Vandavasi Thennangur Pandurangan Temple full history

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2023
  • Thennangur Pandurangan Temple full history ரகுமாயீ சமேத #பாண்டுரங்கன் கோயில் #தென்னாங்கூர் Vandavasi
    தென்னாங்கூர் பாண்டுரங்க சுவாமிகள் கோவில்
    ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயம் போன்று இந்த கோயிலின் விமானம் அமைந்துள்ளது தனித்துவம் வாய்ந்த சிறப்பாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காஞ்சிபுரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும், வந்தவாசியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் தென்னாங்கூர். எழில் கொஞ்சும் வயல்வெளிகள் நிறைந்து சுற்றிலும் பச்சைபசுமை நிறைந்த அந்த கிராமத்தின் நடுவே வின்னை முட்டும் பிரண்மாண்டமான கோபுரத்துடன் அமைந்துள்ளது இத்திருக்கோயில். குருஜி ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் உருவாக்கப்பட்டு ஆசிரமம் இங்குள்ளது. இத்திருக்கோயில் அருகே உள்ள ஞானானந்த சுவாமிகளின் தபோவனம் ஸ்ரீஞானானந்த கிரிசுவாமிகளின் பரமானந்த சீடர்தான் இந்த ஹரிதாஸ்கிரி சுவாமிகள் ஆவார். அகிலமேங்கும் சுற்றி தன்னுடைய குருஜீ ஞானானந்த சுவாமிகளை பற்றி உபன்யாசம் செய்து உலக மக்களை தனது காந்த குரலால் கவர்ந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரம்-வந்தவாசி மார்க்கம் அமைந்துள்ள இந்த தென்னாங்கூரில் ஒரு அழகிய ஆசிரமத்தை ஹரிதாஸ் கிரி சுவாமிகள் உருவாக்கினார். இந்த தென்னாங்கூர்தான் குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜகன்நாதர் ஆலயம் போன்று இந்த கோயிலின் விமானம் அமைந்துள்ளது தனித்துவம் வாய்ந்த சிறப்பாகும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ ரகுமாயிசமேத பாண்டுரங்க சுவாமிகள் 12 அடியில் பிரம்மாண்டமாக இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார். இத்திருக்கோயில் கடந்த 1996 ம் வருடம் முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2008 ல் 2வதாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2020 ல் 3வது முறையாக சிறப்பாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் இத்திருக்கோயிலில் பாண்டுரங்க சுவாமிகளும், ரகுமாயி தாயாரும் மிகவும் சிறப்பாக அமையப்பட்டு அருள் பாலிக்கிறார்கள்.
    இந்த திருக்கோயிலில் பாண்டுரங்க சுவாமிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மிகவும் சிறப்பாக தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் அன்று பாண்டுரங்க சுவாமிகள் 10,008 பழங்களால் குருவாயூரப்பன் அலங்காரம் (விசு கனி) அலங்காரம் செய்யப்பட்டு மிக பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். கண்ணன் அவதார தினமாக கோகுலாஷ்டமி அன்று வேணுகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மற்றும் ஒவ்வொரு நாளும் பிண்ணைமரக்கண்ணன் அலங்காரம், காளிங்க நர்த்தன அலங்காரம், கோவர்தன கிரி தாரி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம் இவ்வாறு 7 நாட்களும் பாகவத சப்த ஆகம் செய்யப்பட்டு 7 விதமான அலங்காரங்களில் திவ்ய தரிசம் கொடுக்கிறார்.
    புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையான் போன்று பத்மாவதி கோலமும் திவ்ய தம்பதிகளாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதே போன்று ஒவ்வொரு புரட்டாசி சனி அன்று மாலை 6 மணியளவில் பிரம்மாண்டான கருட சேவையும் நடைபெறுகிறது. ஆஷாட (ஆடி) ஏகாதசி காலத்தில் மகா நைவ்வேத்யம் செய்வித்து பக்தர்களுக்கு அன்னதானம் இட்டு பிரம்மாண்டமான நாம சங்கீர்தனத்துடன் விஷேஷ பாலாபிஷேகம் செய்யப்படும். பிரதி ஞாயிற்றுகிழமைகளில் துவாரகை கண்ணன் போன்று கம்மீரமாக ராஜ அலங்காரத்துடன் தரிசனம் கொடுக்கிறார். மார்கழி பௌர்ணமி காலத்தில் குருநாதர் ஞானானந்த சுவாமிகள் சித்தயான தினத்தன்று 140 கிலோ வெண்ணெய்னினால் மிகவும் அழகான வெண்ணெய் காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5 மணிக்கு உற்சவர் சொர்க்க வாசல் தரிசனம் பக்தர்களுக்கு அருளிகிறார். 12 அடியில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கும் பாண்டுரங்க சுவாமிகள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் திருப்பாற்கடலில் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருளிகிறார். பிரதிமாதம் உத்திரத்டாதி நட்சத்திர தினத்தன்று குருநாதனர் ஹரிதாஹ் கிரி சுவாமிகளால் ஆராதனம் செய்த உற்சவ மூர்த்திகள் பாண்டு ரங்கன் சுவாமிகள் ருக்குமாயி தாயார் ஆகியோர் தங்கதேரில் எழுந்தருளி வீதிவுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்.
    ஆலயத்தின் உட்புறம் உலகத்திலேயே முதன்முறையாக கண்ணாடி இழை ஓவியம் (பைபர் கிளாஸ் பெயிண்டிங்) கிருஷ்ணருடைய ராஜ லீலைகள் அனைத்தும் தஞ்சாவூர் சித்திர பாணியில் அமையப்பட்டிப்பது இக்கோயிவில் தனிச்சிறப்பாகும்.
    தரிசன நேரம் இத்திருக்கோயிலில் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும் மாலை 4 மணிமுதல் 8 மணிவரை பாண்டுரங்கசுவாமிகள் ரகுமாயி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    #தென்னாங்கூர்கோவில் #தென்னாங்கூர்கோயில்
    #தென்னாங்கூர்பெருமாள் #Thennankur #Tiruvannamalai #SriPanduranganTemple #SriPanduRangaswamyTemple #தென்னாங்கூர் #ஸ்ரீபாண்டுரங்கர்கோயில் #திருவண்ணாமலை #பாண்டுரங்கன்கோயில் #kanchipuram #vanthavasi #வந்தவாசி #Thennangur #thennangurSriPandurangan
    #அருள்மிகுரகுமாயீசமேதபாண்டுரங்கன்திருக்கோயில்தென்னாங்கூர்
    #பண்டரிபுரம் #பாண்டுரங்கவிட்டலர்கோயில் #மகாராட்டிராகோவில்
    #பண்டரிபுரம் #காஞ்சிபுரம் #பூரிஜகன்நாதர்ஆலயம் #தமிழ்நாட்டில்பூரிஜகன்நாதர்ஆலயம்
    #Pandharpur
    #ஜெயஜெயவிட்டலா #பாண்டுரங்கவிட்டலா #பண்டரிபுரம் #பாண்டுரங்கவிட்டலர்கோயில் #VithobaTemple #Vithoba #VitthalRukminiMandir
  • บันเทิง

ความคิดเห็น • 18

  • @rajalakshmi2135
    @rajalakshmi2135 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏💐♥️

  • @vengadeshvasanthi6953
    @vengadeshvasanthi6953 7 หลายเดือนก่อน +4

    Beauty
    Temple

  • @tamilventhan2460
    @tamilventhan2460 29 วันที่ผ่านมา +1

    இன்று தான் தரிசனம் செய்தோம்

  • @krishnaswamyamudhu1970
    @krishnaswamyamudhu1970 ปีที่แล้ว +3

    Thank you for the nice video darshan.

  • @sathyapsathyap2841
    @sathyapsathyap2841 2 หลายเดือนก่อน +1

    intha video pakkurathukea...punniyam pannirukanum....nanri bro...
    Jai...panduragga

  • @Palanisamy-ny7mk
    @Palanisamy-ny7mk 8 หลายเดือนก่อน +3

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏

  • @AnnamalaiAnnamalai-lz6cx
    @AnnamalaiAnnamalai-lz6cx 2 หลายเดือนก่อน +2

    MSA DVM ❤❤❤

  • @loguskitchen1673
    @loguskitchen1673 10 หลายเดือนก่อน +2

    Jai shree Krishna
    Thanks for your video brother

    • @ushanaidu19
      @ushanaidu19 8 หลายเดือนก่อน +1

      Jai Shree Radhe Krishna 🙏🙏

  • @sakthivelkuppan3628
    @sakthivelkuppan3628 2 หลายเดือนก่อน +1

    radha krishna radha krishna radha krishna

  • @revathirevathi3194
    @revathirevathi3194 2 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @lillesh275
    @lillesh275 8 หลายเดือนก่อน +2

    Jay Paandurangaa

  • @gugan2731
    @gugan2731 2 หลายเดือนก่อน +1

    Tn tvm 25 வந்தவாசி

  • @jayabalp3032
    @jayabalp3032 8 หลายเดือนก่อน +1

    Enga oru

  • @mangodesq
    @mangodesq 9 หลายเดือนก่อน +3

    How to reach thennagur temple from Chennai?

    • @sambrani_vasanai
      @sambrani_vasanai  9 หลายเดือนก่อน +2

      35 km from Kanchipuram is a village named Thennangur. From Kanchipuram you can take Vandavasi bus to Thennangur temple. and You can also take Vandavasi bus from Tambaram or Chengalpattu to Tennankur
      காஞ்சிபுரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் தென்னாங்கூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்தில் தென்னாங்கூருக்கு செல்லலாம்.
      தாம்பரம் அல்லது செங்கல்பட்டில் இருந்தும் வந்தவாசி செல்லும் பேருந்தில் தென்னாங்கூர் செல்லலாம்

    • @mangodesq
      @mangodesq 9 หลายเดือนก่อน +1

      @@sambrani_vasanai Thank you very much. Koembedu to vandavasi buses la pogalama ?