நடுநிசிக் கனவுகள்/ தமிழ் கவிதை/ VK றொபின்/ யாழ்ப்பாணம்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- நடுநிசிக் கனவுகள்.
**********************
காற்று
அறைந்து சாத்தும் சாளரங்கள்
ஏன்?
அந்தரத்தில் நடனமாடுகின்றன
முற்றத்து வேம்பில்
உறங்கும் சேவல்
சாமத்தில் ஏன்?
சத்தமாய் கூவுகிறது
#tamil #poem #vkrobin
வின்மீன்கள்
விளையும் வானம்
சில நேரங்களில்
இருள் குடித்து
தன்மடிக்குள் ஏன்?
நிலவைப் புதைக்கிறது
வீசிய காற்றில்
தொப்பென்று விழுந்த தேங்காய்
நினைவுக் குளத்தில்
நீந்தியவளை
இடையில் எழுப்பி
ஏன்?
இடையூறு செய்கிறது
நாய் குரைத்தும்
விழிக்காத அவள் கண்கள்
நடுநிசிக் கனவுகளுக்குள்
ஆழ்ந்துறங்கையில்
கட்டிலில் புரண்டு விழுந்தவள்
தரையிலே ஏன்?
தலையணையைத் தேடுகிறாள்.
★★★
VK றொபின்