4500 மரங்கள் வரப்புகளில் - திரு.கண்ணதாசன், சிவகங்கை | Tree Based Agriculture|
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- 2016 வரை நெல் விவசாயம் மட்டுமே செய்த வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் கொடிசியாவில் நடைபெற்ற ஈஷாவின் விவசாய நிகழ்வில் அறிமுகமாகி, முதன் முறையாக நான்கு மரக்கன்றுகளில் ஆரம்பித்த பயணம், இன்று 4500 மரக் கன்றுகளை வெற்றிகரமாக நடவு செய்து சாதனை படைத்திருக்கிறார்,
திரு.கண்ணதாசன்,
பொன்னாங்கால் கிராமம்,
காளையார்கோயில் (தாலுகா),
சிவகங்கை மாவட்டம்.
2019 ஆம் ஆண்டு ஈஷா காவேரி கூக்குரல் சார்பாக வழங்கிய இலவச ஆலோசனைக்குப்பிறகு, தரிசு நிலத்தினை பொன் விளையும் பூமியாக மாற்றி இருப்பதாக கூறுகிறார்.
1)47 ஏக்கரில், 50 அடிக்கு ஒரு வரப்பு விதமாக பிரித்து, 4500 மரக் கன்றுகளை நடவு செய்துள்ளார்(தேக்கு, செம்மரம், சந்தனம், மருது, இலுப்பை, வேங்கை, மஹோகனி, குமிழ் தேக்கு, மற்றும் பலா)..
3 ஆண்டுகளில் மரம் நன்றாக அரை அடி சுற்றளவில் வளர்ந்துள்ளது. இவை அடுத்த 10 ஆண்டுகளில்(ஒரு மரம், 10 ஆயிரம் எனில்) சுமாராக 4.5 கோடி மதிப்புடையதாக இருக்கும் எனக் கூறுகிறார்..
2)மரங்களுக்கு இடையே கரும்பு சிறப்பான விளைச்சலை கொடுத்துள்ளது. வரப்பு ஓரங்களில் மரங்கள் நட்டதால், குறிப்பிட்ட சீதோசன நிலை காரணமாக
ஏக்கருக்கு 55 டன்(வழக்கமாக 40 டன்) அதிகமாக பெற்றுள்ளார்..
3)மேலும் ஊடுபயிராக கடலை, நெல், உளுந்து(முப்போகம்) பயிரிட்டு, 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்குகி வருகிறார்.
4)ஈஷா வின் விவசாய பயிற்சி வகுப்புகளுக்கு ஒவ்வொரு முறையும் இரண்டு அல்லது மூன்று விவசாயிகளை புதிதாக அறிமுகம் செய்வதோடு, பிற விவசாயிகளுக்கும் வழி காட்டியாக திகழ்கிறார்.
வடகிழக்கு பருவ மலையை மட்டுமே நம்பி இருந்தவர்கள், இன்று முப்போகம் விளையும் பூமியாக மாறி இருப்பதனைக் கண்டு மகிழ்கிறார்...
மேலும் தகவல்களுக்கு 8000980009.
காரைக்குடி ஈஷா நர்சரி - 94425 90034
மதுரை ஈஷா நர்சரி - 94425 90015
#Teak #Redwood #Sandal #Venghai #Sugacane #Peanut #earnmoney #TreeBasedAgriculture #Isha #CauveryCalling
Like us on the Facebook page:
www.facebook.c...