சுவாமி விவேகானந்தரின் கடைசி நாட்களில் நடந்தது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • சுழுமுனை வழியாக
    ......................
    அதன் பிறகு சுவாமிஜி சுத்தானந்தரிடம் நூல் நிலையத்திலிருந்து சுக்ல யஜுர் வேத சம்ஹிதையைக்கொண்டு வருமாறு கூறினார். அவர் கொண்டு வந்ததும் அதிலிருந்து ஸுஷும்ண., ஸுர்ய ரச்மி, என்று தொடங்குகின்ற பகுதியை வாசிக்கச்சொன்னார். பிறகு அந்த மந்திரத்திற்கு மஹுதரர் எழுதியுள்ள விளக்கத்தைப் படிக்கச் சொன்னார். அதனைப் படித்த போது சுவாமிஜி, இந்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இல்லை.ஸுஷும்ண என்ற வார்த்தைக்கு இந்த ஆசிரியர் எந்த விளக்கத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும். எனக்கு என்னவோ, பின்னாளில் தந்திர சாஸ்திரங்கள் கூறுகின்ற ” சுழுமுனை நாடி” என்ற கருத்தின் விதை இங்கே இருப்பதாகத்தோன்றுகிறது. நீங்கள், என் சீடர்கள் சாஸ்திரங்களுக்குப் புதிய விளக்கங்கள் அளிக்க வேண்டும்” என்றார்.
    சுவாமிஜி படித்த மந்திரம் இது.
    கந்தர்வனின் உருவத்தில் இருக்கும் சந்திரனே சுழுமுனை.வேள்விகள் செய்பவர்களுக்கு அவனே இன்பத்தை வழங்குகிறான். அவனது கதிர்கள் சூரியக் கதிர்கள்போல் உள்ளன. அந்தச் சந்திரன் பிராமணர்களும் ஷத்திரியர்களுமாகிய எங்களைக் காக்கட்டும்! நாங்கள் எங்கள் ஆஹுதிகளை அவனுக்கு அளிக்கிறோம். அவனது அப்ஸர தேவதைகளே நட்சத்திரங்கள். அவர்கள் ஒளிரச் செய்பவர்கள். அவர்களுக்கும் எங்கள் ஆஹுதிகளை அளிக்கிறோம்.
    மஹுதரரின் பொருள் என்னவோ! சுவாமிஜி உணர்ந்தது என்னவோ! ஆனால் அவர் சுழுமுனை என்று கூறியதிலிருந்து ஒன்று தெளிவு- அவர் யோகிகளின் பாதையில் அந்தச் சுழுமுனை வழியாக தமது பிராணனை விடுவதற்குச் சித்தமாகி விட்டார்.!
    பொதுவாக மதிய உணவை சுவாமிஜி தமது அறையிலேயே உண்பார்.ஆனால் அன்று வந்து அனைவருடனும் அமர்ந்து உண்டார். சாப்பிடும் போதும் வேடிக்கை வினோதங்கள் பேசி அனைவரையும் மகிழச் செய்தார்.நேற்று ஏகாதசி விரதம் இருந்ததால் இன்றுபசி அதிகமாகி விட்டது. பானை சட்டிகளை விட்டு வைத்தாலே போதும் என்று தோன்றுகிறது” என்றார். சாப்பாட்டிற்குப் பிறகு சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு, வழக்கத்திற்குச் சுமார் அரை மணிநேரம் முன்பாக சம்ஸ்கிருத வகுப்பு நடத்தத் தொடங்கினார். தாமே பிரம்மச் சாரிகளின் அறைக்குச்சென்று அவர்களை அழைத்து வந்தார். தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரம் வரதராஜர் எழுதிய ”லகு ஸித்தாந்த கௌமுதி” என்ற சம்ஸ்கிருத இலக்கண நூலைக் கற்பித்தார். அதையும் இடையிடையே வேடிக்கைக் கதைகள் கலந்து கற்பித்து பிரம்மச் சாரிகள் யாரும் சோர்வடையாதபடி பார்த்துக் கொண்டார். இப்படி வேடிக்கையைக் கலந்து, தம் நண்பனாகிய தாசரதி சன்யாலுக்குத் தாம் ஒரே நாளில் ஆங்கில வரலாற்றைக் கற்பித்தது பற்றி கூறினார்.
    ...
    நன்றாக இருக்கிறேன்
    ...................
    மாலை சுமார் 4 மணி. இளம் சூடான பாலும் தண்ணீரும் சாப்பிட்டார். பிறகு பிரேமானந்தருடன் ஒரு மைல் தூரம் பேலூர் கடைத்தெரு இருந்த திசையில் நடந்தார். வழியில் ஒரு தோட்டம் கவனிப் பாரற்ற நிலையில் கிடந்தது. அதைக் கண்டு, அமெரிக்காவில் ரிஜ்லிமேனரில் உள்ள தோட்டம் எவ்வளவு தூய்மையாக, அழகாகப் பராமரிக்கப் படுகிறது என்பதைக் கூறினார். எந்திரங்கள் அதிகம் இருப்பதால் ஆட்கள் அதிகம் தேவையில்லை என்பதை எடுத்துக் காட்டினார். பின்னர் வேதக் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்ற தமது திட்டத்தை க் கூறினார். அப்போது பிரேமானந்தர், வேதங்களைப் படிப்பதால் என்ன நன்மை?என்று கேட்டார். மூட நம்பிக்கைகள் ஒழியும்” என்று பதிலளித்தார் சுவாமிஜி. வேதங்கள் பற்றிய நூல்களை வாங்குவதற்காக முந்தினநாள் தான் அவர் பம்பாய்க்கும் பூனாவிற்கும் கடிதங்கள் எழுதியிருந்தார். பிறகு மனித நாகரீகங்களின் வளர்ச்சி பற்றி பேசினார். எல்லா நாடுகளின் வரலாறுகளிலிருந்தும் உதாரணம் காட்டினார்.
    மாலை சுமார் 5.30 மணி. இருவரும் மடத்திற்குத் திரும்பினர். பின்னர் சுவாமிஜி ஐரோப்பா நாகரீகம் பற்றி பேசினார். அந்த நேரத்தில் மாலை ஆரதிக்கான மணி அடித்தது. பிரேமானந்தர் பூஜை செய்வதற்காகச் சென்றார். சுவாமிஜி சிறிது நேரம் ஈசுவர சந்திரருடன் பேசிக் கொண்டிருந்தார். கிழக்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த விரஜேந்திரர் என்ற இளைஞர் அப்போது சுவாமிஜிக்குச் சேவைகள் செய்து வந்தார். அவரிடம், சுவாமிஜி, இன்று என் உடம்பு மிகவும் லேசாக இருக்கிறது. இன்று நான் நன்றாக இருக்கிறேன்” என்று கூறினார்.நேராக மாடியில் தமது அறைக்குச் சென்ற அவர் தமது ஜபமாலையைக் கொண்டு வருமாறு விரஜேந்தரிடம் கூறினார். பின்னர் அவரிடம் வெளியில் அமர்ந்து தியானம் செய்யுமாறு கூறிவிட்டுத் தாமும் தியானத்தில் அமர்ந்தார். வழக்கத்திற்கு மாறாக அன்று அவர் வடமேற்கு நோக்கி அமர்ந்தார்.
    மறைகிறார்!
    ...................
    சுமார் 6.30 மணி. சீடரைக் கூப்பிட்டு உஷ்ணமாக இருப்பதாகவும் அறையின் ஜன்னல்கள், கதவுகள் அனைத்தையும் திறந்து விடுமாறும் கூறினார். அப்போது அவரது கையில் ஜபமாலை இருந்தது. பிறகு அவர் தமது தலையில் சற்று விசிறுமாறு கூறினார். சிறிது நேரம் வீசியதும், போதும், இனி வீசத் தேவையில்லை. என் கால்களைச் சற்று பிடித்து விடு” என்றார். சீடர்கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும்போதே சுவாமிஜி லேசாகத் தூங்கியது போல் தோன்றியது.
    சுவாமிஜி இடது பக்கமாகப் படுத்திருந்தார். நேரம் கழிந்தது. ஒரேயொரு முறை திரும்பி வலது பக்கமாகப் படுத்திருந்தார். திடீரென்று அவரது கைகள் ஒரு முறை நடுங்கின. கனவு கண்ட குழந்தை மெல்லிய குரலில் அழுவது போல் சுவாமிஜியிடமிருந்து ஒரு சத்தம் எழுந்தது. சிறிது நேரத்தில் ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்தார்.அவரது தலை தலையணையில் துவண்டது. மீண்டும் ஒரு முறை அதே போல்ஆழ்ந்து மூச்சை இழுத்தார். பிறகு எல்லாம் நிசப்தம்! மணி சுமார் 9.
    சுவாமிஜி சமாதியில் ஆழ்ந்ததாக நினைத்தார் விரஜேந்திரர். இருப்பினும் சற்றே கவலையுடன் கீழே ஓடி அத்வைதானந்தரை அழைத்து வந்தார். அந்த வேளையில் இரவு உணவிற்காக மணி அடித்தது. அனைவரும் வந்து சுவாமிஜியைப் பார்த்தனர். அத்வைதானந்தர் சுவாமிஜியின் நாடியைப் பரிசோதித்தார். அவருக்கு எதுவும் புரியவில்லை.

ความคิดเห็น • 203

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 2 ปีที่แล้ว +6

    நான் ஒரு சுவாமிஜி யின் பக்தை அவருடைய பொன் மொழிகள் எல்லாம் அருமையான பதிவு

  • @muthukumars3668
    @muthukumars3668 3 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் சுவாமி விவேகானந்தர் நினைவுகள் அனைத்தும் நல்ல அருமையான கருத்துக்கள் 🙏🙏🙏

  • @jeevasakthi5858
    @jeevasakthi5858 3 ปีที่แล้ว +6

    தங்கள் காணொலிக்கு மிக்க நன்றி.
    விவேகானந்தரை பணிகிறேன்

  • @kannigagiri8916
    @kannigagiri8916 3 ปีที่แล้ว +7

    Video filled with divinity. Those who blessed can deserves the blessings of swami.this vide made me speechless. Gone in to the depth. Tq.God bless you people around this spiritual path..

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 ปีที่แล้ว +65

    ஞான சூரியன், ஒரு போதும் மறைவதில்லை. என்றென்றும் நம் மனதில் வாழ்ந்து ஒளி வீசுவார்.

    • @worldwidefriendsorganizati7575
      @worldwidefriendsorganizati7575 3 ปีที่แล้ว +4

      சுவாமி காற்றலைகளில் கலந்து என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள். நன்றி வாழ்க வளமுடன்!👌🎁💝🙅👏👏👏

    • @venkatesananaimalai1989
      @venkatesananaimalai1989 3 ปีที่แล้ว

      0lllp

    • @manimegalairadhakrishnan6095
      @manimegalairadhakrishnan6095 3 ปีที่แล้ว +1

      ⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰

    • @bharathimurugeshan3078
      @bharathimurugeshan3078 3 ปีที่แล้ว

      Be

    • @rosekannan4486
      @rosekannan4486 3 ปีที่แล้ว

      6 FYI

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 3 ปีที่แล้ว +23

    வீரத்துறவி விவேகானந்தரின் கடைசிநேர சிந்தனையும் மிக அறிவுப்பூர்வமாகவும் பிறருக்கு உகந்ததாக இருந்தது வணங்குகிறேன்

  • @vishwajeyesni
    @vishwajeyesni 3 ปีที่แล้ว +50

    பாரதத்தின் இறைநட்சத்திரம் ஸ்வாமிஜி!

  • @Bharathiyan.
    @Bharathiyan. 3 ปีที่แล้ว +14

    எனது வாழ்வின் உத்வேகம்.
    சுவாமி ஜீ😭

  • @ramajayam854
    @ramajayam854 2 ปีที่แล้ว +3

    சுவாமிஜு சிவபெருமான் ஆவார் ஓம் நமசிவாய நமாக

  • @veeraswamysankaran5095
    @veeraswamysankaran5095 3 ปีที่แล้ว +9

    Humble Pranams to Shri Swamiji. Great Saint of last century. Wish to visit these holy places where Swamiji lived & attained Siddhi. Shri Gurubyo Namaha.🙏

  • @mohanakrishnan9321
    @mohanakrishnan9321 3 ปีที่แล้ว +20

    என் தெய்வம் சுவாமி விவேகானந்தர்.....
    என் உயிர் மூச்சே அவர் தான்

  • @jananichitra7558
    @jananichitra7558 3 ปีที่แล้ว +75

    கண்களில் கண்ணீர்... இதயத்தில் அவரது போதனை..இறைவா ....அவரை மீண்டும் பூமிக்கு அனுப்பு... எல்லாவற்றையும் மாற்றும் இறைவனாக....

  • @gayathriethavarajah6409
    @gayathriethavarajah6409 3 ปีที่แล้ว +2

    சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம
    சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம
    சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம
    சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம
    சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 ปีที่แล้ว +1

    Deeply touched.
    Much I learn from his speeches.He shredded his body.
    Pranams to Swami ji.

  • @geethamohan1922
    @geethamohan1922 3 ปีที่แล้ว +54

    இந்த ஆன்மிச் சூரியனுக்கு அழிவே இல்லை. வாழ்க்கையை தன் திட்டப்படி மாற்றியமைத்து வாழ்ந்து காட்டிய மகான் மீண்டும் பிறக்க ஈசன் அருள்வாராக.

  • @karthikeyanalguselvamraj9346
    @karthikeyanalguselvamraj9346 3 หลายเดือนก่อน +1

    My hero இந்தியாவின் மாவீரன்

  • @SriGuruDrSivakumar
    @SriGuruDrSivakumar ปีที่แล้ว +6

    அவர் கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.. அந்த காலத்தில் நீரழிவு நோய் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை.. நோய் முற்றியதாலேயே மரணம் நிகழ்ந்தது

  • @srinevasanam5916
    @srinevasanam5916 3 ปีที่แล้ว +4

    Excellant narration My eyes r full of water, Great soul Swamigal,

  • @narayananpuducode1516
    @narayananpuducode1516 3 ปีที่แล้ว +4

    Kodi Kodi Pranams at the holy lotus feet of Swamiji Maharaj🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 ปีที่แล้ว +5

    நன்றி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

  • @kv3913
    @kv3913 3 ปีที่แล้ว +14

    My thought this channel one of gift for me....
    My Guru swami Vivekananda.......

  • @balabalasubramaniam445
    @balabalasubramaniam445 3 ปีที่แล้ว +6

    சுவாமி விவேகானந்தர் என்ற வீரத்துறவி என் பேரு தன்னம்பிக்கைதான்

  • @srishylajav135
    @srishylajav135 3 ปีที่แล้ว +14

    ஓம் விவேகானந்தரே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasekarbalasekar3540
    @balasekarbalasekar3540 3 ปีที่แล้ว +13

    My guru swami vivekanadar

  • @omprakashar9038
    @omprakashar9038 3 ปีที่แล้ว +8

    🙏Vivekanandhar🙏iraivanArulpetra🙏 🙏 Makaan Aanmeeka Asaan 🙏🙏🙏 🙏Meendum Avatharikkavendum iraiva 🙏

  • @hemarao5496
    @hemarao5496 3 ปีที่แล้ว +10

    deeply touched rhe last moments of Great Saint Swami Vivekananda....every moment I always think Great saint....when I read his great messages to younger generation Ieel this is very important to all of us....Swami Vevekananda is the incarnation Lors Shiva and he is the first desciple of Great Guru Shri Ramakrishna Paramahamsa who is the incarnation of Lord Vishnu.....my humble namaskarams to Great saints🕉 🕉🕉🌹🌹🍇🍎🍐🙏🙏🙏❤️❤️❤️

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 3 ปีที่แล้ว +11

    MARVALES. My pranams to all the great divine masters. India is invisible. Only yogis can see.

  • @ramachandransankaran7677
    @ramachandransankaran7677 3 ปีที่แล้ว +6

    Swami Vivekanandar 🙏🙏🙏🙏🙏
    Awadara Swamigal, Pranam.

  • @parthasarathi6659
    @parthasarathi6659 3 ปีที่แล้ว +5

    Super video many information I got it...
    Nanri

  • @honeyflower4301
    @honeyflower4301 3 ปีที่แล้ว +6

    ஸ்வாமிஜியின் ஆன்மீக ஜோதியை புரிந்து கொள்வோம்.

  • @Sathya1404
    @Sathya1404 3 ปีที่แล้ว +3

    Swamiji.. you are with us forever and ever 🙏🙏🙏

  • @balanu9146
    @balanu9146 3 ปีที่แล้ว +4

    உன்மை ! உன்மை ! மிக்க நன்றி !

  • @gowrishankar5067
    @gowrishankar5067 3 ปีที่แล้ว +21

    இவர் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் 🙏👍

  • @vijayalakshmip7127
    @vijayalakshmip7127 3 ปีที่แล้ว +7

    Dislike போட்டவர்கள் பொறாமையால் செய்கின்றனர். வேறு மத்ததவர்

  • @kodimullai4806
    @kodimullai4806 3 ปีที่แล้ว +50

    சுவாமிஜி!!!!! அகல்விளக்கு ! இந்தியனின் அணையா விளக்கு!!!

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 ปีที่แล้ว +24

    I love Swamy Vivekananda.

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 ปีที่แล้ว +6

    Swamy viveka Nanda ki Koti pranaam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrakala6413
    @chitrakala6413 3 ปีที่แล้ว +11

    Swami Vivekanandar oru yuga purushar India's pokkisham

  • @suganthikumar8234
    @suganthikumar8234 3 ปีที่แล้ว +29

    சிவாய நம ஓம் 🙏

  • @balasubramaniammariyappan209
    @balasubramaniammariyappan209 3 ปีที่แล้ว +4

    Jai shree Swami Maharjikku Jai

  • @jeyapandianv8421
    @jeyapandianv8421 3 ปีที่แล้ว +3

    மா மகான் சுவாமிஜி அவர்கள் 🙏🙏🙏🙏

  • @gunashekarmdu82
    @gunashekarmdu82 3 ปีที่แล้ว +7

    Jai Guru Dev

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว +6

    Swamijeegreat

    • @krishnahare5591
      @krishnahare5591 3 ปีที่แล้ว

      Jai Sairam Jai Sriram 😇🙌🙏

  • @rajeshvenkatraman5964
    @rajeshvenkatraman5964 3 ปีที่แล้ว +9

    The Great Mahatma

  • @pgnanasekarangnanasekaran2504
    @pgnanasekarangnanasekaran2504 3 ปีที่แล้ว +7

    பாரதத்தாயின் தவப்பதல்வன். காலா காலத்தும் வாழும் புகழ்.

  • @jkumarRams
    @jkumarRams 3 ปีที่แล้ว +14

    05:18 உறுதியாக பிரம்மச்சர்யத்தை அனுஷ்ட்டிக்கிற ஒருவன் ஒருமுறை கேட்டதை, படித்ததை தன் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டான்...._____ ஸ்வாமிஜி

    • @mohanelumalai8824
      @mohanelumalai8824 3 ปีที่แล้ว +1

      இந்தமகாணுக்கு. சிரம்மட்டுமே. தாழ்த்தமுடியும். நான்ஓருகாளிபக்தன். நன்றி

    • @govindsamy5525
      @govindsamy5525 3 ปีที่แล้ว +1

      Good

    • @indranit9867
      @indranit9867 3 ปีที่แล้ว +1

      Swamiji saranam🎪

  • @kannammalmoorthi17
    @kannammalmoorthi17 8 หลายเดือนก่อน

    ஐயா நன்றி மிகவும் தெளிவான குறள் வளம் நரேன் ஐயா வை நேரில் பார்த்த மாதிரி இருந்தது கண்ணில் நீர் பெருக்கெடுத்து

  • @ganeshganesh404
    @ganeshganesh404 3 ปีที่แล้ว +26

    காலம் கடந்த ஒன்றை உணர்ந்தவர்...

  • @sreenivasan4288
    @sreenivasan4288 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 ปีที่แล้ว +2

    சுவாமி விவேகானந்தர் நாமம் வாழ்க

  • @elangopn2389
    @elangopn2389 3 ปีที่แล้ว +31

    இந்தியாவின் இறுகிய வடிவம் அவர்.

    • @GK-hn2pv
      @GK-hn2pv 3 ปีที่แล้ว

      What did you mean

  • @kthani2819
    @kthani2819 3 ปีที่แล้ว +7

    பஞ்சாங்கம் அதில் உத்தராயணத்தில் . உடலில் இருந்து பிரதான் பிரிவது விரும்பியுள்ளார் விருப்பம் காளி தெய்வத்தால் அங்கீகரிப்பு குறுகியவயதுடன் பெரிய பணியை செய்ய அனுமததிக்கப்பட்டார்

  • @m.someshwarisomesh.m8758
    @m.someshwarisomesh.m8758 ปีที่แล้ว +2

    இந்தியாவின் ஆன்மீக மனிதர்

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 5 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம் வாழ்க

  • @sellwell8025
    @sellwell8025 3 ปีที่แล้ว +12

    ஆன்மீக சூரியன் பற்றிய அற்புதமான உரை...

  • @rajathangams6991
    @rajathangams6991 3 ปีที่แล้ว +18

    பகவான் பாதம்பணிகிறேன்

  • @jakirjr4639
    @jakirjr4639 11 วันที่ผ่านมา +1

    சுய ஒழுக்கத்தின் மொத்த உருவம் சுவாமி ஜி அவர்கள்

  • @shanthiselvaraju2779
    @shanthiselvaraju2779 3 ปีที่แล้ว +6

    🙏🙏ஞானக்கொழுந்தே. போற்றி குருவே சரணம் 🙏🙏

  • @thirumanthiramjanakiraman5761
    @thirumanthiramjanakiraman5761 3 ปีที่แล้ว +8

    Swamy Vivekananda is Very Great. He is incomparable, invincible Maharishi

  • @puviarasan4250
    @puviarasan4250 3 ปีที่แล้ว +13

    🙏🙏🙏

  • @gopalansubbiah1732
    @gopalansubbiah1732 ปีที่แล้ว +2

    Jai vivekanandar
    Namaste 🙏

  • @narayanananr.k.1789
    @narayanananr.k.1789 3 ปีที่แล้ว +2

    Jai Sathguru Maharajiki Jai !!!!
    🙏🙏🙏🙏🙏

  • @opff7661
    @opff7661 3 ปีที่แล้ว +2

    Swami ji marayavillai, endrendrum valnthu kondirukkirar

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @selvamselvam8678
    @selvamselvam8678 3 ปีที่แล้ว +27

    இறைவனின் சீடர் 😪😪😪

  • @kumarraj5799
    @kumarraj5799 3 ปีที่แล้ว +17

    சுவாமி விவேகானந்தர் 🙏🙏🙏

  • @shalini0702
    @shalini0702 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை ஐயா

  • @SarigJpn
    @SarigJpn 3 ปีที่แล้ว +5

    குருவேசரணம்

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @sridharmha1917
    @sridharmha1917 3 ปีที่แล้ว +6

    Swamiji thiruvadi saranam

  • @viswanathantm1305
    @viswanathantm1305 3 ปีที่แล้ว +2

    Our dear Spirtual Father, Thanks for enlightening all of across the world. Your one of the strongest and kindest ever born for guiding all of us.

  • @akashanbu8019
    @akashanbu8019 3 ปีที่แล้ว +16

    ஓம்சிவாய நம

  • @UmaMaheswari-yk6ff
    @UmaMaheswari-yk6ff 3 ปีที่แล้ว +2

    Nice information

  • @Capevloger
    @Capevloger 3 ปีที่แล้ว +2

    Great leader & guru swami vivekanand

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 3 ปีที่แล้ว +7

    பாரதத்தின் ஒளி

  • @shivakuroop4948
    @shivakuroop4948 3 ปีที่แล้ว +3

    Beautiful

  • @sakthivelav7168
    @sakthivelav7168 3 ปีที่แล้ว +3

    Om namasivaya

  • @arumugam67padhmavathy77
    @arumugam67padhmavathy77 3 ปีที่แล้ว +2

    Greatest gurudevar

  • @rbalajiyadav3039
    @rbalajiyadav3039 3 ปีที่แล้ว +1

    வாழும் மாஹன் சுவாமி ஜி.

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว +1

    Arise Awake and stop not till the goal is reached Swami Vivegananda

  • @sampangiSam-zm3gc
    @sampangiSam-zm3gc 10 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 3 ปีที่แล้ว +9

    🙏🙏🙏🙏🙏🙏

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 ปีที่แล้ว +1

    FAITH AND COURAGE PRAVAIL EVERYWHERE

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +10

    அவர் கூறியது போலவே 40 ஆவது
    ஆண்டில் அவர் ஆயுள் நீடிக்கவில்லை
    அவர் மரணத்தை அவரே அறிந்த மகான்
    கடவுள் தான் சுவாமி விவேகானந்தர் 🙏
    ஏசு கிறிஸ்து போல இவரும் கடவுள் 🙏
    எனக்கு மிகவும் பிடித்த தெய்வங்கள் 😭
    இவர்களைபோன்றே மிகவும் பிடித்த
    இன்னொரு தெய்வம் இசைஞானி 🙏
    எனக்கும் இந்த மே 1 தான் 39
    வயது முடிந்து 40 வது வருடம்
    தொடங்கியுள்ளது சுவாமி ஜி 😭
    எனக்கும் தங்களைப் போன்றே
    மரணத்தைத் தழுவ வேண்டும்
    என்று நினைக்கிறது என் மனம்
    இவ்வுலகில் வாழவே பிடிக்கவில்லை

    • @sivanchayasingh2620
      @sivanchayasingh2620 ปีที่แล้ว

      எனக்கும் இவ்வுலகில் வாழ பிடிக்கவில்லை நான் உங்களோடு வரலாமா உங்களிடம் நண்பராகலாமா?

  • @Breeze151
    @Breeze151 3 ปีที่แล้ว +6

    Ohm Namasivaaya 🙏🙏🙏🙏🙏 Ellam neeye....

  • @manikandanayyanapillai7336
    @manikandanayyanapillai7336 3 ปีที่แล้ว +5

    ஸ்வாமிஜி ஒரு கடவுள் அவதாரம் !🙏🙏🙏

  • @jayaramand2695
    @jayaramand2695 3 ปีที่แล้ว +2

    மிகப்பெரிய மகான்...

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 3 ปีที่แล้ว +1

    Om Namasivaya siddam Namaham.

  • @ravichandiranl5298
    @ravichandiranl5298 3 ปีที่แล้ว +5

    Thanks

    • @swamividyananda
      @swamividyananda  3 ปีที่แล้ว

      Welcome

    • @shanmugamkesavan4383
      @shanmugamkesavan4383 3 ปีที่แล้ว

      வீரத்துறவி மீண்டும் இந்த
      மண்ணில். மலர வேண்டும்

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 3 ปีที่แล้ว +6

    Man's life is preordained.
    Every one should get ready to enjoy the death

  • @swaminathanshanmugam63
    @swaminathanshanmugam63 3 ปีที่แล้ว +1

    you have done a very very good job... about his last days... nandrigal kodi ...

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb 3 ปีที่แล้ว +2

    ஐயா நான் உங்களை பார்க்க வேண்டும். மேலும் நீங்கள் என் வீட்டிற்கு வருவீர்களா?

    • @swamividyananda
      @swamividyananda  3 ปีที่แล้ว

      எதிர்காலத்தில் பார்க்கலாம்

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว +1

    Brothers Sisters How the kindness of Swami? No caste and creed JaiSai Muruga Nunthala Nilgiris Dr Saidasan

  • @malairajnadarmalairajnadar8096
    @malairajnadarmalairajnadar8096 3 ปีที่แล้ว +1

    Anpayshivam
    Arivayprathanam

  • @chokkalngama5508
    @chokkalngama5508 3 ปีที่แล้ว +3

    Om

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 2 ปีที่แล้ว

    👏👏

  • @sedhuraman7003
    @sedhuraman7003 3 ปีที่แล้ว +2

    விவேகானந்தரின் கடைசீ நேரத்தில் நான் அவரருகில் இல்லை
    ஆகவே நடந்தது எனக்குத் தெரியாது

  • @GK-hn2pv
    @GK-hn2pv 3 ปีที่แล้ว +3

    கலங்குதே கண்கள்

  • @rajakodik3195
    @rajakodik3195 3 ปีที่แล้ว +6

    Good news

  • @renugadevipadmanabhan8947
    @renugadevipadmanabhan8947 3 ปีที่แล้ว +1

    My motivation