Oswald Chambers - Short Biography - Tamil - ஆஸ்வால்ட் சேம்பெர்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் (24 ஜூலை 1874 - 15 நவம்பர் 1917) ஸ்காட்லாந்தில் பிறந்து, இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா, எகிப்து போன்ற பல நாடுகளில் மதப்போதகராகவும், வேதாகமக் கல்லூரியில் ஆசிரியராகவும் ஊழியம் செய்தவர். அவருடைய MY Utmost for His Highest என்ற தியானப் புத்தகம் மிகவும் பிரபலமானது.
    1917ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் குடல் அழற்சி நோயால் தாக்கப்பட்டார். முதல் உலகப் போரின்போது அவர் எகிப்தில் சிப்பாய்களிடையே ஒரு மதகுருவாகப் பணியாற்றினார். காயமடைந்த வீரர்களுக்குப் படுக்கைகள் அவசரமாகத் தேவைப்படும் என்பதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்தார். 1917, அக்டோபர் 29ஆம் தேதி அதி அவசர குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சேம்பர்ஸ் அறுவைசிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்குப்பிறகு காலமானார். அவர் ஒய்எம்சிஏ மதகுருவாக இருந்தபோதும், முழு இராணுவ மரியாதையுடன் கெய்ரோவில் அடக்கம் செய்யப்பட்டார்.
    இலண்டனில் வேதாகமக் கல்லூரியிலும், எகிப்தில் சீடௌன் இராணுவ முகாம்களிலும் ஆஸ்வால்டு பேசியவைகளை அவருடைய மனைவி பிடி சுருக்கெழுத்தில் எழுதிவைத்திருந்தார். ஆஸ்வால்டின் மறைவுக்குப்பின் அவருடைய மனைவி அவைகளைப் புத்தகங்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டார். முப்பது புத்தகங்களில் மிகவும் வெற்றிகரமானது, பிரபலமானது MY Utmost for His Highest (1924). இது அனுதின மன்னா, அன்றன்றுள்ள அப்பம்போல், 365 பகுதிகள் கொண்ட ஒரு தியானப் புத்தகம். ஒவ்வொரு பத்தியும் சுமார் 500 வார்த்தைகள் கொண்டது. இந்தப் புத்தகம் இதுவரை 1 கோடியே 30 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

ความคิดเห็น • 27