காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [06.07.2024]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • 1) பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்கும் இந்தியா - ரஷ்யா உடனான 22ஆவது ஆண்டு மாநாடு - பாதுகாப்பு, வணிகம், கல்வி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
    2) 36 காவல்துறையினருக்கு வீர தீரச்செயல் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு - விழாவில் பிரதமர் நரேந்திர மோதி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
    3) இங்கிலாந்து பொதுத் தேர்தல் - 14 ஆண்டுகளுக்குப்பிறகு ஆட்சியை கைப்பற்றியது தொழிலாளர் கட்சி - புதிய பிரதமராகும் கெய்ர் ஸ்டார்மர்-க்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து
    4) கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை எந்த அடிப்படையில் வழங்க முடியும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
    5) விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பிரச்சாரம் நிறைவுற்ற பிறகு விதிமீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
    6) கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தில் பலி ஆனவர்களின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்து ஏன் ஆறுதல் கூறவில்லை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி
    7) விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - தமிழக அரசின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் - முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி பிரச்சாரம்.
    8) கள்ளச்சாராய விவகாரத்தை திமுக அரசு திட்டமிட்டு மறைக்கிறது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
    9) கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் கூறாதது ஏன்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
    10) 20 ஓவர் மகளிர் கிரிக்கெட்- இந்தியா வெற்றி பெற 190 ரன் இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்க அணி

ความคิดเห็น •