தாமோதர மாத மகத்துவம் | ஆறு முக்கிய விரதங்கள் | தீப ஆரத்தி | சங்கல்பம் | Karuna Sindhu Krishna Das

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • October 17th to Nov-15th | Damodara Month Glories | Fasting Details |
    தாமோதர சங்கல்பம் :
    forms.gle/ia2E...
    என்ற லிங்கில் சென்று சங்கல்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
    தாமோதர மாதத்தின் சிறப்பும், தீபஆரத்தியின் பலனும்
    இறைபக்திக்குரிய நான்கு மாதங்கள் என்றழைக்கப்படும் சாதுர் மாதங்களில் தாமோதர மாதம் சிறந்த மகிமைகள் பொருந்தியது ஆகும். சாதுர் மாதங்களில் இதனை கார்த்திகை என்றழைப்பர். தமிழ் மாதங்களில் கார்த்திகையைப் போல் இந்த தாமோதர மாதத்தில் பகவானின் ஆலயத்தையும், பூஜை அறையையும் நெய் தீபங்களால் அலங்கரிப்பது அவசியமானதாகும். இவ்வருடம் இந்த தாமோதர மாதம் அக்டோபர் 17ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதி முடிவுறுகிறது.
    தாமோதர மாதம் என்பதன் பொருள்?
    தாமோதரர் என்றால் ஸ்ரீகிருஷ்ணரை குறிக்கும். தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு. குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, அன்னை யசோதா தேவி கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டும், கிருஷ்ணரின் தூய பக்தை ஸ்ரீமதி ராதாராணியை வழிபடும் பொருட்டும் தாமோதரத் திருவிழா கொண்டாடப் படுகிறது.
    பத்ம புராணம் ‘‘இம்மாதம் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும். இம்மாதத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறிதளவு பக்திசேவை செய்தால் கூட கிருஷ்ணர் தன் திவ்ய ஸ்தலத்தையே அப்பக்தனுக்கு வழங்குவார்’’ என்று கூறுகிறது. அதே போல், ‘‘புண்ணிய மாதங்கள் அனைத்திலும் அதி புண்ணிய மாதம் தாமோதர மாதம்’’ என்று ஸ்கந்த புராணமும் இம்மாதத்தின் மகிமைகளை பலவாறு விவரிக்கிறது.
    விழாக்கள் நிரம்பிய மாதம்
    ‘தீபாவளி’, ‘தாமோதர லீலை’, ‘ஸ்ரீமதி லெக்ஷ்மி பூஜை’, ‘பகுலாஷ்டமி’ - ஸ்ரீராதா குண்டம் உருவான நாள், ‘துளசி -சாளக்கிராம திருக்கல்யாணம்’, ‘கோவர்த்தன கிரி பூஜை’ - மற்றும் பல முக்கியமான விழாக்கள் இந்த மாதத்தில் தான் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    தாமோதர விரதம் கடைபிடிக்கும் முறை
    (1) ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபமும் (2) கிருஷ்ணருக்கு நெய் தீபம் காட்டுவதும், (3) உணவுக்கட்டுப்பாடும் தாமோதர மாத விரதத்தின் முக்கியமான மூன்று சிறப்பம்சங்களாகும்.
    மஹாமந்திர ஜபம்
    ‘‘ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே’’ எனும் பதினாறு வார்த்தைகளடங்கிய இந்த மஹாமந்திரத்தை குறைந்த பட்சம் 108 தடவையும், அதிகபட்சம் எவ்வளவு முறை உச்சரிக்க முடியுமோ அவ்வளவு முறை உச்சரிக்கலாம். ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய சீடரான ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி அவர்கள் விரதங்கள் பின்பற்றுவதில் மிக முக்கியமானது ஹரி நாமத்தை உச்சரிப்பதே ஆகும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் ஹரே கிருஷ்ண மஹாமந்திரம், விரதத்தை கடைபிடிப்பதற்கான மனநிலை உட்பட அனைத்து நலன்களையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
    தீப ஆரத்தி வழிபாடு
    பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிரியமான தாமோதர மாதத்தில் தீப ஆரத்தி காட்டுவதால் பலவிதமான நற்பலன்களை பெறலாம் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதோ அவற்றில் சில. .
    ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயத்தில் பகவானுக்கு தீப ஆரத்தி காட்டினால் நிலைத்த செல்வத்தையும், நல்ல குழந்தைகளையும், புகழையும், வெற்றியையும் பெற முடியும்.
    பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தினசரி நெய் விளக்கு காட்டுவதால் பல லட்சக்கணக்கான கல்பங்களில் செய்யப்பட்ட பாவங்கள் முழுவதும் அழிகின்றன.
    இரண்டு மரத்துண்டுகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்தால் ‘நெருப்பு’ உண்டாவது எப்படி நிச்சயமோ, அதே போல் தாமோதர மாதத்தில் பகவானுக்கு நெய் தீப ஆரத்தி காட்டுவதால் நிச்சயம் அதன் நற்பலனை சந்தேகத்திற்கு இடமின்றி பெறலாம்.
    எல்லா புண்ணிய நதிகளில் நீராடிய பலனையும், யாகங்கள் செய்த பலனையும் பெறுவதுடன், முன்னோர்களையும் நற்கதியடைய செய்யலாம்.
    பத்ம புராணம், ஸ்கந்த புராணம்
    உணவு முறை
    அசைவ உணவு வகைகள் பொதுவாகவே தவிர்க்க வேண்டும். இது தவிர இம்மாதம் முழுவதும் உளுந்து மற்றும் உளுந்தால் செய்யப்பட்ட உணவு பதார்த்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஏகாதசி நாட்களில் வழக்கம் போல் தானிய உணவு சேர்க்கக் கூடாது.
    மக்கள் நலன் கருதி நிகழ்ச்சி ஏற்பாடு
    மக்களின் நலன் கருதி இந்த தாமோதர தீபத் திருவிழா நிகழ்ச்சி, இஸ்கான் - ஹரே கிருஷ்ணா கோயிலில் ஒரு மாத கால காலம், தினசரி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
    இதில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் கரங்களால் நேரடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி மன அமைதியும் மகிழ்ச்சியும் பெறலாம்.
    மேலும் விழாவை முன்னிட்டு கோயில் சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    🙏🏻ஹரே கிருஷ்ணா.
    🌸 ‘பக்தி ரத்னம்’🌸
    இதில் பகவத்கீதை, பாகவத மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள்
    இடம் பெறும்.
    Bhakthi Rathnam
    Tamil Devotional Lecture Videos
    - ISKCON Madurai, Tirunelveli & Periyakulam.
    Phone / Whatsapp: 721 721 6001
    📿 அதிகாலை ஹரே கிருஷ்ண ஜபம்: தினசரி காலை 5.30 to 6.30
    📖 பக்திரத்னம் வார வகுப்பு: வியாழன் இரவு 8.00 to 9.00
    ✍️*குறிப்பு:* இஸ்கான் வாட்ஸ் ஆப் 721 721 6001 நம்பரை எப்போதும் போன் Contact-ல் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தகவல்கள் தானாக நின்று விடும்.
    - ISKCON Madurai, Tirunelveli & Periyakulam.

ความคิดเห็น • 17

  • @indramanian4352
    @indramanian4352 วันที่ผ่านมา +1

    Radhe Krishna 🙏🙏

  • @geethavenkat9135
    @geethavenkat9135 2 วันที่ผ่านมา +1

    ஹரே கிருஷ்ணா ஹரே ராமா👣🙏

  • @devavarathan449
    @devavarathan449 วันที่ผ่านมา

    Hari Hari, Hare Krishna Prabhuji Dhandavat Pranam

  • @gayathreewaves5303
    @gayathreewaves5303 3 วันที่ผ่านมา +1

    நமாமீஷ்வரம் சச்சிதானந்த ரூபம்❤😊

  • @meenakshivenkatachalam231
    @meenakshivenkatachalam231 2 วันที่ผ่านมา

    Hare Krishna Hare Krishna Krishna Krishna hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🙏

  • @lalitheshri2293
    @lalitheshri2293 วันที่ผ่านมา

    Namaskaram swami,very nice knew many unknown things,Hare Krishna,May Lord Krishna shower His blessings upon you❤❤

  • @sarvanankv6628
    @sarvanankv6628 3 วันที่ผ่านมา +1

    ஹரே கிருஷ்ணா பிரபு 🙏

  • @girikb6973
    @girikb6973 8 ชั่วโมงที่ผ่านมา

    Hare Krishna hare Krishna hare hare

  • @jeanveldurai6099
    @jeanveldurai6099 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏HARE KRISHNA 💙 DANDAWAD PRANAM PRABU JI ❤️ ❤❤

  • @ashaganeshanraj5468
    @ashaganeshanraj5468 3 วันที่ผ่านมา

    Hare Krishna prabhu

  • @raviretna6207
    @raviretna6207 4 วันที่ผ่านมา +1

    ❤ ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே. ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ❤

  • @arunasathyanarayanan3886
    @arunasathyanarayanan3886 3 วันที่ผ่านมา

    ராதே கிருஷ்ணா 🙏

  • @Hindumathi-gs9fg
    @Hindumathi-gs9fg 4 วันที่ผ่านมา

    Hare Krishna hare Krishna Prabuji

  • @KarthikeyanC-h4c
    @KarthikeyanC-h4c วันที่ผ่านมา

    தாமோதர மாதம் சங்கல்பம் மேற்கொள்ள விரும்புகிறேன் படிவம் அனுப்பவும்.

    • @BhakthiRathnam
      @BhakthiRathnam  วันที่ผ่านมา

      தாமோதர சங்கல்பம் :
      forms.gle/ia2EgQhSBuBVZ2M18
      Ph/Whatsapp : 721 721 6001

  • @sriramj.8744
    @sriramj.8744 13 ชั่วโมงที่ผ่านมา

    நமாமீஷ்வரம் சச்- சித்-ஆனந்த-ரூபம்
    லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம் |
    யசோதா-பியோலூஹலாத் தாவமானம்
    பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய-கோப்யா ||

  • @raviretna6207
    @raviretna6207 4 วันที่ผ่านมา

    🎉 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ❤