ஓசூரில் - தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி வால்டர் ஐ தேவாரம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • ஓசூரில் தனியார் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி வால்டர் ஐ தேவாரம்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு உதவி பெறும் தனியார்க்கு சொந்தமான புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா தொடங்கி நடைபெற்றது.
    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறையின் முன்னாள் டிஜிபி வால்டர். ஐ தேவாரம் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளை முறைப்படி துவக்கி வைத்தார்.
    முன்னதாக பள்ளிக்கு வந்த அவருக்கு காவல்துறை உயர் அதிகாரிகளும் பள்ளியின் தாளாளர் அன்னை ஏஞ்சலா உள்ளிட்ட நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்த அவர் மாணவிகளின் கொடி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்
    இதில் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பங்கேற்ற விதவிதமான திறமைகளுடன் கூடிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தி காட்டி அசத்தினார்கள்.
    பின்னர் தடகள ஓட்டப்பந்தய போட்டிகள் நடைபெற்றது தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கி சிறப்பித்தனர்.
    நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வால்டர் தேவாரம்,
    ஒலிம்பிக் போட்டிகளை சென்று பார்ப்பது என்பது கஷ்டமில்லை. நான் போய் பார்த்திருக்கிறேன். ஆனால் நமக்கு முக்கியமானது பள்ளி. ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி பருவங்கள் தான். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த குழந்தைகள் எவ்வளவு சிறப்பாக இங்கு விளையாடுகின்றனர். இன்னும் இதைவிட சிறப்பாக விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
    தாழ்த்தப்பட்ட பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மாவட்ட,மாநில அளவில், தேசிய அளவில், உலக அளவிலான காமன் வெல்த் மற்றும் ஒலிம்பிக் ஆகிய போட்டிகளில் வெற்றி பெறச் செய்யும் அளவிற்கு விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கிட செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது.
    இது போன்ற நடவடிக்கைகளை இந்த பள்ளி செய்து வருவதால் நிச்சயம் குழந்தைகள் வெற்றி பெறுவார்கள்....என அவர் தெரிவித்தார்.

ความคิดเห็น •