நீர் வாரும் கர்த்தாவே -பாமாலை 52 -22/12/2024 -பாடகர் குழு ஞாயிறு-பரிசுத்த அந்திரேயா ஆலயம் மைலப்புரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025
  • 22/12/2024 -பாடகர் குழு ஞாயிறு-பரிசுத்த அந்திரேயா ஆலயம் மைலப்புரம்
    பாமாலை 52
    -------------------------
    1. நீர் வாரும் கர்த்தாவே
    ராக்காலம் சென்று போம்
    ராக்காலம் சென்று போம்
    நீர் வாரும்(நீர் வாரும்)கர்த்தாவே
    மா அருணோதயம் காணவே
    ஆனந்தம் ஆகுவோம்
    ஆனந்தம் ஆகுவோம்
    ஆனந்தம் ஆகுவோம்.
    2. நீர் வாரும் பக்தர்கள்
    களைத்துச் சோர்கின்றார்
    களைத்துச் சோர்கின்றார்
    நீர் வாரும்(நீர் வாரும்)பக்தர்கள்
    நல்லாவி மணவாட்டியும்
    நீர் வாரும் என்கிறார்
    நீர் வாரும் என்கிறார்
    நீர் வாரும் என்கிறார்.
    3. நீர் வாரும் சிஷ்டியும்
    தான் படும் துன்பத்தால்
    தான் படும் துன்பத்தால்
    நீர் வாரும்(நீர் வாரும்)சிஷ்டியும்
    ஏகோபித்தேங்கி ஆவலாய்
    தவித்து நிற்பதால்
    தவித்து நிற்பதால்
    தவித்து நிற்பதால்.
    4. நீர் வாரும் ஆண்டவா
    மாற்றாரைச் சந்திப்பீர்
    மாற்றாரைச் சந்திப்பீர்
    நீர் வாரும்(நீர் வாரும்)ஆண்டவா
    இருப்புக்கோலால் தண்டித்து
    கீழாக்கிப் போடுவீர்
    கீழாக்கிப் போடுவீர்
    கீழாக்கிப் போடுவீர்.
    5. நீர் வாரும் இயேசுவே
    பயிர் முதிர்ந்ததே
    பயிர் முதிர்ந்ததே
    நீர் வாரும்(நீர் வாரும்)இயேசுவே
    உம் அரிவாளை நீட்டுமேன்
    மா நீதிபரரே
    மா நீதிபரரே
    மா நீதிபரரே.
    6. நீர் வாரும் வையத்தில்
    பேர் வாழ்வை நாட்டுவீர்
    பேர் வாழ்வை நாட்டுவீர்
    நீர் வாரும்(நீர் வாரும்)வையத்தில்
    பாழான பூமி முற்றிலும்
    நீர் புதிதாக்குவீர்
    நீர் புதிதாக்குவீர்
    நீர் புதிதாக்குவீர்.
    7. நீர் வாரும் ராஜாவே
    பூலோகம் ஆளுவீர்
    பூலோகம் ஆளுவீர்
    நீர் வாரும்(நீர் வாரும்)ராஜாவே
    நீங்காத சமாதானத்தின்
    செங்கோல் செலுத்துவீர்
    செங்கோல் செலுத்துவீர்
    செங்கோல் செலுத்துவீர்.

ความคิดเห็น •