INDIA BOOK OF WORLD RECORDS-நந்தபாலன்ரகுராமன் (Age 4) 6KM SKATING 33 நிமிடங்கள் - உலக சாதனை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • ஓசூரில் ஸ்கேட்டிங் போட்டியில் உலக சாதனை படைத்த தனியார் பள்ளி சிறுவர்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்கேட்டிங் போட்டியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் குறைந்த நேரத்தில் அதிக தூரத்தை கடந்து உலக சாதனை படைத்துள்ளனர்.
    ஓசூர் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது மாணவன் ஜே.கிறிஸ்டோபர் சார்லஸ், தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து, 18 கிலோமீட்டர் தூரத்தை 53 நிமிடங்களில் பயணித்து உலக சாதனை படைத்துள்ளார் இவர் ஏற்கனவே இதே அளவான தூரத்தை 58 நிமிடங்களில் கடந்து படைத்த சாதனையை 5 நிமிடம் முன்கூட்டியே பயணித்து இன்று உலக சாதனை படைத்துள்ளார்.
    அதே பள்ளியில் எல்கேஜி வகுப்பு படிக்கும் ஓசூரை சேர்ந்த நான்கு வயது மாணவன் நந்தபாலன் ரகுராமன் ஆறு கிலோமீட்டர் தொலைவு தூரத்தை ஸ்கேட்டிங்கில் 33 நிமிடங்களில் பயணித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் இவரும் ஏற்கனவே நிகழ்த்தியிருந்த ஸ்கேட்டிங்கில் ஆறு கிலோமீட்டர் தொலைவு பயணத்தை 38 நிமிடங்களில் பயணித்ததை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்த இரண்டு சிறுவர்களுமே தத்துவா ஸ்கேட்டிங் கிளப் என்ற தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இன்று ஓசூரில், இந்தியா புக் ஆப் கோல்டு ரெக்கார்ட்ஸ், தலைமை எடிட்டர், டாக்டர் கே சதாம் உசேன், முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் சாதனை படைத்துள்ள இரண்டு சிறுவர்களையும் கவுரவித்து பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்கள்.

ความคิดเห็น •