திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் | Thirunageswaram Naganatha Swamy | Gopura Darisanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2020
  • #Thirunageswaram_Naganatha_Swamy |#Kumbakonam | #GopuraDarisanam
    திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத்தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும்.
    தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மீ. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. சண்பக மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்தப் பகுதி சண்பகாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்களில் இத்தலமும் அடங்கும்.[1] இத்தலத்தின் அருகில் வைணவத் தலமான திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன்) திருக்கோயிலும் உள்ளது.
    கோயிலானது ஊரின் தென் வடவாக 630 அடியும், கீழ் மேலடி 200 அடியும் கொண்ட பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலை ஒட்டி மட விளாகமும், அடுத்து நான்கு வீதிகளும் உள்ளன. நான்கு திசைகளிலும் நான்கு கோபுர வாயில்கள் அழகிய சிற்பங்களுடன் உள்ளன. கோயில் மதில் சுவர்களை அடுத்து பெரிய பிரகாரம் உள்ளது. வட புறம் பூந்தோட்டம் உள்ளது. கிழக்கு கோபுர வாயிலை அடுத்து விநாயகர் கோயில், பலிபீடம், நந்தி மண்டபம், கொடி மரம் ஆகியவை உள்ளன. தெற்கில் குளம் நான்கு புறமும் பழமையான வவ்வால் இரட்டை மண்டப வடிவில் உள்ளது. வடக்குப் புறத்தில் தேர் வடிவில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. கோயில் நடு கோபுர வாயில் அமைப்புடன் தொடங்குகிறது. கோபுர வாயிலையொட்டி பெரிய பிரகாரமும் அதன் பக்கச்சுவர்களை ஒட்டி திருச்சுற்று மண்டபம் உள்ளது. [2] இறைவனுக்கு அருகில் உள்ளது பிரையணிநுதலாள் சந்நிதி. கிரிகுஜாம்பிகை சந்நிதி, தனிக்கோயிலாக விளங்குகிறது. சுதை உருவம். எனவே அபிஷேகம் கிடையாது. தை மாதத்தில் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது.
    Tirunageswaram Naganathar Temple also known as Rahu Stalam is a Hindu temple dedicated to the deity Shiva, located in Tirunageswaram, a village in the outskirts of Kumbakonam, a town in Tamil Nadu, India. It is significant to the Hindu sect of Saivism as one of the temples associated with the nine planet elements, the Navagraha Stalas, and specifically Rahu. Shiva is worshiped as Naganathar, and is represented by the lingam. His consort Parvati is depicted as Piraisoodi Amman. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Tevaram, written by Tamil saint poets known as the nayanars and classified as Paadal Petra Sthalam.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Enjoy & stay connected with us "Gopura Darisanam"!!!
    👉 Subscribe to : / @gopuradarisanam6506
    👉 Like us on Facebook : / gopuradarisanam
    👉 Follow us on Twitter : / gopuradarisanam
    👉 Follow us on Instagram : / gopuradarisanam
    *******************************************************************************************************
    In association with ALPHA DIGITECH : www.alphadigitech.com/
    TH-cam Channel : bit.ly/2XfmHUt
    Face book: / alphadigitech
    Twitter : / alphadigitech_
    Instagram: / alphadigitechofficial
    LinkedIn: / alpha-digitech---india

ความคิดเห็น • 4

  • @harismani8069
    @harismani8069 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏🙏🙏🙏❤️🙏

  • @jovialakashpattanaik5558
    @jovialakashpattanaik5558 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍🥰🥰❤❤👌👌👌👍👍👍🙏🙏🌹❤ from SAMBALPUR, ODISHA . Language is not a barrier to worship god. I'm unable to understand tamil language but ❤❤ from my ♥.. JAY RAHU DEVA MAHARAJ KI JAY. OM BRHAM BHREEM BHRAUM SHA RAHA BE NAMAH 🙏🙏🙏🙏 JAYA JAYA NAGANATHA SWAMY.. OM NAMAH SHIVAYA 🙏

  • @kgopinathan2148
    @kgopinathan2148 2 ปีที่แล้ว

    Informative. I have to light up a ghee lamp and do a Archani for Raghu, what's the procedure.