ராகமஞ்சரி 2 | Nithya Mariappan Audio Novels | Tamil novels audio books | Love and Romance Novels

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • / @nithyamariappanaudion...
    கண்ணாமூச்சி ஏனடி ரதியே முழுநாவல்
    • கண்ணாமூச்சி ஏனடி ரதியே...
    கழிமுகம் முழுநாவல்
    • கழிமுகம் முழுநாவல் | N...
    “ஏய் ட்வார்ஃப், என் கூட நில்லுனு சொன்னா தனியா விட்டுட்டு வர்ற?”
    “நீ என்னை ஹக் பண்ணிட்டு நிப்ப... நான் ஒன்னும் சொல்லாம உன் கூடவே நிக்கணுமாக்கும்?”
    “ஓ! அது தான் காரணமா? பட் அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது... நேத்து உன்னை ஷாரில பாத்ததுல இருந்து நான் நானா இல்ல”
    கேலியுடன் வந்தாலும் அவை உண்மையான வார்த்தைகள். நடந்து கொண்டிருந்த சேஷா சட்டென்று நின்றாள்.
    “என்ன பாக்குற? உனக்கே தெரியும், உன்னை ஃபர்ஸ்ட் டைம் பஸ் ஸ்டாண்ட்ல பாத்தப்ப என் ஹார்ட் கொஞ்சம் தடுமாறுச்சுனு... அதே மாதிரி தான், நேத்து உன்னை ஃபர்ஸ்ட் டைம் ஷாரில பாத்ததும் மை ஹார்ட் மெல்ட்ஸ்”
    “பாத்துடா, உருகி வெளிய வந்துடப்போகுது... அப்புறம் உடம்புக்கு யார் ப்ளட் சப்ளை பண்ணுறது?”
    கேலியாகப் பேசியபடியே அலையை நெருங்கியவள் பிரம்மாண்ட அலை ஒன்று வரவும் “ஐயோ” என்று பதறி அவன் மீது மோதிக்கொள்ள ராகவின் கரங்கள் அவளைச் சுற்றி வளைத்துக்கொண்டது.
    வலிய கரங்களுக்குள் அடங்கி கிடந்தவளுக்கு தன்னை அவன் தூக்கிச் சுழற்றுவது தெரிந்ததும் கண்களைத் திறந்தாள். நொடிப்பொழுதில் கரையைத் தழுவ வந்த அலைக்குப் புறமுதுகு காட்டி சேஷாவை அலையிலிருந்து காத்திருந்தான் ராகவ்.
    அலையின் உப்புநீர்த்துளிகள் அவனது முதுகை நனைத்ததோடு சேஷாவைத் தீண்ட முடியாத தோல்வியை ஏற்றுக்கொண்டு மீண்டும் சமுத்திர ராஜனிடம் சரணடைந்தது.
    சேஷா பிரமித்து விழிக்கும் போதே “என்ன கண்ணுடா, விட்டா முழுங்கிடுவ போலயே” என்றான் ராகவ் குறும்பாக.
    நாப்பது கிலோ பெண்ணைத் தூக்கிக்கொண்டு நிற்பவனைப் போலன்றி என்னவோ பூங்கொத்தைத் தூக்கி முகத்துக்கு நேரே பிடித்திருப்பதைப் போன்ற பாவனை அவனது முகத்தில்!
    “ராகவ்”
    திணறலாய் வந்த சேஷாவின் குரலில் இயல்புக்குத் திரும்பி அவளை கீழே இறக்கிவிட்டான்.
    “சோ உன்னை அலையில இருந்து காப்பாத்துனதுக்கு எனக்கு என்ன தருவ?”
    கை நீட்டி குறும்பு மின்ன கேட்டவனின் விழிகளைக் கண்டதும் சேஷா திகைத்துப் போனாள். இதயம் படபடவென இயல்புக்கு மாறான வேகத்துடன் துடிக்க இனம் புரியாத உணர்வு உடலெங்கும் பரவ பேச வார்த்தையின்றி நின்றாள் அவள்.
    ------
    Stay tuned makkale!
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobook
    #nithyamariappantamilaudionovels
    #nithyamariappanaudionovels
    #loveandromanticnovels
    #tamilaudiobooks
    #tamilaudiostory
    #tamilaudiostorybook
    #tamilstoriesandpodcasts
    #ramanichandrantamilnovelsaudio
    #tamilsirukathai

ความคิดเห็น • 7