#Breaking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2024
  • மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தேசிய கீதம் ஒலித்த போது குடிமகன்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
    டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான லீக் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் இந்திய- அமெரிக்க அணிகளுக்கு இடையேயான லீக் சுற்று போட்டி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் விளையாட்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது.
    இந்த கிரிக்கெட் போட்டி மதுரை எஸ்.எஸ்.காலி பகுதியில் உள்ள தனியார் பார் ஒன்றில் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது போட்டியின் தொடக்கத்தின் போது இரு நாட்டு வீரர்களும் அணிவகுத்து நிற்பர்.
    இரு நாடுகளின் தேசிய கீதங்களும் ஒலிக்கப்படும். அப்போது இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பாரில் மது அருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்த குடிமகன்கள் உடனடியாக எழுந்து நின்று தேசியக் கீதம் பாடினர். அத்துடன் அது முடியும் வரை நின்றபடியே இருந்தனர்.
    இதையடுத்து தங்களது இருக்கைகளில் அமர்ந்து மது அருந்திக் கொண்டே கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தனர். மதுபான பாரில் தேசிய கீதத்திற்கு குடிமகன்கள் மரியாதை செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

ความคิดเห็น • 4

  • @SAKASRAKARA
    @SAKASRAKARA 9 วันที่ผ่านมา

    போதும் விடிந்தது

    • @cmanjula6072
      @cmanjula6072 8 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @msrinivasan8999
    @msrinivasan8999 10 วันที่ผ่านมา

    Dai