Thiruvempaavai - Thiruvasagam | திருவெம்பாவை | Siva.Dhamodaharan Iyya | Bakthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 487

  • @kumaransukirtha7093
    @kumaransukirtha7093 2 ปีที่แล้ว +35

    யாருக்கு இந்த பாட்டு கேட்டவுடன் சந்தோஷமாக இருந்தது and இந்த பாட்டு யாருக்கு பிடித்திருந்தது

    • @shivayanama763
      @shivayanama763 ปีที่แล้ว

      Akka intha pattu ketapiragu yarukuthan vera pattu meethu viruppam varum
      Enaku migavum pidithirukirathu

  • @kandankudi
    @kandankudi 2 ปีที่แล้ว +10

    அருமையான குரல் வளம்
    தமிழ் உச்சரிப்பு ஆங்காங்கே மோசமாக உள்ளது

  • @pandiyanr8522
    @pandiyanr8522 ปีที่แล้ว +23

    தமிழ் இறைவன் சிவபெருமானுக்கு திருவாசகம் திருவெம்பாவை போன்ற திருமறை பதிகங்களை கொண்டு மட்டும் அவன் செவியை குளிர வைக்க வேண்டும்
    அருள் அருளும் எம் இறைவா...🙏🙏🙏

  • @chandrasekarang2638
    @chandrasekarang2638 4 ปีที่แล้ว +10

    thiruvasagam
    om namasivay
    வாழ்க திரு சிவ தாமோதரன் ஐயா,
    வாழ்க பக்தி டிவியின் பக்தி...

  • @venkatmohan2780
    @venkatmohan2780 8 หลายเดือนก่อน +8

    கேட்க கேட்க திகட்டாத தேனிசை திருவெண்பாவை 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @sankaravelumuppidathi6964
    @sankaravelumuppidathi6964 2 ปีที่แล้ว +9

    எம்பெருமான் ஐயாவுக்கு நல்ல திடமான ஆயுள் வழங்கி திருவாசகம் எல்லோருக்கும் கிட்டிய அருளவேண்டும் சிவாய

  • @r.karthikkeyan6711
    @r.karthikkeyan6711 4 ปีที่แล้ว +173

    முழு நெல்லிக்காய் சாப்பிட்டு விட்டேன் இப்பொழுது தண்ணீர் அருந்துகிறேன் இனிக்கிறது திருவெண்பாவை ஓம் நமச்சிவாய

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 ปีที่แล้ว +11

      சிவாயநம

    • @rajeswarisubramaniyam1336
      @rajeswarisubramaniyam1336 3 ปีที่แล้ว +1

      @@bakthitvtamil
      Qqqqq
      Qqqqqqqqqqqqq
      Q
      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqq
      Q
      Qqqqqqqqqqq
      Qqqqqqqqqqqqqqqqqqqq

    • @amalarani236
      @amalarani236 2 ปีที่แล้ว +2

      @@bakthitvtamil super 🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈

    • @savithrikumar5236
      @savithrikumar5236 2 ปีที่แล้ว +1

      Namashivaya namaha

    • @sarojasrinivasan4469
      @sarojasrinivasan4469 ปีที่แล้ว

      ​@@bakthitvtamil murugan paatu

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +60

    போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
    போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
    போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
    போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
    போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
    போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
    பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.

  • @thanuthanu406
    @thanuthanu406 4 ปีที่แล้ว +50

    திருவாசகம் எனும் தேன் கேட்க கேட்க திகட்டிடாத தேன்
    ஓம் நமசிவாய
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந் நாட்டவற்கும் இறைவா போற்றி
    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 ปีที่แล้ว +2

      சிவாயநம

    • @rameshl9310
      @rameshl9310 3 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 11 วันที่ผ่านมา +4

    திருவெம்பாவை அருமையான இனிய இனிய நல்ல‌ குரல் அய்யா ஓம் நமச்சிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்.

  • @manickavasagamsivaraj8022
    @manickavasagamsivaraj8022 ปีที่แล้ว +6

    அருமையான திருவெம்பாவை நல்லா பாடி இருக்கிறீர்கள் கேட்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +18

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
    சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
    மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
    மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
    வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
    போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
    ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
    ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
    பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!

  • @vithhyav9639
    @vithhyav9639 2 ปีที่แล้ว +3

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம் ஓம் ஓம்

  • @arulanandhampakkirisamy3537
    @arulanandhampakkirisamy3537 2 ปีที่แล้ว +2

    சிவ சிவ. தேன் குடித்து மயங்கி விட்டேன்

  • @sureshkannan.g9892
    @sureshkannan.g9892 3 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை. அருமையான படைப்பு. இடையில் வரும் விளம்பரம் தொந்தரவாக உள்ளது.

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 ปีที่แล้ว +1

    ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ போற்றி.. ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ போற்றி.. ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ போற்றி,.. ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ போற்றி..... ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ போற்றி..... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே சரணம். ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே சரணம்.. ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே சரணம்... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே சரணம்.... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே சரணம்..... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +15

    பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
    பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
    நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
    சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
    ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
    கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
    தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
    ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
    பொருள்: ""அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது "ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்கு பதிலளித்த தோழியர் கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்றனர்.

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்சமே சுவாக

  • @sivailayarajachidambaram2407
    @sivailayarajachidambaram2407 3 ปีที่แล้ว +1

    அவனருளாலே அவன்தாள் வணங்கி ஹரஹர மகாதேவா ...

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 2 ปีที่แล้ว +2

    ஒம்.. நமச்சிவாய. வாழ்க. சச்சிதாநந்தம்வாழ்க. ஒம். சற்குருநாதரேவாழ்கவாழ்க

  • @renukadevi375
    @renukadevi375 2 ปีที่แล้ว +3

    சிவா திருச்சிற்றம்பலம்
    🙏🙏🙏🙏🙏

  • @Hema007
    @Hema007 3 ปีที่แล้ว +15

    ஐயா அந்த எழுத்துகள்லாம் நின்று வந்தால் மிக நன்றாக இருக்கும்..
    நாங்களூம் சேர்ந்து ஓதலாம் அல்லவா..
    சிவாய நம🙏🙏🌠🙏🙏

  • @thavaneswaryanandarajah5
    @thavaneswaryanandarajah5 4 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நிரஞ்சனாய வித்மஹே, நிராபாசாய தீமஹி. தன்னோ சூக்ஷ்ம ப்ரசோதயாத்.

  • @JagathRatchagan-l1r
    @JagathRatchagan-l1r 18 วันที่ผ่านมา +1

    அருமை ஐயா.. தங்களின் குரலில் தமழ்கிறது சிவமயம்...... நன்றி ஐயா...

  • @பசி-ற8ற
    @பசி-ற8ற 3 ปีที่แล้ว +3

    சம்போ மகாதேவா ஒம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @சிவஞானபிரவாகம்
    @சிவஞானபிரவாகம் 4 ปีที่แล้ว +8

    திருவெம்பாவை பாடல் 11
    மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
    கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
    ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
    ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
    சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
    ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
    உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
    எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 12
    ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
    தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
    கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
    காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
    வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
    ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
    பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
    எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்
    திருவெம்பாவை பாடல் 13
    பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
    அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
    தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
    எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
    பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
    நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
    கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 14
    காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
    கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
    சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
    வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
    சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
    பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
    பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 15
    ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
    நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
    சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
    நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
    அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
    பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
    ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
    வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
    ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 16
    முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
    என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
    மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
    பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
    என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
    தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
    முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
    என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
    திருவெம்பாவை பாடல் 17
    செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
    எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
    கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
    இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
    செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
    அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
    நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 18
    அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
    விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
    கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
    தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
    பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
    விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
    கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
    பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 19
    உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
    அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
    எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
    எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
    எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
    கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
    இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
    எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
    திருவெம்பாவை பாடல் 20
    போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
    போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
    போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
    போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
    போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
    போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
    🙏🙏🙏

  • @mr.magicalthamizhan2787
    @mr.magicalthamizhan2787 3 ปีที่แล้ว +2

    திருவாசகம் தேன்🙏🙏🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 ปีที่แล้ว +10

    Excellent thanks valga valamudan

  • @lathaj4600
    @lathaj4600 3 วันที่ผ่านมา

    Om namah sivaya ☘️ 🙏
    Thiruchittrambalam 🙏🙏🙏

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +8

    முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
    அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
    தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
    பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
    புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
    எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
    சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
    இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
    பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, ""ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.வந்த தோழியர் அவளிடம், ""அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +17

    உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
    அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
    எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
    எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
    எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
    கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
    இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
    எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
    பொருள்: உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது சொல்லும் பழமொழி இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன் னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய் இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங் களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித் தால் எங்களுக்கென்ன?

  • @sumathyr4095
    @sumathyr4095 5 หลายเดือนก่อน +1

    தேன் தேன் திருவாசகம் எனும் தேன் கிண்ணம் ஐயா

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 3 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம். தில்லையம்பலம்🙏🙏

  • @BKeditz-yw4vo
    @BKeditz-yw4vo 6 วันที่ผ่านมา

    அப்பனே போதும் இந்த மானுடம் வாழ்க்கை அய்யா எனக்கு உங்கள் திரு பாதத்தில் இடம் தாரும் அய்யா🙏

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +3

    21:42உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
    அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
    எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
    எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
    எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
    கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
    இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
    எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +8

    அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
    உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
    சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
    தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
    என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
    சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
    வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
    என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
    பொருள்: தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே சிவசிவ என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா?

  • @abiramibabu1015
    @abiramibabu1015 5 ปีที่แล้ว +3

    நற்றுணையாவது நமச்சிவாயமே

  • @subramanianr3996
    @subramanianr3996 3 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நற்றுணையாவது நமசிவாயவே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 ปีที่แล้ว +5

    சிவ சிவ🙏 சிவாய நம அப்பாவின் திருவடிகள் போற்றி போற்றி🙏

  • @UsharaniK-h1b
    @UsharaniK-h1b 9 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய நமக
    அருமையான குறள்

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +10

    கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
    ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
    வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
    ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.
    பொருள்: தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின் றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.

  • @saravanaksbt
    @saravanaksbt 5 ปีที่แล้ว +26

    திருசிற்றம்பலம்..
    வாழ்க திரு சிவ தாமோதரன் ஐயா,
    வாழ்க பக்தி டிவியின் பக்தி...

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 2 ปีที่แล้ว +6

    🙏 ஓம் நமசிவாய 🙏 இதற்கு மேல் சொல்ல வேறு எதுவும் இல்லை 🙏சிவாய நமஹா 🙏

  • @anantharajatch2937
    @anantharajatch2937 11 หลายเดือนก่อน +6

    அடியேன் திருவாசகம் கேட்டு ,பாடி கற்று வருகிறேன்❤😍

    • @bakthitvtamil
      @bakthitvtamil  11 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @arunkumarkrishnasamy
    @arunkumarkrishnasamy ปีที่แล้ว +4

    amazing song by manivasagar - thanks to dhamodharan ayya

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +20

    மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
    நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
    போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
    வானே நிலனே பிறவே அறிவரியான்
    தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
    வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
    ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
    ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்
    பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர் களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏 ஹரஹர நாமபார்வதி பதயே ஹரஹர மகாதேவா 🙏

  • @muraliranganu2954
    @muraliranganu2954 4 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +3

    13:57ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
    தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
    கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
    காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
    வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
    ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
    பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
    எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +4

    22:44போற்றி அருளுக
    நின் ஆதியாம் பாதமலர்
    போற்றி அருளுக
    நின் அந்தமாம் செந்தளிர்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும்
    தோற்றமாம் பொற்பாதம்
    போற்றி எல்லா உயிர்க்கும்
    போகமாம் பூங்கழல்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும்
    ஈறாம் இணையடிகள்
    போற்றி மால் நான்முகனும்
    காணாத புண்டரீகம்
    போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
    போற்றி யாம் மார்கழி
    நீராடேலோர் எம்பாவாய்.

  • @santhiraman9490
    @santhiraman9490 4 ปีที่แล้ว +17

    மிக அருமையான குரல் ஐயா, உமது குரலுக்கு எனது வந்தனம்

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +12

    செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
    எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
    கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
    இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
    செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
    அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
    நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
    பொருள்: தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.

  • @SuryaPrakash-fp7ss
    @SuryaPrakash-fp7ss ปีที่แล้ว +2

    சிவ சிவ ஐயாவின் திரு பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்

  • @kunj4428
    @kunj4428 ปีที่แล้ว +1

    ஓம் அண்ணா மலை உன்னா மழையே போற்றி

  • @krishnansingh7537
    @krishnansingh7537 3 ปีที่แล้ว +2

    Very nice👍👍👍👍👍 darsan thank you🙏🙏🙏🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว

      So nice
      சிவாயநம

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +6

    16:28ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
    நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
    சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
    நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
    அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
    பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
    ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
    வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
    ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

  • @naturenature1238
    @naturenature1238 5 ปีที่แล้ว +22

    சிவாயநம.... குருவே போற்றி

  • @besttech4208
    @besttech4208 11 วันที่ผ่านมา +1

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏🏼

  • @karthikachandrababu
    @karthikachandrababu 4 ปีที่แล้ว +4

    Om Namashivya potri , Shivaya potri Om....,🌷🌲🌱🌳🌴🌿

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 ปีที่แล้ว +4

    வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏

  • @Bobi5425
    @Bobi5425 4 วันที่ผ่านมา

    மார்கழியில் கேட்பதற்கு அருமையான திருவெம்பாவை, மாணிக்கவாசகர படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைப்பேன், உங்கள் முலம் வேலைகள் செய்து கொண்டு இருக்கும் போது கூட காதில் நிறைகிது மாணிக்கவாசகம், ஈசனின் சிந்தனை, நன்றி 🙏

  • @Always_Be_Happy-JS
    @Always_Be_Happy-JS 9 วันที่ผ่านมา

    நன்றி ஐயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @renukadevi375
    @renukadevi375 3 ปีที่แล้ว +15

    ஆதியும் அந்தமும் இல்லை அருட்பெரும் ஜோதி🙏🙏🙏🙏🙏

  • @msestimators222
    @msestimators222 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றாகவுள்ளது.

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +2

    14:42பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
    அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
    தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
    எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
    பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
    நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
    கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

  • @KamachiInthiran
    @KamachiInthiran ปีที่แล้ว +1

    Om namasivaya sivaya nama

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +11

    பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
    பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
    ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
    கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
    ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
    பொருள்: தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல் வேறு மலர்களை அணியும் திருமுடியானது வான த்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!

    • @Kanibala-mh5ye
      @Kanibala-mh5ye ปีที่แล้ว

      சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் சிவாயநம

  • @Naveen-nt6qg
    @Naveen-nt6qg 3 ปีที่แล้ว +1

    அண்ணா மலைஎம் அண்ணா போற்றி

  • @HarshinivarshikaaVI-A
    @HarshinivarshikaaVI-A 3 ปีที่แล้ว

    Om Namahshivaya Potri shivaya Namah om Potri Thillai Natarajari Thiruchipallam Potri om KallaBharva Potri Om Thiruchenthur Pachi senthil kumara Vella Muruga Potri om Sivagowriamman Potri Om Ramachandra moorthy Potri Om Kuberalakshmi Potri Om jai jai Anjenayari Potri....... Thiruchipallam Potri

  • @sankaranarayanansenthilkum9854
    @sankaranarayanansenthilkum9854 9 วันที่ผ่านมา

    நமசிவாய! நமசிவாய!!
    நமசிவாய !!! நமசிவாய!!!!.
    நமசிவாய !!!!!

  • @prithivirajan8467
    @prithivirajan8467 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @thiru786
    @thiru786 4 ปีที่แล้ว +3

    nandri ayya om nama shivaya

  • @tamilarasankaliamoorthy8755
    @tamilarasankaliamoorthy8755 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம்

  • @elumalai856
    @elumalai856 4 ปีที่แล้ว +6

    Om NAMASHIVAYA....

  • @parameshwarank8784
    @parameshwarank8784 3 ปีที่แล้ว +2

    சிவாய நம ... ஓம் நமச்சிவாய ஓம்🙏

  • @MsSrivijai
    @MsSrivijai 9 วันที่ผ่านมา

    நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @tntvlr6738
    @tntvlr6738 4 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +9

    மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
    போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
    பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
    ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
    கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
    சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
    ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
    ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
    பொருள்: நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.

  • @imagination.content2858
    @imagination.content2858 6 ปีที่แล้ว +15

    Om namasivaya Sivashivaya.

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +5

    பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
    அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
    தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
    எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
    பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
    நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
    கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.
    பொருள்: கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் நமசிவாய என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

  • @srk8360
    @srk8360 4 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    ஓம் சிவ சிவ ஓம்
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @savithrikumar5236
    @savithrikumar5236 3 ปีที่แล้ว

    Thiruchitrambalam.vazhgha valamudan.

  • @anbesivan6499
    @anbesivan6499 4 วันที่ผ่านมา

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +1

    17:35முன்னிக்கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
    என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
    மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
    பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
    என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
    தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
    முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
    என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

  • @சபச்சையப்பன்
    @சபச்சையப்பன் 3 ปีที่แล้ว +2

    🙏👍 நன்றி 🙏🙏

  • @tonyjaa5949
    @tonyjaa5949 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @rameshthiyagarajan701
    @rameshthiyagarajan701 ปีที่แล้ว +2

    திருவாசகம் எனும் தேன்......ஓம் நமசிவாய

  • @prabuts8019
    @prabuts8019 2 ปีที่แล้ว +1

    Natrunaiavathu namashivaya

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 5 ปีที่แล้ว +4

    ஓம் சிவ சிவ ஓம்

  • @cinderella1920
    @cinderella1920 4 ปีที่แล้ว +2

    Thiruchitrambalam 🙏.
    Dheivigam kural🙏

  • @vtparamasivam243
    @vtparamasivam243 4 ปีที่แล้ว +1

    ஒம் நமசிவாய சிவாநம

  • @ishwaryasenn5182
    @ishwaryasenn5182 3 ปีที่แล้ว +2

    Live long life for Siva knowledge presents

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +14

    ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
    வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
    எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
    கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
    விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
    கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
    உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
    தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
    பொருள்: ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், ""அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர் களோ, ""அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.

  • @vedavallimuralirangan8931
    @vedavallimuralirangan8931 3 ปีที่แล้ว +1

    ,ஓம் நம சிவாயம்.

  • @SASIKALA-go4ov
    @SASIKALA-go4ov 4 ปีที่แล้ว

    குருவடி சரணம் திருவடி சரணம்

  • @sukhino4475
    @sukhino4475 4 ปีที่แล้ว +4

    Arumai

  • @varatharajan607
    @varatharajan607 10 วันที่ผ่านมา

    OM Namasivaya Nama 👏👏👏🌺🌼🌸

  • @kmohanadasse
    @kmohanadasse 5 ปีที่แล้ว +4

    ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
    நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
    சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
    நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
    அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
    பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
    ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
    வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
    ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
    பொருள்: அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி எம்பெருமானே என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.

  • @mennameena4333
    @mennameena4333 2 ปีที่แล้ว

    Omm namasivaya omm namasivaya omm namasivaya vazhga