

    அம்மாவைப் பற்றி நம் பெருங் கவிஞர் எழுதிய என்றைக்கும் வாழும் புகழ்மிக்க கவிதை, நாட்படு தேறலின் இரண்டாம் பாகத்தின் இரண்டாம் பாடலாக இடம்பெற்றுள்ளது.
    இக்கவிதையை பலமுறை வாசித்த போதும், கேட்ட போதும் ஏற்பட்ட பாசத்தையும், விட்ட கண்ணீரைம் விட இப்போது நமது பாடும் நிலா பாலு ஐயா அவர்களின் குரலில் கேட்கும் போது உணர்ச்சி மென்மேலும் பெருக்கெடுத்து, கண்ணீர் வழிந்து ஓடிக் கொண்டே உள்ளது. நிற்க மறுக்கிறது.
    இப் பாடலான கவிதையில், கவிஞர் அவர்கள் அன்பு அதிசயம் அம்மாவின் அளவில்லாத அன்பையும்,
    தனது ஏக்கத்தையும், அதே சமயத்தில் தனது தந்தை மேல் உள்ள தகுதியான சிறு வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்கள்.
    வழக்கம்போல் இப்பாடலிலும் தமிழ் பெருங் கவிஞர் கீழ்க்கண்ட ஒரு வாழ்வியல் நிகழ்வை தத்துவமாக எழுதியுள்ளார்:
    "பாசம் உள்ள வேளையிலே காசு பணம் கூடலையே
    காசு வந்த வேளையிலே பாசம் வந்து சேரலையே"

    இத்தருணத்தில் நமக்கு பொன்மாலைப்பொழுது மட்டுமல்ல முப்பொழுதும் கேட்கும் முத்தான பாடல்களை அளித்த எஸ்பிபி ஐயா அவர்கள் இப்பாடல் மூலம் மீண்டும் நம்மிடையே காற்றாக, கானமாக உள்ளார் என்பதை உணர்கிறேன்!
    எப்போதும் ஐயா அவர்கள் நம்மோடு இருப்பார். அவருக்கு எனது வணக்கங்கள்! அஞ்சலிகள்!
    இனிமையான இசைக்கோர்ப்பு செய்த இனியவன் அவர்களுக்கும், உயிர்ப்போடு இயக்கிய காந்தி கிருஷ்ணா அவர்களுக்கும், பங்களிப்பை வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும்
    இதயத்து நன்றிகள்! பாராட்டுக்கள்!
    தன் சுயசரிதையை ரத்தினச் சுருக்கமாக நம் நெஞ்சுக்கு நெருக்கமாக இப்பாடலில் எழுதியுள்ள நம் கவிஞர் அவர்களுக்கு நன்றிகள்!
    இனமான வணக்கங்கள்!
    பிரியமுடன்:
    ஆ.தட்சிணாமூர்த்தி
    தெற்கு ரயில்வே

  • @kalpanakarthiksomasekar1998
    @kalpanakarthiksomasekar1998 2 ปีที่แล้ว +1

    தொப்புள் கொடி உறவை ஒரு மூன்று நிமிட தாலாட்டில் விருந்தளித்து எங்க விழிகளில் சோகத்தை வரவழைத்த கவிஞரே! பாட்டு முடிவதற்குள் அம்மாவுக்கு ஒன்றும் ஆகீருக்கக்க கூடாது என்ற எங்கள் படபடப்பை புரிந்து கொண்டு அம்மாவின் உயிரை வரவழைத்த கவிஞரே! கோடி நன்றிகள் ! பலமுறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்க மனசு ஆசை படுகிறது!

  • @veerapashianv6365
    @veerapashianv6365 2 ปีที่แล้ว

    இந்த வரிகளை ஐயா உங்கள் குரலில் கேட்டேன். கண்ணீரில்.
    "அகிலமும் அரைநொடி நிற்குடி
    ஆண்டவனும் நாணம் கொள்வான்
    நான் அழுக நீ சிரிக்க
    அந்த நொடி அமைத்தேனென்று..
    மேனியின் அழகு பார்க்கும் பெண்மைக்குள்.....
    நான் தந்த தழும்புகளை
    என் பிள்ளை வடித்த ஓவியம் என்பவள் ...தாய் !!!!"
    வரிகளுக்குள் வர்ணிக்க முடியாத அழகி அவள்....தாய் ....
    நன்றி ஐயா..!!

  • @praveenarajan4805
    @praveenarajan4805 2 ปีที่แล้ว +1

    தாயின் மகத்துவம் ஒவ்வொரு வரியிலும். SP பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளது. உயிரை உருக்கும் உன்னத பாடல்❤♥️♥️

  • @fathimashibra1200
    @fathimashibra1200 2 ปีที่แล้ว

    எழுதவோ படிக்கவோ தெரியாத தாய் பத்தி எழுதி என்ன இலாபமுனு எழுதாம போனேனோ......... 😞 நைஸ் lyrics

  • @ramvels183
    @ramvels183 2 ปีที่แล้ว

    உன் பாட்டால் இன்று அன்னையர் தினமே சிறப்பு பெற்றது..

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 2 ปีที่แล้ว +3

    எனக்கொன்னு ஆனதுன்னா
    உனக்கு வேறு பிள்ளை உண்டு
    உனக்கு ஒன்னு ஆனதுன்னா
    எனக்கு வேற தாய் இருக்கா ?
    எங்கம்மா மறைந்து 15ஆண்டு கடந்து போச்சு
    இந்த கவிதை கேட்டு
    என் மனது இன்றைக்கும் பதறுது உடையுது
    உன் தாய்மீது நீ வைத்த தமிழும்
    எனை பார்த்து
    உமிழுது
    செய்த பிழைகளை எண்ணி எண்ணி அழறேன்
    பிழைதான் அறியாது செய்த பிழைதான்
    கோபம் அடக்கதெரியாது வார்த்தைகளால் திட்டி விட்டேன்
    ஆனாலும் என்னை அவர் ஒரு நொடியும் வெறுக்கவில்லை
    என்னைத்தான் மிகவும் பிடிக்கும்
    அவர் மனதை அடிக்கடி புண்படுத்தியதை எண்ணி எண்ணி அழறேன்
    உன் தமிழின் வலிமை எங்க தாயின் உயர்வை நினைத்து கண் கலங்க வைக்கிறது
    மனம் கதற வைக்குது
    என்றைக்குமே
    என் பிழையை
    பெரிதாக எடுத்ததில்லை
    என் அம்மா
    அதனால்தான் மனது
    ரொம்ப ரொம்ப வலிக்குதய்யா

  • @raana4087
    @raana4087 2 ปีที่แล้ว +1

    தாய் அன்பிற்கு ஈடு இணையே இல்ல😘

  • @aarthisenthil4531
    @aarthisenthil4531 2 ปีที่แล้ว +2

    அழகாய் அமைந்து இதயத்தை உருக்கும் வரிகள் SPB அய்யாவின் குரல் ஏதோ செய்கிறது என் உள்ளார் 😍😍😍😍

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 9 หลายเดือนก่อน

    சகோதரி மேகா ஶ்ரீ நடிப்பு பிரமாதம் தனி வகை

  • @kadiravan5352
    @kadiravan5352 2 ปีที่แล้ว +2

    கண்ணீர் வரவைக்கும் வரிகளும் குரலும் தமிழ் நாட்டின் பொக்கிஷங்கள் lவைரமுத்து அவர்களும் SPB அவர்களும்

  • @ELSIGA
    @ELSIGA 2 ปีที่แล้ว +1

    பாடலின் கடைசி வரி....அனைத்து மனிதர்களுக்கு மட்டுமல்ல...அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது...விரல் பேரரசும்(வைரமுத்து) குரல் பேரரசும் (SPB) இணைந்தாலே ....உயிரை உருக்கி விடுகிறார்கள்

  • @pushpanandhini270
    @pushpanandhini270 2 ปีที่แล้ว

    அழகான வரிகள் தாய் பற்றி மனம் நெகிழ வைத்தன.வறுமையின் வழி தாங்க முடியல எண்ணும் வரி மனிதனின் பாசம் இடையிலான தாயின் பாசம்... உயர்ந்தது என சூட்டி காட்டியுள்ளது. வாழ்க தமிழ்.... வளர்க தமிழ்...

  • @prabuthangam6123
    @prabuthangam6123 2 ปีที่แล้ว +1

    ஆயிரம் தான் கவிச் சாென்னேன் கவிதையின் நாங்கள் ரசிக்கும் வரி
    "பாென்னையாத்தேவன் பெத்த பாென்னே குல மகளே என்னை புறம் தள்ள இடுப்பு வலி பாெறுத்தவளே "
    எங்கள் இல்லத்தில் அடிக்கடி உச்சரிக்கும் வரி
    அந்த வரி நாட்படு தேறல் பாடலில் இல்லாதது சிறு வருத்தம்....

  • @sujaskli
    @sujaskli 2 ปีที่แล้ว

    கலைஞர் முன்னே கண்ணீர்துளி கொண்டு தந்த கவிதை, இன்றும் என் கண்ணில் நீர் தரும். கண்ணீர் ஊற்றை அதிகரிக்க வசிகரக்குரல் SPB அவர்கள் மண்ணின் மனம் மனதில் கலக்கும். வாழ்க அவர் புகழ்.

  • @jeyamrejeyam7058
    @jeyamrejeyam7058 2 ปีที่แล้ว +1

    தாய்ப்பாசம் சொல்லிய கவியை பாடலாக்கியமைக்கு மிக்க நன்றி. (அதுவும் Spb குரலில்)

  • @thangarajnkl8252
    @thangarajnkl8252 2 ปีที่แล้ว

    கவிஞரே, அன்னையர் தினத்தன்று, அன்னையர் புகழ் பாடி எங்களை அழ வைத்து பாக்குறீங்களே. நியாயமா 🙏, தங்கராஜ் நாமக்கல்

  • @endrumengalspb3646
    @endrumengalspb3646 2 ปีที่แล้ว

    இறைவன் மிக மிக கொடியவன்... இன்னும் கொஞ்சம் நாள் நாங்கள் உயிரோடு இருக்கும் வரையில் நீங்கள் இருந்திருக்கலாம்....😭😭😭

  • @chandranchandru1139
    @chandranchandru1139 2 ปีที่แล้ว

    எத்தனை முறை கேட்டாலும் மனம் சலிக்காத உணர்வை தொடுகின்ற வரிகள்.
    ஒரு முறை நான் கேட்டேன்
    ஆனால் ஓயாமல் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னேரமும்.
    என்ன தான் அப்பா கோபப் பட்டாலும் எப்பொழுதும் அம்மாவின் பாசத்தை கவிதையில் பார்க்கும்போது மனதுக்குள் கண்ணீர் மழை பொழிகிறது அம்மாவிற்கான பாச மேகங்கள் என் உணர்வோடு உரசும் போது.‌

  • @sriguna5506
    @sriguna5506 2 ปีที่แล้ว +5

    நாட்படு தேடல் 100 பாடல்களின்
    நாடித் துடிப்பு, இப்பாடல்.....
    வைரவரிகளுக்கு, வைரகுரலோனும்,
    ஒளிப்பதிவும், அழகோ அழகு.....
    தாங்களே நடித்திருந்தால் இன்னும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்....
    வடுகபட்டியானாக உங்களோடு நான்...
    பெரியகுளம் குணா,

  • @endrumengalspb3646
    @endrumengalspb3646 2 ปีที่แล้ว +2

    அவரின் ஒவ்வொரு பாடலும் அழவைத்துக் கொண்டு இருக்கிறது.. கண்ணீரோடு தான் கேட்கிறேன்...😭😭😭😭

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 ปีที่แล้ว

    ❤️❤️😭😭😭 என் தந்தை தாய் நினைவுகள் ❤️❤️🙏😎 என்னவர் நினைவுகள் ❤️❤️😎🙏

  • @ahaan4937
    @ahaan4937 2 ปีที่แล้ว +1

    இந்த பாடலை நம் பாலு அய்யாவை தவிர உயிரோட்டமாக பாட யாரால் முடியும் 🤷‍♀ miss you spp sir 🙏

  • @oviyaguru2781
    @oviyaguru2781 2 ปีที่แล้ว

    ஆயிரம்தான் கவி சொன்னேன் பாடல் கண்டு கேட்டு ரசித்தேன்.பப்பாளிக்காய் நகம் பட்டவுடன் பால் வடிப்பது மாதிரி இந்த பாடல் கேட்கும் எல்லோர் மனதிலும் அவரவது தாயின் நினைவுகள் கண்டிப்பாக வந்து செல்லும்.அதுவே இந்தப் பாடலின் வெற்றிக்கு சாட்சி.SPB இல்லை என்பது பௌதிக உண்மை.ஆனால் இந்த பாடலின் மூலம் மனிதர்கள் உள்ளமட்டும் என்றும் வாழ்வார் என்பது கலை உண்மை.இசையமைத்த இனியவன் என்றும் நம்மோடு இருப்பார்.

  • @sujithsujith3175
    @sujithsujith3175 2 ปีที่แล้ว

    இந்த எழுலகில் இவர் கை பிடித்தும் இவ்வுலகம் காணும் முதல் விரல் அப்பா அம்மா

  • @chittikuruvi3773
    @chittikuruvi3773 2 ปีที่แล้ว

    Amma song is always special... Vairamuthu did well... Intha Chinmay kita moodinu irunthurukalam

  • @TheDEX009
    @TheDEX009 2 ปีที่แล้ว +2

    விடிய விடிய தளை பிரித்து திருவள்ளுவரிடம் தோற்றுப் போனது...இதுவரை நானில் படித்தது...இப்போது காட்சி வடிவில்🖤

  • @sharmilashanmugam6249
    @sharmilashanmugam6249 2 ปีที่แล้ว

    முதலிலும், முடிவிலும்
    உன் நினைவு சுமக்கும்
    நான்..!
    இடைப்பட்ட காலங்களில்,
    நிற்கிறேன்...
    விடைதெரியாத விடுகதைக்கு
    அம்மா...!

  • @saravanapandiyan3172
    @saravanapandiyan3172 2 ปีที่แล้ว

    இந்த வரிகள் உங்கள் குரலில் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கும்

  • @ganeshane6699
    @ganeshane6699 2 ปีที่แล้ว

    கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது
    உன் வரிகளில் இணைந்த குரல் என்னை ஆட்கொண்டதால் ......

  • @pavaiamuthu5841
    @pavaiamuthu5841 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி வைரமுத்து எழுதிய கவிதைகளின் தொகுப்பு மிக்க நன்றி

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +1

    ஆகா அருமை நல்லவொரு எதார்த்தமான உணர்வுபூர்வமான பாடல் வரிகள்.
    கேட்க்கும் போதே கண் கலங்குது
    மனதில் எதோ கனம் கூடுது. நன்றி. 👌👌👏👏💐💐

  • @kalasrikavidhaigal6151
    @kalasrikavidhaigal6151 2 ปีที่แล้ว +2

    👌👌மிகவும் அருமையான வரிகள்..மேலும் S.P.B அவர்களின் குரலில் இந்த பாடல் உயிர் பெற்றுள்ளது...இசையும் அருமை...பாடல் படமாக்கிய விதமும் அருமை....குழுவிற்கு வாழ்த்துக்கள்..👏👏.திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தால் சூப்பர் ஹிட் 👍பாடலாகியிருக்கும்

  • @alagarmsm9290
    @alagarmsm9290 2 ปีที่แล้ว

    எங்கள் மண்ணின் மைந்தரே கவிப்பேரரசரே உங்கள் பாடல் வரிகள் கேட்டு எங்கள் கண்கள் எல்லாம் குளமானது வராக நதியில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது உங்கள் வராகநதி சொந்தம் அழகர் வடுகபட்டி