நிறைவுப்பகுதி - கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் மூன்றாம் திருவந்தாதியின் பாசுரார்த்தங்களை அருமையாய் வேளுக்குடி ஸ்ரீரங்கநாதன் ஸ்வாமிகள் விளக்கியதிலிருந்து - கடந்த பாசுரத்தின் முடிவான மனம் என அந்தாதி வடிவமைப்பில் மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்பன்... என 3வதுபாசுரம் துவங்குகிறது. மற்ற பக்தர்களின் மனதை விட்டுவிட்டு ஆழ்வார் மனதில் குடி கொண்டுள்ளார். ஆழ்வார் மனதிற்கு வர என்னவெல்லாம் ப்ரயத்தனங்கள் செய்தார் என்பதை வரிசைப்படுத்துகிறார் ஆழ்வார்மனம் பக்குவப்பட காத்திருந்து முதலில் ஷீராப்திநாதனாய் சயனித்தார். பின் ஜகத் ரக்ஷண சிந்தையில் ஈடுபட்டார். அகார வாச்யனான பரமாத்மாவிற்கு மகார வாச்யனான ஜீவாத்மாவை உகாரவாசியனான பிராட்டி புருஷகாரம் செய்து சேர்த்து வைக்கிறாள். இங்கனம் பிராட்டி சேர்த்து வைப்பதால் பெருமான் தேவியை எப்போதும் ஆலிங்கணம் செய்து கொண்டு இருப்பாராம். ஆக பகவான் பேயாழ்வார் உள்ளத்தில் அமர பிராட்டியின் கடாக்ஷம் -க்ருபை வேண்டும். பக்தனை தனக்கு கொடுப்பது பிராட்டிதான் என்று அவளை அனணத்து கொள்கிறார். பிராட்டியின் வெப்பம் நீங்கும்படி குளிர்ந்த துளஸி மாலையை அணிந்து கொண்டு இருக்கிறார் பக்தர்களின் விரோதிகளை நிரசனம் செய்வதில் நோக்காகக் கொண்ட பெருமான் தேங்காதே வண்ணன் அருநாகம் தீர்க்கும் மருந்து என்ற பாசுரப்படி பகவானே செடியாய் வல்வினைகள் தீர்க்கும் அருமருந்தாகவும், மருத்துவராயும் நிலைநின்ற மாமணி வண்ணன் சம்சார வெப்பத்தை யும் போக்குகிறார். இப்படிப்பட்ட பகவான் தான் எனக்கு ப்ராபகமும் அவரே. ப்ராப்யமும் அவரே என்றிருப்பவர். என இப்பாகரத்தில் தெரிவிக்கிறார். அடுத்து 4வது பாசுரத்தில் திரிவிக்ரம அவதாரத்தை குறிக்கும் வகையில் தன் 2 அடியால் மேல் உலகம் கீழ் உலகம் அளந்து 3வதாய் தன் திருவடிகளை மஹாபலியின் தலையின்மேல் வைத்தார். உலகத்தை உண்டு நிறுத்திபின் பிரளய காலத்தில் உமிழ்ந்த மாயோன் அந்த திருவடிகளுக்கு கைங்கர்யங்கள் புரிந்து அனுபவிக்கிறார். அடுத்து 5வது பாசுரத்தில் அடிவண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் என து வங்கும் பாசுரத்தில் அழகு பொருந்திய பெருமாளின் ஆழி விரோதிகளுக்கு பயங்கரமாயும், பக்தர்களுக்கு அபயகரமாயும் ஆபரணமாயும் விளங்குகிறது . அந்த பகவானின் கீழ்பகுதி சிவந்து மிருதுவாய் தாமரைப் போல் காட்சி அளிக்கிறது. பார்கடல் நீர்வண்ணன் - என இந்த ப்ரபஞ்சத்தை சூழ்ந்திருக்கும் உப்புநீர் கொண்ட கடல் வண்ணன். எங்கனம் சமுத்திரம் கறுப்பாக இருக்கிறதோ அது போல் கறுத்த திருமேனியை கொண்டவர். பெரிய கிரீடத்தை தரித்துக் கொண்டு இருக்கிறார். 1௦௦௦ . சூரியன் உதித்தார் போல் ஜ்வாஜல்யம் கொண்ட தேஜஸ்வியான பகவான். பகலத்தீதையில் 11வது அத்தியாயத்தில் தன் விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்கு காட்டிய ஆழிவண்ணன். அப்பேற்பட்ட ஒளிபடைத்த அழகர். இங்கனம் முதல் பாசுரத்தில் திருவான மஹாலஷ்மியை ஆழ்வார் கண்டார். உம்பாசுரத்தில் நான் அவரை காண்பதற்கு முன்னால் அவர் என் மனதினில் நெஞ்சுநிறைய புகுந்தார். என் 7 பிற விகளையும் அறுத்தார் என்றார். 3வது பாகரத்தில் எத்தனை ப்ரயத்தனம் செய்து என் மனதில் புகுந்தவர் - என் நெஞ்சை - விட்டு விலகுவதில்லை என்ற எண்ணம் பூண்டார். 4வது பாசுரத்தில் பெருமானே அருமருந்தாக நிலைநின்று ஆழ்வாரின் அநிஷ்டத்தை போக்கி இஷ்டத்தை பிராப்பித்தார். நிறைவாய் 5வது பாசுரத்தில் திருமுடி கறுப்பாய் திருவடி சிகப்பாய் - போகியமாய் அனுபவிக்கத்தக்கதாய் அமைந்த திரிவிக்ரமன் அடி என்று ஆழ்வாரின் நிலைப்பாட்டை அத்புதமாய் நம் மனதில் நிலை நிறுத்தி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿
அடியேன் இராமானுஜ தாசன் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙌🙌🌹🌹🌹💐💐
Srimathe Ramanujaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Adiyen ramanuja Dasan acharyan thiruvadigalukku namaskarangal adiyen swamy
Devarir thiruvadigaluku pallandu pallandu pallandu🙏🙏🙏🌺🌺
நிறைவுப்பகுதி -
கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் மூன்றாம் திருவந்தாதியின் பாசுரார்த்தங்களை அருமையாய் வேளுக்குடி ஸ்ரீரங்கநாதன் ஸ்வாமிகள் விளக்கியதிலிருந்து -
கடந்த பாசுரத்தின் முடிவான மனம் என அந்தாதி வடிவமைப்பில் மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்பன்... என 3வதுபாசுரம் துவங்குகிறது. மற்ற பக்தர்களின் மனதை விட்டுவிட்டு ஆழ்வார் மனதில் குடி கொண்டுள்ளார். ஆழ்வார் மனதிற்கு வர என்னவெல்லாம் ப்ரயத்தனங்கள் செய்தார் என்பதை வரிசைப்படுத்துகிறார் ஆழ்வார்மனம் பக்குவப்பட காத்திருந்து முதலில் ஷீராப்திநாதனாய் சயனித்தார்.
பின் ஜகத் ரக்ஷண சிந்தையில் ஈடுபட்டார். அகார வாச்யனான பரமாத்மாவிற்கு மகார வாச்யனான ஜீவாத்மாவை உகாரவாசியனான பிராட்டி புருஷகாரம் செய்து சேர்த்து வைக்கிறாள். இங்கனம் பிராட்டி சேர்த்து வைப்பதால் பெருமான் தேவியை எப்போதும் ஆலிங்கணம் செய்து கொண்டு இருப்பாராம். ஆக பகவான் பேயாழ்வார் உள்ளத்தில் அமர பிராட்டியின் கடாக்ஷம் -க்ருபை வேண்டும். பக்தனை தனக்கு கொடுப்பது பிராட்டிதான் என்று அவளை அனணத்து கொள்கிறார். பிராட்டியின் வெப்பம் நீங்கும்படி குளிர்ந்த துளஸி மாலையை அணிந்து கொண்டு இருக்கிறார் பக்தர்களின் விரோதிகளை நிரசனம் செய்வதில் நோக்காகக் கொண்ட பெருமான் தேங்காதே
வண்ணன் அருநாகம் தீர்க்கும் மருந்து என்ற பாசுரப்படி பகவானே செடியாய் வல்வினைகள் தீர்க்கும் அருமருந்தாகவும், மருத்துவராயும் நிலைநின்ற மாமணி வண்ணன் சம்சார வெப்பத்தை யும் போக்குகிறார். இப்படிப்பட்ட பகவான் தான் எனக்கு ப்ராபகமும் அவரே. ப்ராப்யமும் அவரே என்றிருப்பவர். என இப்பாகரத்தில் தெரிவிக்கிறார். அடுத்து 4வது பாசுரத்தில் திரிவிக்ரம அவதாரத்தை குறிக்கும் வகையில் தன் 2 அடியால் மேல் உலகம் கீழ் உலகம் அளந்து 3வதாய் தன் திருவடிகளை மஹாபலியின் தலையின்மேல் வைத்தார். உலகத்தை உண்டு நிறுத்திபின் பிரளய காலத்தில் உமிழ்ந்த மாயோன் அந்த திருவடிகளுக்கு கைங்கர்யங்கள் புரிந்து அனுபவிக்கிறார்.
அடுத்து 5வது பாசுரத்தில் அடிவண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் என
து வங்கும் பாசுரத்தில் அழகு பொருந்திய பெருமாளின் ஆழி விரோதிகளுக்கு பயங்கரமாயும், பக்தர்களுக்கு அபயகரமாயும் ஆபரணமாயும் விளங்குகிறது . அந்த பகவானின் கீழ்பகுதி சிவந்து மிருதுவாய் தாமரைப் போல் காட்சி அளிக்கிறது. பார்கடல் நீர்வண்ணன் - என இந்த ப்ரபஞ்சத்தை சூழ்ந்திருக்கும் உப்புநீர் கொண்ட கடல் வண்ணன். எங்கனம் சமுத்திரம் கறுப்பாக இருக்கிறதோ அது போல் கறுத்த திருமேனியை கொண்டவர். பெரிய கிரீடத்தை தரித்துக் கொண்டு இருக்கிறார். 1௦௦௦ . சூரியன் உதித்தார் போல் ஜ்வாஜல்யம் கொண்ட தேஜஸ்வியான பகவான். பகலத்தீதையில் 11வது அத்தியாயத்தில் தன் விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்கு காட்டிய ஆழிவண்ணன். அப்பேற்பட்ட ஒளிபடைத்த அழகர்.
இங்கனம் முதல் பாசுரத்தில் திருவான மஹாலஷ்மியை ஆழ்வார் கண்டார். உம்பாசுரத்தில் நான் அவரை காண்பதற்கு முன்னால் அவர் என் மனதினில் நெஞ்சுநிறைய புகுந்தார். என் 7 பிற விகளையும் அறுத்தார் என்றார். 3வது பாகரத்தில் எத்தனை ப்ரயத்தனம் செய்து என் மனதில் புகுந்தவர் - என் நெஞ்சை - விட்டு விலகுவதில்லை என்ற எண்ணம் பூண்டார். 4வது பாசுரத்தில் பெருமானே அருமருந்தாக நிலைநின்று ஆழ்வாரின் அநிஷ்டத்தை போக்கி இஷ்டத்தை பிராப்பித்தார். நிறைவாய் 5வது பாசுரத்தில் திருமுடி கறுப்பாய் திருவடி சிகப்பாய் - போகியமாய் அனுபவிக்கத்தக்கதாய் அமைந்த திரிவிக்ரமன் அடி என்று ஆழ்வாரின் நிலைப்பாட்டை அத்புதமாய் நம் மனதில் நிலை நிறுத்தி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
Awesome upanyasam Swamy Danyosmy
நமஸ்காரம் சுவாமி
அடியேன் 🌹🌹🌹
ஸ்ரீமதே இராமாநுஜாய நமக 🙏
அடியேன் இராமாநுஜ தாஸி 🙏
🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Adiyen Namaskarsm swamy
Adiyen dasan
அடியான்
🙏🙏🙏🙏