Amritaworld தமிழ்
Amritaworld தமிழ்
  • 177
  • 31 768
வயநாடு நிலச்சரிவு துயரத்தை எதிர்கொள்ள அம்மாவின் ஆதரவூட்டும் செய்தி
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவு குறித்து ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த அம்மா, அனைவரும் சேர்ந்து செயல்புரிவதன் அவசியத்தை வலியுறுத்தினார். கொச்சியில் உள்ள அம்ருதா மருத்துவமனையில் இருந்து, 35 மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துணை மருத்துவர்களைக் கொண்ட குழு பேரிடர் பாதித்த பகுதிக்குச் சென்று உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிநவீன மருத்துவப் பிரிவில் மினி ஆபரேஷன் தியேட்டர், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், எக்கோ கார்டியோகிராம் மற்றும் அதிவேக ஆய்வகம் ஆகியவை அடங்கும். மேப்பாடி கிராமத்தின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியில் உயிர் பிழைத்த சுமார் 1,200 -க்கும் மேற்பட்டவர்கள் இக்குழுவின் இலவச சிகிச்சைகளைப் பெற்றனர்.
இத்தகைய பாராட்டுக்குரிய பணியின் அவசியத்தை எடுத்துரைத்து, கேரள அமைச்சர் பி.ராஜீவ் மருத்துவப் பிரிவை கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்பெட்டாவிலுள்ள அம்ருதகிருபா தொண்டு மருத்துவமனையும் முக்கியமான மருத்துவ உதவிகளை வழங்கியது.
மேலும், வயநாடு ஆசிரமங்கள் மற்றும் ஆசிரமத்தின் இளைஞர் பிரிவான அயுத் கேரளா ஆகியவற்றின் தன்னார்வலர்கள் கொண்ட குழுவுக்கு பிரம்மச்சாரிணி தீக்ஷிதாம்ருத சைதன்யா தலைமை தாங்கினார். அவர் மன உளைச்சலுக்கு ஆளான கிராமவாசிகளை ஒரு தாய் தனது குழந்தைகளை கவனிப்பது போல, அவர்களின் துயரங்களை பொறுமையுடனும், கவனத்துடனும் கேட்டார்.
கேரள அரசின் ஒப்புதலுடன், சூரல்மாலாவில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அயுத் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது. மேப்பாடி பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், இறந்தவர்களை முறையே தகனம் செய்வதற்கும் குழுக்கள் விரைந்தன.
มุมมอง: 25

วีดีโอ

அயுத் ஐரோப்பாவின் 20வது ஆண்டுவிழா
มุมมอง 1223 ชั่วโมงที่ผ่านมา
அயுத் ஐரோப்பா தனது 20வது ஆண்டு விழாவை ஐரோப்பிய இளைஞர் உச்சி மாநாட்டுடன் கொண்டாடியது. 'நாளைக்கான குரல்கள்' என்னும் தலைபில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஜெர்மனியில் உள்ள மையத்தில், ஜூலை 21-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. 20 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அம்ருதா பல்கலைக்கழகத்தின் ‘லிவ்-இன்-லேப்ஸ்’ (Live-in-Labs) உடன் இணைவது இந்நிகழ்வின் ஓர் முக்கிய அம்சமா...
அகமதாபாத்தில் ‘ஆன்மீகத்தின் அறிவியல்' என்னும் தலைப்பில் அயுதியர்களின் கருத்தரங்கம்
มุมมอง 33วันที่ผ่านมา
அகமதாபாத்தில் உள்ள அயுத் உறுப்பினர்கள் 'ஆன்மீகத்தின் அறிவியல்' என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு, நிகழ்காலத்தில் வாழ்வது குறித்தும், ஆன்மீகத்தின் மூலம் வாழ்வின் சவால்களை எதிர்கொள்வது குறித்தும் கற்றனர். கர்ம யோகம் பற்றிய அம்மாவின் உபதேசங்களால் ஈர்க்கப்பட்டு, பங்கேற்பாளர்கள் தன்னலமற்ற சேவையின் முக்கியத்துவத்தை ஆழமாக அறிந்தனர். சனாதன தர்மம் மற்றும் கர்ம யோகத்தின் கொள்கைகளை இக...
மதுரை ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி மடத்தில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமின் சிறப்பம்சங்கள்
มุมมอง 300วันที่ผ่านมา
மதுரை ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி மடத்தில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமின் சிறப்பம்சங்கள்
கேரளா மற்றும் தமிழகத்தில் அம்ருத ஸ்ரீ உறுப்பினர்களுக்கு சேலை விநியோகம்
มุมมอง 9921 วันที่ผ่านมา
கேரளா மற்றும் தமிழகத்தில், #மாதாஅம்ருதானந்தமயிமடம், பெண்களுக்கான சுய உதவி குழுவைச் சேர்ந்த அம்மாவின் அம்ருத ஸ்ரீ உறுப்பினர்களுக்கு இலவச சேலைகளை வழங்கி, வருடாந்திர சேலை விநியோக திட்டத்தை நிறைவு செய்துள்ளது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர், கொ...
அம்மாவின் 2024 வட அமெரிக்க யாத்திரை
มุมมอง 23021 วันที่ผ่านมา
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அம்மாவின் 2024 வட அமெரிக்க யாத்திரை வாஷிங்டனில் உள்ள பெல்லூவில் இரண்டு நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் #அம்மாவை (500) தரிசிக்கத் திரண்டனர். உலக அமைதிக்கான தியானம், சத்சங்கம், பஜனை மற்றும் அம்மாவின் தரிசனம் இந்நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும். கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்தில் தனது விஜயத்தை ஐந்து நாள் நிகழ்ச்சியுடன் அம்மா ...
அம்மாவின் சேவை திட்டங்கள் -ஜூலை 2024 - சிறப்பம்சங்கள்
มุมมอง 14821 วันที่ผ่านมา
ஆன்மிகத்தின் சாராம்சமான அன்பும், கருணையும் எல்லா உயிர்களிடத்தும் உள்ளது என்பதை அம்மா நமக்கு உணர்த்துகிறார். உலகெங்கிலுமுள்ள அம்மாவின் பக்தர்கள் அன்பு மற்றும் சேவையின் புதிய அத்தியாயத்தை உருவாக்கி வருகின்றனர். அம்மாவின் உபதேங்கள் மற்றும் அம்மாவின் முன்மாதிரியான வாழ்க்கையால் அவர்கள் தூண்டப்படுகிறார்கள். ஏழைகளுக்கு உணவு வழங்குவது முதல் அறிவியல் ஆராய்ச்சி வரை பல்வேறு சேவை முயற்சிகள் மாதா அம்ருதானந்...
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அம்ருதபுரி ஆசிரமத்தில் கோபூஜை
มุมมอง 225หลายเดือนก่อน
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அம்ருதபுரி ஆசிரமத்தில் கோபூஜை மிகவும் சிறப்பாக கொண்டாப்பட்டது. இந்நிகழ்வில், ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளும், பக்தர்களும் கோமாதாவாகிய பசுவை பூஜித்து வணங்கினர்.
அம்ருதா மருத்துவமனையில் மருத்துவர்கள் தினவிழா கொண்டாட்டங்கள்.
มุมมอง 42หลายเดือนก่อน
கொச்சியில் உள்ள அம்ருதா மருத்துவமனை, மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் இசை, நடனம் மற்றும் பல்வேறு நிகழ்வுடன் மருத்துவர்கள் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடியது. ஒவ்வொரு நாளும் பிறரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் கோடிக்கணக்கான மருத்துவ நிபுணர்கள், நோயாளிகள் மற்றும் நிறுவனங்களை இந்நிகழ்வானது கௌரவித்தது. இந்த மகிழ்ச்சியான சூழலில், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான மருத்துவமனையின் அர்ப்பணிப்பை ...
நாகர்கோவிலில் அம்ருதா மருத்துவமனையின் இலவச இருதய சிகிச்சை முகாம்
มุมมอง 67หลายเดือนก่อน
#அம்ருதாமருத்துவமனைகொச்சி, ஜெனிசிஸ் (Genesis) அறக்கட்டளை மற்றும் ‘HDFC Ergo’ ஆகியவை இணைந்து, நாகர்கோவில் வளாகத்தில் உள்ள அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாமை நடத்தியது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இதய நோய்களுக்கான கண்டறியும் மதிப்பீடுகளைப் பெற்றனர். இம்முகாமில் பிறவி இதய குறைபாடுகளும் கண்டறியப்பட்டு கவனம் செலுத்தப்பட்டன. அம்ருதா மருத்துவமனையைச் சே...
அம்ருதா மருத்துவமனை நடத்தும் பழங்குடியினருக்கான இலவச மருத்துவ முகாம்
มุมมอง 57หลายเดือนก่อน
கொச்சி #அம்ருதாமருத்துவமனை, (@amritahospitals) சுவாமி விவேகானந்தா மெடிக்கல் மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து, வயநாட்டில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர்க்கு இலவச மருத்துவ முகாமை நடத்தியது. டாக்டர் தனஞ்சய் திவாகர் சாக்டியோ (Dr. Dhananjay Diwakar Sagdeo) அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த முகாமில், பக்கவாதம், வலிப்பு நோய் மற்றும் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுண...
உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு, இரத்த தானம் செய்பவர்களை கௌரவித்த அம்ருதா மருத்துவமனை
มุมมอง 40หลายเดือนก่อน
உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு #அம்ருதாமருத்துவமனை (@amritahospitals) இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கௌரவித்தது. மாற்று மருத்துவத் துறை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வை, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பீனா கே. வி துவக்கி வைத்தார். எர்ணாகுளம் ‘RTO’, திரு கே.மனோஜ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இரத்த தானத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். அம்ருதா விஸ்வ வித்யாபீடம் ...
அம்ருதா மருத்துவமனை சிறந்த சுற்றுச்சூழல் பயிற்சிக்கான விருதைப் பெற்று சாதனை
มุมมอง 78หลายเดือนก่อน
கொச்சியில் உள்ள அம்ருதா மருத்துவமனை, மருத்துவமனைத் துறையில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2024 ஆண்டிற்கான சிறந்த சுற்றுச்சூழல் விருதினைப் பெற்று சாதனை படைத்துள்ளது. கேரள மந்திரி திரு எம்.பி. ராஜேஷ் இந்த விருதுகளை வளாக இயக்குநர் பிரம்மச்சாரி. சம்சித்தாம்ருத சைதன்யா மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புக்கான பொது மேலாளர் திரு ஆர்.ஆர்.ராஜேஷ் ஆகியோருக்கு வழங...
அடல் இன்னோவேஷன் மிஷனில் அம்ருதா வித்யாலயங்களுக்கு சிறப்பு விருதுகள்
มุมมอง 198หลายเดือนก่อน
அடல் இன்னோவேஷன் மிஷனின் தேசிய அளவிலான போட்டியில் தலச்சேரி மற்றும் புதியகாவு (கொல்லம்) ஆகிய இடங்களில் உள்ள அம்ருத வித்யாலயங்கள் சிறப்பு விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. தலச்சேரியைச் சேர்ந்த மாணவிகள் ஸ்ரீலக்ஷ்மி எஸ் மற்றும் ஸ்ரேயா கே ஆகியோர் "ஸ்வயம்" என்ற இணையதளத்தை கிராமப்புற பெண்கள், சுய உதவி குழுக்கள் மூலம் செய்த பொருட்களை இணையத்தில் விற்பதற்கு உதவும் வகையில் உருவாக்கினர் . மொஹாலியில் ...
தென் கொரிய ஹேக்கத்தானில் அம்ருதாவின் வெற்றி
มุมมอง 90หลายเดือนก่อน
அம்ருதபுரி வளாகத்தில் உள்ள, (Amrita Center for Cyber Security Systems and Networks) ஜூன் 20 அன்று தென் கொரிய ஹேக்கத்தானில் மாபெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தென் கொரியாவின் செஜோங் (Sejong) சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஹேக்கத்தான் (CTF) போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்கள் முதல் இடத்தைப் பெற்றனர். அவர்கள் 150,000 ரூபாய்...
அம்ருதா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐஎஸ்சியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான கூட்டாண்மை
มุมมอง 50หลายเดือนก่อน
அம்ருதா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐஎஸ்சியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான கூட்டாண்மை
இந்தியாவின் நம்பர் 1 பல்கலைக்கழகமாக, அம்ருதா பல்கலைக்கழகம் இடம்பெறுகிறது
มุมมอง 174หลายเดือนก่อน
இந்தியாவின் நம்பர் 1 பல்கலைக்கழகமாக, அம்ருதா பல்கலைக்கழகம் இடம்பெறுகிறது
நாகர்கோவிலில் அம்ருதஸ்ரீ சேலை விநியோகம்
มุมมอง 2.5Kหลายเดือนก่อน
நாகர்கோவிலில் அம்ருதஸ்ரீ சேலை விநியோகம்
அம்மாவின் வட அமெரிக்கா விஜயம், 2024
มุมมอง 9372 หลายเดือนก่อน
அம்மாவின் வட அமெரிக்கா விஜயம், 2024
இந்தியா முழுவதும் அம்மா மையங்கள் மற்றும் அயுத் அமைப்புகளின் யோகா தின கொண்டாட்டங்கள்
มุมมอง 1552 หลายเดือนก่อน
இந்தியா முழுவதும் அம்மா மையங்கள் மற்றும் அயுத் அமைப்புகளின் யோகா தின கொண்டாட்டங்கள்
அம்ருதபுரி ஆசிரமத்தில் சர்வதேச யோகா தினவிழா கொண்டாட்டங்கள்
มุมมอง 4372 หลายเดือนก่อน
அம்ருதபுரி ஆசிரமத்தில் சர்வதேச யோகா தினவிழா கொண்டாட்டங்கள்
துபாயில் சுவாமிஜியின் தலைமையில்அம்ருதாலயம் 27 கொண்டாட்டங்கள்
มุมมอง 652 หลายเดือนก่อน
துபாயில் சுவாமிஜியின் தலைமையில்அம்ருதாலயம் 27 கொண்டாட்டங்கள்
அம்ருதபிரவாஹ்-27: சுவாமிஜியின் 27வது குவைத் விஜயம்
มุมมอง 1992 หลายเดือนก่อน
அம்ருதபிரவாஹ்-27: சுவாமிஜியின் 27வது குவைத் விஜயம்
உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்கள்: இந்தியா முழுவதும் அயுத்தின் பசுமை முயற்சிகள்
มุมมอง 492 หลายเดือนก่อน
உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்கள்: இந்தியா முழுவதும் அயுத்தின் பசுமை முயற்சிகள்
பிரெஞ்சு தூதரகம் மற்றும் அம்ருதா சௌக்கியத்தின் முன்முயற்சி
มุมมอง 1432 หลายเดือนก่อน
பிரெஞ்சு தூதரகம் மற்றும் அம்ருதா சௌக்கியத்தின் முன்முயற்சி
அம்ருதா மருத்துவமனையின் குழந்தைகளுக்கான ‘ECMO’ பயிற்சித் திட்டம்
มุมมอง 332 หลายเดือนก่อน
அம்ருதா மருத்துவமனையின் குழந்தைகளுக்கான ‘ECMO’ பயிற்சித் திட்டம்
அம்ருதா பல்கலைக்கழகத்தில் சமூகப் பிரச்சனைகளின் தீர்வுக்கான ஆராய்ச்சிக் கருத்தரங்கம்
มุมมอง 712 หลายเดือนก่อน
அம்ருதா பல்கலைக்கழகத்தில் சமூகப் பிரச்சனைகளின் தீர்வுக்கான ஆராய்ச்சிக் கருத்தரங்கம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அயுத் இந்தியாவின் சுற்றுச்சூழல் முன்முயற்சி
มุมมอง 2002 หลายเดือนก่อน
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அயுத் இந்தியாவின் சுற்றுச்சூழல் முன்முயற்சி
அம்மாவின் சேவை திட்டங்கள் - ஜூன் 2024 - சிறப்பம்சங்கள்
มุมมอง 1962 หลายเดือนก่อน
அம்மாவின் சேவை திட்டங்கள் - ஜூன் 2024 - சிறப்பம்சங்கள்
அம்ருதா மருத்துவமனையின் மூலம், 28 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை
มุมมอง 1232 หลายเดือนก่อน
அம்ருதா மருத்துவமனையின் மூலம், 28 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை