🔴 நடிப்பு சுதேசிகள் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
- நூல்:
பாரதி கவிதைகள்
பாடியவர்:
மகாகவி. பாரதியார்
தலைப்பு:
நடிப்பு சுதேசிகள்
கவிதை:
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ!-கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ!-கிளியே!
நாளில் மறப்பா ரடீ
சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ?-கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ ?
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ!-கிளியே!
பேசிப் பயனென் னடீ
யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும்-கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ !
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ!-கிளியே!
செய்வ தறியா ரடீ!
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால்-கிளியே!
நம்புத லற்றா ரடீ!
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக்-கிளியே!
பேணி யிருந்தா ரடீ!
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக்-கிளியே!
அஞ்சிக் கிடந்தா ரடீ!
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ-கிளியே!
ஊமைச் சனங்க ளடீ!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும்-கிளியே!
வாழத் தகுதி யுண்டோ ?
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில்-கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ?
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்!-கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை!-கிளியே!
பாமர ரேதறி வார்!
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே!-கிளியே!
சிறுமை யடைவா ரடீ!
சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ!-கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும்-கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா-கிளியே!
வந்தே மாதர மென்பார்!
#bharathiyar #bharathiyarquotes
#bharathi #bharathiyarkavithaigal #bharathiyar_varigal #bharathikannamma #bharathiyarsong #bharathiar #bharathiyarkavithai #bharathiyarquotesareinspiring #kadavulbharathi #bharathiyarmedia #bharathiyarkavithaigalismyinspiration🔥 #bharathilove #bharathians #Ajithbharathi #bharathi #tamilan #ajithbharathi #tamil #kavithaigal #bharathistatus #mahakavi #bestpoems
Porul sollunga bro please
Sorry nisha for late reply...innaiku thaan paathen❣
காலத்துக்கேற்ப வேஷம் போட்டு மாலை மரியாதைகளை பெற்று உள்ளதால் கள்ளராய் புறத்திலும் பெரியவராய் திரிபவர்கள் பலர் பாரதியார் காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய உள்ளமே தம் கள்ளத்தை உணர்ந்து தமது நிலைக்கிரங்கி வெட்கித் தலை குனியும்படி பழித்து அறிவுறுத்துவனவாக அமைந்த பாடல்களைக் கிளிக் கன்னிகளாகப் பாடித் தந்திருக்கிறார் பாரதியார்.
சோலையில் திரியும் பசுங்கிளியை நோக்கித் தாளத்துடனும் இசையுடனும் பாடுவது போல அமைந்த மூன்றடிப் பாடல்கள் கிளிக் கண்ணிகள் எனப்படும். அடி தோறும் கிளியே கிளியே என்று விளிப்பது இப்பாடல்களின் தனி சிறப்பு.
நம் நாட்டிலே சொல்லில் வீரராகவும் செயலில் வஞ்சகராகவும் பலர் இருக்கிறார்கள். இவர்களுடைய உள்ளத்தில் வீரமும் இல்லை. நேர்மை ஒழுக்கம் என்ற பண்புகளும் இல்லை.. கூட்டத்திலே சபைகளிலே கூடி நின்று கொள்கைகளையும் திட்டங்களையும் விசாலமாக பேசுவதுடன் இவர்கள் நின்று விடுவார்கள். அப்படிப் பேசியதை அன்றே மறந்துவிடும் இந்த வஞ்சகர் செயலில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். தமக்கே தாம் குருடராக வாழுபவர்களுக்குச் சொந்த அரசாட்சியும் அதனால் கிடைக்கும் சுகங்களும் எப்படி உண்டாகும். ஆணுமல்லாத பெண்ணுமல்லாத பேடிகள் எங்கேனும் இன்பம் காண்பதுண்டா? இரண்டு கண்களிலிருந்தும் அவற்றில் பார்வையை இழந்த பெண்கள் கூட்டம் போல இவர்கள் ஏதாவது கருத்தின்றிப் பிதற்றுவார்கள். இத்தன்மையான நடிப்புச் சுதேசிகளைப் பற்றி பேசுவதனால் ஏதும் பயனுண்டாமோ?
தேசிய இயக்கம் தீவிரமாகப் பரவிய அக்காலத்தில் பாரத நாட்டிலே உள்ள தேசபக்தர்கள் பிற நாட்டுத் துணிகளையும் அந்நியருடைய “மில்” துணிகளையும் போட்டுக்கொண்டு உள்நாட்டுக் கைத்தறி துணிகளை ஆதரித்து வந்தனர். மஹாத்மா போன்ற பெரியார்கள் உப்பு சத்தியாகிரகம் செய்து சிறை புகுந்த காலம் அது.
ஆலைத்துணி - கதர் - நம் நாட்டுத் துணி, உப்பு, சீனி என்று பலவற்றை கூறிக்கொண்டு தாமும் உண்மையான சுதந்திர வீரர்போல பேசித் திரிகிறார்கள். மந்திரத்தால் மாங்கனி வீழ்த்தியதுபோல இருக்கிறது இந்த நெஞ்சுரம் அற்றவர் செயல்.
பெண்களின் மானம் தெய்வ பக்தி என்றெல்லாம் இந்த வஞ்சகர் பேசுகிறார்களே! உண்மையில் இவர்கள் அவற்றில் நம்பிக்கை உடையவர்களா? அப்படியானால் அந்நியர் நம் பாரதப் பெண்களின் கற்பை அழித்துக் கொடுமைகள் செய்யப் பார்த்துக்கொண்டு பேதையர் போல் வாளா இருப்பாரா? தேவியின் கோயிலிலே சொல்லொணாத கொடுமைகளை எல்லாம் அந்த அந்நியர் செய்யும்போது தங்கள் உயிரே பெரிதென்று அஞ்சியோடி ஒளித்தார்களே! இவர்களா சுதந்திரப் பற்றுக்கொண்ட உண்மைச் சுதேசிகள்?
அச்சம் பேடித்தனம் அடிமைப் புத்தி என்பவற்றையே உயர்ந்த பண்புகளாகக் கொண்ட இவர்கள் ஊமைச் சனங்களன்றி வேறு எப்படி இருக்க முடியும். இவர்களிடம் ஊக்கமோ மனத்திண்மையோ சத்தியத்தில் உறுதியான நம்பிக்கையோ கிடையாது. இவர்கள் மனித வேடந்தாங்கிய விலங்குகள். ஒரு கண நேரங்கூட இந்தப் பூமியில் வாழும் தகுதி இவர்களுக்கில்லை. மானம் போனால் போகட்டும், நாம் எப்படியாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்றெண்ணும் பாவிகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டிய இந்த உலகத்திலே இருக்க தகுதி உண்டா?
உள்ளத்தில் கள்ளாசை; உரையில் சிவநாமம் என்பதுபோல சொல்லளவில் மாத்திரம்தான் “வந்தேமாதரம்” என்பரேயன்றி மனதில் அதனைக் கொள்ளார். நமது நாட்டின் பழம் பெருமையைப் பற்றி பேசுவார்கள். ஆனால் நமது பாரத நாடு பண்டு எத்துனைப் பெருமையோடு இருந்தது என்பதை அறிவிலிகளான இவர்கள் எப்படி அறிவர்.
எப்படி இழிந்த வெளியானாலும் நாணாது பொருள் சேர்ப்பதிலேயே கண்ணாயிருக்கும் இந்தக் கயவர்கள் பொது மக்களின் அவமதிப்புக்குப் பாத்திரராகி நாட்டில் சிறுமைப்பட்டு ஒழிவர். உடன்பிறந்தவர்கள் துன்பப்பட்டுச் செத்தாலும் இந்த வஞ்சகரின் நெஞ்சினிலே இரக்கம் உண்டாகாது. செம்மை நெறி மறந்த பாவிகள் இவர்கள்.
பஞ்சத்தினாலும் நோயினாலும் பாரத நாட்டு மக்கள் புழுக்களைப்போல் துடித்துச் சாவதைக் கண்ணால் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே! தாயினும் மேலாக மதிக்கத் தகுந்த தாய்நாடு பஞ்சத்தில் உழல்வதை தடுக்க ஒரு துரும்பினைக்கூட எடுத்துப்போட மனமிசையாத இந்தப்பாவிகள் அந்தோ! வந்தே மாதரம் என்று வாய் கூசாது சொல்கிறார்களே! என்றுதான் இவர்கள் திருந்துவரோ!
@@Ajithbharathi thanks brother
Welcome 😇
குரல் ஆழம் பாராட்டத்தக்கது.....
இறுதி நிமிடங்கள் பிடித்தமானது.....
பாரதியின் வரிகள் 8D ஒலி அமைப்பில் புதுமை......
சிறந்த முயற்சி.....மேலும் இதுபோல் பார்க்க காத்திருக்கிறேன்.....✨
Super❤️❤️👌🏿👌🏿
இன்றைக்கும் தமிழர் சிந்தையில் சவுக்கடியாக பயனாகும் அவசிய பாரதி பாடல் அர்த்தங்கள்.
Ultimate tamil lyricist Bharathiyar
The model tamil lyricist Bharathiyar
Valluvar, kambar, bharthi
keep going bro💥
Super bro
🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
💫💫💫🤙🏻🤙🏻💥💥
Porul sollunga bro