ஸ்ரீ ராகவேந்திர சுப்ரபாதம் - தமிழில் || SRI RAGHAVENDRA SUPRABHATHAM || VIJAY MUSICALS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • SRI RAGHAVENDRA SUPRABHATHAM - TAMIL || ALBUM : GURU MANDIRAM || SINGERS : TRIVANDRUM SISTERS || LYRICS : RAVIRANGASWAMY || MUSIC : SIVAPURANAM D V RAMANI || GURU RAGHAVENDRA || BHUVANAGIRIYIL | Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
    ஸ்ரீ ராகவேந்திர சுப்ரபாதம் || ஆல்பம் : குரு மந்திரம் ||பாடியவர்கள் : திருவனந்தபுரம் சகோதரிகள் || பாடல் : ரவிரங்கஸ்வாமி || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || குரு ராகவேந்திரர் || விஜய் மியூஸிக்கல்ஸ் || புவனகிரியில்
    பாடல் வரிகள் :
    புவனகிரியில் உதித்தவரே பிருந்தாவனத்தில் துயில்பவரே பூவிழி மலர்ந்தருள்க
    துயில் எழுக வேங்கடநாதா தூப தீபங்கள் காட்டி உன்னை வணங்கிடவே
    எழுந்தருள்க எழுந்தருள்க ராகவேந்திரா இமை திறந்தருள்க
    மந்திராலயத்தில் அருளும் அவதார மூர்த்தியே பொழுது புலர்கின்றதே
    சங்கீதத்தை மலர்வித்த சப்தஸ்வர ஞானியே சங்குகள் முழங்குகின்றன
    துங்கபத்ரா நதியின் அலையோசை கேட்கலையோ தூங்காமல் தூங்குவோனே
    வண்டினங்கள் ரீங்காரம் ஆலயத்தை வட்டமிடுதே திருவாசல் திறவாயே
    ஜீவசமாதியில் துயிலும் ராகவேந்திரரே சீக்கிரம் எழுந்தருள்க
    ஏழுலகோரின் இஷ்ட தெய்வமே எண்ணியதை நிறைவேற்றும் குருவே
    சகலஜீவ ரட்சகா ராகவேந்திர தீர்த்தரே சந்நிதி திறவாயே
    கோடி கோடி சிஷ்யர்களின் மானசீக குருவே நடை திறவாயே
    மந்திரம் ஜபித்து தந்திரம் வென்றவனே கண்மலர்ந்தருள்கவே
    கதிரவன் வைகறையில் தன்வரவை ஒளிவீசி உணர்த்துகிறான் உணராயோ
    சந்திரனோ தன்னொளி வீசி தரிசித்த இன்பத்தில் மோட்ச பேரடைகிறான்
    இந்திரனும் ஏனை தேவர்களும் துதிபாடி துயில் எழுப்புகின்றனரே
    அருளாசி வழங்கி ஆதரிக்க ராகவேந்திரரே ஆனந்த பள்ளியெழுக
    சிதறிக்கிடக்கும் நட்சத்திரங்களெல்லாம் சிறுகச் சிறுக மறைகின்றன
    உறங்கிக் கிடந்த உயிர்கள் எல்லாம் உனைத் துயில் எழுப்புகின்றன
    மந்தாரலத்தில் கருணை புரியும் மாமுனியே மொட்டுவிழி மலர்ந்தருள்க
    முனிவர்களும் ரிஷிகளும் போற்றிப் புகழ்கின்றனரே துரிதாக துயில் எழுக
    உறங்கிய பகலும் உன்னருளொளி பெற்றொளிக்க ஓடோடி வருகின்றதே
    விடியல் காற்றும் நீ துயில் எழுவதற்கேற்ப மேனியை வருடுகின்றதே
    உலகப் புனித நீரெல்லாம் உன்னை நீராட்டவே சங்கமித்திருக்கிறதய்யா
    ப்ருந்தாவனத்தின் பெருமாளே ராகவேந்திரா எழுந்தருள்வதில் தயக்கமென்ன
    பனியை சுத்த புல்லினம் நிமிர்கின்றதே பூவினம் மலர்கின்றதே
    யானைகள் தன் காதுகளால் மத்தளம் அடிக்கின்றதே ஆவினம் பால் சுரக்கின்றதே
    குதிரைகளும் மயில்களும் நாட்டியமாடுகின்றதே குயிலினம் கூவுகின்றதே
    நித்திரை விட்டெழுந்து அருளிட ராகவேந்திரா திருக்கதவு தீர்வாயே
    மேகக் கூட்டங்கள் மத்தளம் அடித்துக்கொண்டே பூமாரி பொழிகின்றதே
    காகக்கூட்டங்கள் காகாவென அபயக் குரலில் காத்தருள கரைகின்றதே
    சேவலின் கொக்கரக்கோ காதில் விழவில்லையா இமை திறக்கத் தாமதமேன்
    இலைகள் சலசலகின்றதே ராகவேந்திர தீர்த்தரே இறைவா துயில் எழுவாயே
    ஒளிவிழித் திறந்தால் வெண்பனிக்குன்றுகள் எல்லாம் உருகிடுமென்று தயக்கமோ
    திருவீழி மலர்ந்திடவே பள்ளியெழுச்சி பாடுகிறோம் கண்விழித்து காத்தருள்க
    தண்பனியாய் நாவெல்லாம் உன்திருநாமம் ஓதி தரிணியெலாம் எதிரொலித்திடுதே
    கண்மணியை திறந்து நீ கடைக்கண்ணால் பார்த்திட ஏதுகுறை ராகவேந்திரா
    கைகூப்பி வணங்கிடுதே கைகள் தாளமிடுதே காணாயோ கேளாயோ
    கண்கள் இமைக்கு ஒய்வு கொடுத்து உன்னை கண்ணார காண்கின்றதே
    செவிகள் உன்திருநாம ஒலிவுரை கேட்டு மெய்சிலிர்த்து மறக்கிறதே
    சிந்தனையில் குடியிருக்கும் ஜகத்குரு ராகவேந்திரரே சிஷ்யருக்கருளாயே
    வைகறையில் எழுப்ப வாழ்த்துமழை பொழிகிறோம் வாழ்வாங்கு வாழவைப்பாய்
    நதியோரம் துயில்வோனே நித்திரை கலைகின்றோம் கோவிக்காமல் விழித்தருள்வாய்
    புல்லாங்குழல் பூபாளம் இசைகின்றதே எழுந்திடய்யா ராகவேந்திரா அருளிடய்யா
    பூமிக்குள் அமர்ந்து உறங்கும் புதையல் நீ அய்யா மந்திராலயமே மஹிமை அய்யா
    தினம்தோறும் அதிகாலை ப்ரம்ம மூகூர்த்தத்திலே துங்கபத்ரா நதியில் நீராடி
    மந்த்ராலய தெய்வங்களை பூஜிக்கும் தெய்வமே உன்னை பூஜித்திடவே
    பக்தரெலாம் திரண்டே பாதமலர் பணிகின்றோமே ராகவேந்திரா துயில் எழுவாய்
    மிருத்திகா பிருந்தாவனம் தோற்றுவித்த மெய்ஞானியே திருவிழி திறந்தருள்க
    சிலையாக நின்றிருந்த ஸ்ரீவேணுகோபாலரை ஆடச் செய்தவரே
    அலைகள் ஆர்ப்பரித்து உன்னடியைத் தொழுகின்றதே ஆழ்துயில் கலைவாயே
    ராப்பொழுது மறைகின்றதே ராகவேந்திரா கண்விழித்து ரட்சிப்பாய் ரட்சிப்பாயே
    நித்தமும் உன் நினைவே நெஞ்சிலும் உன் வடிவே எழுந்தருள்வாய் ராகவேந்திரா
    ஊர் ஊராகச் சென்று அருளாசி வழங்கிய சஞ்சார குருவே
    ஊராரெல்லாம் ஒன்றுகூடி உன்வாசல் வந்திட்டோம் நிலைக்கதவம் நீதவாயே
    ஏகமந்த்ரம் ஜபித்து விந்தைகள் புரிந்த ராகவேந்திர தீர்த்தரே
    ப்ருந்தாவனத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்யும் ராஜோர்சவ மூர்த்தியே
    சுஜீந்த்ர ஸ்வாமிகளின் இஷ்ட சிஷ்யரே சுகமெலாம் வழங்குவாய்
    மூலராமரை இஷ்ட தெய்வமாய் வணங்குவோனே காலம் முழுதும் காத்தருள்க
    காவேரிக்கரையில் வாழ்ந்த கருணை உருவே ராகவேந்திரா கண்விழித்தருள்க
    தஞ்சையம்பதியில் பஞ்சம் தீர்த்த தவகுருவே தாழ் பணிய தாழ்திறவாய்
    கருவிலேயே ராம நாமம் கேட்டு மகிழ்ந்தாயே ராகவேந்திரா ராகத்தின் வேந்தா
    கோகிலாம்பாளின் கொங்கைப்பால் உண்டாயே அகிலத்தின் அன்னையே
    திம்மண்ணபட்டரின் தெய்வீகப் புதழ்வாரே தேச சஞ்சாரத் தேனீயே
    சரஸ்வதி மணாளா பின் சன்யாசத்தை மணந்தாயே லட்சுமி நாராயணரின் தந்தையே
    குருவாரத்தில் பிறந்து குருவாரத்திலேயே ஜீவசமாதி தவம் மேற்கொண்டாயே
    ஓம் நமோ நாராயணாய மந்திரக் குரலோனே உறக்கம் கலைந்தெழுக
    ஓம் ராகவேந்திராய நம என ஒலிக்கச் செய்தவனே உற்சாகத்தோடு துயில் எழுகவே
    திருப்பள்ளியெழுச்சி படைத்தோர் பாடுவோர் கேட்போர்க்கு தேவைகளை அருள்வாயே
    மந்திராலய மாமுனி ராகவேந்திரா மன ஆலயம் வாழும் ஸ்ரீ ராகவா
    குருபோற்றும் சீடராய் தேர்ந்தவா பல காரியம் சாதித்த வேங்கடவா
    ஹரிநாராணன் நாமம் ஓதியவா அசரீரியால் துறவு பேணியவா
    சன்யாசம் பூண்டு வாழ்ந்தவா திருவாக்கால் வாழ்வை போதித்தவா

ความคิดเห็น • 302