ஹேமமாலினி அறிமுகமான "இது சத்தியம்" சில திரைப்படங்களை விட அதன் பாடல்கள் என்றும் மறக்காமல் இருக்கும். இதற்குப் பல திரைப்பாடல்களை உதாரணமாகச் சொல்ல முடியும். அப்படியொரு பாடல்தான் பி.சுசீலா குரலில் வந்த "சரவண பொய்கையில் நீராடி..." இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம், 'இது சத்தியம்'. அசோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தின் கதையை, ரா.கி.ரங்கராஜன் எழுதியிருந்தார். குமுதம் இதழில் அவர் எழுதிய தொடர்தான் இது. மா.லட்சுமணன் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் கே.சந்திரகாந்தா கதாநாயகியாக நடித்தார். அதற்கு முன் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், இந்தப் படத்தில் கதாநாயகியாக உயர்ந்தார். டி.எஸ்.பாலையா, டி.எஸ். துரைராஜ், நாகையா, கண்ணாம்பா, மனோரமா உள்பட பலர் நடித்திருந்தனர். வழக்கமாக அந்தக் காலகட்டங்களில் அம்மா வேடங்களில் நடித்து வந்த கண்ணாம்பா, இதில் பணக்காரப் பாட்டியாக நடித்தார். ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் இதைத் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் இடம்பெறும் 'சிங்காரத் தேருக்கு...' என்ற பாடலுக்கு ஆடியிருந்தார் ஹேமமாலினி. பாலிவுட்டில் கனவுகன்னியாக வலம் வந்த ஹேமமாலினியின் முதல் திரை அறிமுகம் இந்தப் படம்தான். அப்போது அவருக்கு வயது 15. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில், கவிஞர் கண்ணதாசன் எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார். 'மனம் கனிவான அந்தக் கன்னியை...', 'காதலிலே பற்று வைத்தாள்', 'குங்குமப் பொட்டு குலுங்குதடி', 'சத்தியம் இது சத்தியம்' ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. 30.8.1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு வயது 60. -நன்றி " இந்து தமிழ்" 30.8.23
*சிங்காரத் தேருக்குச் சேலைகட்டி* என்ற சீர்காழி கோவிந்தராஜன் L.R. ஈஸ்வரி பாடலின் இரண்டாவது சரணமான *தேருக்கு முன்னால காளை கட்டி, செவ்வந்திப் பூவால மாலை கட்டி, தெருத் தெருவா அதை இழுத்து வந்தா, அது சேராத மனசுக்குப் பாலமாகும்!* என்ற வரிகளுக்கு ஆடுபவர் தான் ஹேமமாலினி! அவருக்கு *இதுசத்தியம்* தான் அறிமுகப் படம்! நீங்கள் இந்தக் கால (80+) ஹேமமாலினியை மனதில் நினைத்துக் கொண்டு தேடினால் அவர் உங்கள் கண்களுக்குத் தெரிய மாட்டார்! காரணம் அப்போது அவருக்கு வயது 15
@@manmathan1194 கரகாட்டக்காரனில் காந்திமதி தம்பியாகக் கனகாவின் தந்தையாக வரும் அண்மையில் மறைந்த குணச்சித்திர நடிகர் ஷண்முக சுந்தரத்தின் சகோதரி சந்திரகாந்தா!
இந்தப் படம் ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது சிறந்த கதை சூப்பர் நடிப்பு
ஹேமமாலினி அறிமுகமான "இது சத்தியம்"
சில திரைப்படங்களை விட அதன் பாடல்கள் என்றும் மறக்காமல் இருக்கும். இதற்குப் பல திரைப்பாடல்களை உதாரணமாகச் சொல்ல முடியும். அப்படியொரு பாடல்தான் பி.சுசீலா குரலில் வந்த "சரவண பொய்கையில் நீராடி..." இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம், 'இது சத்தியம்'. அசோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தின் கதையை, ரா.கி.ரங்கராஜன் எழுதியிருந்தார். குமுதம் இதழில் அவர் எழுதிய தொடர்தான் இது. மா.லட்சுமணன் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார்.
கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் கே.சந்திரகாந்தா கதாநாயகியாக நடித்தார். அதற்கு முன் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், இந்தப் படத்தில் கதாநாயகியாக உயர்ந்தார். டி.எஸ்.பாலையா, டி.எஸ். துரைராஜ், நாகையா, கண்ணாம்பா, மனோரமா உள்பட பலர் நடித்திருந்தனர். வழக்கமாக அந்தக் காலகட்டங்களில் அம்மா வேடங்களில் நடித்து வந்த கண்ணாம்பா, இதில் பணக்காரப் பாட்டியாக நடித்தார்.
ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் இதைத் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் இடம்பெறும் 'சிங்காரத் தேருக்கு...' என்ற பாடலுக்கு ஆடியிருந்தார் ஹேமமாலினி.
பாலிவுட்டில் கனவுகன்னியாக வலம் வந்த ஹேமமாலினியின் முதல் திரை அறிமுகம் இந்தப் படம்தான். அப்போது அவருக்கு வயது 15.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில், கவிஞர் கண்ணதாசன் எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார். 'மனம் கனிவான அந்தக் கன்னியை...', 'காதலிலே பற்று வைத்தாள்', 'குங்குமப் பொட்டு குலுங்குதடி', 'சத்தியம் இது சத்தியம்' ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. 30.8.1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு வயது 60.
-நன்றி " இந்து தமிழ்"
30.8.23
❤❤❤❤❤❤
இனிய பாடல்கள்
Where is hema malini? This movie.
F
She's the lead dancer in the song , 'singara therukku selai Katti'.
I think it is the first song in the movie. Cheers
In the song 16.58 to 17.13
👌👌👌👌👌👌👌👌
இது சத்தியம் அசோகன் ஹேமா மாலினி சந்திரகாந்தா
Kannambha. And chiththuru nagaiah garu.
Delightful movie
It's to complicated for Hema Malini also
46:06
story by ASP RANGARAJAN CAME AS A SERIAL IN KUMUDHAM
Ineya patalkal...
Music is by MSV-TKR. So the beautiful songs.
ஹேமமாலினி இருக்கா என பார்த்தேன் பொய்
Hema act in this movie for only one song singara thaerukku selaikatti
*சிங்காரத் தேருக்குச் சேலைகட்டி* என்ற சீர்காழி கோவிந்தராஜன் L.R. ஈஸ்வரி பாடலின் இரண்டாவது சரணமான *தேருக்கு முன்னால காளை கட்டி, செவ்வந்திப் பூவால மாலை கட்டி, தெருத் தெருவா அதை இழுத்து வந்தா, அது சேராத மனசுக்குப் பாலமாகும்!* என்ற வரிகளுக்கு ஆடுபவர் தான் ஹேமமாலினி! அவருக்கு *இதுசத்தியம்* தான் அறிமுகப் படம்! நீங்கள் இந்தக் கால (80+) ஹேமமாலினியை மனதில் நினைத்துக் கொண்டு தேடினால் அவர் உங்கள் கண்களுக்குத் தெரிய மாட்டார்! காரணம் அப்போது அவருக்கு வயது 15
Kannamba hailing Lord Murugan when her great grandson is born .....that scene alone was worth the price of admission.
Pure Emotion.
Her name is not in the titles !
அவர் பெயர் சந்திரகாந்தா. பிரமாதமாக நடிப்பார். தூய தமிழ் பெண்
@@manmathan1194
கரகாட்டக்காரனில் காந்திமதி தம்பியாகக் கனகாவின் தந்தையாக வரும் அண்மையில் மறைந்த குணச்சித்திர நடிகர் ஷண்முக சுந்தரத்தின் சகோதரி சந்திரகாந்தா!