Ayodhya Ram Temple in Tamil|அயோத்தி ராமர் கோவிலின் சிறப்புகள்|Ayodhya Ramar Temple|Ram Lalla|Ayodhya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • In this post we are going to learn about Ram Lalla's temple in Ayodhya.
    Ayodhya is a holy place located in the state of Uttar Pradesh of our country, India. The city is located on the banks of Sarayu River. The main reason why Ayodhya is revered as the most sacred city for Hindus is because it is the birthplace of Lord Rama.Ayodhya is the most important of the seven holiest places of Hindus. The fact that Ayodhya is one of the Saptapuris is a proof of its pride.
    Ayodhya is mentioned as the capital of Kosala kingdom in Ramayana. Ayodhya is not only the place where Ramapiran was born and enjoyed running, dancing and playing... He later performed the Ashwamedha Yagya and established Rama Rajya in the land of India.
    Ayodhya has the honor of being the capital of the famous Ikshvaku kings of Kosala, including Rama. Ayodhya is also the birthplace of Maharaja Harishchandra, who spoke only the truth.
    Admire the glory of Ayodhya... Many places in our country are named Ayodhya. Not only India Yogyakarta, Indonesia and Ayutthaya, Thailand These cities are named after Ayodhya.
    In many of our oldest Puranas, especially our two epics Ramayana and Mahabharata Admiring the glory of Ayodhya. In Tamil, Kambar also describes the beauty of the city of Ayodhya poetically with his poetry.
    Built in the North Indian Nagara style of architecture, the Rama temple is adorned with beautifully carved pillars. Beautified.The length of the temple is 380 feet (east-west) and the height is 161 feet.
    Ram Temple has three floors. Each floor is 20 feet high. It has a total of 392 pillars, 44 doors and 5 halls. These five halls It is known as Nridhya Mandapam, Rang Mandapam, Sabha Mandapam, Pradhana Mandapam and Kirtana Mandapam.
    இன்றைய பதிவில் அயோத்தி ராம் லல்லாவின் ஆலயம் குறித்து நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம்.
    அயோத்தி நமது பாரத தேசத்தின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள புன்னிய தலமாகும். இந்நகரம் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அயோத்தி இந்துக்களுக்கு மிகவும் புனிதமான நகரமாக போற்றப்படுவதற்கு மிக முக்கிய காரணம் ராமர் பிறந்து வளர்ந்த இடம் என்பது தான்.
    அயோத்தி இந்துக்களின் ஏழு மிக புண்ணிய தலங்களில் மிக மிக முக்கியமானது. சப்தபுரிகளில் அயோத்தியும் ஒன்றாக விளங்குவதே இதன் பெருமைக்கு சான்றாகும்.
    ராமாயணத்தில் கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக அயோத்தி குறிப்பிடப்படுகிறது. அயோத்தியா இராமபிரான் பிறந்து ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்த இடம் மட்டுமல்ல...அவர் பிற்காலத்தில் அசுவமேத யாகம் செய்து பாரத தேசத்தில் ராமராஜ்ஜியத்தை நிறுவி அரசாண்ட பெருமையையும் கொண்டது.
    ராமர் உட்பட கோசலத்தின் புகழ்பெற்ற இக்ஷ்வாகு மன்னர்களின் தலைநகராக இருந்த பெருமை அயோத்திக்கே உரித்தானது.
    உண்மையை மட்டுமே பேசிய மகாராஜா ஹரிஷ்சந்திராவின் பிறப்பிடமும் அயோத்தி என்பதும் குறிப்பிடதகுந்தது.
    அயோத்தியின் பெருமையை போற்றுமாறே... நமது தேசத்தில் பல இடங்களில் அயோத்தி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாரதம் மட்டுமல்ல
    இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா (Yogyakarta) மற்றும் தாய்லாந்தின் அயுத்யா (Ayutthaya)
    ஆகிய நகரங்கள் அயோத்தியின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.
    நமது பழைமையான புராணங்கள் பலவற்றிலும் குறிப்பாக நமது இருபெரும் இதிகாசங்களான
    ராமாயணமும் மகாபாரதமும்
    அயோத்தியின் பெருமையை போற்றுகிறது. தமிழில் கம்பரும் கூட அயோத்தி நகரின் சிறப்பை தன்னுடைய கவிநயத்தால் கவிதையாக வர்ணிக்கிறார்.
    வட இந்திய நாகரா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இராமர் கோவில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அழகிய சிற்பங்களை கொண்ட தூண்களால்
    அழகூட்டப்பட்டிருக்கிறது.
    ஆலயத்தின் நீளம் 380 அடியாகவும் (கிழக்கு-மேற்கு), உயரம் 161 அடியாகவும் உள்ளது.
    ராமர் கோயிலானது மூன்று அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. இதில் மொத்தம் 392 தூண்களும், 44 கதவுகளும் 5 மண்டபங்களும் உள்ளன.
    இந்த ஐந்து மண்டபங்களும்
    நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிராத்தன மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என அழைக்கப்படுகிறது.
    கோயிலின் பிரதான கருவறையில் பகவான் ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ சிலையும், முதல் தளத்தில் ஸ்ரீ ராம் தர்பாரும் அமைக்கப்பட்டுள்ளது.
    கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 32 படிக்கட்டுகளை பயன்படுத்தி பக்தர்கள் கோயிலுக்குள் நுழையலாம். ஆலய கருவறையில் 5 வயது பால பருவத்தில் இருக்ககூடிய குழந்தை இராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    சிரித்த முகத்தோடு சாந்தமாக காணப்படும் இந்த ராமர் சிலையானது ராம் லல்லா என்று அழைக்கப்படுகிறது.
    ராம் லல்லா என்றால் குழந்தை இராமன் என்று பொருள். அயோத்தி ராமஜென்மபூமியாக திகழ்வதால் இங்கு பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பபட்டுள்ளார்.
    • Ayodhya Ram Temple in ...
    Bharatha Thamizhan
    Abishek Indradevan
    பாரத தமிழன்
    அபிஷேக் இந்திரதேவன்

ความคิดเห็น • 4