அமிர்தபுரி ஆசிரமத்தில் மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • இருள் மற்றும் அறியாமையின் மீதான வெற்றியைக் குறிக்கும் வகையில், அமிர்தபுரியில் மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. அம்மாவின் தலைமையில் தியானம், சத்சங்கம் மற்றும் பஜனைகளுடன் நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, அவை ஆசிரமவாசிகள், மற்றும் பக்தர்கள் என அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதில் பாரம்பரிய வேத சடங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை சிறப்பம்சங்கள். சிவன் என்பவர் த்வைதவம் , அத்வைதம் போன்ற அனைத்திற்கும் அப்பாற்பட்ட மங்களமானவர் என்று அம்மாவின் செய்தி வலியுறுத்தியது. அம்மா தன்னிச்சையாக ஒரு பாரம்பரிய பழங்குடி பாடலுக்கு நடனமாடி ஆனந்தத்தையும் தெய்வீக அருளையும் வெளிப்படுத்திய போது கொண்டாட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்தது. பக்தி மற்றும் சரணாகதியின் மூலம் மாயையிலிருந்து விடுபட இது போன்ற கொண்டாட்டங்கள் உதவி புரிகின்றன.

ความคิดเห็น • 5