st.joseph's college hostel review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Hostel part-1 Review - • st.joseph's college h...
    இந்த வீடியோவில் பலரும் New Hostel குறித்து கேட்கிறீர்கள்!
    கல்லூரிக்குள்ளே மாணவருக்கு மட்டுமான 2 விடுதிகள் உள்ளன.
    அவை,
    1) SH - Sacred Heart Hostel - SHIFT II (மதிய நேர கல்லூரி மாணவர்களுக்கானது)
    2) NH - New Hostel - SHIFT I (காலை நேர கல்லூரி மாணவர்களுக்கானது)
    இது NEW HOSTEL பற்றிய பதிவு (Dr.A.P.J.Abdul Kalam ஐயா அவர்கள் தங்கி படித்த விடுதி இது என்பது குறிப்பிடத்தக்கது)
    விடுதி கட்டணம்:
    2020-ல் இருந்த கட்டணம் (ஒவ்வொரு வருடமும் செலவுகளுக்கு ஏற்ப கட்டணம் வேறுப்படும்)
    ஒரு வருடம் தங்குவதற்கு 15,500 மொத்தமாக சேர்க்கையின் போது கட்டினோம்.
    பிறகு ஒவ்வொரு மாதமும் சாப்பாட்டிற்கான கட்டணத்தை மாத இறுதியில் செலுத்தினோம். (மாதம் 2,000 மேல் அல்லது 2,900 கீழ் கட்டணம் இருக்கும்)
    ✔ அனுமதி உண்டு: Mobile Phone, Laptop, Musical Instruments, Sports Items
    ✖ அனுமதி இல்லை : Iron Box, Speakers
    ★ விடுதிக்குள் புகைப்பிடித்தல், மது அருந்துதல் தடைசெய்யப்பட்டது.
    ★ வெளி நபரை உள்ளே கூட்டி வர அனுமதி இல்லை.
    ★ பெற்றோர் வந்தால் விடுதி வரவேற்பறையில் சந்திக்கலாம்.
    ★ கல்லூரியில் வருடத்திற்கு ஒருமுறை Parents Meeting நடக்கும் அப்போது விடுதியிலும் நடக்கும்.
    ★ Semester தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் விடுதிக்குள் நடக்கும்.
    ★ விடுதியில் 800 இடத்திற்கு மேல் மாணவர்கள் தங்கும் வசதி உள்ளது. {ஒவ்வொரு Year (I,II,III) மாணவர்களுக்கான தங்குமிடம் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரிக்கப் படுவார்கள்}
    ★ Room-ன் Size பொறுத்து 2 முதல் 6 நபர் வரை தங்க வைப்பார்கள்.
    【உணவு】
    Veg / Non Veg இரண்டு பிரிவும் உண்டு.
    Non Veg பிரிவினருக்கு வாரத்தில் 3 நாட்கள் மதியம் Non Veg கிடைக்கும்.
    【உணவு நேரம்】
    காலை : 7.00 am - 8.00 am
    மதியம் : 1.30 pm - 2.30 pm
    இரவு : 7.00 pm - 8.00 pm
    【படிப்பு நேரம்】
    இரவு 8.30 மணி முதல் காலை 7.00 மணி வரை அதாவது இந்த குறிப்பிட்ட நேரத்தில் விடுதியில் Mobile Phone, Laptop பயன்படுத்த அனுமதி இல்லை.
    【கல்லூரி நேரம்】
    கல்லூரி நேரத்தின் போது விடுதியில் தங்க அனுமதி இல்லை. கல்லூரி முடிந்த பிறகு மதியம் 1.20-க்கு விடுதி திறக்கப்படும்.
    【விடுதி நேரம்】
    எங்கு சென்றாலும் இரவு 8.20-க்கு முன்பு விடுதிக்குள்ள வந்திருக்க வேண்டும். அனுமதி இல்லாமல் விடுப்பு எடுக்க முடியாது, எல்லா சனி ஞாயிறு விடுமுறைக்கும் Note வைப்பார்கள் வீட்டிற்கு போகிறவர்கள் Note-ல் பெயரெழுதிவிட்டு வீட்டிற்கு செல்லலாம்.
    【விடுதி சேர்க்கை】
    கல்லூரியில் சேர்ந்த பிறகே விடுதியில் சேர விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வின் போது பெற்றோர் மாணவருடன் இருத்தல் அவசியம். விடுதியில் தங்கும் உரிமை ஓராண்டுக்கு மட்டும் தான். மறு ஆண்டும் தொடர்ந்து தங்க விரும்பினால் மீண்டும் அதற்குரிய நடைமுறைகளை மேற்கொண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். படிப்பில் போதிய அக்கறை காட்டாதவர்களுக்கும், விடுதி நோக்கத்திற்கு எதிராகச் செயல் படுபவர்களுக்கும் விடுதியில் அனுமதி மறுக்கப்படும்.

ความคิดเห็น • 137