தஞ்சை அரண்மனை | Thanjavur Palace | பொன்னியின் செல்வன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • தஞ்சை அரண்மனை (Thanjavur Palace) என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நகரில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். இந்த அரண்மனை தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின்னர் கி.பி. 1674 இல் இருந்து 1855 வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இருந்தது.
    இந்த அரண்மனை வளாகத்தில்தான் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சைக் கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசுப் பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப் பள்ளி, தொல்லியல்துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன
    இந்த அரண்மனையானது தஞ்சாவூர் நாயக்கர் மன்னர்களான சேவப்ப நாயக்கரால் கட்டத் தொடங்கப்பட்டு, அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கரால் தொடரப்பட்டு, விஜயராகவ நாயக்கரால் முடிக்கப்பட்டது ஆகும். தஞ்சாவூர் மராத்திய அரசு மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், இராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன. இந்த அரண்மனை வளாகமானது 110 பரப்பளவுக்கு விரிந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.

ความคิดเห็น • 8