சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிபூரம் உற்சவத் திருநாள் விழா...*

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • ஓச்சேரி அடுத்த சித்தஞ்சி கிராமத்தில் சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிபூரம் உற்சவத் திருநாள் விழா...*
    1500 பால் குடமும் 501 தீச்சட்டி ஏந்தி திரளான பக்தர்கள் ஊர்வலமாக வந்து சொர்ண காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்...
    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சித்தஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் உற்சவத் திருநாள் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் சொர்ண காளியம்மனுக்கு குருபாத பூஜை, பஞ்சபூதி சக்தி மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆடிப்பூரம் உற்சவம் பெருநாளை முன்னிட்டு மங்கள இசை முழங்க 1500 பால் குடமும் 501 தீச்சட்டி ஏந்தியும் பெண்கள் குழந்தைகள் என திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று சொர்ண காளியம்மனுக்கு மகா சிறப்பு அபிஷேகம் செய்தனர்....
    சித்தஞ்சு சிவகாளி சித்தர் பீடத்தில் அமைந்துள்ள சொர்ண காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்

ความคิดเห็น • 3

  • @nagaibabu
    @nagaibabu 5 หลายเดือนก่อน

    அருமை Sir

  • @venkatesanpress2208
    @venkatesanpress2208 6 หลายเดือนก่อน

    சார் வணக்கம் வேலூர் மாவட்டம் செய்தியாளர் வெங்கடேசன் நான் ஏற்கனவே நமது சேனலில் லிங்க் ஆகி உள்ளேன்

  • @parthibangovindaraj1931
    @parthibangovindaraj1931 5 หลายเดือนก่อน

    செய்தி வாசிப்பாளரே தமிழை கொல்லாதீர்...