ஆற்றல் தருமொழி தமிழ் ஆகும், அமிழ்தினும் இனியது அதுவாகும்! தேற்றம் விதிமுறை வழி ஆகும், தெளிவுடன் கற்றால் விடையாகும்!! மாற்றம் என்பது பொது வழமை, மாற்றுவம் என்பது நமதுடமை!!! காற்றும் கவி தரும் கணம் தோறும், கவனம் வைத்தால் கருத்தாகும்!!!! .. 20.29
முயற்சிகள் நம்முடையது. முடிவுகள் இறைவனுடையது! இறைவனின் கருணையை நமதாக்கும் முயற்சியில் மாத்திரம் நாம் தேறி விட்டோம் ஆயின், முடிவுகளைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!! எல்லாமே நல்ல படியாக அமையும்!!! சுபகான் அல்லா, எனது முயற்சிகள் ஒவ்வொன்றும் உமது விருப்பத்திற்கு உரியனவாக ஆக, என்னை, நீரே, வழி நடத்துவீராக!!!! .. ஆமீன்,
நானென்ன நீயென்ன, நாளென்ன கோளென்ன, விடியல்கள் வந்து, மறுபடி பொழுதாகிப், புலர்ந்திடுங் காலை, போனதெல்லாம் போக, வந்தது வந்தாக, இதுவென்று நியமங்கள், நமை வந்து சூழ, இன்பமே இஃதென்று, நாம் மனதாற, மனதினில் வரும் சாந்தி, சஞ்சலம் தனை வென்று, அஞ்சுதல் அறியாமை, கெஞ்சுதல் பரிதாபம், துஞ்சுதல் நிலை வந்து சேரும் வரை, இங்கிது சுகமென்று, சும்மா இரு.. .. 16.10.2024
❤
உள்ளம் உவந்து நாம், செய்யும் செயல்தானே, உண்மை வழிபாடு நம்புங்கள்!!!!
அடங்கும் மனதில் அனைத்தும் அடங்கும்!
அடங்கிய மனமும்
அடங்குமாம் தன்னுளே!!
வீணார வாரங்கள்
வித்தைகள் எதுக்கு!!!
யாரும் மனம்,
கோணாத தன்மையுறவென்றே விளக்கின்!!!!
புறத்தே அழகெலாம்
புரியாத மாந்தர்க்கு!
தன், அகத்தை அறிந்தால்
அழகு வேறில்லை!!
விதியென்று நினைத்தார்க்கு
விதியே கதியென்று ஆக!!!
அது-மீதில், நடந்தார்க்கு
கடந்திட்ட வினையெனவாக!!!!
..
06.09.2024
ஆற்றல் தருமொழி தமிழ் ஆகும், அமிழ்தினும் இனியது அதுவாகும்!
தேற்றம் விதிமுறை வழி ஆகும், தெளிவுடன் கற்றால்
விடையாகும்!!
மாற்றம் என்பது பொது வழமை, மாற்றுவம் என்பது நமதுடமை!!!
காற்றும் கவி தரும் கணம் தோறும், கவனம் வைத்தால் கருத்தாகும்!!!!
..
20.29
முயற்சிகள் நம்முடையது. முடிவுகள் இறைவனுடையது!
இறைவனின் கருணையை நமதாக்கும் முயற்சியில் மாத்திரம் நாம் தேறி விட்டோம் ஆயின், முடிவுகளைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!! எல்லாமே நல்ல படியாக அமையும்!!!
சுபகான் அல்லா, எனது முயற்சிகள் ஒவ்வொன்றும் உமது விருப்பத்திற்கு உரியனவாக ஆக, என்னை, நீரே, வழி நடத்துவீராக!!!!
..
ஆமீன்,
நானென்ன நீயென்ன,
நாளென்ன கோளென்ன,
விடியல்கள் வந்து, மறுபடி
பொழுதாகிப், புலர்ந்திடுங் காலை,
போனதெல்லாம் போக, வந்தது வந்தாக,
இதுவென்று நியமங்கள், நமை வந்து சூழ,
இன்பமே இஃதென்று, நாம் மனதாற,
மனதினில் வரும் சாந்தி, சஞ்சலம் தனை வென்று,
அஞ்சுதல் அறியாமை, கெஞ்சுதல் பரிதாபம்,
துஞ்சுதல் நிலை வந்து சேரும் வரை, இங்கிது சுகமென்று, சும்மா இரு..
..
16.10.2024