சீவலப்பேரி சுடலை மாடன் வரலாறு | சன்னாசி கோனார் | konar history | seevalaperi sudalai madasamy kovil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • #சீவலப்பேரி சுடலை மாடன் சுவாமி ஆலயம்..
    ##மாசானகோனார்..
    #மலையாள நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு மாயாண்டி சுடலை வந்தார். அவர் பாண்டிய நாட்டில் முதலாவது வந்தமர்ந்த இடம் சீவலப்பேரி...
    #திருநெல்வேலியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது சீவலப்பேரி கிராமம். பாண்டிய மன்னர்களின் வம்சத்தில் வந்த ஸ்ரீவல்லப பாண்டியன் மக்களின் குடிநீருக்காக ஏரியை அமைத்தான். அவன் பேரில் அந்த ஏரி ஸ்ரீவல்லப பேரி என்று அழைக்கப்பட்டது. அது மருவி ஸ்ரீவல பேரி யாகி, சீவலப்பேரி ஆனது...
    #இங்கு சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வந்த மாசானக்கோனார் தன்னுடைய தந்தையின் கட்டளையேற்று ஆடு மேய்க்க சென்றார். சீவலப்பேரி ஊருக்கு மேற்கு மூன்று ஒன்றாய் கலக்கும் பகுதியான முக்கூடல் என்னும் இடத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். .
    12 வயதே ஆன பாலகன் மாசானம். நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் கூட்டத்தை சின்னஞ்சிறு பாலகன் மாசானம், அடிக்காமலும், அதட்டாமலும் உரிமையுடன் அழைப்பது, அவற்றை கொஞ்சுவது என ஆடுகளோடு பழகுவதை கண்ட ஒரு சாமியார், அவனிடம் சென்று குழந்தாய், எனக்கு நல்ல பசியாக இருக்கிறது. உண்பதற்கு உன்னிடம் எதாவது இருந்தால் கொடு என்றார்...
    #காவி உடையும், காலில் ஆணிகள் பொருத்தப்பட்ட செருப்பும், கையில் திருவோடும் கொண்டு உயரமான தோற்றமும் அதற்கேற்ற அகன்ற உடல்வாகும் கொண்டு நரைத்த தாடியுடன் நிமிர்ந்த நிலையில் நின்றிருந்த அந்த சாமியாரைக் கண்டான் மாசானம். சாமி, உங்களுக்கு கொடுக்கத்தக்க கையில் ஒண்ணுமில்லே, நான் வீட்லயிருந்த கொண்டாந்த சோள கஞ்சிய இப்பதேன் குடிச்சு முடிச்சேன். பரவாயில்லை, ஏதாவது ஒரு ஆடுயிடம் இருந்து பாலை கறந்து கொடு, நான் குடித்து பசியாறிக் கொள்கிறேன். சாமி, முக்காவாசி ஆடு, சினை ஆடுதேன். ஈத்தளஞ்ச ஆடுகள்கிட்டயும் இப்ப எப்படி பால கறக்க, என்று கூறிய போது, அவர் அருகே நின்ற ஆட்டை காட்டி, இந்த ஆட்டில் இருந்து பாலை கறந்து கொடு என்றார். அந்த சாமியார்.அப்போது மாசானம் சத்தமாக சிரித்தார். சாமி அது மலட்டு ஆடு, அதுல போய் எப்படி சாமி பால கறக்கிறது என்று கூறி, மீண்டும் சிரித்தார் மாசானம்.இறுகிய முகத்தோடு குழந்தாய், நான் சொல்வதை நீ கேள், அந்த ஆட்டில் பால் வரும், இந்தா, இந்த திருவோட்டில் பாலை கறந்து கொடு என்று தன் கையில் இருந்த திருவோட்டினை கொடுக்க, தயக்கத்துடன் வாங்கினார் மாசானம். அந்த மலட்டு ஆட்டின் மடியில் பாலை கறக்க முயன்றார். பால் வந்தது. திருவோடு நிரம்பியது. வியந்தார் மாசானம், அந்த சாமியாரை வியப்போடு பார்த்தபடியே எழுந்தார்...
    #மாசானத்தின் கையிலிருந்த திருவோட்டை வாங்கி பாலை அருந்திய சாமியார், தனது சுயரூபத்தை காட்டினார். வந்திருந்தது சுடலைமாடன்.
    கம்பீரமான தோற்றம், கனிவான சிரிப்பு மாசானம் உன் இடம் தேடி வந்த எனக்கு கோயில் எழுப்பி, பூஜித்து வா என்றார். அதற்கு ஐயா, வயதில் இளையவன், பருவத்தில் சிறியவன் என்னால் என்ன செய்ய முடியும்.உன்னோடு நானிருக்கிறேன் உன்னால் முடியும் என்றார். சாமி, அப்படியே செய்கிறேன். எனது தலைமுறைக்கும் காத்து நிக்கணும், நோய் வராம பாதுகாக்கணும் என்று கூறினார். (இதை செய்யுளாக அதாவது பிறக்கும் பிறக்கும் பிள்ளைக்கும் என பாடலாய் பாடி கேட்டதாக கூறப்படுகிறது.)உடனே சுடலைமாடன் எனக்கு கோயில் கட்டி, நான் சொல்கிற என்னோடு நிலையம் கொடுத்து பூஜித்துவா, உன் தலைமுறையை காத்து நிற்பேன், குலம் சிறக்க வைப்பேன்,ஊர் மக்களை காப்பேன், நோய், நொடி அண்டாமல் பாப்பேன்.என்னை நம்பி, உன்னை தேடி வருவோருக்கு எப்பிணியாகினும் அப்பொழுதே நீக்கி வைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த சுடலைமாடன் தான் நின்றிருந்த இடத்தில் கீழேயிருந்த மண்ணை எடுத்து தன் விரலை தொட்டு, அதை கொண்டு மாசானத்தின் நாவில் ஓம் என்று எழுதினார்...
    #மாலை பொழுதானது. ஆடுகளை கிடையில் அடைத்துக் கொண்டு தனது உறவினர்களிடமும், ஊரார்களிடமும் நடந்ததை கூறினார் மாசானம். எல்லோரும் கேலி பேசினர். இவரது பேச்சை பொருட்டாக நினைக்கவில்லை. சுடலைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை என்று வேதனைப்பட்ட மாசானம். அங்கிருந்து புறப்பட்டு கால்போன போக்கில் பயணித்தார். சதுரகிரிமலை சென்றார். அங்கு சித்தர்கள் பலர் இருக்க, அங்கிருந்த ஒரு ரிஷியை குருவாகக்கொண்டு அவருக்கு தொண்டுகள் செய்து வந்தார். வேதங்களை கற்றறிருந்தார்.
    ரிஷியை காணவரும் அன்பர்கள் அவரை குரு என்று அழைப்பதை போன்று இவரை பாலகன் என்பதால் பாலகுரு என்று அழைத்தனர். தலைமை குருவாக இருந்த அந்த ரிஷியிடம் நாடி வரும் அன்பர்கள் தங்களுக்கு நேரும் இன்னல்களை எடுத்துக்கூறும் போது, ரிஷி பதில் கூற சிறிதுநேரம் மௌனமாக இருப்பார். பின்னர் பதில் கூறுவார். ஆனால் சுடலையின் அருளால் மாசானக்கோனார், ரிஷிக்கு முன்னதாக பதில் கூறிவிடுவார். இதனால் இவரை அங்கிருந்த முனிவர்கள் தலை இருக்க வால் ஆடலாமா என்று கண்டித்தனர். தலைமைகுரு பதில் கூறும் முன்னே, இவர் பதில் கூறியதால் வால் என்று நகைப்புக்காக கூறியதால் இவர் பெயரே வாலகுருவாக மாறியதாகவும் கூறப்படுகிறது.21 வயதை எட்டிய இந்த வாலகுரு காசிக்கு பயணம் மேற்கொண்டார். தனது 24 வயதில் சொந்த ஊரான சீவலப்பேரிக்கு வந்தார்.
    #சுடலைமாடனை நோக்கி வேண்டினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய சுடலை ஈசன், நாளை காலை சூரிய உதயத்திற்கு பின் மூவாற்றங்கரையில் நான் லிங்கமாக தோன்றியிருப்பேன். என்றார்.
    #சீவலப்பேரி #சுடலைமாடசாமி #konar
    #seevalaperi #sudalaimadaswamy
    🎵 Track Info: Music: Devotional- Deepak Meenu Music Link: royaltyfreebgm...... ================================================================================ ➤ About Famous Audio Library Famous Audio Library is a channel to provide store, archives, publish copyright free music, royalty-free music, copyright-free background music for the content creators. ============================================================

ความคิดเห็น • 14