அமைதி | Guided Meditation on Peace | YSS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • நீங்கள் உங்களுடைய அக ஆன்மாவைப் பற்றிய ஓர் ஆய்வை தொடங்க இருக்கிறீர்கள் - உங்கள் ஆன்மாவினுள் உறையும் அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு வழிகாட்டப்பட்ட ஒரு தியானம். தியானம் என்பது ஆன்ம-அனுபூதி பற்றிய அறிவியலாகும். இது ஒருமுகப்படுதலுக்கான ஒரு சிறப்பான முறை. இதில் கவனச்சிதறல்கள் மற்றும் அமைதியற்ற எண்ணங்களிலிருந்து கவனத்தை விடுவித்து அதனை அகத்தே குவித்து, சர்வ-வியாபக முழுமுதலானவனை, என்றும்-உள்ள, எல்லாம்-அறிந்த, என்றும்-புதிய பேரானந்தத்தைப் பற்றிய ஓர் ஆழ்ந்த அனுபவம் பெறப்படுகிறது.
    நமது தியானத்தைத் தொடங்கும் முன், தியான வேளையின்போது நீங்கள் தனிமையிலும், தொந்தரவு செய்யப்படாமலும் இருக்க முடிவதற்காக ஓர் அமைதியான, நிசப்தமான இடத்தைக் காண்பது முக்கியம். நீங்கள் ஒரு நேரான நாற்காலியின் மீதோ அல்லது திடமான பரப்பின் மீது சப்பணமிட்டோ அமரலாம். சரியான தியான நிலையில் அமர்வதற்காக, உங்கள் முதுகுத்தண்டு நேராகவும், முகவாய்க்கட்டை தரைக்கு இணையாகவும், உடல் அசையாமலும் தளர்த்தப்பட்டும் வைத்துக்கொள்ளப்படுவதை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களது கண்களை மூடி, பார்வையை மெதுவாக மேல்நோக்கி சிரமின்றி, புருவங்களுக்கு இடையில் - ஒருமுகப்படுதல் மற்றும் ஆன்மீகக் கண் அல்லது இறை உணர்வின் இருக்கை - உயர்த்துங்கள். உடலைப் பற்றிய எல்லா எண்ணங்களையும் ஒதுக்கிவிட்டு, பார்வையை ஆன்மீகக் கண்ணில் குவித்து வைத்திருப்பதை நினைவில் வைத்தவாறு கவனத்தை உள்ளுக்குள் கொண்டுவாருங்கள். எல்லாப் பொறுப்புகளையும் கவலைகளையும் கைவிட்டு, அகத்தே அமைதியை உணருங்கள்.
    பரமஹம்ஸ யோகானந்தருடைய போதனைகளைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள அல்லது யோகதா சத்சங்கப் பாடங்களுக்குப் பதிவு செய்துகொள்ள எமது வலைத்தளத்தைப் பார்வையிடவும்: yssofindia.org...
    #வழிகாட்டப்பட்ட தியானங்கள்
    #அக அமைதி
    #யோகானந்தர்
    #யோகதாசத்சங்கசொஸைடிஆஃப்இந்தியா
    #யோகத் தியானம்
    #ஒய்எஸ்எஸ்
    ***
    For the latest content from YSS:
    yssofindia.org/
    / yoganandayss
    / yoganandayss
    / yoganandayss
    / yoganandayss
    bookstore.ysso...
    ***
    #Yogananda
    #KriyaYoga
    #Meditation
    #YogaMeditation
    #Paramahansa
    #SelfRealizationFellowship
    #YogodaSatsangaSocietyofIndia
    #YSS
    #HowToLive

ความคิดเห็น • 14