17/05/2024 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | மே 17, 2024 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | May 17, 2024 | Dinamalar Aanmeega Malar
    இடமிருந்து வலம்
    1. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன ---- உருவங்களைக் காணலாம் (3)
    5. திருப்பதியில் லட்டு என்றால் பழநியில்? (7)
    7. வைணவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்வது (4)
    9. சீர்காழியில் அருளும் சிவபெருமான் (6)
    10. பெரியோர் சிறியவர்களுக்கு வழங்குவது (4)
    12. ஷீரடியிலும் புட்டபர்த்தியிலும் ஓயாது ஒலிக்கும் நாமம் (2)
    15. கேரளாவில் உள்ள இந்த இனத்தவர் வேத சடங்கு, மரபுவழி பாரம்பரியத்தை கடைப்பிடிப்பது போன்றவற்றுக்குப் பெயர் போனவர்கள் (5)
    16.பெங்களூர் ----- அம்மாள் தனது கணீர் குரலில் பல முருகன் பாடல்களை பாடி இருக்கிறார் (3)
    18. சார் தாம் கொண்ட நான்கு கோவில்கள்: -----, கங்கோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் (5)
    20. மச்சம் முதல் கல்கி வரை ---வதாரம் எடுத்துள்ளார் திருமால் (2)
    21. வெங்கடேச பெருமாளை ஆந்திராவில் இப்படியும் குறிப்பிடுவதுண்டு (3)
    22. தர்மசாஸ்தாவின் அவதாரம்தான் ------கண்டன் (2)
    23. ஏழரை என்ற எண் இவரை நினைவுபடுத்தும் (2)
    24. திருவேற்காட்டில் அருளும் தெய்வம் (4)
    மேலிருந்து கீழ்
    1. கடவுளிடம் ஏற்படும் உணர்வு (3)
    2. காசியில் அருளும் பெண் தெய்வம் (5)
    3. கண்ணனை ----வண்ணன் என்பதுண்டு (2)
    4. உலகின் மிகப்பெரிய ஹிந்து கோயில் ----போடியா நாட்டில் உள்ளது (2)
    5. இசைப்பாடல் (2)
    6. '----- என ஆடவா, சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா' (4)
    8. கற்பகாம்பாள் அருளும் தலம் (6)
    11. காஞ்சி சந்திரசேகர சுவாமிகளை மரியாதையுடன் இப்படிக் குறிப்பிடுவதுண்டு (4)
    13. நமது தேசத்தை வட இந்தியாவில் இப்படியும் குறிப்பிடுவர் (3)
    14. மதுரையை ஆண்ட பெண்மணி ---- மங்கம்மாள் (2)
    15. இந்த பக்தன் தன்னை தரிசிப்பதற்காக நந்தியையே நகரச் செய்தார் சிவபெருமான் (4)
    17. தியாகராஜரின் ஒரு பிரபல பாடல் '------ நின்னே மொரலிட' (4)
    19. ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மிகச் சிறந்து விளங்கினார் திரு---- கிருபானந்த வாரியார் (3)
    21. ---- வாசன் என்பது திருமாலின் ஒரு நாமம் (2)
    #sahothayam #dinamalar #crossword
  • บันเทิง

ความคิดเห็น • 2

  • @narayanan4all
    @narayanan4all 15 วันที่ผ่านมา

    நான் 21/24 சரியான விடையை கணித்தேன். 3 வார்த்தை கண்டுபிடிக்க இயலவில்லை.

  • @ptsthrishanker1527
    @ptsthrishanker1527 15 วันที่ผ่านมา

    இன்று ஓரளவு தெரிந்ததே. நன்றி. வணக்கம்.