ஸ்ரீ பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்ததி 68,69,70,71 பாசுரங்களுக்கு ஸ்ரீ உ வே அனந்த பத்மநாபன் ஸ்வாமி வியாக்யானம் அளித்துள்ளார். திருவேங்கட மலையிலே இயற்கையோடு இயைந்து வாசம் செய்த திவ்ய விலங்குகளையும், ஆழ்வார் தம் பாசுரங்களில் அநுபவிக்கிறார். 68 ஆம் பாசுரத்திலே, சுனையின் கரையில் மரத்திலிருந்து களாப் பழங்களைத் தின்ற குரங்கு, அந்தச் சுனையில் தென்பட்ட தன் நிழலையே வேறு ஒரு குரங்காக நினைத்து, மரக்கனிகள் அதன் கையில் நிழலாக விழ, எனக்கும் தா என்று கேட்கிறதாம். அப்போது தான் கனிகளைத் தின்று முடித்தாலும், மீண்டும் நிழலைக் கண்ட குரங்கின் மனம் நொடியில் எவ்வாறு மாறிவிடுகிறது என்று அழகாக விவரிக்கிறார் ஸ்வாமி. இத்தகைய திருவேங்கடத்தில் இருக்கும் எம்பெருமான் முன்னொரு நாள் கிருஷ்ணாவதாரத்தில் கன்றின் வடிவாக வந்த அசுரனைச் சுழற்றி விளாமரத்தின் உருவாக வந்த கபித்தாசுரனை வதைத்தான் என்று நினைவு கூர்கிறார் ஆழ்வார். அடுத்த பாசுரத்தில் தலைமகளின் தாயார் தன் மகளைப் பற்றிப் பாடுவதாக நிர்வஹிக்கிறார் ஆழ்வார். என் மகள் ஏதேனுமொரு மலையைச் சொல்ல ஆரம்பித்து திருமலையைப் பாடுகிறாள். துளசியைக் கற்புக்குத் தகுந்தது என்று தலையில் சூடுகிறாள். மல்லர்களையழித்த நீண்ட தோள்களையுடைய திருமால் சயனித்திருக்கும் திருப்பாற்கடலில் நீராட தினமும் விடியலிலேயே புறப்படுகிறாள் என்று தாயின் தன்மையில் பேசுகிறார். நாயிகா பாவனையில் பின் வரும் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இப்பாசுரம் முன்னோடியாக அமைந்துள்ளது என்கிறார் ஸ்வாமி. 70 ஆம் பாசுரத்தில் எவ்வாறு விலங்குகளும் பகவானை வணங்கும் அளவுக்கு ஞானம் பெற்றுள்ளது என்பதை ஆழ்வார், ஒரு யானை தன் மத நீரால் தன்னை எல்லா வகையிலும் சுத்தம் செய்து கொண்டு தேன் சொரியும் மலர் கொண்டு திருவடிகளில் சமர்ப்பித்து எம்பெருமானை வணங்கியதைக் கூறி ரசமாக விளக்குகிறார். 71 ஆம் பாசுரத்தில், திருவேங்கட மலையில் ஒரு யானையானது மலைமுகடு மேகத்தை வேறொரு யானை என நினைத்துத் தன் துதிக்கையால் வேகமாகக் குத்தியதைக் கண்ட ஒரு யாளி, சினம் கொண்டு அந்த யானையை அதன் கொம்பை முறித்துக் கொல்கிறது. இதை விவரிக்கையில் ஆழ்வார், முன்பு க்ருஷ்ணாவதாரத்தில் கன்றுருவாய் வந்த வத்ஸாசுரனை எறிதடியாக எறிந்து விளாமரமாக வந்த கபித்தாஸுரனை எம்பெருமான் முடித்த நிகழ்வை நினைவு கூர்கிறார். இவ்வாறு பற் பல மேற்கோள்களுடன் மேற்கூறிய பாசுரங்களுக்கு, சுலபமாகப் புரியும்படி வியாக்யானம் அளித்த ஸ்வாமிக்கு க்ருதக்ஞதைகள். ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே ஸரணம் 🙏
Srimathe Ramanujaya namaha
Swamy thiruvadigaluku Pallandu pallandu pallandu 🙏🙏🙏🌹🌷
Thank you swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏👌👌👏👏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ :
Namaskaram swami.
Adiyen
ஸ்ரீ பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்ததி 68,69,70,71 பாசுரங்களுக்கு
ஸ்ரீ உ வே அனந்த பத்மநாபன் ஸ்வாமி வியாக்யானம் அளித்துள்ளார். திருவேங்கட மலையிலே இயற்கையோடு இயைந்து வாசம் செய்த திவ்ய விலங்குகளையும், ஆழ்வார் தம் பாசுரங்களில் அநுபவிக்கிறார். 68 ஆம் பாசுரத்திலே, சுனையின் கரையில் மரத்திலிருந்து களாப் பழங்களைத் தின்ற குரங்கு, அந்தச் சுனையில் தென்பட்ட தன் நிழலையே வேறு ஒரு குரங்காக நினைத்து, மரக்கனிகள் அதன் கையில் நிழலாக விழ, எனக்கும் தா என்று கேட்கிறதாம். அப்போது தான் கனிகளைத் தின்று முடித்தாலும், மீண்டும் நிழலைக் கண்ட குரங்கின் மனம் நொடியில் எவ்வாறு மாறிவிடுகிறது என்று அழகாக விவரிக்கிறார் ஸ்வாமி. இத்தகைய திருவேங்கடத்தில் இருக்கும் எம்பெருமான் முன்னொரு நாள் கிருஷ்ணாவதாரத்தில் கன்றின் வடிவாக வந்த அசுரனைச் சுழற்றி விளாமரத்தின் உருவாக வந்த கபித்தாசுரனை வதைத்தான் என்று நினைவு கூர்கிறார் ஆழ்வார். அடுத்த பாசுரத்தில் தலைமகளின் தாயார் தன் மகளைப் பற்றிப் பாடுவதாக நிர்வஹிக்கிறார் ஆழ்வார். என் மகள் ஏதேனுமொரு மலையைச் சொல்ல ஆரம்பித்து திருமலையைப் பாடுகிறாள். துளசியைக் கற்புக்குத் தகுந்தது என்று தலையில் சூடுகிறாள். மல்லர்களையழித்த நீண்ட தோள்களையுடைய திருமால் சயனித்திருக்கும் திருப்பாற்கடலில் நீராட தினமும் விடியலிலேயே புறப்படுகிறாள் என்று தாயின் தன்மையில் பேசுகிறார். நாயிகா பாவனையில் பின் வரும் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இப்பாசுரம் முன்னோடியாக அமைந்துள்ளது என்கிறார் ஸ்வாமி. 70 ஆம் பாசுரத்தில் எவ்வாறு விலங்குகளும் பகவானை வணங்கும் அளவுக்கு ஞானம் பெற்றுள்ளது என்பதை ஆழ்வார், ஒரு யானை தன் மத நீரால் தன்னை எல்லா வகையிலும் சுத்தம் செய்து கொண்டு தேன் சொரியும் மலர் கொண்டு திருவடிகளில் சமர்ப்பித்து எம்பெருமானை வணங்கியதைக் கூறி ரசமாக விளக்குகிறார். 71 ஆம் பாசுரத்தில், திருவேங்கட மலையில் ஒரு யானையானது மலைமுகடு மேகத்தை வேறொரு யானை என நினைத்துத் தன் துதிக்கையால் வேகமாகக் குத்தியதைக் கண்ட ஒரு யாளி, சினம் கொண்டு அந்த யானையை அதன் கொம்பை முறித்துக் கொல்கிறது. இதை விவரிக்கையில் ஆழ்வார், முன்பு க்ருஷ்ணாவதாரத்தில் கன்றுருவாய் வந்த வத்ஸாசுரனை எறிதடியாக எறிந்து விளாமரமாக வந்த கபித்தாஸுரனை எம்பெருமான் முடித்த நிகழ்வை நினைவு கூர்கிறார். இவ்வாறு பற் பல மேற்கோள்களுடன் மேற்கூறிய பாசுரங்களுக்கு, சுலபமாகப் புரியும்படி வியாக்யானம் அளித்த ஸ்வாமிக்கு க்ருதக்ஞதைகள்.
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே ஸரணம் 🙏
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். அத்புதம். ஶ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏🏾🙏🏾